குரு அஷ்டகம் ஆக்கம்: ஆதி சங்கர பகவத் பாதாள்




குரு அஷ்டகம்
ஆக்கம்: ஆதி சங்கர பகவத் பாதாள்

‘குருவின் கமலப் பாதங்களில் உன் மனம் ஒன்றாவிட்டால்,
பிறகு என்ன பயன்? என்ன பயன்? என்ன பயன்?’

-    என்று மூன்று முறை ஆதி சங்கரர் திரும்பத் திரும்ப சிஷ்யனுக்குச் சொல்லி, குரு பக்தியின் அவசியத்தை ஆணித்தரமாக வலியுறுத்துகிறார்.

இந்த குரு அஷ்டகம் ஒன்பது ஸ்லோகங்களைக் கொண்டது. உண்மையில் அது எட்டு ஸ்லோகங்களைக் கொண்டது என்று தான் கொள்ள வேண்டும். ஏனென்றால், ஒன்பாதாவது ஸ்லோகம் ‘பலஸ்ருதி’யாக உள்ளது.

மேலும், ‘குருவின் கமலப் பாதங்களில் உன் மனம் ஒன்றாவிட்டால், பிறகு என்ன பயன்? என்ன பயன்? என்ன பயன்?’ என்ற வரிகள் முதல் எட்டு ஸ்லோகங்களின் கடைசி வரிகளாக பொதுவாக உள்ளன.

இதிலிருந்தும், ஆதி சங்கரர் குருஸ்தானத்திற்கு எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறார் என்பதும், சிருஷ்யர்கள் குருவை அடிபணிந்து, பணிவிடை செய்து, வேதம் படிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி, அப்பொழுதான் ‘பயன்’ உண்டாகும் என்பதையும் அறிவுறுத்துகிறார் என்பதை உணரவேண்டும்.

குரு அஷ்டகம் – தமிழில் – தழுவலான மொழிபெயர்ப்பில்

1.

சரீரம் ஸுரூபம் ததா கலத்ரம்
யச:சாரு சித்ரம் தனம் மேருதுல்யம்மிமி
மனஸ்சேத் லக்னம் குரோரங்க்ரிபத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் II


அழகான உடல், அழகான மனைவி, பார் புகழ்,
குறையாத செல்வம் எல்லாம் இருந்தும்,  

குருவின் கமலப் பாதங்களில் உன் மனம் ஒன்றாவிட்டால்,
பிறகு என்ன பயன்? என்ன பயன்? என்ன பயன்?


2.

கலத்ரம் தனம் புக்ரபௌத்ராதி ஸர்வம்
க்ருஹம் பாந்தவா:ஸர்வ மேதத்ஹிஜாதம் I
மனஸ்சேத் லக்னம் குரோரங்க்ரிபத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் II


மனைவி, செல்வம், புத்ரன், பேரன், வீடு, உறவினர்கள்,
புகழ் வாழ்ந்த குடும்பத்தில் பிறப்பு – ஆகியவைகள் அனைத்தும் இருந்தும்,

குருவின் கமலப் பாதங்களில் உன் மனம் ஒன்றாவிட்டால்,
பிறகு என்ன பயன்? என்ன பயன்? என்ன பயன்?


3.

ஷடங்காதி வேதோ முகே சாஸ்த்ரவித்யா
கவித்வாதி கத்யம் ஸுபத்யம் கரோதிமி
மனஸ்சேத் லக்னம் குரோ ரங்க்ரிபத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் II


வேதத்தின் ஆறு பகுதிகளிலும் பாண்டித்தியம்,
அனைத்து வேத இலக்கியம் முழுமையும் கரைகண்ட கல்வி,
உயர்ந்த இலக்கிய உரை நடை – கவிதை ஆகியவைகளைப் படைக்கும் திறன் – ஆகியவைகள் அனைத்தும் இருந்தும்,

குருவின் கமலப் பாதங்களில் உன் மனம் ஒன்றாவிட்டால்,
பிறகு என்ன பயன்? என்ன பயன்? என்ன பயன்?

4.

விதேசேஷ§ மான்ய:ஸ்வதேசஷ§ தன்ய:
ஸதாசார வ்ருத்தேஷ§ மத்தோ சான்ய: I
மனஸ்சேத் லக்னம் குரோரங்க்ரிபத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் II


அன்னிய நாடுகளில் புகழ், சொந்த நாட்டில் பெரும் செல்வம், நல்லொழுக்கத்தில் கீர்த்தி – ஆகியவைகள் அனைத்தும் இருந்தும்
  
குருவின் கமலப் பாதங்களில் உன் மனம் ஒன்றாவிட்டால்,
பிறகு என்ன பயன்? என்ன பயன்? என்ன பயன்?


