மாமல்லபுரம் படைத்த மாபெரும் சரித்திர நிகழ்ச்சி





அக்டோபர் 11 – 12, 2019 – தேதிகள் இந்திய – சீன தலைவர்கள் முறைசாரா உச்சி மா நாட்டில் சென்னையிலுள்ள கடற்கரை கற்கோயிலான மாமல்லபுரத்தில் சந்தித்து உரையாடியதுடன், அங்குள்ள கலைநய பல்லவ காலத்துச் சிற்பங்களை ரசித்ததுடன் அடையார் கலாச்சேத்திராக் குழுவினர்களின் இந்தியாவின் கலாச்சாரத்தைப் பறை சாற்றும் கலை நிகழ்ச்சிகளையும் ரசித்து இரண்டு நாட்கள் இரு தலைவர்களான பாரதப் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஷி ஜிங்பிங்கும் மிகவும் நட்புடன் பழகியது உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

மாமல்லபுரத்தில் காண வேண்டிய அர்ஜுனன் தவம், கிருஷ்ணாவின் வெண்ணெய்ப் பாறை, ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்ட ஐவர் ரதங்கள், கடற்கரைக் கோயில் போன்ற பல்லவர்காலத்து அற்புத சிற்பக் கலைத் திறனை எல்லாம் சீன அதிபர் ஷி ஜிங்பிங்குக்கு மோடியே விளக்கிய உள்ளார். அந்தத் தலைவர்கள் இருவரும் கைகளைக் கோர்த்தபடி பல இடங்களில் காணப்பட்டனர்.

மோடி தமிழ் நாட்டின் பாரம்பரிய வேஷ்டி – அங்கவஸ்திரம் அணிந்து ஷி ஜிங்பிங்கை வரவேற்றுப் உரையாடியது தமிழ் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

அந்த சரித்திரம் வாய்ந்த சந்திப்பில் சக்தி வாய்ந்த சரித்திரம் படைக்கும் வாசகங்களை இரு தலைவர்களும் வெளியிட்டது அவர்கள் இருவரின் நட்பின் ஆழமும், நேர்மையும் வெளிப்பட்டதை உணர முடிந்தது.

மோடி:

சென்ற வருடம் யுஹான் முறைசாரா உச்சி மா நாட்டிற்குப் பிறகு இந்தச் சந்திப்பு நிகழ்கிறது. அப்போதே இரு நாடுகளும் தங்களுக்குள்ள நட்பின் ஒரு புதிய சகாப்தம் உருவாக உறுதி பூண்டு, அந்த இலக்கை நோக்கிய பயணத்தில் வேகத்தை உண்டாக்கினோம். அதன் தொடர்ச்சியாக, நாங்கள் எங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை மிகுந்த விவேகத்துடன் கையாண்டு, அவைகள் சச்சரவுகளாக மாறாமல் பார்த்துக்கொள்ள உறுதி பூண்டுள்ளோம். அவைகளைக் மிகவும் கவனத்துடன் கையாண்டு, அவைகள் உலக அமைதிக்கும், உறுதித் தன்மைக்கும் வழிகோளச் செய்வோம்.

ஷி ஜிங்பிங் அதற்குப் பதில் சொல்லும் விதமாகச் சொன்னது:

யுஹான் உச்சி மாநாடு ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையை அடைய உதவியது. இரு நாடுகளும் தங்களது உறவுகளை ஆழமாக முக்கிய பிரச்சனைகளைக் கையாளுவதில் அக்கறை கொண்டுள்ளது. இதன் மூலம் பல அடுக்கு நிலைகளில் இரு நாடுகளும் பரஸ்பரம் ஒருங்கிணைந்து செயல்பட முயன்றுள்ளது.

சீனா இந்தியாவுடன் அசைக்கமுடியாத உறவைவே கடைப்பிடிக்கிறது. அதற்காக ஒரு 100 ஆண்டு கால திட்டத்தைச் செயல்படுத்தி இரு நாட்டுக் கலாச்சாரங்களும் பிரிக்க முடியாத அளவில் இணையவே விழைகிறது.
சீன-இந்திய உறவு ஒரு பலமான அசைக்க முடியாத நட்பாக இருக்க வேண்டியது தற்போதைய உலகச் சூழ்நிலையில் அவசியமாகிறது. இதன் மூலம் இரு நாடுகளும் உலக அமைதியை நிலைநாட்ட மிக முக்கிய பங்காற்ற முடியும்.

