யின் –யாங்க் (Yin Yang) – சீன தத்துவம்
யின் – யாங்க்
தத்துவம் பயங்கரமான குழப்பத்திலிருந்து இந்த பிரபஞ்சம் முதன் முதலில் உருவான போது பிறந்தது
என்று சீன இதிகாசம் மற்றும் சீன மதம் ஆகியவைகள் சொல்கிறது.
அந்த குழப்பம் நீங்க பூமியின் மையப்பகுதியில் அமைதியை ஏற்படுத்த
யின்-யாங்க் என்ற இரு சக்திகள் உருவானதாக நம்பப்படுகிறது.
அந்த சிருஷ்டியில், யின்-யாங்க் மூலம் உலகத்தின் முதல் மனிதனான
‘பாங்கு’ என்பவர் – பிரபஞ்ச முட்டையிலிருந்து உருவானார்.
அத்துடன் ஃபுக்சி, நுவா மற்றும் ஷெனாங் என்ற மூன்று கடவுள்கள்
முதல் முதலாக யின்-யாங்க் மூலம் பிறந்தார்கள்.
யின் தத்துவம் தாவேயிசத்தையும், யாங்க் தத்துவம் கன்ஃபூசியசிசத்தையும்
முக்கியமாக சார்ந்துள்ளது.
தாவேயிசம் தனிமையையும், கன்ஃபூசிசம் சமூக வாழ்க்கையையும்
வலியுறுத்துகின்றன.
யின் என்பது உள்சக்தி; யாங்க் என்பது வெளி சக்தி.
யின் – யாங்க்
சின்னம் டாய் – சி (Tai Chi Symbol) சின்னமாகும்.
யின் – யாங்க்
தத்துவம் ‘புக் அப் சேஞ்சஸ்’ – (The Bokk of Changes)
என்ற ராஜா வென்
என்பவர் (King Wen) ஆக்கிய மிகவும் புராதன சீன கிளாசிகல் நூலில்
சொல்லப்பட்டுள்ளது. அது கி.மு. 9-வது நூற்றாண்டில் மேற்கு ஜாவ் வம்சம் அரசாண்ட காலத்தில்
எழுதப்பட்ட ஏடுகளில் காணப்படுகிறது.
லாவோ
சூ (Lao Tzu) என்பவரால் தாவேயிசம் நிறுவப்பட்டது. கோங்க் குய் என்று
அழைக்கப்படும் கன்ஃபூஷியஸ் என்பவரால் கன்ஃபூஷியனிசம் நிறுவப்பட்டது.
யின்-யாங்க் சமமான அளவில் இருந்தால், பூமியும் அமைதியாகச் சுழலும்.
ஆனால், யின்-யாங்க் சமநிலை இழந்து, யின் அதிகமாகவோ அல்லது யாங்க்
அதிகமாகவோ இருந்தால் பிரளயம் போல் வெள்ளம், வரட்சி, கொரோனா - ப்ளேக்
போன்ற நோய்கள் பூமியை அதிரவைக்கும்.
மேலும், யின் அதிகமாக இருந்தால், குளிர் ஜுரம் போன்ற வியாதிகள் வரும்.
அதே போல் யாங்க் அதிகமாக இருக்கும் போது உஷ்ண ஜுரம் போன்ற வியாதிகள் வரும்.
யின் – யாங்க் என்னும் இரண்டு சக்திகளும் ஒன்றுக்கொன்று இணைக்கமாக இருந்து நமது வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் ஒரே குடும்பம் போல் செயல்பட வைக்கும் தன்மை கொண்டவைகள். யின் – யான்ங்க் வெவ்வேறு வேறுபட்ட குணங்களைக் கொண்ட சக்திகளாக தனிப்பட்ட முறையில் இருந்தாலும், அவைகள் பூமியில் ஒருங்கிணைந்து செயல்படும் தன்மைகள் கொண்டன என்பதையும் அறியவேண்டும்.
யின் பூமியின்
அம்சம் என்றால், யாங்க் சொர்க்கத்தின் அம்சம்.
யின் என்பது இருள்,
பெண் அம்சம், உள்வாங்கும் தன்மை, சாத்வீகம் என்பதுடன் இரட்டைப்படை எண்கள்,
பள்ளத்தாக்குகள், ஆறுகள் என்று பரவி உள்ளது. மேலும், யின்னின் சின்னம் புலி, அதன்
நிறம் ஆரஞ்சு, தொடர்பு அறுபட்ட கோடு என்று யின்னின் பரிணாமம் விரிகிறது.
