சிங்கிகுளம் அருள் மிகு ஸ்ரீ ஆவுடை அம்பாள் சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலய கும்பாவிஷேகம்

 சிங்கிகுளம் அருள் மிகு ஸ்ரீ ஆவுடை அம்பாள் சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலய ஜீர்ணோத்தாரண  அஷ்டபந்தன மஹா கும்பாவிஷேகம்

நாள்: 08 - 06 - 2025 - ஞாயிற்றுக் கிழமை 



திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி வட்டம் சிங்கிகுளம் கிராமம் அருள்தரும் ஸ்ரீ ஆவுடை அம்பாள் சமேத அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தின் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் 08-06-2025 ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு அன்று காலை 04.00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைகள், வேதிகா அர்ச்சனை வேதபாராயணம், ஹோமங்கள், ஸ்பர்ஸாஹுதி ப்ராணபிரதிஷ்டைரஷாபந்தனம், பூர்ணாஹீதி,யாத்ராஅனுக்ஞை,   யாராதானம், கடயாத்ரா. 

07.00 மணிக்கு கும்பம் எழுந்ருளி சுவாமி, அம்பாள், விமானம், சன்னதிகள் மற்ற சன்னதிகள் மஹா அபிஷேகமும், ஆராதானையும், அர்ச்சனையும், மஹா தீபாராதனையும் அதனை தொடர்ந்து  அன்னதானமும் வெகு சிறப்பாக நடைபெற்றது.


மாலை பிரதோஷ வழிபாடும் அதனை தொடந்து ஸ்ரீஆவுடை அம்பாள் சமேத ஸ்ரீ கைலாசநாதர் திருக்கல்யாண வைபவம்  வெகு சிறப்பாக நடைபெற்றது. இரவு அன்னதானமும் வழங்கப்பட்டது.

சிங்குளம் கோயிலுடன் அருகில் வரதராஜப் பெருமாள் கோயில், சற்று தொலைவில் ஒரு சிறு குன்றின் மேல் மண்டபம் போல் அமைந்துள்ள மலை பகவதி அம்மன் கோயில் ஆகிய இரண்டும் அறங்காவலர் திரு. எஸ்.வி.எஸ், மணியின் மேற்பார்வையில் வருஷாபிஷேகம் நடந்துள்ளது.   அந்த இரு கோயில்களின் நித்திய பூஜைகள் எஸ்.வி.எஸ். மணியின் உபயம். மேலும் மலை பகவதி அம்மன் கோயிலில் புதிதாக ஒரு சிறிய கோபுரமும் மணி அவர்கள் அமைத்துள்ளதை இங்கு குறிப்பிட வேண்டும்

எஸ்.வி.எஸ். மணி அவர்கள் எந்தவிதமான பிறரது அன்பளிப்பை எதிர்பாராமல் தன் சொந்தச் செலவிலேயே இந்த விழா ஏற்பாடுகளைச் செய்து வெற்றிகரமாக முடித்துள்ளார் என்பதை இங்கு முக்கியமாகக்  குறிப்பிட வேண்டும். கைலாசநாதர் கோயில் மிகவும் பாழடைந்து இருந்ததைத் தனி ஆளாக தன் சொந்த காசில் - பல லட்சங்கள் ஆனாலும், அதைச் செய்து முடித்துள்ளார். இதற்கு அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அந்தக் கிராமத்தில் தலித் இனத்தவர்கள் தான் அதிகம். அந்த சிங்கிகுளமும் ரிசர்வ் தொகுதியாகும். இருப்பினும் அங்குள்ள கிராம மக்கள் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள், களக்காடு கிராம ஜனங்கள் என்று இந்தக் கோயில் திருவிழாவில் பங்கேற்று, திரு எஸ்.வி.எஸ். மணி அவர்களின் கைகலிருந்து விபூதி - குங்குமம் பிரசாதம், அன்னதானத்தில் பங்கேற்பு என்று அவருக்கு அனைத்து ஆதரவுகளையும் அளித்துள்ளார்கள்

இந்த கோயில் திருவிழாவில் வைதீக தர்மத்தின் பல புரோகிதர்களை வரவழைத்து புராதன ஹிந்து தர்ம வழக்கப்படி எந்தவிதமான குறைகளும் இன்றிச் செய்துள்ளார் திரு. மணி அவர்கள்

இந்த விழாவில் எடுக்கப்பட்ட பல போட்டோக்களில் முக்கியமான சில போட்டோக்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்

அதன் மூலம் திரு மணி அவர்கள் எவ்வளவு சிரத்தையும், செலவைப் பற்றிய கவலை இன்றியும் இந்த ஆன்மீக சேவையைச் செய்துள்ளார் என்பது விளங்கும்

வாய்மை ஆசிரியரின் பூர்விக கிராமம் சிங்கிகுளம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

போட்டோக்கள்:

 



























இந்த விழாவில் நடை பெற்ற நெல்லை மாவட்டம் சிங்கிகுளம் ஆவுடையம்மாள் சமேத கைலாசநாதர் திருக்கோவில் திருக்கல்யாண உற்சவம் வீடியோ தொடர்பு கீழே உள்ளதைச் சொடுக்கிப் பார்க்கவும்:

(8) Video | Facebook

கடந்த பல வருடங்களாக சிங்கிகுளம் கோயில், அதை ஒட்டிய பெருமாள் கோயில், சற்று தொலைவில் உள்ள குன்றில் குடி கொண்டிருக்கும் அருள் மிகு மலை பகவதி அம்மன் கோயில் ஆகிய மூன்றையும் வெறும் நித்திய பூஜை என்றில்லாமல் பல திருவிழாக்கள், பிரதோஷ வழிபாடுகள், கோயிலை புனருத்தாரணம் செய்து கும்பாவிஷேகம் என்று தனி ஒரு மனிதராக அறங்காவலர் திரு. வி.எஸ்.வி. மணி ஐயர் தொடர்ந்து இறை பணி ஆற்றிவருகிறார்அந்த அவரது ஆன்மீக சேவையைப் பாராட்டும் விதமாக வாய்மை அவருக்கு பூச்செண்டு கொடுத்து கெளரவிக்கிறது. அவருக்கு சிங்கிகுளம் கடவுளர்கள் அனைவரின் அருளும் பரிபூர்ணமாகக் கிட்ட வாய்மை பிரார்த்திக்கிறது

ஜெய் ஹோ! எஸ். வி. எஸ். மணி ஐயர்!




Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017