முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்
முக்குணங்கள் என்றால் அவைகள் சத்துவ குணம், ரஜோ குணம், தமோ குணம் என்று பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணன் விளக்கம் சொல்கிறான். சதுர்வர்ணம் என்று கீதையில் சொல்லி இருப்பது நான்கு வர்ணம் – அதாவது நான்கு நிறம் என்பதைக் குறிக்கும் சொல்லாகும். அந்த நான்கு வர்ணங்களுக்கும் ஆணி வேர் முக்குணங்களாகும். அந்த மூன்று குணங்களையும் மூன்று நிறங்களாக உருவகப்படுத்தி அதன் தன்மையை வெளிப்படுத்துவார்கள். சத்துவ குணம் வெளுப்பு, ரஜோ குணம் – சிகப்பு; தமோ குணம் – கருப்பு. இந்த மூன்று குணங்களையும் முறையே – தூய்மை, வலிமை, எளிமை என்றும் வகுக்கலாம். பிருக்ரிதி என்ற இயற்கை பஞ்ச பூதங்கள் என்று சொல்லப்படும் ஐந்து மூலப் பொருள்களான – காற்று, தீ, நீர், நிலம், ஈதர் ஆகியவைகளின் ஒருங்கிணைப்பால் உண்டானது. அவைகள் தான் அனைத்து பிறப்புக்களுக்கும் தாயாய் இருந்து, பரப்பிரம்மம் என்ற தகப்பனால் ஜீவ விந்து பெற்று உலகத்தின் இனப்பெருக்கம் உண்டாகிறது. உயிரை உடலுடன் இணைப்பது அந்த மூன்று குணங்களாகும். இப்போது அந்த மூன்று குணங்களின் தன்மைகளைப் பற்றி பகவான் கிருஷ்ணன் கீதையில் விளக்கியதைப் பற்றிப் பார்ப்போம். பொ...
Comments