74-வது ராணுவ தினம் – 15 – 01 – 2022
ராணுவ தினம் இந்தியாவில் 15-01-1949 அன்றிலிருந்து கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் தான் இந்திய ராணுவ தலைமை தளபதியாக Field Marshal
Kodandera M. Cariappa கடைசி பிரிட்டிஷ் இந்தியாவின் தளபதி General Francis Roy
Bucher அவர்களிடமிருந்து பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அந்த நாளை நமது இந்திய ராணுவம் பல அணிவகுப்புகள் மற்றும் பல ராணுவ சாசகங்களை நிகழ்த்திக் கொண்டாடுவார்கள்
அந்த ராணுவ வீர்ர்களின் வீரம் – தீரம் – தியாகம் ஆகியவைகளால் தான் நாம் நமது அண்டை நாடுகளின் அச்சுறுத்திலிருந்து பாதுகாப்பாக வாழ முடிகிறது.
ஆயிரக்கணக்கான நமது ராணுவ வீர்ர்களுக்கு நன்றியும் வாழ்த்துக் கூறிப் போற்றுவோம்.
இந்த சமயத்தில் மோடி அரசு ராணுவ வீர்ர்களின் தேவைகளை – தளவாடங்கள், புல்லட் புரூஃப் ஜாக்கட், புதிய ராணுவ உடை, அதி நவீன துப்பாக்கிகள், ராணுவ வீர்ர்கள் தங்களைக் காத்துக்கொள்ள எதிரிகளின் திடீர் தாக்குதல் நடந்தால் அதற்கு மேல் அதிகாரிகளின் உத்தரவுக்குக் காத்திராமல் எதிர்நடவடிக்கைக்கு அனுமதி, ராணுவ அதிகாரிகளின் பென்ஷன் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தது – என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
இந்த நேரத்தில் ஒரு மிகவும் சோகமான – பயங்கரமான சம்பவம் 27 – 02 – 2000 அன்று நமது ராணுவ வீர்ர் பெளசாஹேப் மாருதி தலேகர் என்பவருக்கு நடந்தது.
அவர் ஜம்மு காஷ்மீரத்தில் உள்ள ரஜோரி ஜில்லாவில் உள்ள பாகிஸ்தான் எல்லையில் அமைந்த அசோக் லிசனிங்க் போஸ்டில் பாதுகாப்பு வேலையில் இருந்தார். அவர் 17-வது மராதா மில்லிடரி லைட் இன்பெண்ரி பட்டானியனைச் சேர்ந்தவர். அவருடன் 7 வீர்ர்களும் இருந்தனர். அவர்களது பாதுகாப்பு அரணை இல்யாஸ் காஸ்மீரி என்ற பாகிஸ்தானைச் சேர்ந்தவனின் தலைமையில் இயங்கும் ஹூஜி என்ற தீவிரவாத இயக்கம் திடீர் தாக்குதல் செய்து, அங்குள்ள ஏழு வீர்ர்களையும் கொன்றனர்.
மாருதி தலேகரின் தலையைத் தனியாக வெட்டி எடுத்து அதை தங்களது வெற்றியின் சின்னமாக பாகிஸ்தானுக்கு எடுத்துச் சென்றது. அந்த வீர்ரின் தலையை பாகிஸ்தானில் மக்கள் மத்தியில் காட்சிப் பொருளாக வைத்துக் கொண்டாடினார்கள். அது மட்டுமல்ல. அந்த அயோக்கிய பாகிஸ்தான் அரசாங்கம் ஆதரிக்கும் தீவிரவாதிகள் அந்த இந்திய ராணுவ வீர்ரின் தலையை பொதுமக்கள் பார்வைக்கு வைத்து அவமானப்படுத்தியதுடன், அந்தத் தலையை புட்பால் போல் காலால் உதைத்து விளையாடினார்கள் என்று நமது ராணுவத்திடம் பிடிபட்ட ஒரு தீவிரவாதி சொன்னதாகத் தெரிவித்துள்ளார்கள்.
இந்த பாகிஸ்தானின் இந்தியாவிடம் கொண்டுள்ள வெறித்தனமான வெறுப்பு வெளிப்படுத்தும் விதமாக, பாகிஸ்தான் மீடியா இல்யாஸ் காஸ்மீரி என்ற தீவிரவாதத் தலைவன் தலேகார் தலையை எடுத்துக் கொண்டாடியதைப் படம் பிடித்து ஒளிபரப்பியது. அதே பாகிஸ்தான் மீடியா அப்போதைய பாகிஸ்தான் ஜெனரல் பெர்வீஸ் முஷாரஃப் இலியாஸ் காஷ்மீரித் தீவிரவாதியை பாராட்ட விழா எடுத்து, அந்த விழாவில் அந்த தீவிரவாதிக்கு ஒரு இந்திய ராணுவ வீர்ரின் தலையைக் கொய்து வந்த்தற்குப் பரிசாக ஒரு லட்சம் கொடுத்தார் என்று செய்தியாக ஒளிபரப்பியது.
அப்போதைய ராணுவ மந்திரி ஏ.கே. அந்தோணி. வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஸித்.
