மோடியின் 70-வது வருடப் பிறந்த நாள் – 17 - 09 – 2020 (வியாழக்கிழமை)
மோடி அரசு கடந்த
ஆறு ஆண்டுகளாக பதவியில் இருந்து பல அற்புதமான நல்ல திட்டங்களையும், நீண்டகாலம் பெயர்
சொல்லும் கட்டுமானப்பணிகளையும், எல்லைப் பாதுகாப்பில் புதிய தீர்க்கமான உத்திகளை மேற்கொண்டு
சீனா – பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் அத்துமீறல்களை ராணுவம் – பேச்சு வார்த்தகள் என்று
இரு முனைச் சாதுரியத்தால் மக்களின் நன் மதிப்பையும், நம்பிக்கையும் பெற்றுள்ளார். அமெரிக்கா,
ஜெர்மனி, ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்ரேலியா, இஸ்ரேல், எமிரேட், சவுதி அரேபியா போன்ற
பல நாடுகள் இந்தியாவின் எல்லையைப் பாதுகாக்க எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்து
வருகின்றன.
உண்மையிலே சீனாவும்,
பாகிஸ்தானும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பதாகவே கருத இடம் உண்டு. அதற்கு முழு
முதற் காரணம் நமது பாரதப்பிரதமர் மோடி அவர்கள் தான் என்பதில் நாம் பெருமை கொள்ளலாம்.
இந்தக் கொரோனா
காலத்திலும், பிரான்ஸிலிருந்து ரஃபேல் ஐந்து போர்விமானங்கள் இந்தியாவிற்கு வந்து அவைகள்
நமது ராணுவ விமானப் படையில் சேர்க்கப்பட்டுவிட்டன. வரும் பனிகாலத்திற்கு ஏற்ற உடைகள்,
உணவுகள் – போதுமான அளவுக்கு நமது வீரர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன.
காலம் காலமாக பிஜேபி
தனது தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட ஜம்மு – காஷ்மீர் 370 & 35 A – தனி அரசியல்
சாசன சட்டப்பிரிவு அகற்றப்பட்டு இந்தியாவின் யூனியன் பிரதேசமாக சட்ட திருத்தம் கொண்டு
நிறைவேற்றப்பட்டுள்ளது ஒரு பெரிய ஹிமாலய வெற்றியாகும். இது நடக்கவே நடக்காது என்று
கணித்த அரசியல் மேதைகள் முக்காட்டில் அலைய வேண்டிய நிர்ப்பந்தமாகிவிட்டது. லடாக்கும்
இந்தியாவின் யுனியன் பிரதேசமாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
அத்துடன் ‘ஒரே
இந்தியா ஒரே சட்டம்’ என்பதும் பிஜேபியின் தேர்தல் வாக்குறுதியாகும். பொதுச் சிவில்
சட்டம் என்பதன் முன்னோடியாக, மூன்று முறை தலாக் சொல்லி முஸ்லீம் மனைவியை விவாகரத்து
செய்யும் ஷாரியத் என்னும் இஸ்லாமிய சட்டம் நீக்கப்பட்டு, அந்த முறை இந்திய சட்டத்திற்கு
எதிரானது, தண்டனைக்கும் அபராதத்திற்கும் உட்பட்டது என்ற சரித்திர முக்கியாத்துவமும்,
முஸ்லீம் பெண்களுக்கு சமூக நீதியையும் வழங்கும் சட்ட திருத்தம் அமலுக்கு வந்துள்ளது.
பல ஆண்டுகளாக நிலுவையில்
உள்ள ராமர் கோயில் பிரச்சனை முடிவுக்கு வந்து, ராமர் கோயில் கட்ட அடிக்கல்லும் மோடியால்
கொரோனா கால கட்டத்திலும் நிறுவப்பட்டு விட்டது. இது ராமன் அருளால் தான் நடந்துள்ளது
என்பதை அனைத்து ஹிந்து மக்களும் நம்புகிறார்கள்.
மேலை நாடுகளில்
உள்ள இந்தியர்களை நம் நாட்டிற்கு அழைத்து வந்ததும் ஒரு பெரும் சாதனையாகும். ஏழை எளியோருக்கு
அரிசி – கோதுமை – பருப்பு ஆகியவைகளுடன், பணமும் கொடுத்து மோடி அரசு அவர்களின் துக்கத்தில்
பங்குகொண்டு, நிவாரணமும் அளித்துள்ளது.
