Posts

Showing posts from July, 2021

விஷம் உண்ட கண்டன் என்ற தலைப்பில் மாலனின் கட்டுரை – குமுதம் இதழில்

Image
  ( கட்டுரையின் தழுவலான சுருக்கம் மூலக்கருத்தைச் சிதைக்காமல் ) விஷத்தை விதைத்து அந்த விதையில் ஒரு பெரிய திராவிடக் கூட்டத்தையே தமிழகத்தில் வளர்த்து , அதற்கு ‘ பாதிக்கப்பட்டவனின் பக்கம் நில் ’ என்ற இதழியலின் பால பாடத்தை பட்டம் போல் காற்றில் பறக்கவிட்டு இந்த விஷதிராவிடக் கூடங்களுக்குத் துணைபோய் பணம் – பதவி பெற்று கள்ள மெளனம் காத்த தமிழக ஊடகங்கள் என்று பாழ்பட்டுப் போனது தமிழகம் . அதற்கு ஆதாரமான சான்று ஒன்று தான் இந்தப் பதிவு . இந்த விஷமான அவதூறுகளால் அதிகம் பாதிக்கப்பட்டவர் ராஜாஜி . அதற்கு ஓர் உதாரணம் பெரியாரின் திருமணத்திற்கு ஆதரவாக யோசனை கொடுத்தவர் ராஜாஜி என்பது . ராஜாஜி திராவிட இயக்கத்தைச் சாய்க்க ஆரியச் சதி , இயக்கத்தை உடைப்பதற்கு ஆச்சாரியார் திட்டமிட்டு , பெரியாருக்குத் தவறான யோசனையைக் கூறிவிட்டார் , ஆரியத்திடம் அய்யா ஆலோசனை கேட்டு நடக்க ஆரம்பித்துவிட்டார் , அய்யா சரணாகதி அடைந்து விட்டார் – என்றெல்லாம் சேற்றை வாரி இழைத்தன அண்ணா திராவிட இயக்...