89-வது வயதில் காலமான சோமநாத் சாட்டர்ஜி – 13-08-2018




பிறப்பு: 25-07-1929 – அஸ்ஸாமில் உள்ள டெஸ்பூரின் பிறந்தார். அவர் சட்டப்படிப்பில் முதுகலைப் பட்டதாரி. அரசியலில் ஈடுபடுவதற்கு முன் அவர் கல்கத்தா உயர் நீதி மன்றத்தில் அட்வகேட்டாகப் பணியாற்றினார்.
ஜமீந்தார் பரம்பரையில் வந்த ரேணு சவுத்திரியை 1950-ம் வருடம் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள். அவரது மகனும் கல்கத்தா உயர் நீதி மன்றத்தின் அட்வகேட்.
10 முறை எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டவர். 2004-ம் ஆண்டு 14வது லோக் சபாவில் அவர் சபாநாயகராக ஒருமனதாகத் தேர்வானார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அளித்த ஆதரவை ஜூலை 2008-ம் வருடம் சி.பி.ஐ.எம். திரும்பப் பெற்றது. ஆனால், வலது சாரி பி.ஜே.பி.யும் எதிர்ப்பதால் கட்சியின் உத்திரவையும் மீறி காங்கிரசுக்கு ஆதரவாக ஓட்டளித்தார். காங்கிரஸ் ஆட்சியும் பிழைத்தது. ஆனால், சோமாநாதை கட்சியை விட்டு 23-07-2008 அன்று விலக்கியது. 

‘சபாநாயகராக அரசியல் சாதனத்தின் படி சோமநாத் செயல்பட்டதாகச் சொன்னாலும், கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டம் அதை விட மேலானது’ என்று வங்காள கட்சியின் செயலாளர் பிமன் போஸ் அறிக்கை விட்டார்.

இது சோமநாத்தை மிகவும் பாதித்தது. ‘என்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு மிகவும் சோகமான நாள். இனிமேல் சபாநாயகர் தேர்வானதும் அவர் கட்சியிலிருந்து ராஜினாம செய்து விட வேண்டும் என்று ஒரு விதியை ஏற்படுத்த வேண்டும்’ என்று தம் கருத்தை வெளியிட்டுள்ளார். அதன் பிறகு அவர் அரசியலிருந்தே விலகி விட்டார்.

ஆகையால் சோமநாத் சாட்டர்ஜீயின் உடலை கல்கத்தா ஹாஸ்பிடலிருந்து கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு எடுத்துச் செல்ல அவரது உறவினர்கள் மறுத்து விட்டனர். மேலும், அவரது உடலில் கட்சிக் கொடியையும் போர்த்த அனுமதிக்க வில்லை. மேலும் பிமன் போஸ் என்ற மூத்த கம்யூனிஸ்ட் தலைவரையும் இறுதி அஞ்சலி செய்யவும் அனுமதிக்க வில்லை. சீத்தாராம் யச்சூரி எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், அவரது குடும்பத்தினர் அசைந்து கொடுக்க வில்லை.

அவரது உடல் மருத்துவ மனையிலிருந்து கல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு மக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, பிறகு கல்கத்தா அசெம்பிளிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு 21-குண்டுகள் அரசு மரியாதை செய்யப்பட்டு, பிறகு அவரது பூத உடல் வீட்டில் வைக்கப்பட்டது. பிறகு மாலையில் எஸ்.எஸ்.கே.எம். ஹாஸ்பிடலுக்கு தானமாக அளிக்கப்பட்டது.

கம்யூனிஸ்டாக பதவி வகித்தாலும், இறக்கும் போது கட்சியின் கொடி போர்த்தப்படாமல் அவரது இறுதி யாத்திரை நடந்தது காம்ரேட்களுக்கு பேரிடியாகத்தான் இருந்திருக்கும்.

கட்சியின் விதிகள் அரசியல் சாசனத்தை விட மேலானவை என்ற கொள்கை கொண்டவர்களை தேச விரோத சக்திகள் என்று குற்றம் சாட்டுவதில் தவறு இருப்பதாகப் படவில்லை. தன் வினை தன்னச் சுடும் என்பது இதில் காணும் உபதேசம்.

சோம்நாத் சாட்டர்ஜீயின் ஆத்மா சாந்தி அடைய வாய்மைப் பிரார்த்திக்கிறது. அவருக்கு வாய்மை மலர் வளையம் வைத்து வணங்கி அஞ்சலி செலுத்துகிறது.



Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017