சொன்னால் நம்பமாட்டீர்கள்
சொன்னால்
நம்பமாட்டீர்கள்
சின்ன அண்ணாமலையின் பேச்சு மிகவும் இனிமையாக, நகைச்
சுவையுடன் அத்துடன் ஆழமான கருத்துக்களுடன் மிளிரும்.
நான் பலமுறை அவரது பேச்சைக்
கேட்டிருக்கிறேன்.
'திராவிட மாயையில் மயங்காதீர்கள்' என்று கோஷித்த ?த்தமர். ஆனால், அந்த
மாயையிலிருந்து இன்னும் தமிழகம் விடுதலை அடையவில்லை என்பதுதான் நிதர்சனம்.
அதற்குக் காரணம் 'காங்கிரசின் இளஞர்களை இணைக்காமல் பழம்பெரும் தனவந்தர்களை நம்பியதால் தான்' என்று அழாக் குறையாக அங்கலாக்கிறார் சின்ன அண்ணாமலை.
மகாத்மா காந்தியின் ஆசியுடன், ஹரிஜன பத்திரிகையைத் தமிழில் நடத்துவதற்கு உரிமை பெற்றவர் சின்ன அண்ணாமலை. காந்திஜி
அவர்களே இது குறித்து தன் ஹரிஜனப் பத்திரிகையில் ஒரு கட்டுரையில் இப்படிக் குறித்துள்ளார்: ஹரிஜன பத்திரிகையைத் தமிழில் நடத்துவதற்கு ஒரு இளைஞரை ராஜாஜி அவர்கள் சென்னை இந்தி பிரசார சபையில் எனக்கு
அறிமுகப்படுத்தி வைத்தார். அந்த இளஞர் பெயர் திரு. சின்ன அண்ணாமலை என்று ராஜாஜி சொன்னார். அதன் பின் சின்ன அண்ணாமலையைப் பற்றிப் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். சுதந்திரப் போராட்டத்தில் பல முறை சிறை சென்றவரென்றும், குறிப்பாக 1942 ஆகஸ்ட் போராட்டத்தில் இவர் இருந்த திருவாடானை சிறையை ?டைத்து மக்கள் இவரை விடுதலை செய்தனர் என்றும் அறிந்து ஆச்சரியமடைந்தேன். அந்தப் போராட்டத்தில் பல பேர் உயிர் இழந்தனென்றும் திரு சின்ன அண்ணாமலை கையில் குண்டு பாய்ந்து உயிர் தப்பியவர் என்றும் கேள்விப் பட்டேன். இப்படிப்பட்ட இளைஞர்களை நினைத்துப் பெருமை அடைகிறேன். ராஜாஜி சாதாரணமாக யாரையும் சிபாரிசு செய்ய மாட்டார். திரு. சின்ன அண்ணாமலையைச் சிபாரிசு செய்திருப்பது ஒன்றே அவர் ரொம்பவும் பொருத்தமானவர் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே ஹரிஜன பத்திரிகையைத் தமிழில் நடத்த திரு. சின்ன அண்ணாமலைக்கு நான் அனுமதி வழங்கி என் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
'இது எப்படி இருக்கு?', 'ஆண்டவன் சொல்றான், அருணாசலம் செய்யறான்', 'நான் ஒரு தரம் சொன்ன நூறு தரம் சொன்னமாதிரி', என்ற பல ரஜனி ஸ்டைல் வசனங்கள் போல், சின்ன அண்ணாமலையின் டிரேட் மார்க் 'சொன்னா நம்ப மாட்டீர்கள்' என்பதாகும். அதை அவர் உச்சரித்துச் சொல்லும் பாணியே அலாதி. அதற்கு எப்போதும் கூட்டத்தில் அப்பளாஸ் தான். அந்த மந்தரச் சொற்கள் தான் அவர் தம் புத்தகத்திற்கு இட்ட தலைப்பு. இனியும் சின்ன அண்ணாமலைக்கும் உங்களுக்கும் இடையில் இருந்தால், எனக்கும் முதுகில் அப்பளாஸ் தான்! - வாய்மை ஆசிரியர்.
