‘தொட்டதெல்லாம் பொன்னாக்கும் ஜெய் அமித் ஷா’



Wire என்பது தீவிரமாக இடதுசாரிக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் ஒரு இ-பத்திரிகை. அதன் சில கட்டுரைகள் நேர்மைக்கும், உண்மைக்கும் மதிப்பளிக்காமல் பத்திரிகை சுதந்திரம் - அரசியல் கொள்கைகள் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு தாக்கும் ஒரு மூன்றாம் தர – நான்காம் தர பத்திரிகை – மஞ்சள் பத்திரிகை ரகம் என்று கூடச் சொல்லாம். இதற்கு அதன் பல கட்டுரைகளை ஆதாரமாகக் காட்ட முடியும்.  

‘தொட்டதெல்லாம் பொன்னாக்கும் ஜெய் அமித் ஷா’ என்ற தலைப்பில் ரோஹினி சிங் ஒரு கட்டுரை எழுதி உள்ளார். இந்த ஆங்கிலக் கட்டுரையின் முழுமையான பதிப்பை இந்தத் தொடர்பை கிளிக் செய்து படித்துத் தெரிந்து கொள்ளலாம். அதில் ஜெய் அமித் ஷாவின் இரண்டு கம்பனிகளான – Temple Enterprise Private Ltd. & Kusum Finservice – இரண்டும் ‘மோடி பிரதமராவதற்குப் பிறகும் ஜெய் அமித் ஷாவின் தந்தையான பி.ஜே.பி.யின் பிரிசிடெண்ட் அமித் ஷா தலைமைப்பொறுப் பேற்றபிறகும் – அதன் விற்பனை பல் மடங்கு அதிகரித்துள்ளது’ என்பதைச் சுட்டிக்காட்டி, இதன் காரணமாக இந்த கம்பனிகளின் செயல்பாடுகளில் மோடி-ஷா இருவரும் அந்தக் கம்பனிகளுக்கு உதவி இருக்கவாய்ப்புள்ளதாக அந்த கட்டுரையாளர் மறைமுகமாகச் சுட்டிக் காட்டி இருக்கிறார்.

முன்பு இந்த கட்டுரை ஆசிரியை எக்கனாமிக்ஸ் டைம்ப்ஸ் பத்திரிகையில் கட்டுரைகள் எழுதி உள்ளார். ஆனால், அவரின் கட்டுரைகள் உண்மைக்குப் புறம்பாக இருந்த காரணங்களால், அவர் அதிலிருந்து நீக்கப்பட்டு, இப்போது WIRE என்ற இ-பத்திரிகையில் இந்தக் கட்டுரை எழுதி உள்ளார்.

இந்தக் கட்டுரையைப் பிரசுரித்த WIRE மற்றும் அதன் ஆசிரியையான ரோஹினி சிங் ஆகிய இருவர் பேரிலும் 100 கோடி ரூபாய் அளவில் பாதிக்கப்பட்ட அமித் ஷாவின் மகன் ஜாய் ஷா மான நஷ்ட வழக்குத் தொடர்ந்துள்ளார். இதன் மூலம் இது மாதிரியான அவதூறுக் கட்டுரைகள் ஒரு முடிவுக்கு வரும் என்று பாதிக்கப்பட்டவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
ரோஹின் சிங்கின் கட்டுரையை நேர்மையாக ஆராய்வது தான் என்னுடைய நோக்கம்.


கம்பனியின் பாலன்ஸ் ஷீட்டில் காட்டப்பட்ட சில அயிட்டங்களைத் தவறாகப் புரிந்து கொண்டு ரோஹின் சிங் தன் கருத்துக்களை முன் மொழிந்துள்ளார். அதை அவர் ஒப்புக் கொண்டு – அது பெரும் பிழை என்றாலும், அதனால் ஒன்றும் பாதக மில்லை என்ற அளவில் ஒதுக்கித் தள்ளுகிறார். முதலில் இதைப் பற்றி இங்கு பார்ப்போம்.


