திய்வதேசத்திற்கு இணையான பெருமாள் - ஆக்கியோர்: திருமதி. வத்ஸலா சங்கரன்.
எனது தாயார் உயிரோடு
இருந்த போது, நாங்கள்
குடியிருந்த வீட்டிற்கு வலது பக்கத்தில் இருந்தது ஒரு பெருமாள் கோயில். எனது
அம்மா தினமும் வழிபடும் தெய்வம் அது. அந்தக் கோயில் பிரசித்து பெற்றது என்பது
சமீபத்தில் தான் ஒரு பத்திரிகைவாயிலாக அறிந்தேன். அதை 'வாய்மை'
பத்திரிகை மூலம் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
சற்றேறைக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன்பாக சிறிய மூலவருடன் இருந்த போது பெருமாளை இடைவிடாது தரிசனம் செய்து வந்த ஒரு பெரியவரின் கனவில் ஆஜானுபாகுவாக தோன்றி, நீ என்னைப் போல் உருவம் செய்து வழிபட்டு வா! என்றாராம். அந்த சமயத்தில் ஒரு பெரிய மணி மட்டும் அக்கோலில் கட்டப்பட்டு இருந்ததாம். இதற்குப் பிறகு, பெரிய திருமேனியாக மூலவரையும், மணியின் அவதார புருஷரான தேசிகனையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர்.

படங்கள்: சென்னை, புரசவாக்கம்
வெள்ளாளத்தெருவில் உள்ள கோயிலின் தோற்றமும், மூலவரின்
தோற்றமும்.
1896-ல் ஜெகன்னாத செட்டியாரால் கட்டப்பெற்ற இக்கோயில் 1980-ல் பரம்பரை அறங்காவலர் நடராஜனால் புனருத்தாரணம் செய்யப்பட்டது.
100 வருடங்கள் இடைவிடாது திருவாராதனம் நடந்தால், அக்கோயில் திய்வ தேசத்துக்கு இணையானது என்பார்கள். இக் கோயிலில் 200 வருடங்களாக விடாது திருவாராதனம் நடைபெற்று மகான்கள் மங்களா சாஸனம் செய்திருப்பதால், இது திய்வதேசத்திற்கு இணையானது.
1967-ல் இருந்து காஞ்சிப் பெரியவர் சந்திரசேகர ஸ்வாமிகளால் அறிமுகப் படுத்தப்பட்ட பிடி அரிசி திட்டமும் இன்றளவும் நடைபெறுகிறது.
பெளர்ணமி, சத்திய நாராயண மற்றும் கார்த்திகை கடைசி வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜைகள் இக்கோயிலின் சிறப்பாகும். இப்பூஜை செய்யும் கன்னிப்பெண்களுக்கு திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. சனிதோறும் அன்னதானமும், பிரதி ஞாயிறுதோறும் இலவச ஆன்மிக வகுப்பும் நடைபெறுகிறது.
1986,1998, 2002 - ஆண்டுகளில் சென்னையில் சிறந்த கோயில் என்ற விருதையும் இக்கோயில் பெற்றுள்ளது.
பிப்ரவரி மாதத்தில் ஒரு ஞாயிறன்று திருமலை போல் ஒரு நாள் விழாவும் இக்கோயிலில் நடைபெறுகிறது. சக்கரத்தாழ்வார், லெட்சுமி, ஹயக்ரீவர் சன்னதிகளும் உண்டு.
பெருமாளின் திருநாமம்-சீனிவாசப் பெருமாள்.
ஆதாரம்: தினத்தந்தி.

Comments