திண்ணைக்
கச்சேரியின் மூல கதாநயகன் உயர்திரு ராகுல் காந்தியாகும். அவர் காங்கிரசின் தற்போதைய
துணைத் தலைவரும், இன்னும் சில நாட்களில் தமது அன்னை சோனியாவின் காங்கிரஸ் தலைமைப் பதவியை
ஏற்கப்போகும் நேரத்தில் குஜராத் தேர்தல் சூடுபிடித்துள்ளது.
ராகுல்
இப்போதெல்லாம் PIDI என்று நாமகரணம் சூட்டப்பட்ட தமது வளர்ப்பு அயல் நாட்டு நாயை தனது
– நண்பன், தத்துவஞானி, வழிகாட்டி – யாக ஏற்றுக் கொண்டுள்ள பிறகு, ராகுலின் பேச்சு நாயைப்
போல் ‘லொள் லொள்’ என்ற அளவில் கேலிக் கூத்தாகி விட்டது.
பப்பு – யுவராஜா – என்ற
பெயரில் வலம் வரும் ராகுல் குஜராத் தேர்தல் களத்தில்
பேசும் பேச்சிலும் முதிர்ச்சியைக்
காண முடியவில்லை. இருப்பினும், வாசகர், விமரிசகர், நிருபர், பொதுஜனம் ஆகியவர்களின்
கருத்துக்களைக் காது கொடுத்துக் கேட்போமாக.
பொதுஜனம்:
ராகுல் PIDI-ன் பிடியில் எப்போது அகப்பட்டுக் கொண்டு விட்டாரோ, அப்போதே அவர் அரசியல்
அரிச்சுவடி கற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார் என்றே தோன்றுகிறது. “சமீபத்தில்
தமது ட்வீட்களை யார் எழுதுகிறார்கள் என்று மக்கள் கேட்கிறார்கள். என் அபீமான வளர்ப்பு
நாயான PIDI தான் எழுதுகிறது. ட்வீட்களை எப்படி விழுங்குகிறேன் என்று பாருங்கள்” என்று
ராகுல் ட்வீட்டுகிறார். அந்த வீடியோவில் நாயின் முகத்தில் வைத்த பிஸ்கட்டை அப்படியே
விழுங்கி விடுகிறது. இதன் மூலம் ராகுல் எதைச் சொல்ல விழைகிறார் என்று மக்கள் தங்கள்
மூளையைப் பிழிந்தும், ஒன்றும் விளங்காமல் விழிக்கிறார்கள்.
நிருபர்: இதற்கு மூல காரணம் ராகுலைப் போல் 46-வயது
இளைஞர் கனாடாவின் பிரதம மந்திரியான ஐஸ்ரின் டுரூடோ தான் காரணம் என்று அரசியல் வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.
வாசகர்: ஆமாம். ராகுலின் ஆலோசகர்கள் ஐஸ்ரின் டூரோடோவைப் காப்பி அடித்தால்,
நீங்களும் இந்தியப் பிரதம மந்திரியாகிவிடலாம் என்று ஆசைவார்த்தைகள் கூறி ராகுலை நம்பவப்பதில்
வெற்றி கண்டு விட்டனர். ஐஸ்ரின் டூரோடோ ட்விட்டரில் ‘எனது வீட்டு நாய் ஹாட்ரின் புதிய
வரவான குட்டி நாய் கென்சீயுடன் கொஞ்சி விளையாடுகிறது!’ என்று பதிவு செய்ததைப் பார்த்த
ராகுல் ஆலோசகர்கள் ராகுலின் வளர்ப்பு நாயான PIDI-யை ட்விட்டரில் பதிவு செய்தனர்.
BOT-டின் மூலம் பலர் ராகுலின் ட்விட்டரில் சேர்ந்தது ஒரு ஏமாற்று வேலை என்பது தெரிந்ததும்
PIDI-யைக் காண்பித்து திசை திருப்ப முயன்று அதிலும் அவரது ஆலோசகர்கள் வெற்றி பெறவில்லை.

விமரிசகர்:
கனாடா நாட்டு பிரதம மந்திரி
பத்திரிகையாளர்கள் – விஞ்ஞானிகள் அடங்கிய கூட்டத்தில் ‘Quantum Computing’ பற்றி சிறிய விளக்கம் அளித்து உரை நிகழ்த்தினார்.
இதை அறிந்த காந்திக் குடும்பத்தின் விஸ்வாசியான சாம் பிட்ரோடா – ராகுலை அயல் நாட்டுச்
சுற்றுப் பிரயாணம் செய்ய வைத்து – Artificial Intelligence – பற்றி உரை நிகழ்த்த முயன்றார்.
ஆனால் அது நிறைவேற வில்லை என்றாலும், ராகுலை யு.எஸ்.பல்கலைக் கழகத்தில் உரையாடல் –
உரை ஆகியவைகளை நிகழச் செய்து, ராகுலின் மேல் உள்ள இமேஜைச் சரிசெய்ய முயன்றுள்ளார்.
அதை இங்குள்ள ராகுலின் அடிவருடிகள் ‘ஆஹா, ஓஹோ’ என்று புகழ் புராணம் பாடியபடி இருக்கிறார்கள்.
பொதுஜனம்: இதை விட மிகவும் மோசமான ஒன்றை ராகுல் ஆலோசகர்கள்
காப்பி அடித்துள்ளனர். டுரோடா தாம் மிகவும் பலசாலி – பதவிக்குத் தகுந்தவர் என்பதைக்
காட்டுவதற்காக, கைகளில் குத்துச் சண்டை கவசம் அணிந்து சண்டை போடுவதுபோல் தமது ட்விட்டரில்
பதவு செய்ததைப் பார்த்த ராகுலின் சம்சாக்கள் அதே பாணியில் ‘பார், ராகுல் ஜப்பான் நாட்டு
அகிடோவில் கருப்பு பெல்ட் பெற்ற வீரர். ராகுல் விளையாட்டுப் பிரியர் – ஓடுதல், நீந்துதல்,
ஜிம் எல்லாவற்றிலும் சூரர்’ என்ற அளவில் ட்விட்டரில் பதிவு.
நிருபர்: டுரோடா வீல் சேரில் ஒருவரை படியில் இறங்க உதவி செய்தது ட்விட்டரில்
வெளியிட்டால், ராகுல் அபிமானிகள் ‘ராகுல் என் மகன் பைலட் ஆவதற்கு உதவினார்’ என்று நிர்பயாவின்
அம்மாவைச் சொல்ல வைத்து புகழ் பெற முனைகின்றனர். PIDI, CANADA PM AND SAM PITRODA
– ஆகியவர்கள் ராகுலுக்கு அரசியலில் எவ்வளவு தூரம் உதவப் போகிறார்கள் என்பதைக் காலம்
தான் நிர்ணயிக்கும்.

