மோடி சர்காரின் ரயில் பாதை அமைப்பில் ஒரு ஹிமாலய வெற்றி




22-ம் தேதி மே மாதம் 2025 வருடம்  ......... 

அன்று ராஜஸ்​தானின் தேஷ்நோக் ரயில் நிலையத்​தில் நாடு முழு​வதும் ரூ.1,100 கோடி​யில் புதுப்​பிக்​கப்​பட்ட 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 103 அமிர்த ரயில் நிலையங்​களை பிரதமர் நரேந்​திர மோடி காணொலி வாயி​லாக திறந்து வைத்தார். 

ரயில் நிலை​யங்​களில் பயணி​களுக்​கான வசதியை மேம்​படுத்த கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி அமிர்த ரயில் நிலை​யம் திட்​டம் அறி​முகம் செய்யப்​பட்​டது. இந்த திட்​டத்​தின் கீழ் நாடு முழு​வதும் 1,318 ரயில் நிலை​யங்​களை உலகத் தரத்துக்கு உயர்த்த மத்​திய அரசு திட்​ட​மிட்டு உள்​ளது. 

இரண்டு ஆண்டுக்களுக்குள்ளாகவே இது வரை 161 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன என்பது ஒரு பெரிய சாதனையாகும். இது தவிர புதிய ரயில் தடங்கள், புதிய நவீன வசதிகளுடன் கொண்ட ரயில் பெட்டிகள், ரயில் இன்ஜின்கள், பயணம் செய்ய பல வசதிகள் என்று ரயில் பயணம் மிகவும் இனிமையானதாக ஆக்கப்பட்டுள்ளது

முதல் ​கட்​ட​மாக கடந்த 2023-ம் ஆண்​டில் 58 ரயில் நிலை​யங்​கள் உலகத் தரத்தில் மேம்​படுத்​தப்​பட்​டன. 

இதைத் தொடர்ந்து இரண்​டாம் கட்​ட​மாக நாடு முழு​வதும் 553 ரயில் நிலையங்​களை புதுப்​பிக்​கும் திட்​டத்​துக்கு பிரதமர் நரேந்​திர மோடி கடந்த 2024-ம் ஆண்டு பிப்​ர​வரி 26-ம் தேதி அடிக்​கல் நாட்​டி​னார். இதில் 103 அமிர்த ரயில் நிலை​யங்​கள் ரூ.1,100 கோடி​யில் புதுப்​பிக்​கப்​பட்டு உள்​ளன. 

இதன்​படி உத்தர பிரதேசத்​தில் 19, குஜ​ராத்​தில் 16, மகா​ராஷ்டி​ரா​வில் 15, தமிழ்​நாட்​டில் 9, ராஜஸ்​தானில் 8, மத்​திய பிரதேசத்​தில் 6, கர்​நாட​கா​வில் 5, சத்தீஸ்​கரில் 5, தெலங்​கா​னா​வில் 3, மேற்​கு​வங்​கத்​தில் 3, ஜார்க்​கண்​டில் 3, கேரளா​வில் 2, பிஹாரில் 2, புதுச்​சேரி, இமாச்சலபிரதேசம், அசாம், ஹரியானா​வில் தலா 1 உட்பட மொத்​தம் 103 ரயில் நிலை​யங்​கள் உலகத் தரத்​தில் புதுப்​பிக்​கப்​பட்டு உள்​ளன. 

இந்த ரயில் நிலை​யங்​களில் மின் தூக்​கி​கள், நகரும் படிக்​கட்​டு​கள், இலவச வைபை, நவீன மின்​னணு தகவல் பலகைகள், கூடு​தல் வசதி​களு​டன்​கூடிய காத்​திருக்​கும் அறை, சுத்​த​மான குடிநீர், சுகா​தா​ர​மான கழிப்​பறை​கள், பேருந்து, மெட்ரோ ரயில் சேவை​களை ஒன்​றிணைக்​கும் வசதி, மாற்​றுத் திறனாளி​களுக்​கான வசதி, பார்​வையற்​றோருக்​கான நடை​பாதை, விசால​மான பார்க்​கிங் வசதி உள்​ளிட்ட பல்​வேறு வசதி​கள் செய்​யப்​பட்டு உள்​ளன. 

