பிரதம மந்திரி மோடியின் பிரயாணத்தில் பாதுகாப்பில் ஹிமாலயக் குறைபாடு

 

அந்தக் குறைபாடின் தீவிரம் தெரிய வேண்டும் என்றால் மோடி தாம் மேற்கொண்டு பயணம் செய்ய முடியாதபடி போராடும் விவசாயிகள் அவர் செல்லும் பாதையினை கார், பஸ், டிராக்டர் ஆகியவைகளால் வழிமறித்துப் போராட, அவர் எந்தத் திசையிலும் நகர முடியாமல் சுமார் 20 நிமிடங்கள் தம் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையைச் சந்திக்கும் அவலம் ஏற்பட்டதைக் கண்டு மனம் வெதிம்பிச் சொன்னார்:

நான் ;யிரோடு பாதிந்தா விமான நிலையத்தை அடைந்தமைக்கு, உங்கள் முதல் மந்திரிக்கு நன்றி.”

அதனால் தான் சொல்கிறோம்இந்த பிரதமர் செல்லும் வழியினை அடைத்து மேற்கொண்டு பயணிக்க முடியாமல் செய்த சம்பவம் பஞ்சாப் அரசின் பிரதமர் சாலைப் பாதுகாப்பு ஏற்பாட்டில் உண்டான குறைபாடுகள் ஹிமாலயத் தவறுஇதற்குக் காரணமானவர்களைக் கண்டறிய உடனடியாகத் தீவிர விசாரணை நடத்தி இந்த மன்னிக்க முடியா குற்றத்தைச் செய்தவர்கள் அனைவரையும் தண்டிக்க வேண்டும்.

பிரதமரின் பிரயாண விவரம் இதோ:

பிரதமந்திரி பதிந்தா விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்படரில் ஃபெராஸ்பூர் ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவகத்திற்குச் செல்வது வானிலை மாற்றம் காரணமாக சாலை மார்க்கமாகப் பயணம் செய்வதாக முடிவாகி பயணமானார். அப்போது நினைவகத்திலிருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு மேம்பாலத்தில் போராட்டக்காரர்கள் கார்கள்டிராக்டர்க்ள், பஸ்கள் ஆகியவைகளை நிறுத்தி பிரதம மந்திரியின் கார் செல்லவிடாமல் தடுத்து விட்டனர்.

பிரதம மந்திரியின் கார் அந்த இடத்தில் 12.52 மதியம் மணியிலிருந்து 1.10 மதியம் மணி வரை சுமார் 20 நிமிடங்கள் எந்த வழியிலும் மேற்கொண்டு செல்ல முடியாமல் ஸ்தம்பித்து நின்று விட்டது என்பது மிகவும் மன்னிக்க முடியாத பாதுகாப்புக் கோளாரு என்பது உறுதியாகி விட்டது.

அது காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் பஞ்சாப் மாநிலம். பஞ்சாப் முதல் அமைச்சரோ அல்லது அந்த ஊரின் போலீஸ் உயர் அதிகாரியோ பிரதமரைச் சந்திக்கவோஅவரது பயணத்தில் எந்தவிதமான கோளாறும் வராமல் பார்த்துக் கொள்ளும் கடமையிலிருந்து தவறி விட்டனர் என்பது தெள்ளத் தெளிவு.

பிரதமர் போகும் பாதையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது மாநிலத்தின் கடமை. அந்த மாநில உயர் போலீஸின் பயணப்பாதை பாதுகாப்புள்ளது என்ற உத்திரவாதத்திற்குப் பிறகு தான் சாலை வழிப் பயணம் நடைபெறும்.

ஆனால் பிரதமர் வரும் பாதையில் போராட்டக்காரர்களை அனுமதித்ததால் பாதுகாப்பு குறைபாடு என்பது உண்மை. மாநில அரசு பிரதமர் சாலை வழிப்பயணத்திற்குரிய விதிமுறைகள் அடங்கிய ப்ளூ புக்மற்ற விதிகள் அப்பட்டமாகப் மீறப்பட்டுள்ளன.