1. ராஜாஜியால் சின்ன அண்ணாமலை உற்சாக எரிமலை என்று பாராட்டப் பட்டவர். சின்ன அண்ணாமலை என்ற புனைப்பெயர் ராஜாஜியால் இடப்பட்டது. ராஜாஜியின் நெருங்கிய நண்பர்கள் இவரை சின்ன திருவடி என்று செல்லமாக அழைப்பார்கள். ராஜாஜியின் நூல்களை இவர் தமிழ்ப் பண்ணை என்ற தம் பிரசுர நிலையத்தின் மூலம் வெளியிட்ட விதமே ஒரு பக்தியானது. கல்கி-ரா.கிருஷ்ணமூர்த்தி சொல்கிறார்: ரஸிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் அவர்கள் சொன்னது போல, சின்ன அண்ணாமலையைப் போல் ஒரு நண்பர் கிடைப்பதற்கு எவ்வளவோ தவம் செய்திருக்க வேண்டும்.
2. சின்ன அண்ணாமலை தமது 10-ம் வயதில் காரைக்குடியில் காந்திஜியைப் பார்த்த விபரத்தை விளக்குகிறார்: எனது சிறிய தாயார் அவர்கள் தேசபக்தர் திரு.சா.கணேசன் அவர்களின் சிறிய தகப்பனார். ஒரு திறந்த கார் ஒன்று அலங்காரம் செய்யப்பட்டு கணேசன் வீட்டில் நிறுத்தப் பட்டிருந்தது. அதில் தான் மகாத்மாவை வைத்து ஊர்வலம் நடத்தப் போவதாக ஏற்பாடு.
காந்தி வந்து அந்தக் காரில் ஏறி உட்கார்ந்து விட்டார். நான் காரின் பின்பக்கம் தள்ளப்பட்டேன். காந்திஜியின் முகம் தெரியவில்லை. சடக்கென்று காரின் பின்புறமுள்ள காரியரில் தாவி ஏறி, காந்திஜியின் முதுகைத் தொட்டேன். அவர் திரும்பிப் பார்த்துச் சிரித்தார். ஆனால், அருகிலிருந்தவர்கள் நான் ஏதோ பெரிய குற்றம் செய்து விட்டது போல் என்மீது பாய்ந்து என்னைப் பிடித்துத் தூக்கினார்கள். காந்தியடிகள், அவர்களை அடக்கி விட்டு என்னை தன் அருகில் வரும்படி அழைத்தார். நான் பயந்து கொண்டே அவரிடம் போனேன்.
சொன்னால் நம்பமாட்டீர்கள், அவர் ஒரு மோகனச் சிரிப்புச் சிரித்து விட்டு என்னிடம் ஒரு ஆப்பிளைக் கொடுத்து கன்னத்தில் செல்லமாகத் தட்டினார்.
3. படிக்காமல் காங்கிரஸ் என்றும், காந்தி என்றும் சுற்றித் திரிந்த என்னை மலேசியாவிற்கு அனுப்பி ஒரு ஆங்கிலோ சைனீஸ் ஸ்கூலில் படிக்க அனுப்பி விட்டார்கள். அந்தப் பள்ளிக்கூடத்தில் நிறைய சீன மாணவர்கள் படித்தார்கள். அச்சமயம் ஜப்பான் நாடு சீனாமீது அக்கிரமமாகப் படையெடுத்தது. ஜப்பானை எதிர்த்து சீன மாணவர்கள் எல்லோரும் ஊர்வலம் நடத்தினார்கள். நானும் அந்தக் கிளர்ச்சியில் கலந்து, ஜப்பான் சாமான்களை யெல்லாம் தெருவில் போட்டுக் கொளுத்தினோம். கடைகளுக்குள் புகுந்து ஜப்பான் துணிகளையெல்லாம் எடுத்துத் தெருவில் எறிந்தோம். போலீஸ் எங்களை அடித்து வளைத்துப் பிடித்தது. நானும் அகப்பட்டுக் கொண்டேன். மலேயாவில் அப்போது நிறைய பஞ்சாபி சீக்கியர்கள் போலீஸ்காரர்களாக இருந்தார்கள். அதிகாரிகள் மட்டும் ஆங்கிலேயர்கள் தான். ஒரு சீக்சிய போலீஸ்காரர், சீன மாணவருக்கு மத்தியில் ஒரு இந்திய மாணவனான நான் நிற்பதைக் கவனித்து விட்டார். மற்ற மாணவர்கள் போலீஸ் வேனில் ஏறும் போது, அதிகாரிக்குத்
தெரியாமல் என்னை வெளியே இழுத்து வேறு பக்கம் தள்ளி விட்டார். வீட்டில் எனக்கு செம அடிகள் விழுந்தன.
