ஹிந்து ஆங்கில தினசரிப் பத்திரிகையின் இரட்டை வேஷம் அம்பலம்

 


இந்தியாவின் ராணுவதளபதியை ஜெனரல் என்று குறிப்பிடாமல் தலைப்புச் செய்தியில் ராவத் 12 அதர்ஸ் கொலை(Killed) என்று எழுதிய தி ஹிந்துவை சமூக வலைதளங்களில் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அதற்கு தி ஹிந்து " நாங்கள் எப்போதும் தலைப்புகளில் பதவிகளைக் குறிப்பிடுவதில்லை. வேண்டுமென்றே செய்யவில்லை" என்று விளக்கம் அளித்தது.

அந்த விளக்கம் நேர்மையானதாக வாய்மை கருதவில்லை. ஏன்? – இந்த சந்தேகம் என்பதற்கான பதிவு தான் இது.

முதலில் இது கொலை அல்ல. ஒரு விபத்து. வானிலை காரணமாக ஏற்பட்ட விபத்து. கொலை என்று குறிப்பிட்டிருப்பதால், ஏதோ அந்த ஹெலிகாப்டரை ஓட்டியவர் தான் இதற்குக் காரணம் என்ற தொனி எழும்படி செய்தி வெளியிட வேண்டிய அவசியம் என்ன ? இறந்தார் DIED instead of KILLED – என்று செய்தி வெளியிட்டிருந்தாலாவது ராவத்தின் பதவியைக் குறிப்பிடாமல் செய்தியைப் போட்டிருந்த வருத்தம் மக்களுக்குத் தணிந்திருக்கும்.

ஆனால் ஹிந்துவின் ரூல் புக் பாகிஸ்தான் ராணுவ தளபதியைப் பற்றிச் செய்தி வெளியிடும் போது கடைப்பிடிக்கப்பட வில்லை. அது இரண்டு முறை நிகழ்ந்துள்ளது.

அதன் நகல் மேலே பிரசுரமாகி உள்ளது. ஆகையால் ஹிந்துப் பத்திரிகை அதன் செய்தி வெளியிடும் விதிகளையே மீறி உள்ளது எதைக் காட்டுகிறது. அதுவும் இந்தியாவின் எதிரியாக செயல்படும் பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு மரியாதை ஆனால் அதே மரியாதை இந்திய ராணுவ தளபதிக்குக் கிடையாது என்ற நிலையை எப்படி மானமுள்ள இந்தியனால் ஜீரணிக்க முடியும்?

ஆனால் ஹிந்து -  As a General Rule – என்று தானே கூறியிருக்கிறோம் என்று சப்பைக் கட்டு கட்டி தப்பிக்க முயலலாம். இன்னொன்றும் அதே ஹிந்து இந்த நேர்மையற்ற செயலுக்குக் காரணமாகக் காட்டலாம்: ‘தலைப்புச் செய்திக்குத் தான் இந்த எங்கள் ரூல் பொருந்தும். பாகிஸ்தான் ராணுவ தளபதியைப் பற்றிய செய்தி தலைப்புச் செய்தி இல்லையே!”

பாகிஸ்தான் விசுவாசம்...சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவுக்கு முழுபக்க செய்தி வெளியீடு என்ற அளவில் செயல்படும் பத்திரிகையான தி ஹிந்துவிடம் தர்மம் நியாயம் எடுபடாது.

ஆனால், தன் பத்திரிகைக்கு ஹிந்து என்று பெயர் சூட்டி இது போல் தர்மம் தவறி தவறிழைப்பதால் மனது சங்கடப்படுகிறது. தி ஹிந்து திருந்தாது. திருத்தவும் முடியாது. ஏனென்றால் அது தி ஹிந்து பத்திரிகையை ஆரம்பித்த தேசபக்தர்களின் வழியை மறந்து திசை தப்பி வெகு தூரம் வெகு நாட்களாகச் சென்று விட்டார்கள்.

காலம் தான் கண் திறக்க வேண்டும். தி ஹிந்து அதன் மூல ஸ்தாபகர்களின் சுதந்திரத் தியாக உள்ளங்கள் புண்படும்படி நடக்காமல் இனியாவது திருந்தி செயல்பட எல்லாம் வல்ல ஆண்டவனைப் பிரார்த்திகிறோம்.

 









































Comments

Popular posts from this blog

தமிழில் நான்கு வேதங்கள்

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017