ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் வெற்றி விழா சோக விழாவானது
ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு ((RCB) ஜூன் 3-ல் அமாதாமாத் ஸ்டேடியத்தில் நடந்த கிரிக்கெட்
விளையாட்டில் பஞ்சாப் கிங்க்ஸ் அணியை வென்றது. இது பெங்களூர் அணிக்கு பல
வருடங்களாக கிடைக்காத வெற்றிக் கோப்பை என்பதால் ஜூன் 3-ல் இருந்தே பெங்களூர்
கிரிக்கெட் ரசிகர்கள் பங்களூர் தெருக்களில் வெடி வெடித்தும், இரு சக்கர
வாகனங்களில் பலர் வேகமாக வலம் வந்தும், ஆர்சிபியின் கொடிகளை எந்தியும் அந்த வெற்றியை
வெறித்தனமாகக் கொண்டாடினார்கள்.
ஆர்சிபியும் அந்த வெற்றிக் களிப்பில் அமாதாபாத்திலேயே ஜூன் 3-ல் 'ஜூன் 4-ல் பங்களூரில்
வெற்றி விழா நடக்கும்' என்று ட்வீட் செய்துள்ளது. இந்தச் செய்தியும் பங்களூரில்
தொடர்ந்து இடைவிடாமல் தெருக்களில் கொண்டாட்டமாடி குதூகலிக்கச் செய்துள்ளது
கிரிக்கெட் ரசிகர்களை.
இதைத் தொடர்ந்து கர்நாடக முதல்வர் சித்தராமையாவும், அவரது துணை முதல்வர்
டி.கே. சிவகுமார் ஆகிய இருவர்களும் அந்த வெற்றி பெற்ற கிரிகெட் வீரர்களுக்கு
சிறப்பான முறையில் வெற்றி பெற்றதற்கு பாராட்டு விழா விதன் செளதா வளாகத்தில் ஜூன் 3-ல் நடக்கும் என்று அறிவித்து, கிரிக்கட் விளையாட்டு
ரசிகர்களுக்கு ட்வீட் மூலம் கர்நாடக முதல்வரே அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த கர்நாடக அரசின் விதன் செளதா பாராட்டு விழாவிற்குப் பிறகு பக்கத்தில் உள்ள
விளையாட்டு அரங்கத்தில் வெற்றி விழா நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
போலீஸ் துறை இந்த வெற்றி விழாக்களை வரும் ஞாயிற்றுக் கிழமை ஜூன் 8-ம் தேதியில்
வைத்துக்கொள்ளும் படி வேண்டினர். ஏற்கனவே ஜூன் 3-ம் தேதி இரவு முழுவதும்
போலீஸ் கிரிக்கெட் ரசிகர்களின் கொண்டாட்டத்தை கண்காணிக்க ரோந்துப் பணியில்
ஈடுபட்டிருப்பதால், அவர்களால் எந்த ஓய்வும் இன்றி அடுத்த நாள் நடக்கும் வெற்றி
விழா ஊர்வலம், விதன் செளதா பாராட்டு விழா, சின்னசாமி ஸ்டேடியம்
மக்கள் பாராட்டு விழா என்ற அடுத்தடுத்து நடக்கும் விழாக்களுக்கு தகுந்த பாதுகாப்பு
ஏற்பாடுகள் செய்ய முடியாத நிலையை கர்நாடக
அரசுக்குத் தெரியப்படுத்தி உள்ளனர். ஆனால் முதல்வர் இதை நிராகரித்து அதனால் தவிர்க்கப்படக்
கூடிய உயிர் பலி 11, காயம் அடைந்தோர் 75 என்று வெற்றி விழா சோக விழாவாகப் போய் விட்டது.
இந்த சோக நிகழ்ச்சியை
கர்நாடக உயர் நீதிமன்றம் தன்னிச்சையாக இதை விசாரிக்க முடிவெடுத்துள்ளது. உயர்
நீதிமன்றம் 'பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏன் தோல்வி அடைந்துள்ளன. அதற்கான முழு விபரங்களையும் அளிக்கவும்'
என்று
உத்திரவு பிறப்பித்துள்ளது. அதன் தீர்ப்பு வர காலதாமதம் ஆகும்.
கர்நாடக அரசு முதலில்
இறந்தவர்களுக்கு ₹ 10 லட்சம் தான் உதவித் தொகையாக அறிவித்தனர். ஆனால் இதற்குப்
பல எதிர்ப்பு வந்ததால் இந்த தொகை ₹ 25 லட்சமாக உயர்த்தப்பட்டது.