சொன்னால் நம்பமாட்டீர்கள், அன்று மாலை மேற்படி சீக்கிய போலீஸ்காரர் என்னைத் தேடி வந்து, ஒரு டீக்கடையில் எனக்குக் டீ வாங்கிக் கொடுத்து பகத்சிங் படம் போட்ட பாட்ஜ் ஒன்றை என் சட்டையில் மாட்டி விட்டு, பகத்சிங்கின் வீரம் தீரம் தியாகம் இவைகளைப் பற்றி எனக்குச் சொல்லி நானும் பகத்சிங் போல இந்திய நாட்டின் விடுதலைக்குப் பாடுபட வேண்டும் என்று கூறி விடை பெற்றார்.
4. நான் தேவகோட்டைக்கு சுவீகாரம் போன பின் என்னுடைய பதிமூன்றாவது வயதில் எனக்குத் திருமணம் நடைபெற்றது. சொன்னால் நம்ப மாட்டீர்கள், என் மனைவிக்கு நான் தாலி கட்டவில்லை! வேறு யார் கட்ட முடியும் என்று பரபரப்படைய வேண்டாம். எங்கள் நகரத்தார் சமூகத்தில் முன்பு அப்படி ஒரு வழக்கம் இருந்து வந்தது. மணமகன் தொட்டுக் கொடுத்த தாலியை பங்காளிகளில் சீரும் சிறப்புமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பெரியவர் மணமகனின் பிரதிநிதியாகச் சென்று மணப்பெண்ணுக்கு திருப்பூட்டுவார். அதன் பின்னர் நடைபெறும் மணவறை நிகழ்ச்சியில் தான் மணமகன் மணமகள் நேரிடை சந்திக்கும் சடங்குகள் நடைபெறும்.
திருபூட்டுதல் என்றால் தாலி கட்டுதல் என்று பொருள். அக்காலத்தில் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு சமூகம்-சட்டம் இவைகளில் கிடையாது. தாலி கட்டியவன் கணவன் என்று இருந்தால் எவனாவது பலாத்காரமாகத் தாலி கட்டிவிட்டாலும் கணவனாகி விடுவான். ஆகவே மாப்பிள்ளையின் பங்காளிகளில் சிறந்த ஒருவரைக் கொண்டு மணமகனுக்குத் திருப்பூட்டுவது
வழக்கம்.
5. கோபி செட்டிப்பாளையத்தில் டைமண்ட் ஜூபிலி உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது சத்திமூர்த்தி எங்கள் பள்ளிக்கு வந்து ஆங்கிலத்தில் அழகாகப் பேசினார். அப்பொழுது எனக்கு வயது 15 இருக்கும். நான் அவருக்கு நன்றி கூறினேன். நான் அப்பொழுது நல்ல சில்க் சட்டையும், ஜரிகை வேஷ்டியும் கட்டிக் கொண்டுதான் பள்ளிக்குப் போவது வழக்கம். 'தழிழர்களாக நாம் ஒருவருக்கொருவர் பேசும் போது ஆங்கிலத்தில் பேசுவது
எனக்கு அவ்வளவு சரியாகப் படவில்லை. அதனால் தான் நான் தமிழில் நன்றி கூறுகிறேன்' என்று சொன்னதைக் கேட்ட சத்தியமூர்த்தி என் மொழிப்பற்றைப் பாராட்டி, 'அது சரி. நீ தாய் மொழிப் பற்றுக் கொண்டிருந்தால் மட்டும் போதுமா? தாய் நாட்டுப் பற்று வேண்டாமா?' என்றார். 'அதுவும் வேண்டியதுதான்' என்றேன். அப்படியானால் இன்றிலிருந்து நீ கதர் கட்ட வேண்டும் என்றார். 'சரி கட்டுகிறேன்' என்றேன். இன்று மாலையில் நடக்கும் அரசியல் மாநாட்டுக்கு வா என்றார்.
