மோடியின் 4 தேசம் – 4 நாட்கள் வெளிநாட்டு அரசாங்கப் பயணம்



ஐக்கிய அரபு அமீரகம் தலைமையின் அழைப்பை ஏற்று துபாயில் நடைக்கும் 6-வது உலக அரசு உச்சிமாநாட்டில் உரையாற்றச் சென்ற மோடி, ஐக்கிய அரபு அமீரகத்தின் நகரங்களான துபாய் மற்றும் அபுதாபியுடன், ஜோர்டன், பாலிஸ்தீனம், ஓமன் நாட்டிற்கும் சென்று பல வர்த்தககலாச்சார ஒப்பந்தங்களுடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் அபுதாபிதுபாய் ஹைவேயில் சுவாமிநாராயணன் கோயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி உள்ளார். அபுதாபி மன்னர் தானமாக அளித்த பூமியில் முதன் முதலாக அங்கு ஒரு ஹிந்து கோயில்அதுவும் கற்களால் 2020 ஆண்டுக்குள் உருவாக உள்ளது. அந்த நாட்டின் முஸ்லீம்களின் எதிர்ப்புக்களையும் மீறி ஹிந்து கோயில் கட்ட இடம் ஒதுக்கீடு செய்துள்ளதை இங்கு குறிப்பிட வேண்டும். ஆகையால், இந்த அடிக்கல் நாட்டு விழா நடப்பது என்பது ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஐக்கிய அரபு அமீரகத்தின் பல கட்டுமானப்பணிகளுக்கு நமது இந்தியர்கள்அதிலும் முக்கியமாக இந்துக்கள் பணியாற்றியதை அந்த அரசாங்கம் மனதாரப் பாராட்டி உள்ளது. அதன் காரணமாகவே இந்த இந்துக்கோயில் அங்கு எழுப்ப அனுமதி வழங்கப்பட்டதாகவே தெரிகிறது. இது சாதாரணமான செயல் அல்ல

மோடியின் பங்கு இதில் அதிக அளவு உள்ளது என்பதை எவரும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.

அடிக்கல் நாட்டி மோடி அபுதாபியில் இந்திய வம்சாவளியினர் கூட்டத்தில்  நம் நாட்டின் வளர்ச்சிகலாச்சாரம்இன்றைய அரசியல் நிலை ஆகியவைகளைப் பற்றிய எழுச்சி உரை பெரும் கர கோஷங்களுடன் வரவேற்பைப் பெற்றுள்ளது இந்தியாவின் 125 கோடி மக்களின் மனத்தை மகிழ்விக்கும் என்பது திண்ணம்

அதே போல், ஓமன் நாட்டிலுள்ள மஸ்கட்டில் 125 மேல் மிகவும் பழமையான சிவன் கோயிலுக்கும் சென்று ழிபட்ட மோடி, அங்குள்ள இந்திய வம்சாவளியினர்களிடமும் எழுச்சி உரை ஆற்றி உள்ளார். மஹா சிவாராத்திரிக்கு ஒரு நாள் முன்புதான் இந்த தரிசனம் என்பதை நினைக்கும் போது, இந்துக்களின் மனம் இன்பமடையும் என்பது உண்மையாகும்.

மோடியின் பாலிஸ்தீனப் பயணமும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகி விட்டது. ஏனெறால் அந்த நாட்டிற்கு முதல் முறையாக விஜயம் செய்யும் இந்தியப் பிரதமராக மோடியின் பெயர் இடம் பெறுகிறது. பாலிஸ்தீன பிரசிரெண்ட் அப்பாஸ் ‘Grand Collar Honour’ என்ற மிக உயர்ந்த பட்டத்தை அளித்து மோடியை கவுரவித்துள்ளார்.

முன்பு மோடி மிகவும் பின் தங்கியதும், தீவிரமான முஸ்லீம் கொள்கைகளைப் பின் பற்றும் சவுதி அரேபியாவிற்குச் சென்ற பொழுதும் அவருக்குதம்மை ஒரு பக்திமானான ஹிந்துவாக வெளிப்படையாக காட்டும் மோடிக்குஉற்சாக வரவேற்பு அளித்துக் கவுரவித்ததை இந்த சமயத்தில் ஞாபகப் படுத்திப் பார்க்க வேண்டும். அந்த அவரது சந்திப்பில் மிகவும் பெரிய மனிதாப அடிப்படையில் சாதாரணக் குற்றங்களுக்காகச் சிறையில் அடைபட்டுள்ள இந்தியர்களை விடுவிக்க வேண்டியதை அந்த சவுதி அரசாங்கம்மிகவும் கடுமையான ஷாரியச் சட்டத்தைப் பின்பற்றும் அரசாங்கம்கருணையில் அடிப்படையில் பலரை விடுதலை செய்ததை இங்கு நினைவு கூற வேண்டும். இதை யாரும் வேண்டவில்லை என்றாலும் மோடி தாமாகவே முன் வந்து செயல்பட்டார் என்பதையும் நினைக்க வேண்டும்.

முஸ்லீம் நாடுகள் கூட மோடியை நம்புகின்றன. ஆனால், இங்கோ முத்தலாக்நிக்கா ஹலால் போன்ற மிகவும் கீழ்த்தரமான முஸ்லீம் பெண்களுக்கு எதிரானவைகளை ஒழிக்கவும்ஒழுங்கு படித்தவும் முயலும் மோடியின் செயல்களுக்கு பல தடைகளை அதுவும் தங்களை செக்குலர்முற்போக்கு வாதிகள்என்று தம்பட்டம் அடித்து வீதிக்கு வீதி வலம் வருபவர்கள் ஏற்படுத்தி முஸ்லீம் பெண்களை முன்னேற விடாமல் முல்லாவின் கட்டுப்பாட்டில் வைக்கும் நிலைக்கு ஆதரவாகவே செயல்படுவது மிகவும் வெக்கக் கேடானதாகும்.