அதேபோல் யாங்கின்
பரிணாமத்தை இப்படி சீன தத்துவம் விளக்குகிறது.
யாங்க்
ஒளிவடிவமானது, ஆண் அம்சம் கொண்டது, வலிமையுடன் செயல்திறன் கொண்டது, ஊடுரவு தன்மை
உள்ளது. மேலும் யாங்க் ஒற்றைப்படை எண்கள், மலைகள் ஆகியவைகளையும் தன் குணங்களாகக்
கொண்டுள்ளது. யாங்க் டிராகன் சின்னத்தையும், கறு நீல நிறத்தையும், அறுபடாத
கோடாகவும் அறியப்படுகிறது.
யின் என்பது ஒரு மூடபபட்ட கதவு
என்றும், ஒரு ஆற்றின் தென் கரை என்றும், ஒரு மலையின் வடபாகம் என்றும்
குறிக்கப்பட்டுள்ளது.
வடக்கு திசைக் கதவு யின் சக்தியின்
கட்டுப்பாட்டில் உள்ளது. அதை எப்போதும் திறந்தே வைக்க வேண்டும். ஆனால் யாங்கின்
கட்டுப்பாட்டில் இயங்கும் தெற்கு திசைக் கதவு எப்போதும் மூடியே இருக்க வேண்டும்.
அதே போல் யாங்க்கைப்
பற்றி, அது உயர்ந்தது, பிரகாசமானது, ஒரு மலையின் தென் பகுதி என்று
விவரிக்கப்பட்டுள்ளது.
சங்கீதம் யாங்கின்
சக்தியால் வருகிறது. சடங்குகளோ யின்னின் சக்தியால் வருகிறது. யின் – யாங்க்
இரண்டின் சமநிலையான ஒருங்கிணைப்பு என்பது நட்சத்திரங்களால் உண்டாகிறது.
இப்படி யன் – யாங்க்
மாறுபட்ட குணாதிசயங்களைக் கொண்டிருந்தாலும், அந்த இரண்டு சக்திகளுக்கும் மூலம் –
பெரிய இறுதி சக்தி என்ற தைஜி (t’ai chi (Chinese: “Great Ultimate”) – என்ற
விவரம் “The Book of Changes
(Yijing), the ancient philosophical text ” – ல்
குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த முலசக்தி தைஜியை பிறகு வந்த சாங்க் வம்ச லி என்ற புதிய
கன்ஃபூசியஸ் கொள்கையைப் பின்பற்றும் தத்துவ ஞானி, குய் (Qi) என்ற வாழ்க்கை சக்தி –
அதாவது சக்திவாய்ந்த மூச்சுக் காற்று என்ற இந்த லி ஞானியின் தத்துவத்தையும்
இணைத்து, யின்-யாங்க் இரண்டும் ஐந்து சக்தி உருவங்களாக பரிணமித்து, பிரபஞ்சத்தில்
தொடர்ந்து மாற்றங்கள் ஏற்படக் காரணிகளாக இருந்தன.
ஐந்து சக்தி உருவங்களாவன: மரம், பூமி, தீ, உலோகம், நீர்.
அந்த ஐந்து சக்திகளையும் யின்-யாங்க் இப்படி விளக்குகிறது:
“மரம்
வளையும் தன்மை உள்ளது. பூமி விதைகளை ஏற்று, பயிர்களை விளைவிக்கும் தன்மை உள்ளது.
தீ மேலே எழுந்து ஒளிவிடும் தன்மை உள்ளது. உலோகம் பணிந்து, மாறுதலுக்கு உட்படும்
தன்மை உள்ளது. நீர் நனைய வைத்து, கீழ் நோக்கிப் பாயும் தன்மை உள்ளது.”
தைஜி என்ற மிகப்பெரிய மூல இறுதி சக்திதான் யின்-யாங்க்
இரண்டிற்கும் ஆதார சுருதியாக இருப்பதாலும், அவைகள் இரண்டும் ஒன்றுக்கொன்று
குணாங்களால் மாறுபட்டாலும், இணைபிரியா நண்பர்களாக சேர்ந்தே இருக்க வேண்டிய
நிர்பந்தத்தால், ஒன்று அதிகமானால், மற்றொன்று குறைந்தும் அந்த பூமிக்
கோளத்திற்குள் இயங்கும் நிலையில் உள்ளது. சம நிலையில், அவைகள் சரிசமமாக – யின்
கருப்புப்பகுதியிலும், யாங்க் வெள்ளைப் பகுதியிலும், வட்டத்தில் இடம்பெற்று
பூமியில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவ உதவும்.
