எழுதுகோல் ஆக்கியோன்: கரன்சங்க்
1. வான்புகழ்
வள்ளுவன் நீதிக்கோல்,
பண்புகழ் சிலம்பின் கற்புக்கோல்,
நாண்புகழ் கம்பராமன் வீரக்கோல்,
மண்புகழ் மணிமேகலை துறவுக்கோல்,
எங்கே, எங்கே, எங்கே?
2. எழுத்திலே எழிச்சி எங்கே?
எண்ணத்தின் ஏற்றம் எங்கே?
தர்மத்தின் தன்மை எங்கே?
தர்க்கத்தின் வெண்மை எங்கே?
3. எழுதுவதெல்லாம் எழுத்துமில்லை,
எண்ணுவதெல்லாம் எழுதுவதற்கில்லை!
எழுதுகோலே எழுந்து கொள்ளாயோ?
ஏற்றமிகு புதினம் படைத்துத் தள்ளாயோ?
4. கன்னத்தின் களையிழந்து, காதணியின் ஒளியிழந்து,
கண்களிலே கண்ணீரோ, தமிழ்த்தாயே!
கலியுகத்தில் காசுக்குப் பலியான எழுதுகோலை,
கருத்துமிக்க காவியத்தால் தகர்ப்பேன் தாயே!
பண்புகழ் சிலம்பின் கற்புக்கோல்,
நாண்புகழ் கம்பராமன் வீரக்கோல்,
மண்புகழ் மணிமேகலை துறவுக்கோல்,
எங்கே, எங்கே, எங்கே?
2. எழுத்திலே எழிச்சி எங்கே?
எண்ணத்தின் ஏற்றம் எங்கே?
தர்மத்தின் தன்மை எங்கே?
தர்க்கத்தின் வெண்மை எங்கே?
3. எழுதுவதெல்லாம் எழுத்துமில்லை,
எண்ணுவதெல்லாம் எழுதுவதற்கில்லை!
எழுதுகோலே எழுந்து கொள்ளாயோ?
ஏற்றமிகு புதினம் படைத்துத் தள்ளாயோ?
4. கன்னத்தின் களையிழந்து, காதணியின் ஒளியிழந்து,
கண்களிலே கண்ணீரோ, தமிழ்த்தாயே!
கலியுகத்தில் காசுக்குப் பலியான எழுதுகோலை,
கருத்துமிக்க காவியத்தால் தகர்ப்பேன் தாயே!
Comments