இந்தியாவின் இதயக் குரல்



இங்கிலாந்து பார்லிமெண்ட் சபையில் ஒலித்த இந்தியக் குரல்  இந்திய ராணுவத்தின் இதயக் குரலாகவே ஒலித்து, ஒளிர்ந்தது என்றால் அது மிகையாகாது. 

ஒட்டு மொத்த இந்திய தேசிய உணர்வு கொண்ட அத்தனை இந்தியர்களின் இதயக் குரலாக மேஜர் கவுரவ் ஆர்யா நிகழ்த்திய  இங்கிலாந்து பார்லிமெண்ட்டின் உருக்கமான பேச்சு நமது இந்தியாவின் மதிப்பையும், இந்திய ராணுவத்தின் கவுரவத்தையும் வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

ஜம்மூ – காஷ்மீர் இந்தியா உடன் இணைந்தநாள் 26-10-1947 ஆகும். அன்று தான் ஜம்மூ - காஷ்மீர் ‘இந்தியாவுடன் இணைந்த உடன்படிக்கை’யில் மஹாராஜா ஹரி சிங் கை எழுத்திட்டார். அந்தச் சரித்திரமான நாளின் 70-வது வருடத்தை நினைவு கூறும் விதமாக நவம்பர் முதல் வாரத்தில் யு.கே.பார்லிமெண்ட் வளாகத்தில் மூன்றாவது வருடம் கொண்டாடப்பட்டது. அதில் மேஜர் கவுரவ் ஆர்யா – ராணுவ வீரரும், 17-வது குமாயுன் ரிஜிமெண்டில் இந்திய ராணுவப்படையில் பணிபுரிந்தவருமானவரும் – சிறப்புரை ஆற்றினார். அவரது பேச்சைத் தான் “இந்தியாவின் இதயக் குரல்” என்று குறிப்பிட்டோம்.

அவரது உரையினை இங்கே படிக்கவும். அதன் வீடியோ இணைப்பு இதோ – லிங்க் ஒன்று & இரண்டு.

அதற்கு முன் அவரைப் பற்றிய சிறு குறிப்பு: டெல்லி, செயிண்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் ஹானார்ஸ் சரித்திரம் பட்டப்படிப்பு படித்த பிறகு, இந்திய ராணுவத்தில் 1993-ம் ஆண்டு சேர்ந்து, ஏழு ஆண்டுகள் பணிபுரிந்து, பனிப் பொழிவுப் போரில் ஏற்பட்ட மூச்சுத் திணறல் உடல் உபாதையால் கட்டாய ஓய்வு பெற்றார். அவரின் ராணுவச் சேவையின் பெரும் பகுதி காஷ்மீர் எல்லைப் பகுதியில் தான். தற்போது, ஒரு பெரிய கம்பனியின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். அவர் தமது தேச பக்தியை பல கட்டுரைகள், பேட்டிகள், பேச்சுக்கள், பிளாக்குகள் மூலம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
அவரது உரையின் முக்கிய பகுதி:
இன்று எனது உரையில், ஜம்மூ-காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி உங்களுக்குச் சொல்லப்போகிறேன். இந்திய ராணுவத்தின் பங்கைப் பற்றியும், நாம் ஏன் இந்திய ராணுவத்தை ‘அறவழி ராணுவம்’ என்று பெருமைப் படுகிறோம் என்பதைப் பற்றியும் நான் சொல்லப் போகிறேன்.

நம் நாட்டின் எல்லையின் நீளம் 760 கி.மீ. ஆகும். அந்த எல்லையை நாம் பாதுகாக்க வேண்டிய கடமை இருக்கிறது. கடந்த 70 ஆண்டுகளாக, இந்திய ராணுவம் இந்தியாவின் எல்லைக்கும், துரதிருஷ்டத்திற்கும் இடையிலே நிற்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். கடந்த நீண்ட 70 வருடங்களில் நடந்த பல போர்களில் நமது தாய் நாட்டைக் காப்பதில் பல வீரர்கள் உயிர் நீத்தனர். அவர்களை எல்லாம் நாம் இப்போது நினைவு கூறுவோம். 

காஷ்மீரில் இயங்கும் பல தீவிர வாத இயக்கங்களின் பெயர்களில் எந்தப் பெயராவது காஷ்மீரப் பெயர்களாக உள்ளனவா? அந்த தீவிர வாத இயக்கங்களின் பெயர்கள் எல்லாம் அராபியப் பெயர்களே. அவைகள் காஷ்மீரப் பெயர்கள் இல்லை.
 இந்தியாவில் காஷ்மீர் ஒன்று தான் தனிக் கொடி, தனி அரசியல் சாசனம், தனி தண்டனைச் சட்டம் கொண்டுள்ளன. இருப்பினும், தெருவில் வந்து போராடும் போதும், கல்வீசித் தாக்கும் போதும், தீவிரவாத நடவடிக்கைகளின் போதும், நீங்கள் காண்பது ஐ.எஸ்.ஐ.எஸ். கொடிகளாகும். காஷ்மீர் கொடிகளை நீங்கள் காண முடியாது. ஜம்மூ – லடாக் கொடியைக் காணமுடியாது. தீவிரவாத ஸ்லாமிய நாட்டுக் கொடியைத் தான் நீங்கள் காணமுடியும்.