5.

க்ஷமாமண்டலே பூப பூபாலப்ருந்தை:
ஸதா ஸேவிதம் யஸ்ய பாதாரவிந்தம்மி
மனஸ்சேத் நலக்னம் குரோ ரங்க்ரிபத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் II

பூமி முழுவதையும் ஆட்சி செய்யும் அரசர்களும் உனக்கு சேவை செய்ய உன் பாதங்களில் தவம் கிடந்தாலும்,

குருவின் கமலப் பாதங்களில் உன் மனம் ஒன்றாவிட்டால்,
பிறகு என்ன பயன்? என்ன பயன்? என்ன பயன்?

6.

யசோ மே கதம் திக்ஷ§தானப்ரதாபாத்
ஜகத் வஸ்து ஸர்வம் கரே யத்ப்ரஸாதாத்மி
மனஸ்சேத் ந லக்னம் குரோரங்க்ரிபத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் II

உன் கொடையின் காரணமாக உன் புகழ் திக்கெட்டும் பரவி,
இந்த உலகத்தில் எதையும் நீ அடையும் திறன் பெற்றிருந்தாலும்

குருவின் கமலப் பாதங்களில் உன் மனம் ஒன்றாவிட்டால்,
பிறகு என்ன பயன்? என்ன பயன்? என்ன பயன்?

7.

நபோகே நயோகே நவா வாஜிராஜௌ
நகாந்தா முகே நைவ வித்தேஷ§ சித்தம்வீ
மனஸ்சேத் லக்னம் குரோ ரங்க்ரிபத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் II


சுக போகம், ராஜ்யம், மனைவி, குடும்பம், செல்வம் –
ஆகியவைகளில் உன் மனம் ஈடுபடாமல்
துறவற மனப்பான்மையில் மூழ்கினாலும்,

குருவின் கமலப் பாதங்களில் உன் மனம் ஒன்றாவிட்டால்,
பிறகு என்ன பயன்? என்ன பயன்? என்ன பயன்?

8.

அரண்யே வா ஸ்வஸ்ய கேஹே கார்யே
தேஹே மனோ வர்ததே மே த்வநர்க்யேவீ
மனஸ்சேத் லக்னம் குரோரங்க்ரிபத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் II


காட்டில் அல்லது வீட்டில் வசித்தாலும், உடலை வருத்திச் செயலில் ஈடுபட்டாலும் அல்லது பெரிய சிந்தனையில் மூழ்கினாலும்,

குருவின் கமலப் பாதங்களில் உன் மனம் ஒன்றாவிட்டால்,
பிறகு என்ன பயன்? என்ன பயன்? என்ன பயன்?


9.

குரோ ரஷ்டகம் :படேத் புண்யதேஹீ
யதிர்பூபதி:ப்ரஹ்மசாரீ கேஹீவீ
லபேத் வாஞ்சிதா ர்த்தம் பதம் ப்ரஹ்மஸம்ஜ்ஞம்
குரோருக்தவாக்யே மனோ யஸ்ய லக்னம்மிமி


சந்நியாசியோ, ராஜாவோ, பிரம்மசாரியோ அல்லது கிருஹஸ்தனோ யாராக இருந்தாலும், குருவின் போதனைகளை மனத்தில் பதிய வைத்து, இந்த ஸ்லோகங்களை பாராயணம் செய்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாவர். அவர்கள் பிரம்மத்தை உணர்ந்த பெரிய பரிசைப் பெற்ற பாக்கியவான்களாவர்.


குரு அஸ்டகம் என்ற இந்த அற்புதமான ஸ்லோகங்களை அதன் மூலத்தில் செவி மடுத்தால் தான் மனம் பிரம்ம சந்நிதானத்தில் இருக்கும் நிலையை அடையும்.

ஆகையால் மேலே உள்ள உரையைப் படிப்பதை விட, இந்த அற்புதமான வீடியோவை அவசியம் செவிமடுக்க வேண்டுகிறேன்.

குருவுக்கும் குருவான ஞானஸ்வரூபியான  ஜகத் குரு ஆதி சங்கரரின் கமல பாதங்களை வணங்கி குருவின் அருளை அனைவரும் பெற வேண்டுகிறேன்.

வீடியோவின் தொடர்பு:







Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017