1935-ம் வருடத்தில் காந்திஜிக்கு சுதேசி பேனா அன்பளிப்புத் தகவல்
1921-ம் ஆண்டு,
ராஜமந்திரியைச் சேர்ந்த கே.வி.ரத்னம் என்ற அன்பர் காந்திஜியை வார்தாவில் சந்தித்து
ஒரு உருக்கிய உலோகம் ஒன்றை அன்பளிப்பாக அளித்தார். அதைப் பெற்றுக் கொண்ட காந்திஜி ரத்தினத்திடம்
‘நீங்கள் ‘PIN TO PEN’ என்ற கொள்கைப்படி விதேசிப் பொருள்களை பகிஷ்கரிக்கும் விதமாக
சுதேசிப் பொருள்களை உருவாக்குங்கள்’ என்று அறிவுறித்தினார். அப்போதோ அன்னிய பொருட்களை
தீயிட்டுக் கொளுத்தும் போராட்டம் மும்முரமாக நடைபெற்ற நேரம். 1932-ம் ஆண்டு தானே கையால்
உருவாக்கிய பேனா ஒன்றை காந்திஜிக்கு அனுப்பினார். ஆனால், காந்திஜி அந்தப் பேனாவை ‘இந்தப்
பேனாவில் அன்னிய பொருட்கள் உள்ளன. ஆகையால், அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது’ என்று
நிராகரித்து விட்டார். ஆகையால், இதையே ஒரு சவாலாக ஏற்று, ஒரு வருடம் போராடி, ஒரு முழுவதுமான
சுதேசிப் பேனாவை உருவாக்கி வெற்றி கண்டார் ரத்தினம். 1933-ம் வருடம் அகில இந்திய கிராம
தொழில் கழகத்தின் செயலாராக இருந்த ஜே.சி.குமரப்பா ராஜமந்திரிக்கு விஜயம் செய்தார்.
அவரிடம் தாம் உருவாக்கிய அந்த ‘சுதேசிப் பேனா’வை காந்திஜியிடம் கொடுக்கும்படி குமரப்பாவிடம்
கேட்டுக் கொண்டார்.
அந்தப் பேனாவைப்
பெற்றுக் கொண்ட காந்திஜி ரத்தினத்திற்கு தன் கைப்பட ஒரு கடிதம் எழுதினார். ‘அன்புள்ள
ரத்தினம், நீங்கள் எனக்கு அனுப்பிய பேனாவிற்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். எனக்கு ஒரு
பேனா தேவைப்பட்டது. உங்களது இந்தப் பேனா அயல் நாட்டுப் பேனாவிற்கு ஒரு நல்ல மாற்றாகும்.
– எம்.கே.காந்தி, 16-07-1935’ என்ற வாசகம் அடங்கிய இந்தக் கடிதத்தை அவர் தமது கடையில்
சட்டம் போட்டு மாட்டி உள்ளார்.
இந்தக் காந்திஜியின்
கடிதம் தான் ‘ரத்னம் பென் வொர்க்ஸ்’ என்ற பேனா உருவாக்கும் நிருவனம் உருவாகக் காரணமாக
இருந்துள்ளது. அதை அவரது மகன் கே.வி.ராமன மூர்த்தி அந்த நிருவனத்தைத் தொடர்ந்து நடத்திக்
கொண்டு வருகிறார்.
ரத்தினம் ஸ்தாபனம்
உருவாக்கிய பேனாக்கள் ‘சுதேசி பேனாக்கள்’ என்று அந்தக் காலத்தில் மிகவும் பிரபலம்.
பல முக்கிய சுதந்திர போராட்ட வீரர்கள் இந்தப் பேனாக்களை வாங்கிப் பயன்படுத்தி உள்ளனர்.
இப்போது இத்தகைய
மை அடைக்கும் பேனாக்களின் விலை ரூபாய் 250/- லிருந்து ரூபாய் 2.5 லட்சம் வரைக்கும்
விலை போகிறது. இந்தப் பேனாக்களில் தங்க நிப்புகள் பொருத்தப்பட்டிருக்கும்.
ஜெர்மனி,
ஆஸ்ட்ரேலியா போன்ற நாடுகளிலிருந்தும் ஆர்டர்கள் வருவதாக மூர்த்தி தெரிவிக்கிறார். மூர்த்தியுடன்
அவரது இரு மகன்களும் இணைந்து ஒரு நாளைக்கு 12 பேனாக்கள் வரையும் உருவாக்குவதாகத் தெரிவிக்கிறார்கள்.
சுதேசி பேனா பிரம்மா
ரத்னம் அவர்களை இந்த 72-ம் ஆண்டு சுதந்திர நாளில் நினைவு கூர்ந்து வாய்மை பூச்செண்டு
அளித்து, அவரை வணங்கி, பாராட்டி மகிழ்கிறது.
Comments