மாங்கல்யம் காக்கும் காரடையான் நோன்பு! 14.3.2018
மாசி மாதமும் பங்குனி
மாதமும் கூடும் நாளில் அதாவது மாசி மாத கடைசி நாள் நிறைவடைந்து, பங்குனி மாதத்தின்
முதல் நாள் தொடக்கத்திற்கு இடைப்பட்ட நேரத்தில் வரும் நோன்பு தான் காரடையான்
நோன்பு. சாவித்திரி தேவியை வழிபடும் நோன்பு – சுமங்கலிகள் தீர்க்கசுமங்கலியாக
இருக்க காரடை – அதாவது காராம்பருப்பினால் செய்த அடையை நிவேதனம் செய்து, நோன்புச்
சரடை காமாட்சி அம்பாளைப் பூஜித்து தங்கள் கழுத்தில் கணவர் கட்ட கட்டிக்
கொள்வார்கள். சாவித்திரி தன் கணவனை எமதர்ம ராஜனிடமிருந்து மீட்டது இந்த நாளில்
தான்.
கார்காலத்தில்
விளையும் நெல்லைக் குத்தி, பச்சரிசி மாவுடன்,
காராமணிப் பயறும் இனிப்பும் கலந்து
தயாரிக்கும் காரடையை இறைவனுக்குப் படைத்து
விரதம் மேற்கொள்வது சிறப்பு!
வாய்மை வாசகர்கள்
அனைவருக்கும் இந்த நன் நாளில் நோயற்ற வாழ்வு - குறைவற்ற செல்வம் – நீண்ட ஆயுள் –
கவலை அற்ற வாழ்வு – குதூகலமான குடும்பம் ஆகியவைகள் கிட்ட எல்லாம் வல்ல இறைவியை
வேண்டி வணங்கிப் பிரார்த்திக்கிறோம்.
எங்கும்
மங்களம் பொங்கட்டும்.
Comments