Posts

Showing posts from July, 2022

13-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2022 அன்று 100- வது வயதை பூர்த்தி செய்யும் மிருதங்க ஜாம்பவான் தானு கிருஷ்ணமூர்த்தி

கள்ளக்குறிச்சி கலவரத்தில் சக்தி பள்ளி சூரையாடல்

Image
அரசாங்கப் பள்ளியைத் தவிர்த்துப் பலரும் தனியார் பள்ளியில் சேர்ந்து படிக்க ஆசைப்படுவது ஆங்கில வழிக் கல்வியை விரும்புவதால் தான் . ஆனால் தமிழ் நாடு அரசாங்கம் – இரணடு திராவிடக் கட்சிகளில் எந்த கட்சி ஆரசாண்டாலும் – அரசுப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வியைத் தான் ஆதரிக்கிறது . இந்த முரண்பாடு – பெற்றோர்கள் ஆங்கில வழிக் கல்வியை விரும்புவதும் , ஆட்சியாளர்கள் தமிழ் வழிக்கல்வியை ஆதரிப்பதும் – தமிழ் நாட்டின் கல்வியை ஒரு வியாபாரமாக உருவாக்கி விட்டது . அரசுப் பள்ளிகளில் புத்தகங்கள் – சீருடைகள் – மதிய சத்துணவுத் திட்டம் – எந்த பள்ளிக் கட்டணமும் இல்லாத நிலை – என்று இப்படி பல சலுகைகள் இருப்பினும் பல பெற்றோர்கள் அப் பள்ளிகளை நாடுவதில்லை . தமிழ் வழிக் கல்வியால் வேலை வாய்ப்பு குறைவு என்று நினைப்பதால் – அந்த நினைப்பு தவறு என்று சொல்ல முடியாது – தனியார் பள்ளிகளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தங்கள் சக்திக்கு மீறியும் சேர்த்து ‘’ எங்கள் குழந்தைகளின் எதிர்கால முன்னேற்றத்திற்கு நாங்கள் எந்த தியாகத்திற்கும் தயார் ” என்ற...