6-ம் தேதி ஜூன் மாதம் 2025 வருடம் .... 

மோடி செனாப் ரயில் பாலத்தைத் திறந்து வைத்து சரித்திரம் படைத்து விட்டார் என்றால் எந்த வகையிலும் மிகையாகாது. 

இந்த ரயில் பாலம் தொழிற் நுட்ப அதிசயமாகும். இந்த செனாப் ரயில் பாலம் உலகின் மிக உயரமான ரயில்வே வளைவுப் பாலமாகும்.

காஷ்மீர் பள்ளத்தாக்கை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் , இந்தியாவின் முதல் கேபிள்-ஸ்டேட் ரயில்வே பாலம் செனாப் நதியிலிருந்து 359 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்தப் பாலத்தின் உயரம் பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் உயரத்தை விட அதிகமாகும். 

இந்தியாவின் வலுவான பாதுகாப்பு அம்சங்களுக்கு சான்றாக , அனைத்து வானிலைகளையும் தாங்கும் இந்தப் பாலம் முதல் முறையாக வெடிப்பு-எதிர்ப்பு எஃகு மற்றும் கான்கிரீட்டால் கட்டப்பட்டுள்ளது. 

அதிக நில அதிர்வு அபாய மண்டலத்தில் அமைந்துள்ளதால், செனாப் ரயில்வே பாலம் அதிக அளவு நிலநடுக்கங்களையும், மணிக்கு 266 கிமீ வேகத்தில் காற்றின் வேகத்தையும் தாங்கும். 

இது தவிர, பிரதமர் மோடி இரண்டு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். இந்த ரயில்கள் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா மற்றும் ஸ்ரீநகரை இணைத்து வேகமான, வசதியான மற்றும் நம்பகமான பயணத்தை அளிக்கும். 

இந்த ரயில் பாலம் கட்ட பொருட்களையும், தளவாடங்களையும் கொண்டு செல்ல 26 கிலோ மீட்டர் தூரம் ரோடு பாதைகள், ஒரு 400 மீட்டர் நீளமுள்ள குகைப் பாதைகள் கட்ட வேண்டிய நிலையும் இருந்தது. 

 இதன் மூலம் காஷ்மீர் பயண நேரம் வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால் காஷ்மீரில் பொருட்களை இந்தியாவின் மற்ற இடங்களுக்கு அதிக விரைவிலும், செலவு குறைவிலும் அனுப்பி பொருளாதாரம் மேம்பட வாய்புள்ளது. மேலும் சுற்றுலாவும் இதனால் மேலும் மேம்பாடடையும்

தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்களையும் மீறி முன்பே திட்டமிட்டபடி 26-01-1992 அன்று ஸ்ரீநகரில் உள்ள லால் சௌக்கில் முரளி மனோகர் ஜோஷி மற்றும் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். 



ஜூன் 6-ம் தேதி அன்று 33 வருடங்களுக்குப் பிறகு  காஷ்மீரின் செனாப் பாலத்தில் தேசியக்கொடி ஏந்தி தேசத்தின் கெளரவத்தை உயர்த்தி உள்ளார் நம் தேசத்தலைவர் பிரதமர் மோடிஜி அவர்கள். 

இந்தியாவின் அனைத்துத் துறைகளின் மேம்பாட்டையும், பாரத தேசத்தின் பாதுகப்படையும் திறம்பட நிர்வகிக்கும் மோடி போல் வேறு ஒருவர் செயல்படுத்த முடியாது என்பது சத்திய வாக்கு

பாரத அன்னையின் பரபூர்ண ஆசியைப் பெற்றுள்ளார் மோடி ஜி

ஜெய் ஹோ மோடி ஜி



Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017