பிஜேபி தொண்டர்களும் அந்த மேம்பாலத்தில் இருந்தார்கள்மோடி பேசும் பொதுக்கூட்டத்தில் மக்கள் கூடவில்லைஆகையால் தான் மோடி தம் பயணத்தைத் தொடராமல் திரும்பிச் சென்று விட்டார்மோடியின் பயணத்தை நாங்கள் தடுத்து விட்டோம் என்று மார்தட்டும் போராட்டக்காரர்கள்என்று பல செய்திகலிருந்து, பஞ்சாப் போலீஸ் தன் கடமையிலிருந்து தவறி, நம் நாட்டிப் பிரதமரின் உயிருக்கே ஆபத்தான நிலையை உண்டாக்கும் செயலைச் செய்துள்ளனர் என்பதை அறியலாம்.

பிரதமர் செல்லும் சாலை அவர் பயணம் செல்லப் பாதுகாப்பானதாகச் செய்யாமல், போராட்டக்காரர்கள் அவர்கள் யாராக இருந்தாலும் -  ஏன், பிஜே கொடியுடன் இருக்கும் தொண்டர்களாக இருப்பினும்  - அப்புறப்படுத்தாமல் இருந்து விட்டு, அதற்கு முதல் மந்திரிபோலீஸ் உயர் அதிகாரிகள் கூறும் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை.

அங்கு பாதுகாப்புக்காக இருந்த போலீஸ்காரர்களுக்கு பிரதமர் செல்லும் பாதையில் வழிமறித்துள்ளவர்களை லத்திகண்ணீர் புகை ஆகியவைகளைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

போராடுவது அவர்களின் உரிமை. பல மாதங்களாக அவர்கள் போராடி வருகிறார்கள். அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து சாலையை பிரதமர் செல்லுவதற்குப் பாதுகாப்பான நிலையை உண்டாக்க மேலிட உத்திரவு இல்லைஎன்பது தான் போலீஸ் தரப்பில் குல்கார்ஹி போலீஸ் ஸ்டேஷன் அதிகாரி பிர்பால் சிங்கின் தகவல்.

அந்த பீர்பால் சிங்பிரதமர் பாதையை வழிமறித்தவர்கள் விவசாயிகள் இல்லை. அவர்கள் விவசாயிகள் என்ற போர்வையில் இருக்கும் தீவிரவாதிகள்என்றும் விளக்கி உள்ளார்.

BKU Krantikari என்ற விவசாயிகள் சங்கம் மோடி பயணம் செய்யும் சாலைகளை மறித்துப் போராடுவோம்மோடி பேசும் கூட்டத்திற்கு மக்கள் அங்கு செல்லாமல் அவர்களையும் தடுப்போம் என்று சவால் விட்டது போலீஸ் வட்டாரத்திற்கு நன்கு தெரியும். ஆனால் மேல் மட்ட அரசின் உத்திரவினால் போலீஸ் செயல்படாமல் இருந்து விட்டனர். மேலும் மோடி செல்லும் சாலையில் உள்ள கடைகளையும் மூடும் படி போலீஸ் கேட்க வில்லை. ஆகையால் அவைகளும் வழக்கம் போல் இயங்கினஎன்பது பெரும் அரசியல் பயணவிதிகளின் படி மூடி இருக்க வேண்டும் என்ற விதிமீறலும் இருந்தது. அத்துடன் அங்குள்ள குருத்துவாராவின் ஒலிபெருக்கி மூலம் சாலைக்கு வந்து மறியலில் பங்கெடுக்க வேண்டுகோளும் விடப்பட்டதும் தெரியவருகிறது. பல பாதுகாப்பு போலீஸ் வீர்ர்கள் தர்ணாவில் ஈடுபட இருக்கும் போராளிகளுடன் ஜாலியாக டீ குடித்துக் கொண்டு இருப்பதையும் பார்க்க முடிந்தது.