நானும் அந்தக் கூட்டத்தில் நன்றாகவே பேசினேன். அதைக் கேட்ட சத்தியமூர்த்தி, 'இன்று முதல் நீ கதரே கட்ட வேண்டும். காங்கிரஸ் உறுப்பினராக வேண்டும். உன் சேவை நம் நாட்டுக்குத் தேவை' என்று தான் அணிந்திருந்த காவி கலர் அங்கவஸ்திரத்தை சபையின் கரகோஷத்துடன் எனக்குப் போர்த்தினார். என் உடம்பில் முதலில் பட்ட கதர் துணி காவிக்கலர் துணியே. அதுவும் சத்தியமூர்த்தி அவர்களால் அணிவிக்கப் பட்டதாகும். அந்தப் பெரும் பாக்யத்தை நான் என்றும் மறக்க மாட்டேன். அந்த நினைவாகவே நான் என்றும் கதரில் காவி நிறச் சட்டையையே அணிகிறேன்.
6. நான் பேசிய முதல் காங்கிரஸ் கூட்டம் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. அந்தக் காலத்தில் மைக் கிடையாது. காங்கிரஸ் கூட்டம் என்றால் போலீஸுக்குப் பயந்து ஒருவரும் வரமாட்டார்கள். அப்போது நான் கழுத்தில் ஒரு தமுக்கைக் கட்டிக்கொண்டு தெருத் தெருவாகச் சென்று தமுக்கடித்து 'இன்று மாலை ஜவஹர் மைதானத்தில் மாபெரும் காங்கிரஸ் பொதுக்கூட்டம். நானே பேசுவேன். அனைவரும் வருக' என்று உரக்கச் சத்தம் போட்டுக் கொண்டே செல்வேன்.
மாலையில் ஜவஹர் மைதானம் சென்றால் மேடை இல்லை. மைக் இல்லை. அதற்காகக் கொஞ்சமும் மனம் தளராமல் பக்கத்திலிருக்கும் பெட்டிக் கடையிலுள்ள ஒரு பெஞ்சைத் தூக்கிப் போட்டு, ஒரு கம்பை ஊன்றி அதில் ஒரு அரிக்கேன் விளக்கை மாட்டி, காங்கிரஸ் கொடியை ஒரு பக்கம் நட்டு, பெஞ்சிமேல் ஏறி நின்று, 'அன்பார்ந்த சகோதர சகோதரிகளே' என்று உரக்கப் பேச ஆரம்பிப்பேன். எதிரில் பிரம்மாண்டமான கூட்டமாக ஏழேபேர் அமைதியின் சொரூபமாக அமர்ந்திருப்பார்கள். அனைவரும் எனது நெருங்கிய உறவினர்கள், சொந்தக்காரப் பையன் என்ன பேசப்போகிறான் என்று பார்க்க வந்தவர்கள்.
7. பினாங்கில் உள்ள எஸ்டேட்டில் கள்ளுக்கடை மறியலில் நான் கைதாகி கவர்னரிடம் கொண்டு போனார்கள்.
'Where is that man?' என்று கர்ஜனை செய்து கொண்டு வெள்ளைக்கார கவர்னர் தன்
ஆசனத்தில் வந்து அமர்ந்தார். என்னைப் பார்த்ததும் 'Oh you are a boy!' என்று வியந்தார்.
நான் உடனே, 'Sir, I am not a boy, I am father of a boy' என்றேன்.
கவர்னர் கட்டிடம் அதிரச் சிரித்துவிட்டுத் தன் மனைவியைச் சத்தம் போட்டுக் கூப்பிட்டார். என்னவோ ஏதோ வென்று அந்த அம்மையார் ஓடி வந்தார். கவர்னர் தன் மனைவியைப் பார்த்து Darling, see the fun. This boy is saying that he is a father of a boy! என்றார்.
உடனே அந்த அம்மையார் என்னைக் கனிவுடன் தன் பக்கத்தில் கூப்பிட்டு, 'what is your age?' என்று கேட்டார்.
Seventeen என்று சொன்னேன்.
'பதினேழு வயதில் உனக்கு ஒரு பையனா உனக்கு? எப்போது கல்யாணமாயிற்று? என்றார்.
பதிமூன்று வயதில் என்றேன்.
அந்த அம்மையாருக்கு ஒரே அச்சரியமாகப் போய் விட்டது. 'பதிமூன்று வயதில் கல்யாணம் செய்து என்ன செய்வது? என்றாரே பார்க்கலாம்.
