Bail Rahul Fail – பெயில் ராகுல் ஃபெயில்


செயற்கை அறிவை ஆராய சமீபத்தில் நார்வே சென்ற பிறகு, அதைப் பற்றி மேலும் அறிய யு.எஸ்.யுனிவர்சிட்டிக்கு விஜயம் செய்து அங்குள்ள பேராசிரியர்கள் – மாணவர்கள் ஆகியவர்களுடன் ‘இந்தியாவின் வயது 70 – முன்னேற தேர்வு செய்யும் பாதை’ என்ற தலைப்பில் பேசி உள்ளார்.

சமீபத்திய ராகுலின் மனநிலை அவரது பேச்சில் எதிரொலிக்கிறது.

‘குடும்ப அரசியல் தான் இந்தியாவில் நடக்கிறது. இதற்கு காங்கிரஸ் மட்டும் குடும்ப அரசியல் செய்கிறது என்று இல்லை. முலாம் சிங்கின் கட்சி அகிலேஷைத் தலைவராக்கியது, லல்லு பிரசாத் யாதவ் தம் இரு மகன் களையும் மந்திரிகளாகினார், டி.எம்.கே.வில் கருணாநிதியும் ஸ்டாலினைத் தான் தலைவராக்கி உள்ளார். இதே போல் சினிமா – வியாபாரம் போன்றவற்றிலும் நடக்கிறது’ என்று பகர்ந்த ராகுல் இது இந்தியாவின் கலாச்சாரமப்பா – இது யாராலேயும் தடுக்க முடியாது – என்று வாரிசு அரசியலை ஆதரிப்பதாகத் தெரிகிறது.

“இது எவ்வளவு தூரத்திற்கு ஆரோக்கியமான சுதந்திர எண்ணங்களுக்கு வழிவிடும். இது இந்தியாவிற்கு நல்லதா?” என்ற விவாதம் எழத்தான் செய்யும். மேலும் பி.ஜே.பி., கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவைகளில் இந்த குடும்ப வாரிசு அரசியல் ஒரு போதும் தலைதூக்காது, அடி மட்டத் தொண்டனும் தனது சொந்த முயற்சியாலும், கட்சிக்கு உழைப்பதாலும் கட்சியின் தலைமைப் பொறுப்பேற்கும் நிலையும், அதனால் ஆட்சியின் தலைமைப் பீடத்தில் அமரும் சூழ்நிலையும் வரும். ஆனால், காங்கிரசில் இதற்கு இடம் இல்லை என்று ராகுல் கட்சியின் தலைவர் பதவியை காந்திக் குடும்பச் சொத்தாகவே கருதி, அது தான் மற்றவர்களும் ஏற்க வேண்டும் என்ற மனநிலையில் பேசுகிறார். 

இதை விட ஒரு முத்தான கருத்தைச் சமீபத்தில் யு.எஸ். வாழ் இந்திய வம்சாவளியினருடன் பேசும் போது சொன்னார் ராகுல்: “இந்திய விடுதலை இயக்கமே என்.ஆர்.ஐ. இயக்கம் என்று தான் சொல்ல வேண்டும். காந்தி, நேரு, பட்டேல், அம்பேத்கர் அனைவரும் என்.ஆர்.ஐ. வர்கத்தைச் சேர்ந்தவர்கள். வெளிநாட்டினரின் எண்ணங்களால் ஈர்க்கப்பட்டு, இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்டனர்” – என்ற அளவில் தமது கருத்தை வெளியிட்டுள்ளார். இது பலரையும் சிரிக்க வைத்துள்ளது. 

ராகுலின் அகராதியே தனி. செயற்கை அறிவின் ஆற்றல் ராகுலைத் தாக்கி விட்டதோ என்னவோ என்று கேலி பேசும் அளவிற்கு இது அமைந்து விட்டது.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்குபெற்றோர்களில் வெளிநாட்டில் கல்வி கற்றோர்களின் எண்ணிக்கை மிக மிக சொற்பம். ஆனால் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்றோர் சுதந்திர தாகத்தாலும், அன்னியரின் ஆட்சியை அடியோடு நீக்க வேண்டும் என்ற தீரமான கருத்தாலும், களத்திலே இறங்கிப் போராடி, சுதந்திரம் பெற்ற சரித்திரத்தையே மறந்து பேசியது மிகவும் கண்டிக்கத் தக்கது.

இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை மட்டம் தட்ட நினைத்து ராகுல் பேசியது: ஆர்.எஸ்.எஸ். பெண்களை எங்கே மதிக்கிறது? அவர்களின் டிரிலில் நீங்கள் குட்டைப் பாவாடையுடன் கூடிய பெண்கள் கலந்து கொண்டதைப் பாத்திருக்கிறார்களா?

ஏற்கெனவே ராகுல் குஜராத்தில் தவறுதலாக பெண்கள் டாய்டெல்டில் சென்று தலைகுனிவு ஏற்படுத்திய இந்த நேரத்தில் அவரது குட்டைப் பாவாடைக் கருத்து பலரையும் ராகுலின் வக்கிர எண்ணங்களின் எதிரொலியாகவே கருதப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். இப்போது முழு பாண்டிற்குப் மாறிய போதிலும், ஏன் ராகுல் இன்னும் அரைடிராயரில் கவனம் செலுத்துகிறார்? – என்று கேள்வி கேட்க வைக்கிறது.

இன்னும் சில தினங்களில் ராகுல் காங்கிரசில் பதவி உயர்வு பெற்று காங்கிரசின் தலைவராக அவரது அம்மா சோனியாவால் நியமிக்கப்படப்போகிறார். அந்த சமயத்தில், ராகுல் தமது மம்மி சோனியாஜியிடம் ‘அம்மா, பிரதம மந்திரிப் பதவி பாய்சன் .. நம் பரம்பரைக்கே அது வேண்டாம்’ என்றவர் இப்போது ‘பிரதம மந்திரி யாய்சன் இல்லை – பாயாசம்’ என்று தம் நாக்கைச் சப்புக் கொட்டிக் கொண்டிருக்கிறார்.

இப்படி தானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பாமல் ராகுல் இப்போதாவது  முதிர்ச்சியைக் காட்ட முயல்வார் என்று நம்புவோமாக.

பெயிலில் இருக்கும் ராகுல் தோல்வி அடையாமல் இருக்க வேண்டு மென்றால், அவரது பேச்சும் – தோரணையும், மாறினால் தான் காங்கிரஸ் நிலைகுலையாமல் பி.ஜே.பி.யை எதிர்கொள்ள முடியும். 

Comments

Popular posts from this blog

தமிழில் நான்கு வேதங்கள்

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017