இயற்கையும், மனித செயல்பாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படும்
அவசியத்தை இது காட்டுகிறது. இயற்கையை அதிகமாக மனிதன் அனுபவிப்பதற்காக அழித்தால்,
இயற்கை தன் சீற்றத்தைக் காட்டி பூமியில் இருக்கும் மக்களுக்குப் பாடம் புகட்டும்.
யின் பனிப்படலம் போல் இருந்தால், யாங்க் கொதிக்கும் நிலை கொண்டது.
ஆகையால் சொர்க்கத்துக் குளிர் யின் என்றால், வெது வெதுப்பான பூமியின் சூடு
யாங்கைச் சேர்ந்தது.
இந்த யின்-யாங்க் வேறுபாட்டால், யாங்க் யின்னை விட
உயர்ந்தது என்றோ அல்லது யின் யாங்கை விட தாழ்ந்தது என்றோ கணிப்பது தவறு.
ஏனென்றால், பூமியின் சமநிலைக்கு யின்-யாங்க் இரண்டின் பங்கும் அவசியமாகும். ஒன்று
அதிக அளவில் செல்லும் போது, மற்றது அந்த வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தி, தன்
சக்தியை வெளிக்கொணர்ந்து, சம நிலைக்குக்குக் கொண்டு வந்துவிடும்.
யின் – யாங்க் இரண்டும் பிரபஞ்சத்தின் குய் என்ற சக்தியாகும்.
இந்த சக்தி இயற்கையாகவும், மனிதப் பிரயத்தனங்களாலும் செயல்படும் தன்மை கொண்டது.
இது தான் பிரபஞ்சம் நிலைத்திருப்பதற்கு உதவும் ஆதார சக்தியாகும்.
சொர்க்கம்
– பூமி இரண்டும் இந்த குய் என்ற சக்தியின் கட்டுப்பாட்டினால், ஐந்து கூறுகள் (Five Elements) உருவாக்கி உள்ளன. பிறகு, அதன் காரணமாக, ஐந்து சுவைகள்,
ஐந்து வர்ணங்கள், ஐந்து சங்கீத ஸ்வரங்கள் என்று பூமியின் வாழும் மனிதர்களின்
வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்துகிறது. ஆனால், இந்த நிலை நீடிப்பதற்கு யின்-யாங்க்
ஆகிய இரண்டும் சம நிலையில் பாதியாக வட்டத்தில் இடம் பிடித்திருக்க வேண்டும்.
யின்
– யாங்க் அடிப்படையில் சூரியனை பூமி சுற்றும் ஒருவருடப்பாதையில் உண்டாகும் நான்கு
பருவ நிலைகளுடன் தொடர்புள்ளது.
யின் – யாங்க் என்பது
இரு துருவங்களான குணங்களைக் கொண்டதாகத் தோன்றினாலும், அவைகள் ஒன்றுக்கொன்று உதவும்
நண்பர்களாகத் தான் செயல்படுகிறார்கள் என்ற நிலைப்பாடு, மேற்கு திசை தத்துவ
ஞானிகளுக்கு ஏற்பது இயலாததாகப்படும்.
யாங்க் என்பது யின்னை
விட நன்மை பயப்பது என்ற கருத்து மேற்கு திசை தத்துவ ஞானிகளால் எளிதாக ஏற்றுக்
கொள்ளப்படும். ஏனென்றால் சூரியன் சந்திரனை விட சக்தி வாய்ந்தது, ஒளி இருட்டை விட
நல்லது என்று சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் இதில் ஒரு முக்கிய கருத்து
விடுபட்டுப் போகிறது. ஏனென்றால் இந்த யின் – யாங்க் சின்னம் ஒரு அரோக்கியமான
முழுமையான வடிவத்தை எதிரும் புதிருமாக இருப்பினும், இணைந்து சக்தி வாய்ந்த
நிலைப்பாட்டை ஏற்படுத்தி விடுகிறது. நண்பர்கள் விரோதிகளாவதும், விரோதிகள்
நண்பர்களாவது வாழ்க்கையில் நடைமுறை நிகழ்வுகளாகும். ஆகையால் நிரந்தர நண்பர்கள் –
விரோதிகள் என்ற நிலை பூமியில் நடக்கும் என்று கருதுவது இயற்கைக்கு விரோதமாகும்.
