தமிழக அரசின் அடாத செயல் – நெஞ்சு பொறுக்குதில்லையே !
“திருவள்ளூர்
மாவட்டம், திருத்தணியை சேர்ந்தவர்
குப்புசாமி (36). இவர் வில்லிவாக்கத்தில் தனியார்
நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது தந்தை நந்தன் (65) அதிமுகவின் 15ஆவது
வட்ட நகரதுணை செயலாளராகவும் மனித உரிமைகள் அமைப்பின் மாவட்ட செயலாளராகவும் இருந்து
வருகிறார். திருத்தணி நகரில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கூட்டுறவு பண்டக கடை
எண் 2இல் தமிழக அரசின் பொங்கல்
சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டது.
அதிமுக
வட்ட துணை செயலாளராக பதவி வகிக்கும் நந்தன், பொங்கல்
பரிசு தொகுப்பை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு சென்று பார்த்தபோது, புளி
இருந்த பாக்கெட்டில் இறந்து போன பல்லி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்ததாக
கூறப்படுகிறது. உடனடியாக அந்த புளியில் பல்லி இறந்து கிடந்த பொட்டலத்தை
எடுத்துக்கொண்டு கடை ஊழியர் சரவணனிடம் விசாரித்துள்ளார். அப்போது அவர் நந்தனுக்கு
முறையான பதில் அளிக்காமலும், அலட்சியப்
படுத்தும் வகையிலும் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் இருந்த
செய்தியாளர்கள் முதியவர் நந்தனிடம் விசாரித்த தகவலின் அடிப்படையில் செய்திகள்
ஒளிபரப்பானது.
இந்நிலையில்
பொங்கல் தொகுப்பில் பல்லி இல்லை எனவும் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தியதாகவும்
முதியவர் நந்தன் மீது நியாயவிலைக்கடை
ஊழியர் சரவணன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் தவறான தகவலை பரப்பியதாக பிணையில்
வெளிவர இயலாத பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இந்த தகவலும் செய்தியாக
வெளியானது.
மனமுடைந்த
நந்தனின் மகன் குப்புசாமி (36), நேற்று
மாலை உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். படுகாயம்அடைந்த அவரை வீட்டில்
இருந்தவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு
சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர்.80 சதவீத
தீக்காயம் இருந்ததால் அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட
நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.”
பொங்கல் தொகுப்புப் பரிசு என்பது அரசு நியாயவிலைக் கடைகளில் பொருட்கள் பெறும் அனைத்து அட்டைதாரர்களுக்கும் இலவசமாகக் கொடுக்கப்படுகிறது. அதில் பரிசு பெற்றவர் புகார் செய்யின் அதை விசாரித்து சரி செய்வது தான் சரியான நடவடிக்கை. ஆனால் இங்கு எந்தவித நியாயமான விசாரணையும் இன்றி 65 வயதாகும் நந்தன் அதிமுக அன்பரை ஜாமீனில் வரமுடியாதபடி கைது செய்துள்ளதை – தனிநபரின் சுதந்திரத்தில் தலையிடுவதாகவும், அரசியல் காட்புணர்ச்சியாகவும் தான் நடுநிலைமையாளர்கள் கருதுவார்கள். சகிப்புத் தன்மை என்பது இதில் அப்பட்டமாகப் மீறப்பட்டதால், கைதாகிய தந்தையின் மகன் தற்கொலை செய்யும் அளவிற்குக் கொண்டு சென்று விட்டது.
இது மிகவும் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். மேலும் அத்துமீறி அதிகார துஷ்பிரயோகம் செய்தவர்களையும் சட்ட்த்தின் முன் நிறுத்தி நீதி வழங்க வேண்டும்.
இனிய பொங்கல் கசப்பாகி தமிழ்நாடே பொங்கி எழுந்து விட்டது.
விடியல் அரசு விடியா இருள் அரசாகி போலீஸ் ஆட்சியை நடத்த முயல்கிறது.