இந்த இக்கட்டான
நேரத்திலும், அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு இல்லாமலும், அவைகளின் விலையும் கட்டுப்பாட்டில்
வைத்ததையும் நாம் மோடி அரசுக்கு ஒரு ‘ஜே’ போட்டுப் பாராட்டலாம்.
விவசாய வளைச்சல்கள்
பாதிக்கப்படாததுடன் நல்ல மகசூலையும் அளித்து, கொள்முதலும் அதிகரித்து, சேமிப்புக் கிடங்குகளும்
நிரம்பி உள்ளன.
புதிய கல்விக்
கொள்கை, புதிய விவசாய கொள்முதல் சட்டம் – ஆகியவைகள் நம் நாட்டு மாணவர்கள் – விவசாய
மக்கள் ஆகியவர்களின் நலம் கருதி இந்தக் கொரோனா காலத்திலும் துணிந்து மோடி அரசு கொண்டு
வந்துள்ளதைப் பாராட்ட வேண்டும்.
மோடி அவர்கள் பல
முடிவடைந்த கட்டமைப்புத் திட்டங்களைத் திறந்து வைத்தும், பல புதிய திட்டங்களுக்கு அடிக்கல்
நாட்டுதலையும் இந்த கொரோனா கால கட்டத்திலும் வீடியோ மூலம் நிகழ்த்தி உள்ளார். கொங்கன்
ரயில்வே இந்த மாதம் இரண்டு நவீன டெமு ரயில் வண்டிகளை நேபாலுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.
அயல் நாட்டு நிதிமுதலீடு
இந்தியாவில் அதிக அளவில் வந்துள்ளதால், இன்னும் சில வருடங்களில் உற்பத்தியும், வேலை
வாய்ப்பும் அதிகரிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.
சமீபத்தில்- ஆக்ஸ்ட்
2020-ல் - இந்தியா டுடே (அது மோடிக்கு எதிரான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்
சேனல்) சர்வேயில் கொரோனாவை மோடி எதிர்கொண்ட விதத்திற்கு 77% ஆதரவாக வாக்களித்துள்ளார்கள்.
மேலும் மோடி அரசுக்கே ஓட்டளிப்போம் என்று ஆதரவாக கருத்தை வெளிப்படுத்தியதின் அடிப்படையில்
பிஜேபிக்கு மட்டுமே 283 லோக் சபா சீட்டுக்கள் கிடைக்கும் என்று வெளிப்படித்தி உள்ளார்கள்.
மோடியின் அரசில்
தவறே இல்லை என்று சொல்ல வரவில்லை. மோடி சொல்வது போல், “நாங்கள் செய்தவற்றில் தவறுகள்
கண்டுபிடிக்கப்படலாம். ஆனால் நாங்கள் முடிவெடுப்பதில் நேர்மை தவறுவதில்லை. ஊழலுக்கு
கடுகளவும் இடம் கொடுக்கமாட்டோம் என்பதில் உறுதியாக இருந்து செயல்படுகிறோம்” என்பதின்
நியாயத்தை மக்கள் அனைவரும் உணர்ந்துள்ளார்கள். பயம் இல்லாமல், பண்புடனும், நேர்மையுடனும்,
அதே சமயத்தில் தைரியமாகவும் செயல்படுவது தான் மோடியின் பாணி. அது தான் தர்மப் பாதை
என்று நமது ஹிந்து மதம் போதிக்கிறது.
மோடி இது வரை இந்தியப்
பிரதமராகச் செயலாற்றிய சேவைகளைப் பாராட்டியும், அடுத்து வரும் 2024 ஆண்டு லோக் சபா
தேர்தலில் மீண்டும் அமோக மெஜாரிட்டியுடன் பிரதமராக ஆட்சி செய்யவும் வாய்மை சார்பாக
அவருக்கு பூச்செண்டு கொடுத்து ஆண்டவனைப் பிரார்த்திக்கிறோம்.
மோடியின் 70-வது
பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பாராட்டுத் தெரிவிக்கும் வண்ணம் இரண்டு சிறப்பு இணைப்பினை
இந்த இதழுடன் அன்பளிப்பாக வாசகர்களுக்கு அளித்துள்ளோம்.
1. மோடியின் சாதனையில் மிக முக்கியமானவைகளின் பட்டியல்
2. மோடியின் அரசியல் உரைகள்
(Two supplements uploaded separately and the link is below)
https://e-vaaimai.blogspot.com/2020/09/blog-post_64.html
Comments