யின் –யாங்க் சின்னமான
வட்டத்தில் கருப்பு நிறமான யின்னையும், வெள்ளை நிறமான யாங்கையும் பிரிக்கும் கோடு
ஒரு வளைவான கோடாக இருப்பதைக் கவனிக்க வேண்டும். பிரிப்பது ஒரு நேர் கோடு இல்லை.
இந்த வளை கோடு, கருப்பு நிறம் – வெள்ளை நிறம் அதே நிலையில் இல்லாமல் இயற்கை – மனித
குல சக்திகளின் தாக்கத்தால் மாறுபட்டு வட்டத்தில் அதன் பரப்பளவு வேறாகி பூமியில்
தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அறியவேண்டும்.
மேலும், யின் பகுதியில் – கருப்பு நிறப்பகுதியில்
– யிங்கின் – வெள்ளை நிற மிகச் சிறிய பகுதி இருப்பதைக் கவனிக்கவும். அதே போல் யாங்கின்
வெள்ளை நிறப்பகுதியில், யிந்னின் கரு நிறப் பகுதி சிறியதாக அதனுள் இருப்பதையும் கவனிக்க
வேண்டும். ஆகையால், 100 % முழுமையான தூய்மை யின் சக்தியோ அல்லது கலப்படமில்லா 100
% யாங்க் சக்தியோ பிரபஞ்சத்தில் இருக்க சாத்திய மில்லை என்பதைத் தான் இந்தச் சின்னம்
காட்டுகிறது. ஆனால் அந்த சிறு பகுதியின் தாக்கம் கட்டுக்குள் இருக்க அதைச் சுற்றி உள்ள
பெரும் பகுதி போராடி வெற்றி பெற வேண்டும். அது நிகழாவிடில் பூமியின் சம நிலை பாதிக்கப்பட்டு,
அதில் வாழும் மனிதர்களின் வாழ்வும் துக்கத்தாலும், பிணியாலும், பட்டினியாலும், போரினாலும்,
இயற்கைக் சீற்றத்தாலும் பாதிக்கப்படும் நிலை உண்டாகும்.
யின்னாகப் பார்க்கப்படும் சந்திரனில் குறை உண்டு
என்று சொல்லப்படுகிறது. அந்த சந்திரனால் பூமியின் அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில்
வெளிச்சத்தை அளிக்க முடியாது. அதன் வெளிச்சமும் பல இடங்களில் போதுமானதாகவும் இருப்பதில்லை.
மேலும் யிங்காக உருவகப்படுத்தப்படும் சூரியனின்
வெளிச்சம் என்பதும் பூமியில் ஒரே நேரத்தில் எல்லா இடங்களிலும் விழுந்து ஒளிவிடுவதில்லை.
வெளிச்சம் என்பதற்கு விளக்கமே – ‘இருளை விழுங்கும் சாதனை’ என்று தான் அளிக்கப்படுகிறது.
இருட்டு இல்லா நிலை தான் பகல் என்பது தான் எதார்த்தம். ஏனென்றால் பூமியில் இருட்டு
தான் எங்கும் நிறைந்துள்ளது. அதை சூரியன் உதித்து, ஒளியால் இருட்டைப் புசித்து, பகலை
உண்டாக்க வேண்டும். ஒரு சிறிய குச்சியை சூரியக் கதிர்களின் முன்னே வைத்தால் அதன் நிழல்
பூமியில் விழத்தான் செய்யும். சூரியனாலும், நிழலால் ஏற்படும் இருட்டைத் தடுக்க முடியாது
என்ற தத்துவம் தான் எதிர்-மறைக் குணங்களும் இணைந்து வாழ்வை மகிழ்வாக்கும் என்ற உன்னதமான
உண்மையை இந்த யன்-யாங்க் சின்னம் நமக்கு நினைவுட்டுகிறது.
ஆகையால் யின்-யாங்க் சமநிலை என்பது மிகவும் அவசியமாக
ஏற்பட மக்கள் இயற்கையோடு இணந்து செயல்படுவது காலத்தின் கட்டயமாகிறது.
Comments