விமரிசகர்: 16-11-2017 ஹி்ந்து தினசரி நாளிதழில் ‘I HAVE HEARD SHOCKING STORIES IN
GUJARAT’ என்ற தலைப்பில்
படித்த பெரும் மேதை சாம் பெட்ரோடாவின் பேட்டி பிரசுரமாகி உள்ளது. அதில் ராகுலைப் பற்றிய
கருத்துத் தான் அதிர்ச்சியாகப் படுகிறது. ‘ராகுல் நிறையப் படிக்கிறார். அவர் ஒரு மேதை’ என்று தடாலடியாகச்
சொல்கிறார் இந்த மேதை. அதற்கு அவர் சொல்லும் காரணம்: ராகுல் சமீபத்தில் யு.எஸ். சென்றார்.
அங்கு இஸ்லாம் மதத்தைப் பற்றி அறிய ஒரு தலைசிறந்த வல்லுனரின் பேச்சை 90 நிமிடங்கள்
கேட்டார். இன்னொரு அறிஞ்ஞர் சீனா – வட கொரியா பற்றிய பேச்சை இன்னொரு 90 நிமிடங்கள்
கேட்டறிந்தார். … ராகுல் ஒரு போதும் பொய்யோ அல்லது ஏமாற்றுதலோ செய்யாத ஒரு கண்ணியமான
மனிதர்’. பெட்ரோடா அதே பேட்டியில் ‘ராகுலை பப்பு என்று ஒரு சில கோமாளிகள் வர்ணிக்கிறார்கள்.
ஆனால், அவர் மிகவும் படித்தவர். நேர்மையானவர். தியானம் செய்பவர். யோசனை செய்பவர். நான்
கூட நினைப்பதுண்டு, ராகுல் அதிகமாக சிந்திக்கிறார் என்று.’


பொதுஜனம்: யார் என்ன கருத்துச் சொன்னாலும், குஜராத்தில்
ராகுல் அரசியல் கூட்டங்களில் பேசியது மிகவும் கேலிக்குறியதாகும். அதிலும் குறிப்பாக
உருளைக் கிழங்கை ஒரு மெஷின் மூலம் தங்கமாக மாற்றும் வித்தை என்னிடம் இருக்கிறது என்ற
அளவில் ராகுல் பேசி இருக்கிறார். ஒரு வேளை விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க வழி செய்யும்
ஒரு யுக்தி என்னிடம் இருக்கிறது என்று சொல்ல நினைத்ததை, சொல்லும் போது கோமாளியாக குழம்பி,
தன்னையும் ‘பப்பு’ என்பதை நிலை நிறுத்தி விட்டார் என்று தான் சொல்லத் தோன்றுகிறது.
அத்துடன் காங்கிரசை விட அவர் பிற பிற்படுத்தப்பட்டோர் ஜாதி ஓட்டிற்கு அல்பேஷ் தாகூர்,
தலித் ஜாதி ஓட்டுக்களுக்கு ஜிக்னேஷ் மேவானி, பட்டேல் ஜாதி ஓட்டுக்களுக்கு ஹார்திக்
பட்டேல் ஆகியவர்களையே நம்பி இருப்பதாகப் படுகிறது. தற்போது வெளியான செக்ஸ் சி.டி.யால்
ஹார்திக் பட்டேலின் பெயர் பெரும் அளவில் கெட்டுவிட்டதாகவே தெரிகிறது. மேலும், காங்கிரஸ்
தலவர் ஹார்த்திக்கை ‘சர்தார் படேலின் ஜீன்ஸ் ஹார்த்திக்கின் உடம்பில் ஓடுகிறது’ என்று
புகழ் பாடியது குஜராத் மக்களிடம் காங்கிரஸ் வெறுப்பையே சம்பாதிக்க உதவியது என்றே கருத
இடமிருக்கிறது.
விமரிசகர்: குஜராத் தேர்தல் முடியும் வரை இந்த அரசியல்
நாடகங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும். ஆனால், குஜராத் மக்களை எந்த அரசியல் கட்சிகளும்
ஏமாற்ற முடியாது என்று தான் நினைக்கிறேன்.
Comments