திருச்செந்தூர் முருகன் கோவில் ஆவணித் திருவிழா – கொடியேற்றம் – 06-09-2020 (ஞாயிற்றுக் கிழமை)
திருச்செந்தூர் முருகன் கோவில் ஆவணித் திருவிழா – கொடியேற்றம் – 06-09-2020 (ஞாயிற்றுக் கிழமை)
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஆவணித்
திருவிழாவும் ஒன்றாகும். 12 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழா 6-ம் தேதி தொடங்கி
17-ம் தேதி முடிவடைகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவில் உள்பிரகாரத்தில்
வைத்து நடைபெறும். சுவாமி வீதி உலா நடைபெறாது. விழாவில் பங்கேற்க பக்தர்கள் மற்றும்
உபயதாரர்களுக்கு அனுமதி இல்லை. மேலும் 10-ம் திருநாள் தேரோட்டம் நடைபெறாது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான முதல் நாள் கொடியேற்றம், 5-ம் திருநாள்
குடவரைவாயில் தீபாராதனை, 7 மற்றும் 8-ம் திருவிழா சுவாமி சண்முகர் எழுந்தருளல் ஆகிய
நிகழ்ச்சிகள் பக்தர்கள் வசதிக்காக வலைதளத்தில் (யூடியூப்) நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.
https://youtu.be/MjiiXtXHNVI என்ற யூ டியூப் முகவரியில் நேரடியாக பார்க்கலாம்.
முருகன் அருளால் கொரோனா வியாதியிலிருந்து அகில உலகமே முற்றிலும்
குணமடைய நாம் வேண்டுகிறோம்.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ! வீர வேல்
முருகனுக்கு அரோகரா !
Comments