G – 20 உச்சி மாநாடு – மோடிக்கு சூடப்பட்ட வெற்றிக் கீரீடம்
2023-ம்
ஆண்டு பாரத தேசத்தில் நடந்த ஜி.20 உச்சி மாநாடு 18-வது மாநாடாகும்.
மனித இனம் மட்டும்
அல்ல, உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் – மிருகங்கள், இயற்கை வளங்கள், நுண்ணுயிர்கள்
ஆகியவைகள் பூமியின் வளமைக்கு உதவுவதின் மூலம் அவைகளக் காப்பாற்றுவதும் இந்த மா நாட்டின்
முக்கிய அம்சமாகும்.
இதன் மூலம் தூய்மையான
வலுவான சுற்றுச் சூழலை உறுதி செய்து, நிலையான எதிர்காலத்தை நோக்கி உலகளாவிய
மாற்றங்களைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியாவின் தலைமையில் ஜி – 20 நடப்பது முடிவானதிலிருந்து மோடி இதில் முழுக் கவனம் செலுத்தியுள்ளார்.
அந்த பாரத் மண்டபத்தின்
முகப்பில் 27 அடி உயரம், 21 அடி அகலம்,
18 டன் எடையில் பித்தளை ,செம்பு ,இரும்பு, ஈயம் , தங்கம் ,வெள்ளி, வெள்ளியம், பாதரசம்
ஆகிய அஷ்ட தாதுக்களால் இந்த சிலை தமிழ்நாட்டின் சுவாமி
மலையைச் சேர்ந்த புகழ் பெற்ற சிற்பி ராதாகிருஷ்ணன் ஸ்தபதி மற்றும் அவரது
குழுவினரால் ஏழு மாதங்களில் உருவாக்கப்பட்டதாகும்.
இந்த அரங்கில்
ஒரே சமயத்தில் 7,000 பேர் அமரலாம்.
இது ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னியிலுள்ள 5,500 பேர் அமரக்கூடிய பிரபல ஓபரா அவுஸ் அரங்கை விடப் பெரியது.
இதனுள் அமைந்துள்ள நகரும் சுவர்களை பயன்படுத்தி, மூன்று தனித்தனி அரங்குகளாகவும் மாற்றி அமைக்கலாம். இங்கு
வருபவர்களின் 5,800 வாகனங்களை நிறுத்தும்
வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. ‘
G20 ஆனது 19 நாடுகள் மற்றும் 27 நாடுகள் கொண்ட ஐரோப்பிய யுனியன் கொண்டது. 19 நாடுகள் - அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா குடியரசு, மெக்சிகோ, ரஷ்ய கூட்டமைப்பு, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து ஆகியவைகளாகும்.
உச்சி
மாநாடு நடப்பதற்கு ஒரு வருடம் முன்பிருந்தே கலந்து கொள்ள இருக்கும் பல தேச தலைவர்கள்
– வல்லுனர்கள் – தொழில் அதிபர்கள் என்று டிசம்பர் 2022 முதல் பிப்ரவரி 2023 வரை பல
கூட்டங்கள் பாரத தேசத்தின் பல ஊர்களில் நடந்துள்ளது. அப்போது அந்த ஊர்களில் சிறப்பு
அம்சங்கள் அவர்களுக்கு காண்பிக்கப்பட்டு இந்தியாவின் தனித் திறமை – கலாச்சார அம்சங்கள்
- கலை அம்சங்கள் – கைவினைப் பொருட்கள் ஆகியவைகள்
அவர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.
பெங்களூரு, சண்டிகர், சென்னை, குவஹாத்தி, இந்தூர், ஜோத்பூர், கஜுராஹோ, கொல்கத்தா, லக்னோ, மும்பை, புனே, ரான் ஆஃப் கட்ச், சூரத், திருவனந்தபுரம் மற்றும்
உதய்பூர் என்று ஒரு பெரிய
சுற்றுலாவாகவே ஏற்பாடு செய்யப்பட்டு அந்த நாட்டு மக்கள் வியப்படையும் வகையில் ஏற்பாடு
செய்யப்பட்டு நமது பாரம்பரிய கலாச்சாரமான விருந்தோம்பல் மிகவும் சிறப்பான முறையில்
நடந்தேறியது.