ராணுவ மந்திரி: பாகிஸ்தான் ராணுவத்தின் செயல் மிகவும் ஆட்சேபணைக்குரியது. மேலும் அவர்கள் இந்திய ராணுவீர்ரின் உடலை அவமானப்படுத்திய விதம் மனிதாபமான மற்ற செயல்.
வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஸித்: பதிலுக்கு இந்த அளவில் பதிலடி கொடுப்போம். இந்த சம்பவம் இரு நாடுகளுக்கு நடந்து கொண்டிருக்கிற சமாதான பேச்சு வார்த்தையைச் சிதைக்கும் செயல்.
ராணுவ ஜெனரல் இந்த சம்பவத்திற்கு மிகவும் கடுமையான எதிர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொன்னதற்கு, நமது மாண்புமிகு குர்ஸித் இந்த ராணுவ அதிகாரியின் வேண்டுகோளை நிராகரிக்கும் விதமாக விளக்கிச் சொன்னார்.
என்ன சொன்னார் ?
அவர் சொன்னது இது தான்: இது ராஜ தந்திரமாகச் செயல்பட வேண்டிய தருணமாகும். நாம் பயன்படுத்த வேண்டியது – பென் தானே அல்லாது கன் இல்லை (LET USE PEN AND NOT
GUN).
இதே குர்ஸித் சட்ட மந்திரியாக இருக்கும் போது, அவரது மனைவியின் என் ஜி ஓ அரசாங்கப் பணத்தை துஷ்பிரயோகம் செய்து, ஊழல் செய்கிறது. அதை குர்ஸித்தும் ஆதரவு அளித்து, ஊழலுக்கு உடந்தையாகச் செயல்படுகிறார் என்று ஒருவர் குற்றம் சாட்டினார்.
அதற்கு குர்ஸித் ஒரு அரசியல் வாதி தீவிரவாதியாக மாறியது போல் பொங்கி எழுந்து உதிர்த்த சொற்கள் இதோ: என்னுடைய பேனாவின் மை ரத்தமாகும். குற்றம் சாட்டிய நபர் தைரியமிருந்தால் என்னுடைய தொகுதிக்கு வரட்டும். வந்தால், அந்த நபர் உயிரோடு திரும்பிப் போவது இயலாத காரியம்.
ஊழல் புகாருக்கு GUN – இறந்த ராணுவீர்ரின் தியாகத்திற்கு முன் தியாகத்திற்கு PEN. என்னே வெளியுறவுத் துறை மந்திரியின் டிப்ளமஸி.
ஆனால் இதற்கு ராணுவ மந்திரி ஏகே அந்தோணி ‘ஏய், குர்ஸித் ! வாயை மூடு. இது என் துறை சார்ந்தது’ என்று அவரைத் தடுத்து ராணுவ நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.
ராணுவம் தலேகரின் சகோதரியின் வேண்டுகோளான அவரது முகத்தைப் பார்க்க அனுமதிக்க வில்லை. அவரது இறுதிச் சடங்கு அவரது கிராமமான மஹராஷ்ரா – அமத்நகர் ஜில்லாவில் உள்ள கோல்கான் கிராமத்தில் நடைபெற்றது.
ராணுவம் அவரது சகோதரியின் கல்விச் செலவை ஏற்றதுடன், ரூபாய் 10000/- மாதப் பென்ஷன், ரூபாய் 12 லட்சம் ரொக்கம் என்று உதவிக் கரம் நீட்டியதைப் பாராட்ட வேண்டும். அவரது
ஞாபகார்த்தமாக அவர் பெயர் சூட்டிய ஒரு சமூகக் கூடம் அந்தக் கிராமத்தில் நிறுவப்பட்டுள்ளது.
இது வரை இந்திய ராணுவவீர்ர்களின் உடல்களை பாகிஸ்தான் ராணுவம் சிதைக்கும் அவலம் 8 முறை நடந்துள்ளது. அதில் தலையைக் கொய்த சம்பவம் 6 முறை நடந்துள்ளது. அத்தனையும் மன்மோஹன் சிங்கின் ஆட்சியில்.
மோடி ஆட்சிக்கு வந்தவுடன் 2016-ம் வருடத்தில் இரண்டு முறை ராணுவ வீர்ர்களின் உடல்கள் சிதைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது – அக்டோபர் 28 – நவம்பர் 22 – 2016.
அந்தச் சம்பவம் நடந்தவுடன் மோடி அரசும், ராணுவ மந்திரியும், வெளியுறவுத் துறை அமைச்சரும் பாகிஸ்தானின் அராஜகத்தை ஒரே குரலில் மிகவும் காட்டமாக எதிர்த்தார்கள். பதிலடியும் கொடுத்தார்கள். அதன் பிறகு நடந்த பல சம்பவங்கள் பாகிஸ்தான் இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது என்ற நிலையை ஏற்பட்டுத்தியது.
சமீபத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ‘இந்தியாவுடன் சுமூக உறவு வேண்டும். ஆனால் மோடி இருக்கும் வரை இது நடக்காது’ என்ற அளவில் பேசியது இந்தியாவின் ராணுவ பலம் – உலக அரங்கில் நம் குரல் பலம் – பல ராஜ தந்திர செயல்பாடுகள் ஆகியவைகளின் தாக்கம் தான்.
Comments