இனிய பொங்கல் - 14 - 01 - 2022
தமிழகத்தின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று தை பொங்கல் பண்டிகை. தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும், மகர சங்கராந்தி அல்லது சங்கராந்தி, உத்தராயண, லோரி என கொண்டாடப்படுகிறது. இந்தியாவைத் தாண்டி நேபாளத்தில் தாரு மக்கள்- மாகி என்றும், பிறர் மக்கள் - மாகே சங்கராந்தி அல்லது மாகே சகாராதி என்று கொண்டாடுகின்றனர். தாய்லாந்தில் சொங்க்ரான், லாவோஸ் நகரில் பி மா லாவ், மியான்மாரில் திங்க்யான், இலங்கையில் தமிழ்ப் புத்தாண்டு அல்லது பொங்கல் பண்டிகை என கொண்டாடப்படுகிறது.
* ஜனவரி 13 (மார்கழி 29) வியாழக் கிழமை - போகி
பண்டிகை
* ஜனவரி 14 (தை 1) வெள்ளிக்
கிழமை -
தைப்
பொங்கல்
* ஜனவரி 15 (தை 2) சனிக் கிழமை- மாட்டுப் பொங்கல். திருவள்ளுவர் தினம்
* ஜனவரி 16 (தை 3) ஞாயிறு - கனுமாட்டுப் பொங்கல், காணும் பொங்கல்
வாய்மை அன்பர்கள் அனைவருக்கும் தைப் பொங்கல் வாழ்த்துக்கள்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். ஆகையால் கொடிய
கொரானா பிடியிலிருந்து மீண்டு, சகஜ வாழ்க்கை மலர ஆதி பகவனை
வேண்டுகிறோம்.
Comments