சத்யமேவ ஜெயதே - நெஞ்சு பொறுக்குதில்லையே!
ஒரத்த நாட்டில் எஸ்.பி.ஐ. வங்கி மேலாளரின் பூணூல் அறுப்பு
பாலிமெர் செய்தி கீழே உள்ளது. இது தான் தமிழ்ப் பண்பாடா? தமிழ்க் கலாச்சாரமா? திராவிடக் கொள்கையா? என்று கேள்விகள் எழுப்புவதுடன், அனைத்து ஜனசமூகமும் ஒன்று திரண்டு மனிதாபத்துடன் இந்த அநியாத்தை ஒரே குரலில் எதிர்க்க வேண்டும். ஆனால், திராவிடக் கட்சிகளுடன் பல உதிரிக் கட்சிகள் இந்த காண்டிமிராண்டித் தனத்தைக் கண்டித்து செய்தி வெளியிடவில்லை என்பது மிகவும் வருத்தம் தரும் செய்தியாகும்.
எஸ். சங்கரன்
ஆசிரியர் - வாய்மை
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி மேலாளரின் சட்டையை கழற்றி பூணூலை அறுத்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஒரத்தநாட்டில் செயல்பட்டு வரும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கிளையில் பிரபாகரன் என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். பிராமணர் சமுகத்தை சேர்ந்த இவர் இன்று காலை வங்கியில் இருந்து வெளியே வந்த போது, அவரை வழி மறித்துத் தாக்கிய மர்ம நபர்கள் 3 பேர், அவரது சட்டையைச் கழற்றி அவர் அணிந்திருந்த பூணூலை அறுத்து விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
இது குறித்து பிரபாகரன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், பூணூலை அறுத்துவிட்டு தப்பிய நபர்களை தேடி வருகின்றனர்.
Comments