போலீஸ் முதல் தகவல் அறிக்கை இந்திய தண்டனைச் சட்டம் விதி  எண் 283 அடிப்படையில் அதுவும் ஒருவரையும் குறிப்பிடாமல்பொதுச் சாலையில் போக்குவரத்திற்கு தடையாகச் செயல்பட்ட பெயர் தெரியாத நபர்கள்என்று பதிவாகியுள்ளது. இந்த 283 விதியின் படி, இது  பெயிலில் வரக்கூடிய அதிக பட்சமாக வெறும் ரூபாய் 200 வரை அபராதம் செலுத்தக் கூடிய குற்றமாகத்தான் இருக்கிறது. பிரதமர் சம்மந்தப் பட்ட சம்பவத்தில் இவ்வாறு சாதாரணமாக எடுத்துச் செயல்பட்டதை பஞ்சாப் அரசுபோலீஸ் ஆகியவைகளின் அடாத செயலாகத்தான் பார்க்க வேண்டும்.

இன்னொறு மிகப் பெரிய தவறு, பஞ்சாப் போலீஸ் முதல் தகவல் அறிக்கையில்பிரதமந்திரியின் பயணத்து சாலை மறிப்புஎன்ற குற்றச் சாட்டும் இல்லை. இது எவ்வளவு பெரிய துரோகம். ஒரு நாட்டின் பிரதமந்திரிக்கே இப்படி போராளுகளுக்கு ஆதரவாக போலீஸ்அங்குள்ள பஞ்சாப் அரசு செயல்பட்டால் இதற்கு ஒரு விடிவு காலம் எப்போது? என்று இந்திய மக்கள் கவலைப் படுவதிலும், பயப்படுவதிலும் நியாயம் இருக்கிறது.

இதை விட ஒரு முக்கியமானதைக் கவனிக்க வேண்டும். ஒரு பாரதீய கிஸான் யூனியன் (கிரந்திகாரி) அங்கத்தினர் போராட்டக் களத்தில் உள்ள ஒரு பஸ்ஸின் கூரையின் மேல் நின்றுமோடியைச் சாலையில் பயணம் செய்ய முடியாமல் செய்த நமது போராளிகளுக்கு நன்றி. உங்களது ஒன்றுபட்ட சக்திதான் மோடியை அவர் பேச இருந்த கூட்டத்திற்குச் செல்ல முடியாமல் திரும்பிப் போகும் படி ஆனது.’ என்ற பகிரங்கமானச் சொன்னதை வைத்து முதல் தகவல் அறிக்கையில் அந்த பாரதீய கிஸான் யூனியனைப் பெயர் குறிப்பிட்டு அறிக்கை தாக்கல் செய்யாமல் போலீஸ் இருப்பதற்குக் காரணம் தெரியவில்லை.

பஞ்சாப் முதல் அமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி இந்த சம்பவத்தில் குழப்பத்தின் உச்சத்தைத் தொட்டு திக்குத் தெரியாமல் திணறுவதைப் பார்க்கிறோம்.

முதலில் மோடி செல்லும் பாதையில் எந்த ஒரு சிக்கலும் இல்லைமோடி தான் தம் பயணத்தை ரத்து செய்து திரும்பிச் சென்று விட்டார் என்று ஆரமித்து, எனக்கு ஜுரம் ஆகையால் அவருடன் பயணம் செய்ய வில்லை என்று தொடர்ந்து, மோடி பயணப் பாதையில் பாதுகாபுக் குறைபாடுகள் இருந்தது உண்மை தான் என்றாலும்அது குத்ரதி - இயல்பாக ஏற்பட்டது என்று சமாளித்து, பிறகுமோடியின் பயணத்தில் எந்தவிதமான குறைபாடும் இல்லைஎன்று தன் பேச்சையே மறுத்து, இதை எல்லாம் தோற்கடிக்கும் விதமாக குழப்ப வாதி சன்னி மோடியிடம் கொரானா பற்றிய முதல்வர்கள் பங்கேற்றிய வீடியோ கூட்டத்தில்ஏதாவது தவறு நிகழ்ந்திருந்தால் நான் மன்னிப்புக் கோருகிறேன். பிரதமர் நீண்ட நாள் வாழப் பிரார்த்திகிறேன்என்று இறுதியாக சராணகதி அடைந்தார்.

