இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்திய ஏர் இந்தியா விபத்து

 


ஏர் இந்தியா அகமதாபாத்-லண்டன் விமானம் 171 மதியம் 1.38 ஒடு தளத்தில் இருந்து பறக்க, 5 நிமிட த்திலேயே அதாவது 1.43 மணிக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. 

அந்த விமானத்தில் 242 பயணிகள், 12 விமானப் பணியாளர்கள் இருந்துள்ளனர். 

விமானத்தில் பயணம் செய்த ஒரு பயணியைத் தவிர மற்ற 253 பேர்களும் தீயில் கருகி உருக்குலைந்து உயிர் நீத்துள்ளனர். 11 ஏ சீட்டில் பயணம் செய்த ஒரு பயணி மட்டும் சிறிய காயங்களுடன் உயிர் பிழைத்தது தெய்வ சங்கலபமே

அந்த விமானம் துரதிஷ்டவசமாக அகமதாபாத்தில் உள்ள ஒரு தங்கும் மருத்துவர் விடுதியில் மோதியதால், அதனால் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் மெஸ் உதவியாளர்கள் என்று உயிர் இழந்துள்ளனர். மேலும், பலர் காயம் அடைந்துள்ளனர். 

இந்த விபத்திற்குக் காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. 

பைலட் தவறு என்றும், இயந்திரக கோளாறு என்றும், பறவை விமானத்தில் இடித்ததால் என்றும், இயந்திரக் கோளாறு உள்ளது என்று பைலட் குறை சொன்னதை அலட்ச்சியம் செய்த தாகவும் பல கோணங்களில் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்

கருப்புப் பெட்டி, வாய்ஸ் ரிகார்டர் - கிடைத்து விட்டன

பைலட் மே டே என்று அலரியதும் - அதாவது பயங்கரமான ஆபத்து - என்று அலரியதும் தெரியவருகிறது

இனி இது போல் எந்த விமான விபத்தும் நடக்காமல் இருக்க சகல நடவடிக்கைகளும் எடுக்க வேண்டியது அனைவருடைய பொறுப்பாக இருக்க வேண்டும்

உயிர் இழந்தவர்களுக்கு வாய்மை இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. காயம் அடைந்தவர்கள் பூரண குணம் ஆக இறைவனை வாய்மை வேண்டுகிறது

இது இந்திய விமான சேவையின் ஒரு கருப்பு அம்சம் என்பதாக சரித்திர ஏடுகள் சுட்டுக் காட்டப் போகின்றன என்ற எண்ணம் ஒவ்வொரு இந்தியனையும் தலைகுனிவை ஏற்படுத்தும்

இதிலிருந்து சீக்கிரம் மீண்டு சகஜ நிலைக்குத் திரும்ப எல்லாம் வல்ல ஆண்டவனை வாய்மை வேண்டுகிறது

ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி








Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017