கம்பனியின் விற்பனை சுமார் 50,000-லிருந்து 80 கோடியாக உயர்ந்தது. ஆனால் இதனால் அந்தக் கம்பனி உண்மையிலேயே பெருத்த லாபம் அடைந்திருக்க வேண்டும். லாபத்திற்குப் பதில் நஷ்டம் அடைந்து விட்டது. அதாவது இந்த விற்பனையில், செலவு: ரூபாய் 81.98 கோடி – வரவு: ரூபாய் 80.50 கோடி – நஷ்டம்: ரூபாய் 1.48 கோடி. இதனால் கம்பனியின் ரிசர்வ் & சர்ப்லஸ் மைனஸ் 80.24 கோடியாகி விட்டது. ஆனால், ரோஹினி சிங் மைனஸ் என்பதை மறந்து, கம்பனியின் சொத்தின் மதிப்பு இந்த விற்பனையால் 80.24 கோடியாக உயர்ந்து விட்டது. ஆஹா, பாருங்கள் அமித் ஷா பையனின் தங்கக் கைகளின் மாயம் என்று சொல்கிறார். இது தான் கட்டுரையின் மூல ஸ்ருதி. அதுவே இவ்வளவு மோசமான அளவில் அறியப்பட்டு – கணக்கே தெரியாத ஆனால் அறிவு ஜீவியாகப் பவனி வரும் கட்டுரை ஆசிரியையின் அடிப்படை காமார்ஸின் அறியாமையைப் பறைசாட்டுகிறது. இந்தத் தவறை ஒப்புக் கொண்டதால் கட்டுரையின் தலைப்பே தவறாகி விட்டது!

மேலும் ஒன்றை நான் கட்டாயம் குறிப்பிட வேண்டும். கம்பனியின் விற்பனை 2015-2016 ஆண்டில் தான் ஆரம்பித்ததாகக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அதன் விற்பனை 2015 ஆண்டு இறுதியில் 50,000 மட்டும் தான். ஆகையால், அதை விகிதசாரமாக 2015 ஆண்டு விற்பனை உடன் ஒப்பிட்டால் மிகவும் அதிகமான 16,000 சதவிகிதம் என்று காட்டத்தான் செய்யும். இது தவறு என்று குறிப்பிட முடியாவிடினும், இது நேர்மையான ஒப்பிடல் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இதைப் போல் மிகவும் கேவலமான முறையில் குசும் ஃபின்செர்வ் பற்றிய ரோஹினின் சிங்கின் பார்வை அவரது இன்னொரு அறியாமையைப் பறை சாற்றுகிறது. இந்தக் கம்பனி ஒரு கூட்டுறவு வங்கியில் 25 கோடி அளவில் லோன் எடுத்ததாகச் சொல்கிறார். ஆனால், அது Letter of Credit which is not to be termed as Loan. இது அரிச்சுவடி பொருளாதார/வங்கி பற்றிய எந்த ஒரு மாணவனுக்கும் தெரிந்த ஒன்று. இப்படிப் பட்ட வங்கி/பொருளாதார “ஞானம்” கொண்ட ரோஹினி சிங் போன்றவர்களின் கட்டுரைகளுக்கு மறுப்பு எழுதும் அவலத்தை எங்குபோய் முறையிடுவது!

இருப்பினும், ரோஹினியின் மற்ற குற்றச் சாட்டுக்களையும் ஆராய்ந்து, நமது கருத்துக்களை வாசகர்கள் முன் வைப்பது என் கடமை. அதை முழுமையாகச் செய்ய வேண்டுவது பத்திரிகைத் தர்மம்.

ரோஹினி சிங்கின் இன்னொரு பார்வை: KIFS Financial Services  என்ற Non-Banking Financila Company – யிடமிருந்து ஜாய் ஷா கம்பனி ரூபாய் 15.78 கோடி கடன் பெற்றுள்ளது. 

இதைப் பற்றி ரோஹினி எழுப்பிய கேள்விகள் இரண்டு; 

ஒன்று: 7 கோடி மட்டுமே வரவுள்ள ஃபைனான்ஸ் கம்பனி எப்படி ரூபாய் 15.78 கோடி கடன் கொடுக்க முடியும்”

இரண்டு: டெம்பில் எண்டர்பிரைஸுக்குக் கொடுத்த இந்தக் கடனான ரூபாய் 15.78 கோடியை ஃபைனான்ஸ் கம்பனி தனது வருடாந்திர அறிக்கையில் காடடவில்லை.