செக்குலரிசம்சிக்குலரிசம் (வியாதியிசம்) என்று உருமாறி செல்லாக்காசாகி கம்யூனிஸ்ட்களின் சிவப்பு நிறம், காவி வர்ணத்தில் அழியும் நிலை உண்டாகி விட்டது. காங்கிரஸ் கட்சியின் கொடியில் இருந்த வந்தே மாதரம் என்ற சொற்கள் அழிக்கப்பட்டன. பிறகு அதன் கொடியின் வெள்ளை நிறத்தில் இருந்த மஹாத்மா காந்தியின் மனத்தைக் கவரும் சின்னமான கைராட்டை கைவிடப்பட்டது

காங்கிரஸ் கட்சியை சுதந்திரத்திற்குப் பிறகு அதன் உன்னதமான கொள்கையான ஸ்வராஜ்யம் கிடைத்த காரணத்தால் கலைத்து விட வேண்டும் என்ற காந்திஜியின் வேண்டுகோளும் கைவிடப்பட்டது. பிறகு கைராட்டைச் சின்னத்திற்குப் பதில் கைச் சின்னம் வந்ததுஅதன் பிறகு தர்மச் சக்கரமான அசோக சக்கரம் காங்கிரஸ் கொடியில் கைச் சின்னமாக இடம் பெற்ற பிறகு கையூட்டுக் கலச்சாரம் தலைதூக்க ஊழல்ஏமாற்றுதல்கருப்பு பணம்ஆகிய அவலங்கள் மத்திய அரசியலில் தலைவிரித்து ஆடியதை இந்தியா என்றும் மறக்காது. அதுவும் கடந்த காங்கிரஸ் 10 ஆண்டுகள் ஆட்சியே சாட்சி. இதற்கு மக்கள் ’44 எம்.பி.க்கள் காங்கிரஸ் கட்சிஎன்ற நிலையில் சரியான பாடம் புகட்டி உள்ளார்கள்.

மோடியின் அரசின் ஆட்சி நான்கு ஆண்டுகள் தான் கழிந்துள்ளன. அந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவின் பெருமை உலகம் போற்றும் அளவில் வளர்ந்துள்ளது. சுத்தம் சுகம் தரும் என்ற கொள்கையின் அடிப்படையில், பல பள்ளிகளில், பல வீடுகளில் கழிப்பறை இல்லை என்பதை அறிந்து, அதற்கான முயற்சியில் மோடி அரசு செயல்பட்டு வருகிறது. மின்சாரம் இல்லாத கிராமமே இந்தியாவில் இல்லா நிலையை ஏற்படுத்த மோடி அரசு செயலில் மும்முறமாக இறங்கி உள்ளது. புகையால் அவதிப்படும் ஏழைக் குடும்பத் தலைவிகளின் துயரம் துடைக்க அவர்களுக்கு காஸ் இணைப்பு கொடுக்கும் திட்டம் செயலில் உள்ளது. சுகாதார காப்பிட்டுத் திட்டம், உயிர் காப்பீட்டுத் திட்டம், ஓய்வூதிய திட்டம் என்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, அவைகள் நேரிடையாக அவர்கள் பயணடையும் முறையில் இயக்கப்பட்டுகின்றன.

ஆனால் இவைகளை எதிர்கட்சிகள் மதிப்பதில்லைஏற்பதில்லை. மோடி பார்லிமெண்டில் பேசும் போது தொடர்ந்து எதிர்த்துக் கோஷங்கள் போட்டது ஜனநாயக மரபுக்கு எதிரானது என்பதை எதிர்கட்சிகள் உணர்ந்ததாகத் தெரியவில்லை

அவர்களுக்கு மக்களால் தேர்வான மோடியை 2019 தேர்தலில் எப்படியும் தோறக்கடிக்க வேண்டும் என்பது ஒன்று தான் கொள்கை என்பதை பலமுறை நிரூபித்து விட்டனர். அதற்கு எந்தப் பொய்யையும்எந்தத் தவறான வழிமுறைகளையும்கொள்கைகள் அற்ற அரசியல் கோஷ்டிகளையும் - உருவாக்கி மோடியைத் தோற்கடிக்க வேண்டும் என்று முயன்று வருகிறார்கள். அதை எதிர்கொண்டு முறியடிக்க மோடியும்அமித் ஷாவும் மிகவும் கடுமையாக உழைக்கிறார்கள். அதற்கு மக்கள் பெருமளவில் ஆதரவு அளிக்க வேண்டும்.

இந்தியாவிற்குகுறிப்பாக இந்துக்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் மோடி. மோடியின் அரசில் சில குறைகள் இருக்கலாம். ஆனால், பொதுவாக அவரது அரசின் ஆளுமை பாராட்டும் விதமாகவே இருக்கிறது

இன்னும் ஒரு ஐந்து வருடங்கள் மோடி அரசு தொடர மக்கள் அவருக்கு ஓட்டு அளிக்க வேண்டும்

தர்மம் தழைக்க மோடி அரசு தொடர வேண்டும்.

விழித்த இந்தியாவை வீழ்த்த நினைக்கும் அசுர எதிர்க்கட்சிகள் வீழும் அளவு மக்கள் ஆதரவு மோடிக்குக் கிடைக்க எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறோம்.

வந்தே மாதரம்பாரதமாதாவுக்கு ஜேசத்தியமேவ ஜெயதே.

சில போட்டோக்கள்:



Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017