தலித் சிறுவனின் தலை குனியவைக்கும் தவறான செயல்
லிம்போதரா
என்பது குஜராத் காந்திநகர் அருகில் உள்ள ஒரு கிராமம். அதில் வசிக்கும் 17-வயது தலித்தை
உயர் ஜாதியினர் மீசை வைத்துள்ளான் என்பதால், அவனைக் குத்தி உள்ளனர் என்று செய்தி காட்டுத்
தீ போல் பரவி அதுவும் பரவலாக எப்போதும் போல் இதற்கு மோடி என்ன பதில் சொல்லப்போகிறார்?
மோடியின் குஜராத்தில் தலித் தாக்கப்படுகிறார்கள் – அவர்களுக்குப் பாதுகாப்பே இல்லை
– என்ற அளவில் பல இடது சாரிகள் சாடினார்கள்.
அந்த
தலித் வாலிபனின் முதுகில் பல தையல்கள் போடப் பட்டன என்றும், இதற்கு முன்னாலும் அவன்
இதோ போல் தாக்கப்பட்டான் என்றும் அந்த தலித்தின் குடும்பத்தினர் குற்றங்கள் சாட்டினர்.
அதே கிராமத்தில் இது மூன்றாவது சம்பவத்தால், அங்கு இனக் கலவரத்தைத் தடுக்க போலீஸ் காவல்
போடப்பட்டது. இதற்காக குஜராத் அரசின் உள்துறை அமைச்சரைப் பதவி விலகமும் போராட்டம் நடந்தது.
ஆனால்
3 நாட்களுக்குப் பிறகு, போலீசுக்கு இந்த சம்பவம் அனைத்தும் போலி என்றும், இது மிகவும்
பலம் வாய்ந்த மரபுசாரா இயக்கத்தின் தூண்டுதலின் பேரிலும், விளம்பரம் கிடைக்கும் ஆர்வத்திலும்,
அந்த தாக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட தலித் தெரிவித்தான்.
v அந்த தாக்குதல் நடந்ததாகக் கூறப்படும் இடத்தில்
ரத்தம் ஒன்றும் காணப்படவில்லை.
v கண்காணிப்புக் காமராவில் எந்தவிதமான சம்பவமும்
பதிவாக வில்லை. மேலும் அந்த தலித் சட்டையிலும் எந்தவித தடயமும் இல்லை.
பிறகு
தான் அந்த தலித் தன் நண்பர்களையே ஷேவிங்க் பிளேடால் தன்னைத் தாக்கும் படிச் சொல்லி
இருக்கிறான். இதற்கெல்லாம் உடந்தையாக மரபுசரா இயக்கம் தான் காரணம் என்றும் ஒப்புக்
கொண்டுள்ளார்.
Comments