யுகத்தின் பிறப்பு யுகாதியின் சிறப்பு – 18-03-2018




தெலுங்கு, கன்னடம் மற்றும் மராட்டிய மக்கள் சந்திரனை வைத்துதான் பண்டிகைகளைக் கொண்டாடுகின்றனர். அவர்களுடைய மாதம் சந்திரனின் முதல் பிறையிலிருந்தே துவங்குகிறது. அதாவது அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமையிலிருந்தே துவங்குகிறது. அதனாலேயே யுகாதியும் பிரதமையன்றே வருகிறது. ஆனால், தமிழகம் மற்றும் கேரளாவில் புது வருடம் சூர்யனை முன்னிருத்தியே பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன.

இந்த வருடம் யுகாதி 18-03-2018 அன்று கொண்டாடப்படுகிறது. யுகாதி என்றால் யுகத்தின் ஆரம்பம் என்று பொருள்படும். அதாவது அன்று தான் பிரம்ம தேவன் உலகத்தை படைத்ததாக பிரம்ம புராணம் கூறுகிறது. இது தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு தினமாகும். இதே நாளை ‘குடிபாட்வா’ என்று மகாராஷ்டிர மக்களும், ‘சேதி சந்த்’ என்று சிந்தி மக்களும் புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள்.

யுகாதிப் பண்டிகையின் விசேஷம் என்றால், அது பச்சைப் பச்சடிதான். வாழ்க்கையென்றால் இன்பம், துன்பம், ஏமாற்றம், தோல்வி, வெறுமை, விரக்தி எல்லாமே சேர்ந்ததுதான் என்பதை உணர்ந்த மக்கள், இந்த யுகாதி நாளில் இனிப்பு, காரம், உப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு என அறுசுவை கலந்த பச்சடியைச் செய்து உண்கிறார்கள். வேப்பம்பூ, வெல்லம், உப்பு, புளி, மிளகாய், மாவடு போன்றவற்றைச் சேர்த்து இந்தப் பச்சடியைச் செய்கிறார்கள். 'பேவு பெல்லா' என இதைக் கன்னட மொழியில் கூறுகிறார்கள்.  

இந்த யுகாதி புத்தாண்டு தினத்தில் அதைக் கொண்டாடும் தெலுங்கு – கன்னடம் – மஹாராஷ்ரா – சிந்து ஆகிய மக்கள் அனைவருக்கும் வாழத்துத் தெரிவித்து, சுபீஷ்டமாக வாழ வாய்மை பிரார்த்திக்கிறது.

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017