இந்த மா நாட்டில்
ஆப்பிரிக்கா யுனியனையும் சேர்க்கும் தீர்மானம் மோடியின் முயற்சியால் வெற்றி பெற்றதை
அவருக்கு கிடைத்த அங்கீகாரம் என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால் ஆப்பிரிக்கா யுனியன்
என்பது 55 ஆப்பிரிக்காவின் தேசங்களைக் கொண்டது. இதன் மூலம் பல பின் தங்கிய நாடுகள்
முன்னேற வழி அமைத்ததற்கு ஒப்பாகும். இதன் மூலம் பாரத தேசத்தின் ‘வசுதேவ குடும்பம்’
என்ற உன்னத கொள்கையை முன் மொழிந்து பல நாடுகளையும் இந்தப் பாதையில் வீரு கொண்டு பயணிக்க
மோடி வழிவகுத்துள்ளார்.
ரஷ்யா – உக்கிரைன்
போரால் இந்த மா நாட்டில் ஒன்றாக உடன்படிக்கை ஏற்படாது என்று தான் பலரும் நினைத்தார்கள்.
ஆனால் மோடியின் சாதுர்யத்தால் அனைத்து தலைவர்களும் – ரஷ்யா – சீனா உள்பட – கை எழுத்திட்டு
அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது வரை நடந்த 17 உச்சி மாநாட்டில் இந்த மா நாடு தான்
பெரும் வெற்றி பெற்றுள்ளது என்றும், ஆகையால் இது ‘இந்தியாவின் தருணம்’ என்று பல நாடுகள்
புகழாரம் சூட்டிய வண்ணம் உள்ளார்கள்.
இந்தியாவின் அழைப்பை
125 நாட்டிலுள்ள 1 லட்சம் பேர்களுக்கு மேல் ஏற்று 60-க்கும் மேற்பட்ட இந்திய நகரங்களில்
நடந்த 200 கூட்டங்களில் கலந்து கொண்டது யாரும்
செய்யாத ஒன்றாகும். அதிலும் ஒவ்வொரு அயல் நாட்டினரையும் தனித்தனியாக மிகவும் அக்கரையாக
அவர்களின் இருப்பிடம், உணவு, வாகனம் என்று விருந்தோம்பல் செய்த இந்திய அதிகாரிகளையும்
மிகவும் பாராட்டினார்கள்.
ஆகையால் இந்த ஜி
– 20 என்பதை ‘மக்கள் ஜி – 20’ என்று பாரத தேசத்து மக்களின் மகத்தான பங்கையும் குறிப்பிட்டு
பாராட்டி உள்ளார்கள்.
இதன் உச்ச கட்ட
நிகழ்வாக ஜி 20-யில் பங்கேற்ற அனைத்து தேசத்து தலைவர்கள் ஒன்றாக டெல்லியில் உள்ள மஹாத்மா
காந்தியின் நினைவிடத்தில் மோடியின் தலைமையில் அஞ்சலி செலுத்திய நிகழ்வு மிகவும் உலக
மக்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் அமைந்து விட்டது.
பங்குகொண்ட அனைத்து
தேசத் தலைவர்களின் சார்பாக அவர்கள் நாட்டின் கொடியுடன் கூடிய மலர் வலையம் காந்தி சமாதியைச்
சுற்றி வைக்கப்பட்டது.
காந்தி சமாதியின்
வாயில் அருகே சபர்மதி ஆஸ்ரம கட் அவுட் நிறுவப்பட்டு அதன் முன்னால் நமது பாரதப் பிரதமர்
காதித் துண்டை தோளிலே அணிந்து கொண்டு ஒவ்வொரு நாட்டுத் தலைவர்களும் வரிசையாக வந்து
மோடியும் ஒவ்வொருவருக்கும் அந்த இடத்தில் அழகாக மடிக்கப்பட்ட சால்வை போன்ற நீளமான காதித்
துண்டை அணிவித்து கவுரவித்தார். பிறகு மோடியுடன் அனைவரும் காந்தி சமாதியில் அவரவர்கள்
நாட்டுக் கொடியுடன் உள்ள மலர் வலையத்தை அண்ணல் காந்தி மஹானுக்கு அஞ்சலி செய்யும் முகத்தான்
சமாதியில் வைத்தனர்.
