சிவன் அருள் பெற ஏற்றுவோம் கார்த்திகை தீபம்
கார்த்திகை தீபம் - 02-12-2017
கார்த்திகை மாதத்தில் வரும் பெளர்ணமி
நாளும், கார்த்திகை நட்சத்திரமும் கூடிய நாள் தான் கார்த்திகைத் திருவிழாவாகும். அந்த
நாளில் சிவபிரான் சோதிச் சொரூபமாக அனைவருக்கும் காட்சி அளிக்கிறார் என்பது ஐதீகம்.
அதை நினைவு கூறும் வகையில் தீபங்களைக் கோயில்களிலும், வீடுகளிலும் ஏற்றி சிவனை வழிபடுவார்கள்.
சிவ பெருமான் ஜோதிச் சொரூபமாகக் தோன்ற,
அவரது அடிமுடியைக் கண்டு பிடிக்க விஷ்ணு வராக உருவமெடுத்து சிவச் ஜோதியின் அடியைக்
கண்டு பிடிக்கவும், பிரம்மா அன்னமாக சிவச் ஜோதியின் முடியைக் கண்டு பிடிக்கவும் முயன்று
தோல்வியுற்று, சிவனை முழுமுதற்கடவுளாக ஏற்றுக் கொண்ட தினம் தான் திருக்கார்த்திகை தினமாகும்.
அந்த தினத்தில் விஷ்ணுவும் – பிரம்மாவும் கண்ட சிவச் ஜோதியை அனைவரும் காண அருள் பாளிக்க
வேண்டியதின் காரணமாக அந்த திருக்கார்த்திகை நாளில் சிவன் ஜோதிச் சொரூபமாக வணங்குவதற்கு
தீப விளக்குகள் ஏற்றி வழிபடும் வழக்கம் தமிழ் மக்களிடம் உண்டானது.
சிவன் அருள் கிட்டவும், கார்த்திகை தீபம் போல் அனைவரது வாழ்வு ஒளிரவும்
முழுமுதற் கடவுளான சிவனைப் பிரார்த்திப்போமாக. .
Comments