இரு நாடுகளும் – வர்த்தகம், தொழில் உற்பத்தி, சுற்றுலா, கலாச்சார உறவுகள் – ஆகியவைகளில் அதிக அளவில் ஈடுபட ஒப்புக்கொண்டுள்ளன.

மேலே உள்ள இரு தலைவர்களின் பேச்சுக்கள் மிகவும் தெளிவாகவும், பரஸ்பரம் நட்பை வெளிப்படுத்தும் விதமாகவும் இருப்பதை வாசகர்கள் உணர்வார்கள்.

சென்னையில் சீன வெளியுறவு அலுவலகம் கூடிய சீக்கிரம் வர உள்ளது. அத்துடன் 2020 வருடம் – இந்திய – சீன கலாச்சார, மக்கள் உறவு பரிமாற்ற வருடமாகக் கொண்டாட இருக்கிறது. இந்திய – சீனாவின் 70 ஆண்டுகால நட்பைக் கொண்டாடும் விதமாக 70 நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அத்துடன் கப்பலில் மாநாடும் நடத்த முடிவாகி உள்ளது. ஒவ்வொரு வாரமும் குறைந்தது ஒரு நிகழ்சி – இந்தியாவிலோ அல்லது சீனாவிலோ – நடக்க ஏற்பாடாகி உள்ளது.

இதை எல்லாம் பார்க்கும் போது, நேரு காலத்து தோல்வி அடைந்த – இந்தியா-சீனி பாய் பாய் – போல் இந்த 100 ஆண்டு கால இருநாடுகளின் நட்புத் திட்டம் நிச்சயமாக தோல்வி அடைய வாய்ப்பே இல்லை. மேலும் இந்தியா அப்போதைய இந்தியாவும் இல்லை. அதே போல் சீனாவும் அப்போதைய சீனா இல்லை.

மோடியின் ஆளுமை – நட்பைப் பலப்படுத்தும் – புதிப்பிக்கும் திறன் – ஆகியவைகளைக் கண்டு, உலகமே வியந்து பாராட்டுகிறது.
மோடி பாரதத்திற்குக் கிடைத்த அவதார சீலர். அவர் ஆட்சி இன்னும் பல ஆண்டுகள் தொடர்ந்து நிகழ எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறோம்.


சீன அதிபர் ஷி ஜிங்பிங்கிற்கு மோடியின் சிறப்பு அன்பளிப்புகள்:




பத்தர் குலத்தைச் சேர்ந்த நாச்சியார் கோயிலில் வசிக்கும் கலைஞர்களால் தனியாக உருவாக்கப்பட்ட அன்னம் விளக்காகும். இது வெங்கலத்தால் செய்யப்பட்டு, தங்கமுலாம் பூசப்பட்டு பளப்பளப்பாகக்பட்டது. இது 6 அடி உயரமும், 108 கிலோ எடையும் கொண்டது.

நாட்டியம் ஆடியும், வீணை வாசிக்கும் சரஸ்வதியின் பலகை படம் என்று அறியப்படும் தஞ்சாவூர் ஓவியம் மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்த இரண்டு பரிசுப் பொருட்கள் ஷி ஜிங்பிங்கிற்கு மோடியால் அளிக்கப்பட்டது.



மோடிசீன அதிபர் ஷி ஜிங்பிங்கிற்கு அவரது படம் நெய்யப்பட்ட பட்டு சால்வையைச் சிறப்புப் பரிசாக அளித்தார். இது ஸ்ரீ ராமலிங்கா செளதாம்பிகா நெசவு கோவாப்பரேட்டிவ் சொசைட்டியின் எம். தர்மராஜ், ஷண்முக சுந்தரம், மனோஜ் ஆகிய நெசவாளர்களால் ஒரு மாத கால அவகாசத்தில் உருவானது. சால்வை 90” நீளம், 48 “ அகலம் கொண்டு, 550 கிராம் எடை கொண்டது. சீனக் கொடியின் நிறம் தேர்வு செய்யப்பட்டது. பட்டு நெசவுக் கலை சீனர்களிடமிருந்து பல்லவ ஆட்சியில் காஞ்சிபுரத்து நெசவாளர்கள் கற்றுக் கொண்டார்கள் என்பது சரித்திரச் செய்தி. 


மோடிக்கு சீன அதிபர் ஷி சிங்பிங் கீழ்க் கண்ட மோடியின் உருவம் பதித்த பீங்கானில் உருவாக்கப்பட்ட பரிசை அளித்தார்: 










மாமல்லபுரத்தில் மோடியின் தூய்மை இந்தியாவின் “PLOGGING” காட்சி



Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017