மோடி எகானாமிக்ஸ் – பாமரர்களின் நம்பிக்கை நட்சத்திரம்
ஆம் ஆத்மி – அதாவது
பாமரர்கள் மோடியை மனப்பூர்வமாக நம்புகிறார்கள். மோடி தான் தங்களது வாழ்க்கையின் நம்பிக்கை
நட்சத்திரம் என்று கருதுகிறார்கள். அந்த எண்ணங்களை பாமரர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள்
– அவர்களின் உரிமைகளைக் காக்கும் பாதுகாவலர்கள் என்று இடது சாரிகள் – இடது சாரிச் சங்கங்கள்
– வேலை நிறுத்தம் என்று சொல்லி இந்தியாவில் பலவிதமான முன்னேற்றத் திட்டங்களைத் தடுத்து
நிறுத்திய அவர்களின் தவறான வழிகாட்டுதல்களை இப்போது தான் புரிந்து கொண்டு, காங்கிரசைப்
புறம்தள்ளியதைப் போல் அவர்களையும் ஒதிக்கித் தள்ளி உள்ளனர்.
உயர்மதிப்பு நாணய
மதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு சேவை வரி என்ற புதிய வரிவிதிப்பு – ஆகியவைகளால் வேலை
வாய்ப்பு இழப்பு, ஜி.டி.பி. 5.7% வீழ்ந்து பொருளாதரம் சரிந்துள்ளது என்பதெல்லாம் பாமரனின்
காதுகளில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்த வில்லை. இது தற்காலிக இடர் என்பது பலவித
இப்போதைய அறிக்கைகள் சுட்டிக் காட்டி உள்ளது என்பது வேறு விஷயம்.
காட்டிலே சுள்ளிகளைச்
சேகரித்து சோறு சமைத்து அவதியுற்ற காலம் போய், காஸ் அடுப்பில் சமைப்பு. வீட்டிலே எலெக்ரிட்
லைட். வீடு தேடி வந்து வங்கிக் கணக்கை ஆரம்பிக்க ஊக்குவிக்கும் அரசு. ஒரு பைசா கூடா
இல்லாமல் வங்கிக் கணக்கை ஆரம்பிக்க காலம் காலமாக வந்த விதியை நீக்கி செயல்பட்ட தீரம்.
குறைந்த மாதம் – வருட இன்சூரன்ஸ் பிரிமியத்தில் சுகாதார காப்பீடு, ஓய்வூதியம் என்ற
திட்டம். சுகாரத்தைப் பேண வீட்டிலேயே ஒவ்வொருவரும் டாய்டெல்ட் கட்ட ஊக்கத்தொகை, வீட்டிலேயே
நல்ல குடிநீர் வழங்கும் திட்டம், ஒவ்வொருவருக்கும் வீடு, திறமைகளை மேம்படுத்த படித்தபின்
பயிற்சித் திட்டங்கள் – ஆகியவைகள் பாமரர்கள் தாங்களே நேரில் பார்த்து அனுபவிக்கும்
நிலையால் படித்த மேதாவிகளின் புள்ளி விவரங்களில் சிந்தை செல்வதில்லை.
தற்போதைய அரசு
பல வேண்டாத சட்டங்களை நீக்கி, சில புதிய விதிமுறைகளை ஏற்படுத்தி, பாமரர்கள் பயனடைய
வழி வகுத்ததையும் அவர்கள் அனுபவரீதியாக உணர்கிறார்கள்.