காஷ்மீர் முஸ்லீம்கள் தங்களது குழந்தைகள் ராணுவ வீரர்களால் காயமடைந்தார்கள் என்று சொல்கிறார்கள். ஒரு 5-வயதுக் குழந்தையை ஒரு ராணுவ வண்டி முன் நிறுத்தும் அந்தக் குழந்தையின் அப்பா-அம்மாக்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள்?
தேசச் துரோகச் செயல் ஒரு மன்னிக்க முடியாத குற்றமாகும். ராஜாங்கத்தை எதிர்த்து ஆயுதப் போராட்டம் செய்வது தேசச் துரோகமாகும். அந்தச் செயல்களுக்கு இரக்கம் காட்ட நினைப்பது எந்த விதத்தில் நியாயமாகும்?
இந்தியாவை சமாதானம் மூலம் காப்பாற்ற முடியாது. இந்தியா சமாதானத்தைத் தான் விரும்புகிறது. ஆனால், அந்த சமாதானத்தை வலிமை மிக்க நிலையில் இருந்து தான் பேச வேண்டும். வாகா எல்லைக்கு நீங்கள் சென்று, மெழுகுவர்த்திகளை ஏற்றி, பாகிஸ்தான் இந்தியாவைத் தாக்காது என்று நம்பி, பிரார்த்தனை செய்ய முடியாது.
தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் இருக்கிறார்கள். அந்தத் தீவிரவாதிகளை நாம் கொல்கிறோம். ஆனால், அந்தத் தீவிரவாதிகள் எங்கிருந்து வருகிறார்கள்? அவர்கள் நமது எல்லைக்கு அப்பால் உருவாக்கப்படுகிறார்கள். அவர்கள் அனைவரும் பாகிஸ்தானில் உருவாக்கப்பட்டவர்கள் – ஆமாம், அவர்கள் ‘மேட்-இன்- பாகிஸ்தானியர்கள்’.
இஸ்லாமின் வாஹாபி என்ற கொள்கையை இப்போது நாம் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் தள்ளப்பட்டுள்ளோம். இந்த நோய்க்கிருமியைச் சுமந்து கொண்டு அயல்நாட்டிலிருந்து இந்தியா வந்து, நமது தேசத்தில் பரப்ப முயலுவதைத் தான் நமது ராணுவம் போராடி நம்மைக் காக்கிறது. 
எனது இதயத்தில் – ஒரு ராணுவ வீரராக – எனக்கு எந்த தீய நோக்கமும் இல்லை. பாகிஸ்தானில் இருக்கும் சாமானிய மனிதனிடம் எனக்கு எந்தவிதமான பகையும் கிடையாது. அந்த மனிதனை நான் சூழ்நிலைக்கு இலக்காகிப் பலியான ஜீவன் என்று தான் பார்க்கிறேன்.
ஹிந்துஸ்தான் 1947-ல் சுதந்திரம் அடைந்தது. எந்த ஒரு நாடும் இரண்டு முறை சுதந்திரம் அடைவதில்லை. ஆகையால் காஷ்மீரத்தின் – ஆசாத் – குரல்கள் தேசத் துரோகக் குரல்களாகும்.

உடைந்த கேடயம், ஒரு லத்தி ஆகியவைகளைத் தன் கையில் பிடித்துக் கொண்டு இருக்கும் நமது ஜவானை உங்களில் எத்தனை பேர்கள் பார்த்திருக்கிறீர்கள்? அந்த நிலையை உணராதவர்கள் தான் மனித உரிமை மீறல்கள் பற்றிப் பேசுகிறார்கள்.
 ஆசிட் பாட்டில்களுடன் 1000 போராடும் வெறிகொண்ட கூட்டத்தினரால் சுழப்பட்ட ஒரு இளைய ராணுவ வீரரின் நிலையில் இருந்து நீங்கள் பார்க்க முயலுங்கள்.
காஷ்மீர் பிரச்சனை விரைவாக தீர்க்கப்படப் போவதில்லை. ஆனால், கல் எரிதல் அனேகமாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் நின்று விட்டது. ஏன் நின்றது என்பது உங்களுக்குத் தெரியுமா? பல அதிரடி நடவடிக்கையால் பதுக்கிய பணங்கள் கைப்பற்றப்பட்டதால் தான். இருப்பினும், அங்கு 25 வருடங்களாக விதைக்கப்பட்ட தீவிரவாதக் கொள்கையான விஷ விதைகள் வேரூண்டிருக்கின்றன. அவைகளைப் படிப்படியாகக் களைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இன்னும் ஒரு வருடத்தில் காஷ்மீரத்தில் சிறிது முன்னேற்றத்தை நீங்கள் காண்பீர்கள். முட்டாள் தனமான ஆர்டிக்கிள் 370 அழிவில் தான் காஷ்மீர் முன்னேற முடியும்.

இந்தியாவில் இதயக் குரலை ஓங்கி ஒலித்த அந்த மேஜரை வாய்மை மனம் திறந்து பாராட்டுகிறது. வாழ்க பாரதம்! ஒங்குக இந்திய ஒற்றுமை!

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017