இது ரோஹினியின் அறியாமையை மிகவும் துல்லியமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. லோன் – அதனால் கிடைக்கும் வரவு – அதாவது வட்டி இவை இரண்டும் வெவ்வேரு அளவாகத் தான் இருக்கும். ஆகையால் கொடுக்கப்படும் லோனையும், அதற்குத் தகுந்த அளவில் அந்தக் பைனாஸ்ட் கம்பனி பெற்ற வரவின் அடிப்படையில் தான் லோன் வழங்க வேண்டும் என்றுத் தவறாகப் புரிந்துகொண்டு தம் வாதத்தை முன் வைப்பது மிக மிகத் தவறு என்பதை நான் சொல்லித் தான் புரிய வேண்டும் என்பது இல்லை. 

வங்கியைப் போல் இந்த நான்-பாங்கிங் கம்பனிகள் வாடிக்கை யாளர்களிலிடமிருந்து டெபாசிட் வாங்கி அதை லோனாகக் கொடுக்கும் அதிகாரம் கிடையாது. ஏனென்றால் அவர்கள் வாடிக்கையாளர்களிடம் டெபசிட் வாங்க முடியாது. ஆகையால், பைனான்ஸ் கம்பனிகள் அதன் சொந்தக் காரர்களின் பணத்தை வைத்துத் தான் லோன் கொடுக்க முடியும். 

ஆகையால் லோனால் கிடைத்த லாபமான வட்டியின் அடிப்படையில் லோன் கொடுப்பது இல்லை. ஆகையால், லோனையும், அதனால் கிடைத்த வட்டி லாபத்தையும்  லோனாகக் கொடுக்க ஒப்பிட்டுப் பார்ப்பது தவறு. லோன் அளவு அதன் வரவை விட 6/7 மடங்குகள் அதிகமாகத் தான் இருக்கும். மேலும், வரவின் அளவை வைத்து லோன் கொடுப்பதில்லை என்பது ஒரு அடிப்படை அறிவு.

வருடாந்திர அறிக்கையில் அனைத்து லோன் களையும் பட்டியலிட மாட்டார்கள். அதற்காக அது அந்த பைனான்ஸ் கணக்கில் இல்லை என்று அர்த்த மில்லை. இந்த அடிப்படைக் கணக்கைப் பற்றிய தெரிதல் இல்லாத ஒரு ஜீவனின் கட்டுரைக்கு மறுப்பு எழுதுவதற்கு எனக்கே மிகவும் வருத்தமாக இருக்கிறது.

இதில் முக்கியமான ஒரு குற்றச் சாட்டு: 10.35 கோடியை – மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் – முன்பு இது தற்போதைய ரயில் மந்திரி பியுஷ் கோயலின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது – Indian Renewable Energy Development Agency (IREDA) கும்சம் ஃபின்செர்வ் என்ற ஜாய் ஷா கம்பனிக்கு 2.1 எம்.டபுள்யு.காற்று சக்தி உற்பத்திக்கு லோனாகக் கொடுத்துள்ளது. இது ஏதோ இந்த ஜாய் ஷா கம்பனிக்கு மட்டும் லோன் கொடுத்ததாக ஒரு தோற்றத்தை அளித்தால், அது முற்றிலும் தவறு. 

இந்த ireda இதுவரை ரூபாய் 37,000 கோடிவரை லோன் பட்டுவாடா செய்துள்ளது. மேலும் ரூபாய் 28,000 கோடிவரை லோன் பட்டுவாடா செய்து காற்று சக்தியை 7000 mw அளவில் அதிகரிக்க முடிவெடுத்துள்ளது. இந்த வருடமே ரூபாய் 13,000 கோடி அளவில் லோன் பட்டுவடா செய்ய உள்ளது. ஆகையால் யார் வேண்டு மானாலும் வெளிப்படையாக இந்த மிகப் பெரிய திட்டத்தில் பங்குகொண்டு இந்தியாவின் காற்று சக்தியை அதிகரிக்க உதவலாம். ஆகையால், அதன் படி ஜாய் ஷாவும் அப்ளை செய்து திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறார்.