சன்னிஇந்த மோடிப் பயண குறைபாடுகள் குறித்து பிரியங்கா காந்தியிடம் விளக்கி விட்டேன்என்று சொன்னது தான் உச்ச கட்ட அரசியல் சாசன விதி மீறலாகும். குழப்பத்தின் உச்சமும் ஆகும்.

பல எதிர்கட்சிகளான டிஎம்சி, டிஎம்கே,என்சி, லல்லு கட்சி, தெலுங்கானா ஆளும் கட்சி, எஸ்பி,, ஏஏபி என்பவைகள் இதைப் பற்றி வாயே திறக்க வில்லை. இது ஒரு பிரதமந்திரியின் பாதுகாப்புப் பற்றியது என்ற கவலையே அவர்களுக்கு இல்லை.

விவசாயிகள் என்பவர்களில் சிலர் காலிஸ்தான், பாகிஸ்தான் தீவிர வாதிகள் ஆகியவர்களின் தயவில் செயல்படுவதால் இந்திய இறையாண்மையைப் பற்றிச் சிறிதும் கவலை கொள்ளாமல் தேசிய விரோதச் சக்திகளுடன் கை கோர்த்துச் செயல்படுகிறார்கள்.

குறிப்பாக Sikhs For Justice – SFJ – என்பதைக் குறிப்பிட வேண்டும்




மோடியின் பஞ்சாப் பயணத்திற்கு ஒரு நாளுக்கு முன்பு (04- 01 – 2022 அன்று) ஒரு விடியோவில் காலிஸ்தான் தீவிரவாதி லாயர் குர்பத்வந்த் சிங் பண்ணு சீக்கியர்களுக்கு நீதி என்ற யுஎஸ்சை தலையிடமாகக் கொண்டு இந்தியாவில் 2019 ஆண்டு தடைசெய்யப்பட்ட குழு ஒரு வீடியோவில்நாங்கள் மோடியின் பஞ்சாப் பயணத்தைத் தடுப்போம். அந்த அவரது பயணத்தின் போது அவர் மேல் வெற்றிகரமாக செருப்பை வீசும் நபருக்கு டாலர் ஒரு லட்சம் பரிசாக நான் அளிக்கிறேன்என்று பேசி இருக்கிறான்.

இந்த காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு புகலிடம்பணம் ஆகியவைகளை பாகிஸ்தான் ஐஎஸஐ அளிக்கிறது என்பது தெரிகிறது. இந்த காலிஸ்தான் தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் பஞ்சாபில் உள்ளனர். அவர்கள் சிஸான் யுனியன் ஆட்களுக்குளுடன் சேர்ந்து போராட்டம் நடத்துகின்றனர். உண்மையிலேயே அவர்களது குறிக்கோள் எல்லாம் பஞ்சாப் விவசாயிகளைத் தூண்டி, மோடியைக் குறிவைப்பது தான்.

அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றல்ல இரண்டல்ல பல வீடியோக்களை மோடியைத் தனி நபராகத் தாக்கியும், கொலைவெறி கொண்ட காட்சிகளை அமைத்தும் வெளியிட்டு வருகிறார்கள்.

அதில் முக்கியமாக இரண்டு வீடியோக்கள்ஒரு வருடத்திற்கு முன்பு வெளியிடப்பட்டது. – 100-க்கு 100 சரியாக மோடியின் மேம்பால பயணத் தடையை அப்பட்டமாகவே சித்தரிக்கிறது. இதனாலேயே இந்த மோடியின் பயண பாதுகாப்புக் குறைபாடு காலிஸ்தான் தீவிரவாதிகள் பஞ்சாப் விவசாயிகளின் போர்வையில் புகுந்து செய்த சதி என்று தான் கணிக்கத் தோன்றுகிறது. அதற்கு பஞ்சாப் அரசு துணைபோனது தண்டிக்கத் தக்கது.