ஆனால், ஆர்சிபி ₹ 10 லட்சம் உதவித் தொடை வழங்கியதை கர்நாடாக அரசு வழக்கறிஞர்
கேலியாக 'இது பிச்சைக் காசு. அவர்களின் லாபம் பல கோடிகளில் இருக்கும் பொழுது, இந்தத் தொகை
மிகவும் கேவலமான ஒன்றாகும்' என்று வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். இறப்பைத்
தவிர்க்க உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கத் தவறிய அரசின் இந்த அறிக்கை வெந்த
புண்ணில் வேலைப் பாய்ச்சுவதாகும்.
இது ஒரு புறம் இருக்க, சில கிரிக்கெட் அபிமானிகள் 2008-இல்
தொடங்கப்பட்ட IPL – இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் விளையாட்டை ஒரு
விற்பனைச் சந்தையாக மாற்றி உள்ளது என்றும், இந்த ஆர்சிபியில்
பங்களூர் வாழ் கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் இல்லை என்பதைச் சுட்டிக் காட்டியும்,
இதில்
பங்களூர் கிரிக்கெட் ரசிகர்கள் உண்மை நிலையைப் புரிந்து கொள்ளாமல் உணர்ச்சி
வசப்பட்டு வெற்றியைக் கொண்டாடுகிறார்கள். என்றும் விமரிசனம் செய்துள்ளனர்.
இது ஒரு வணிக விளையாட்டு. விளையாட்டு வீரர்கள் எந்த நாட்டைச்
சேர்ந்தவர்களாயினும் அதிக பணம் கொடுத்து ஆர்சிபி வாங்கி அவர்களை ஒரு அணியாக
உருவாக்கி ஆடச் செய்கிறார்கள்.
ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) என்பது IPL லீகில் போட்டியிடும் பெங்களூரை மையமாகக் கொண்ட ஒரு
பிரான்சைஸ் அணி. அணியின் உரிமை இப்போது உலகத்தின் முக்கிய ஆல்கஹால் கம்பனியின்
தலைவரான ஹஜெல் கிரூப்பிடம் உள்ளது. முதலில் 2008-ல் கிங்க் பிஷர் கம்பனி
அதன் முதலாளி விஜய் மல்லியாவிடமிருந்து யுனைட்டெட் ஸ்பிரிட் 2015 வாங்கியது.
பிறகு தான் அதை ஹஜெல் கிரூப் வாங்கி உள்ளர்.
இந்த விபரங்களால் இந்த வெற்றியில் பெங்களூர் கிரிக்கெட்டிற்கோ, விளையாட்டிற்கோ
எந்தவிதமான பலனும் இல்லை என்று குறிப்பிட்டு, பங்களூர் கிரிக்கெட்
ரசிகர்கள் மதுபோதையில் குதியாட்டம் போல் கொண்டாடியதால் வந்த உயிர் இழப்புகள் -
காயம் அடைதல் என்று நிகழ்ந்துள்ளது என்ற ஒரு சாராரின் கருத்தையும் கவனத்தில் கொள்ள
வேண்டும்.
'இந்த கிர்க்கெட் கொண்டாட்ட விழா வேண்டாம். இதனை எங்களால் கட்டுப்படுத்த இயலாது'
என்று
சொன்ன போலீஸ் தலைமை அதிகாரிகளை சித்தராமையா அரசு தண்டித்துள்ளது எந்த விதத்திலும்
நேர்மையான நடவடிக்கையாகாது.
ஆர்சிபி - கர்நாடக அரசு - உணர்ச்சி வசப்பட்ட பங்களூரு கிரிக்கெட் ரசிகர்கள்
என்று மூவரையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
முக்கியமாக சித்தராமையா அரசு தான் இந்த சோக விழாவிற்கு முக்கிய காரணகர்த்தா
என்பதையும் வாய்மை சுட்டிக் காட்டுகிறது.
வாய்மை கர்நாடக அரசை குற்றம் சாட்டுவதே நேர்மையான தீர்ப்பு என்று நினைக்கிறது.
இந்த சோக விழாவில் உயிர் இழந்த அப்பாவி ரசிகர்களின் ஆன் மா சாந்தி அடைய வாய்மை
பிரார்த்திக்கிறது.
ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி
!
Comments