இந்த சமயத்தில் வாய்மை வாசகர் ஒருவர் என்னிடம் கேள்வி ஒன்றை எழுப்பினார்: அதெல்லாம் சரி. ஏன், மோடி இதற்கு மவுனம் சாதிக்கிறார்? இதை மோடி வெளிப்படையாக விளக்க வேண்டாமா?

முதலில் இதற்கு பலர் பதில் அளித்துள்ளனர். 

அமித் ஷாவும் மிகவும் விரிவாக விளக்கி உள்ளார். அவர் கூறிய பதிலின் சாராம்சம்: எனது மகன் ஒரு பைசா அரசு நிலத்தைப் பெற வில்லை. அவனது கம்பனியின் செயல்பாடுகளில் நான் எந்தவிதமான அரசாங்கம் மூலம் சலுகைகளையோ அல்லது ஆர்டர்கள் பெற உதவவோ முன் வந்ததில்லை. ஒரு பெரிய ஆர்டர் கிடைக்கும் போது – அந்த ஆர்டரின் தன்மையால், விற்பனை – அவைகள் வெளிநாட்டு ஏற்றுமதியாக இருப்பின் – அதிகமான அளவில் இருப்பது சகஜம். என் மகனின் விற்பனையின் பெரும் பங்கு வெளிநாட்டு ஏற்றுமதியாகும். ஆனால் அதனால் அதிக செலவும் ஏற்பட்டு, நிகரத்தில் கோடிக்கணக்கான ரூபாய் நஷடம் ஏற்பட்டு, கம்பனியின் செயல்பாடுகளையே நிறுத்தி ஆய்வு செய்யும் நிலை ஏற்பட்டு விட்டது.

பியுஷ் கோயலும் மக்களுக்கு பிரஸ் பேட்டியின் மூலம் தகுந்த விளக்கம் அளித்துள்ளார். ஏன், பியுஷ் கோயல் வக்காலத்து வாங்க வேண்டும்? என்று கூட ஒரு சில சிக்குலர் – இடது சாரி மேதாவிகள் கேள்வி எழுப்பினார்கள். அவரைப் பற்றி அந்தக் கட்டுரையில் எழுதி இருப்பதால், அதற்கு அவர் பதில் அளித்ததைத் தவறு என்று சொல்ல முடியாது.

இந்தச் சமயத்தில் அந்த வாய்மை வாசகர் சொன்ன கருத்துத் தான் என்னை ஆச்சரியப்பட வைத்தது: ‘அமித் ஷா தமது பி.ஜே.பி. தலைமைப் பொறுப்பிலிருந்து விலக வேண்டும். இல்லாவிடில் மோடி அதைச் செய்ய வேண்டும்.

இது தான் உச்ச கட்ட அறியாமை என்பது. அமித் ஷாவின் பதவி ஒன்றும் அரசாங்கப் பதவி இல்லை. அரசியல் கட்சிப் பதவி. மேலும், அரசாங்க இயத்திரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டது என்ற குற்றச் சாட்டைக் கூட கட்டுரை ஆசிரியை குறிப்பிடவில்லை. மேலும் ஆந்தக் கட்டுரையில் அமித் ஷா தமது பையனுக்கும் உதவினார் என்றும் நேரடியாகக் குறிப்பிட வில்லை.

இந்தக் கட்டுரை ஆசிரியை – அதைப் பிரசுரம் செய்த பத்திரிகை ஆகியவைகளின் மேல் மான நஷ்ட வழக்குப் போட்டு விட்ட பிறகு, கோர்டின் தீர்ப்புக்குக் காத்திருப்பது தான் தர்மம்.

குஜராத் தேர்தல் வர இருப்பதால் இன்னும் இது போல் பல கட்டுரைகளைச் சந்திக்கும் துர்லபம் வரத்தான் செய்யும். விழிப்புடன் இருப்பது ஓட்டர்களின் கடமை. அதற்கு உறுதுணையாக வாய்மை அதன் கடமையை ஆற்றும்.

இந்தியாவே விழித்திரு! சிந்தித்திரு! 

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017