அந்த வீடியோவைப் பார்ப்பவர்களின் உள்ளம் மிகுந்த வேதனை அடையும் என்பது திண்ணம்.

1. FER DEKHANGE –  Kissan Ekta Zindabad என்று  பெயரிடப்பட்ட வீடியோ

https://twitter.com/BefittingFacts/status/1479307199109234688

இந்த வீடியோ சுமார் 3 நிமிடங்கள் ஓடக்கூடியது. இது 01 – 12 – 2020 அன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. Dhakka Gaming என்றும் சொல்லப்படும் இந்த வீடியோவின் பின்னணிப் பாட்டானபாகிஎன்பதை பஞ்சாப் பாடகர் சிம்மு திலான் அவர்களால் 2020 ஆண்டு செப்டம்பர் வருடம் பஞ்சாப்ஹரியான விவசாயிகள் போராட்டம் உச்சத்தில் இருக்கும் போது அதற்கு அதரவாகப் பாடிய பாட்டு.

பாதுகாப்பு படை வீர்ர்களின் பாதுகாப்பில் மோடி போன்ற ஒருவர் காரில் பயணிக்க, பாடகர் சித்து மூசிவாலா போல் உருவம் படைத்தவர் ஒரு நீல ட்ராக்டரை மோடி காரில் மோதும் படி ஓட்ட, இன்னும் சில ட்ராக்டர்கள் மோடியை சூழ, மோடி கார் மேம்பாலத்தில் வரும் பொழுது ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் காரை வழிமறிக்க, மோடி காரிலிருந்து இறங்க, அவரது பாதுகாவலர்கள் அவரைத் தனியாக விட்டு ஓட, மோடியை அந்தக் கொலைகாரக் கூட்டம் கம்புகளுடன் தாக்க, அவர் தரையில் சாய்ந்து விழ, அந்தக் கூட்டம் அவரைச் சூழ, அவர் மன்னிப்புக் கேட்பதாக அமைந்துள்ளது.  

2. அதன் தொடச்சியாக இன்னொரு வீடியோ:

https://twitter.com/i/status/1479307199109234688

கிஸான் எக்டா சிந்தாபாத் என்ற பெயர்ப் பலகையைக் கொண்டஒரு டிராக்டர் மேம்பாலத்தில் மோடியைக் கீழே தள்ளுகிறது. அவர் பாலத்தின் நுனிக்கு வந்து தலைகீழாகத் தொங்கி கீழே விழுகிறார்.

இதில் மோடியை ஓட ஓட விரட்டி தாக்கப்படுகிறார்.

இது பாரதப் பிரதமரை தெருவில் அடித்துக் கொள்வது போல் அமைந்த வீடியோக்கள்.

இந்த வீடியோக்கள் அப்பட்டமாக ஜனவரி 5-ம் தேதி பாரதப் பிரதமரின் 20 நிமிடங்கள் நகரவிடாமல் கொலைகாரப் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்ட செயலைத் தத்ரூபமாக ஒரு வருடத்திற்கு முன்பே வெளியிடப்பட்ட வீடியோக்களின் காண்பதால் தேசபக்தி உள்ள அனைத்து இந்திய மக்களும் கோபத்தால் கொதித்து எழத்தான் செய்வார்கள்.

பஞ்சாப் போலீஸின் மோடி பாதுகாப்புக் குறைகளின் விளக்கம், காலிஸ்தான் வீடியோவின் சில காட்சிப் படங்கள் சிலவற்றை இங்கே பிரசுரித்து உள்ளோம்:

1. பஞ்சாப் போலீஸின் ஹிமாலயக் குறைபாடு:



2. காலிஸ்தான் தீவிரவாதிகளின் காலித்தனம்:

 










இந்த ஹிமாலயத் தவறுகளுக்கு முழுப் பொறுப்பும் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியையே சாரும். அவருக்கு முள் கீரீடமும், சவுக்கடியும் வாய்மை தண்டனையாக வழங்குகிறது

















Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017