இதன் மூலம் நமது
ஆரோக்கியமான, சத்துள்ள, நவ ரசங்களைக் கொண்ட பண்டங்கள் ஒரே இடத்தில் ஒருசேரப் பார்த்து
ருசித்த பல தேசத்துத் தலைவர்கள் நமது பாரத தேசத்தின் பெருமையை உணரந்து பாராட்ட வைத்தது.
இறுதியாக மோடி செய்ததும்
அனைத்து தலைவர்களும் இந்த ஜி – 20 மாநாட்டை எப்போதும் நினைவு கூறும் அளவில் அமைந்து
விட்டது. மோடி ஒவ்வொருவருக்கும் பல வகையான பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை அன்பளிப்பாக
அளித்துள்ளார். அந்தப் பொருட்கள் நமது பாரத தேசத்தின் பல மாநிலத்தில் புகழ் பெற்ற பொருட்களாகும்.
பாரத தேவியின் தவப்
புதல்வன் மோடி. மோடிக்கு பாரத தேவியின் முழு அருளும் கிட்டி உள்ளதைத் தான் இந்த உச்சி
மாநாட்டின் நிகழ்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.
அந்த உன்னதமான வெற்றிக்கு
வழிகோலிய அனைத்து தேசத் தலைவர்களுக்கும் தங்கக் கீரிடம் சூட்டி வாய்மை வாழ்த்துகிறது.
பாரத தேசத்தின்
சார்பாக மோடி ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட உலகத் தலைவர்களுக்கு மோடி
அளித்த பரிசுப் பொருட்கள்
சுந்தர்பன்
காடுகளிலிருந்து சேகரித்த பிரத்யோக தேன், காஷ்மீர் குங்குமப் பூ, பனாரஸ் சில்க்
துணி, ஆந்திரபிரதேத அரக்கு பள்ளத்தாக்கில் பயிராகும் உயர் ரக காப்பி, டார்ஜிலிங்க்
டீ, ஆகியவைகளை ரோஸ்
வுட் பெட்டியில் வைத்து அனைத்து பங்கு பெற்ற பல தேசத் தலைவர்களுக்கு பரிசாக
அளிக்கப்பட்டது. அந்த மர ரோஸ் வுட் பெட்டியின் பக்கங்கள் பித்தளையில் கலை வண்ணமான
வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்ட சிறப்புப் பெட்டியாகும். அது அழகுடன்
வலுவாகனதாகவும், கண்கவரும் வண்ணமும் கொண்டு செய்யப்பட்டதாகும்.
இதைத் தவிர அற்புத கலை வண்ணம் மிகுந்த பனாரஸ்
பட்டுத் துணி ஸ்பானிஷ் பிரதம மந்திரியின் மனைவி மாரா பெகோனா ஜிமெஸ் பெர்னாடஸுக்கு பரிசாக
அளிக்கப்பட்டுள்ளது. அந்த வண்ணமிகு பட்டுத் துணியை ஒரு கலைவண்ணம் கொண்ட பெட்டகத்தில்
வைத்து அந்த அம்மையாருக்கு பாரத நாட்டின் சார்பாக அளிக்கப்பட்டது.
இகாட் தொழில் நுட்பத்தில் பட்டு நெய்யும் முறை ஒடிசாவின் பாராம்பரிய தொழிலாகும். நெய்த துணியை ஆங்காங்கே கட்டுப் போட்டு கலர் சாயமிடுவார்கள். இந்த முறையைத் தான் இகாட் என்று அழைக்கிறார்கள். அந்த முறையில் நெய்யப்பட்ட பட்டை ஒரு வேலைப்பாடு அமைந்த பேழையில் வைத்து மா மொரீஷியஸ் பிரதமரின் மனைவி கோபிதா ராம்தானிக்கு பாரத நாட்டின் சார்பில் பரிசாக வழங்கப்பட்டது.
Comments