பாஸ்போர்ட் கிடைப்பதில்
ஏற்படும் தாமதம் இப்போது இல்லை. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் இன்னல்கள் உடனேயே
அறிந்தவுடன் நீக்கப்படும் தீவிரம். தீவிர வாதிகளால் தாக்கப்பட்டு அவதிப் பட்ட பலர்
மீட்கப்பட்ட சம்பவங்கள், சிறைச்சாலைகளின் தண்டனைகளை அனுபவிக்கும் இந்தியக் கைதிகள்
விடுதலை, தூக்குத் தண்டனைக் கைதிகளையும் மீட்ட அதிசயம், பலருக்கு இந்தியாவில் மருத்துவ
சிகிக்கை பெறுவதற்கு விசா அளித்து உதவும் மனித நேய வெளியுறவுத்துறை மந்திரி,
உள்நாட்டில் முக்கியமாக
காஷ்மீரில் நிலவிய தீவிரவாதிகளின் அட்டகாசம் பெரும் அளவில் அடக்கப்பட்டு, பொதுவாக அமைதியை
நிலைநாட்டிய அரசியல் சாணக்கியம் பாமரனைக் கவர்த்துள்ளது. காலம் காலமாக மூன்று முறை
தலாக் சொல்லி முஸ்லீம் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதித்துறைமூலம் ஒரு நேர்மையான
தீர்ப்பு கிடைக்க மோடி அரசு முயன்று வெற்றி பெற்றதைப் பொதுவாக முஸ்லீம் பெண்கள் வரவேற்றுள்ளனர்.
முஸ்லீம் மதராசா மதப் பள்ளிகளில் மத போதனையுடன் மற்ற சயன்ஸ் – கணக்கு – கம்யூட்டர்
பாடங்களைக் கற்க ஏற்பாடு செய்து அது ஓரளவு வரவேற்பைப் பெற்று, முஸ்லீம் சமூதாயத்தின்
நன்மதிப்பைப் பெற முயன்ற முயற்சிகள் ஆரம்ப நிலையில் இருப்பினும், மோடி அரசின் இந்த
முயற்சிக்கு ஆதரவு சிறுகச் சிறுக வளர்ந்து வருகிறது. முஸ்லீம் இளய சமூகத்தினரை – ஒரு
கையில் குரான் – இன்னொரு கையில் கம்யூட்டர் – என்ற அரைகூவல் கையில் கல்லெடுத்து தீவிரவாதிகளுக்குத்
துணை போகும் அவர்களின் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தி, இந்தியாவின் முன்னேற்றத்தில்
அவர்களையும் பங்குகொள்ள வைக்கும் நேர்மையை இந்தியாவின் பாமரன் பாராட்டத்தான் செய்கிறான்.
நாட்டின் நீர்நிலைகளை
மேம்படுத்தல், புதிய அணைகள் கட்டுதல், புதிய சாலைகள் அமைத்தல், ரயில் பாதைகளைச் செப்பனிடல்,
புதிய ரயில் தடங்களை அமைத்தல், சிறிய விமான தளங்களை பல சிறிய ஊர்களில் செயல்படுத்தி
சுற்றுலாவை மேம்படுத்தல், துறைமுக சரக்கு கையாடுதலில் தரம் – அளவு ஆகியவைகளை அதிகரித்தல்
– இவைகள் எல்லாம் ஏட்டுச் சுரைக்காய் போல் உள்ள பேப்பரில் தெரியும் புள்ளிவிவரப் படங்கள்
இல்லை. இவைகளை பாமரன் நேரிலே கண்முன்னால் பார்த்து மனத்திற்குள் உள் வாங்கிக் கொள்கிறான்.