வாய்மை இந்த நெஞ்சு பொறுக்கா தமிழக அரசின் செயலை கண்டிக்கிறது.
அதைத் தண்டிக்கும் விதமாக ஸ்டாலின் அவர்களுக்கு முள் கீரீடம் சூட்டி எச்சரிக்கிறது. சவுக்கை அன்பளிப்பாகவும் மாண்புமிகு முதலமைச்சருக்கு அளித்து தன்னையே தானே தண்டிக்க வேண்டுகிறது.
இந்த துக்ககரமான நிகழ்வினைக் கேலி செய்யும் விதமாக
நெட்டிசன்கள் பல வகைகளில் இந்த ஸ்டாலின் அரசைக் கேலி செய்து
வருகின்றனர்.
திமுக. கட்சியின் மீடியா விமரிசகர் சரவணன் ‘வெல்லம் உருகத்தான் செய்யும். அதன் மெல்டிங் பாயிண் என்ன?’ – என்று பொங்கல் தொகுப்புப் பரிசு பெற்றவர் வெல்லத்தின் தரத்தை மீடியாவில் பேச அதுவே ஸ்டாலின் அரசுக்கு எதிரான ‘ஸ்டார்ட்டிங் பாயிண்ட்’ ஆகி, பல மீம்ஸ்கள் – பாட்டுக்கள் என்று எந்தவிதமான ஆபாசமோ – அருவெறுப்போ இல்லாமல் மாற்றானும் சிரிக்கும் அளவிற்கு பிரபலமாகி விட்டது. இதுவே திராவிடக் குஞ்சுகளுக்கு ஓர் ஆரோக்கியமான சவாலாக இருக்கும்.
அவைகள் இங்கு உங்கள் பார்வைக்கு.
வெல்லம் உருகுதய்யா விடியல் ஆட்சியிலே...
நியாயவிலைக் கடைகளில் விடியா அரசின் வடியும்
வெல்லம்.
என்ற தலைப்பில் சிவாஜி கணோசன் பாடிய மிகவும் பிரபலமான பாடலின் மெட்டிலும், அந்த பாடலின் அடிகளை ஒட்டியும் ஒரு வீடியோ வெளியிட்டு ஒரு கலக்கு கலக்கி விட்டார்.
நியாயவிலைக்
கடைகளில் விடியா அரசின் வடியும் வெல்லம்.
https://twitter.com/i/status/1480930806830878729
(இந்த வீடியோவை கிளிக் செய்து பார்க்க முடியாவிடில், காப்பி அண்ட் பேஸ்ட் மூலம் வீடியோவைக் கேட்கவும்.)
(4) மீம்ஸ்
(5) மீம்ஸ்
(6)
மீம்ஸ்
(7)
மீம்ஸ்
தரமற்ற 100 டன் வெல்லம் திருப்பி அனுப்பப்படுகிறது - தோல்வியை
ஒப்புக்கொண்ட தி.மு.க அரசு
(8) மீம்ஸ்
ஹரிஹரன்: உருகியதே….. எனது உள்ளம்.
விடியல் நாயகன்: யூ ஆர் அன்டர் அரெஸ்ட்.
ஹரிஹரன்: சார், நான் வெல்லம்னு சொல்லல சார்.
உள்ளம்னு
தான் சார் சொன்னேன்.
(9) மீம்ஸ்
(10)
மீம்ஸ்
அதைப் பார்த்த ஒரு நெடிசனின் விமரிசனம் இதோ:
வெல்லம் வெய்யல் அடித்தால் உருக தான்
செய்யும்,
அரசி பழைய தானால் புழு வரத்தான்
செய்யும்,
புளி பழைய தானால் பல்லி வரத்தான்
செய்யும்,
ரவை பழைய தானால் புழு வரத்தான்
செய்யும்
நாங்களும் அதை தான் சொல்லுகிறோம்.
நீ ஏன் ஒத்துக் கொள்ள மாட்டேங்கர.
Comments