பணம் மதிப்பிழந்த
போது பெரிய தலைவர்களால் பணம் பதுக்கி வைக்கப்பட்டு கண்டு பிடிக்கப்பட்ட சம்பவங்கள்,
சீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்கில் பாமரனின் காலைப் பிடித்துக் கெஞ்சி பணம் போட்ட அரசியல்
ஊழல் பேர்வழிகள், 2 லட்சம் சந்தேகத்திற்கு இடம் கொடுக்கும் கம்பனிகளை இழுத்து மூடிய
சம்பவம், இந்த கம்பனிகள் பல 100 வங்கிக் கணக்குகளுக்கு மேல் திறந்த விபரம் – சில
2000, 900, 300 கணக்குகள் என்று திறந்துள்ள அதிர்ச்சித் தகவல்கள், மதிப்பு இழக்கச்
செய்த நடவடிக்கையின் போது அந்த கணக்குகளில் வரிஏய்ப்பு செய்ய – 4,570 கோடிக்கு மேல்
பணம் செலுத்தி பிறகு அதே கணக்குகளிலிருந்து 4,550 கோடிக்கு மேல் பணம் எடுத்த செயல்,
ஒரே வங்கியில் மட்டும் பண மதிப்பு இழப்பிற்கு முன் 429 கம்பனிகளில் மொத்தமே 40,000
போல் தான் கை இருப்பு இருந்து அதிலிருந்து சுமார் 11 கோடி அளவில் கணக்கில் போட்டு,
அந்த அளவில் பணத்தை எடுத்த சம்பவங்கள் என்பவைகள் எல்லாம் எளிதில் பாமரனால் மறக்கக்
கூடிய நிகழ்வுகள் அல்ல. ஆகையால் தான் பல இடது சாரி அறிவுஜீவிகள், ஊழல் அரசியல் வாதிகள்,
பணமுதலைகள் ஆகியவர்கள் எவ்வளவு தான் கழுதையாகக் கத்தினாலும், பாமரன் செவியில் ஏறுவதாக
இல்லை.
பாமரனுக்கு இப்போது
மோடிதான் விடிவெள்ளி. அவரை அவன் தெய்வ தூதனாகவே கருதுகிறான். இந்த நன்மைகள் எல்லாம்
30 வருட சாதனை அல்ல; வெறும் 3 ½ ஆண்டுச் சாதனை என்று பாமரன் பரவசமாகி, ‘மோடி
மோடி’ அவரது கூட்டங்களில் மந்திரம் போல் ஜெபிக்கிறான். மோடியை பாமரன் முழுமையாக நம்புகிறான்.
மோடி எங்களுக்காக இரவு பகலாக – 24 மணி நேரமும் செலவிடுகிறார்; இப்படிப் பட்ட பிரதமரை
நாடு இப்போது தான் காண்கிறது என்று பாமரன் புகழ் பாடுகிறான்.
பணம் மதிப்பிழக்கச்
செய்து செயல்பட்டு இருக்கும் அந்த மிகவும் பணக்கஷ்டமான நிலையில் ஒரு பூக்காரியின் சொற்கள்
தான் என் நினைவுக்கு வருகிறது. அவளது குரல் தான் அனைத்து பாமர மக்களின் குரலாக இன்றும்
ஒலித்துக் கொண்டிருப்பதாகவே நினைக்கிறேன்.
‘மோடியின் பணம்
மதிப்பிழக்கச் செய்த செயல், உங்களை எல்லாம் கஷ்டத்தில் கொண்டு விட்டுவிட்டதே!’ என்று
நான் சொன்னதிற்கு அந்த பூக்காரி சொன்னாள்: ‘இது என்னையா கஷ்டம்? மோடி ஏழையான எங்களுக்கு
உதவி செய்யத் தான் உழைக்கிறார். அவர்தான் எங்களுக்குத் தெய்வம். மோடி தான் எங்களைக்
காப்பாத்துவார்’ என்று தன் இருகைகளையும் வானத்தை நோக்கித் தூக்கி கைகூப்பி வணங்கினாள்.
இந்தியா மோடியின்
தலைமையில் முன்னேற்ற மடைந்த நாடாக உருவாகும் என்ற நம்பிக்கை பெருவாரியான பாமரமக்களின்
மனத்தில் பதிந்து விட்டது. பெருவாரியான ஓட்டுக்களும் அவர்களின் கைகளில் தான்.
பாரதமாதா புதுப்பொலிவுடன்
திகழ நாம் அனைவரும் நம்பிக்கையுடன் எதிர்காலத்தை எதிர்கொள்வோமாக.
பாரத மாதாவுக்கு ஜே! வந்தே மாதரம்!
Comments