நான் உடனே பிள்ளை பெறுவது என்றதும் கவர்னரும் அவர் மனைவியும் வெகு நேரம் வரை சிரித்தார்கள். சிரித்துச் சிரித்து அவர்கள் கண்களில் நீர் வழிந்தது. பிறகு கவர்னர் உன் பையன் பெயர் என்ன? என்றார்.
இன்னும் பெயர் வைக்கவில்லை. இப்போது அவன் பேபி தானே. நான் ஊருக்குப் போய்தான் அவனுக்குப் பெயர் வைப்பேன் என்றேன்.
உன் குழந்தை உன் மாதிரி சிவப்பாக இருப்பானா? என்று கவர்னர் மனைவி கேட்டார்.
என் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது நான் இங்கு வந்து விட்டேன். அதனால் குழந்தையை இன்னும் பார்க்க வில்லை. ஆனால் குழந்தை அழகாக சிவப்பாக இருக்கிறது என்று என் மனைவி கடிதம் எழுதியிருக்கிறாள் என்று கூறினேன்.
உன் குழந்தையைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் உனக்கில்லையா? என்று அந்த அம்மையார் கேட்டார். மிகவும் ஆவலாக இருக்கிறது என்றேன்.
பின்னர் ஏன் இம்மாதிரி எல்லாம் தப்பு செய்கிறாய்? என்று கவர்னர் கேட்டார்.
நான் ஒரு தவறும் செய்ய வில்லை. என் நாட்டு மக்கள் கள் குடித்துச் சீரழிவதைத் தடுத்து அவர்களுக்கு நல் வாழ்வு அளிக்க வேண்டுமென்பதே என் எண்ணம் என்றேன்.
அதற்காகக் கள்ளுக்கடைகளைக் கொளுத்தலாமா? என்றார். 'நான் கொளுத்த வில்லை. கொளுத்தச் சொல்லித் தூண்டவில்ல்லை. நான் காந்தீய வாதி. பலாத்காரத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால் மக்கள் கள்ளுக்கடையை கொளுத்தியது அவர்களது வெறுப்புணர்ச்சியைக் காட்டுகிறதல்ல்லவா? என்றேன்.
இதற்கு என்ன தண்டனை தெரியுமல்லவா? என்று அதட்டினார் கவர்னர்.
தெரியாது. ஆனால் குற்றம் செய்யாதவனுக்குத் தண்டனை கொடுப்பது நீதியா? என்பதை மேன்மை தங்கிய சீமாட்டியாரிடம் கேட்க விரும்புகிறேன் என்று கூறி அந்த அம்மையாரைப் பார்த்தேன்.
உடனே அந்த அம்மையார் ஏதோ கவர்னரிடம் கூறினார். கவர்னர் புன்முறுவல் செய்து, 'சரி உனக்கு வயது பதினேழுதான் ஆகிறது. ஆகவே உன்னை விடுதலை செய்கிறேன். ஆனால் நீ இன்னும் ஒரு மாதத்தில் மலேயாவை விட்டு இந்தியாவுக்குப் போய்விடவேண்டும். அப்படி நீ புறப்படவில்லை என்றால் அதிகாரிகள் உன்னை பலவந்தமாகக் கப்பலில் ஏற்றி விடுவார்கள்
என்று தீர்ப்பளித்தார்.
உன் மகனைப் பார்க்க சீக்கிரம் இந்தியா போய்ச் சேர் என்று கவர்னரின் மனைவி சிரித்துக் கொண்டே சொன்னார்.
பத்தாண்டுகள் கழித்து அதே கவர்னர் தம்பதிகளை சென்னை அடையாறு எலியட்ஸ் பீச்சில் சந்திந்தேன். அவர்களுக்கு முதலில் என்னை அடையாளம் தெரியவில்லை. பின்னர் நான் பழைய விஷயங்களை ஞாபகப்படுத்தியதும் ஒர் அலாதியான அன்பு காட்டினார்கள். அந்த அம்மையார் மறக்காமல் என் மகனைப் பற்றி விசாரித்தார்கள். அவர்களை என் இல்லத்திற்குக் கூட்டிக் கொண்டு காபி கொடுத்து உபசரித்தேன். என் மகனையும் காண்பித்தேன்.
அவர்கள் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் என்னை விட்டுப் பிரியும் போது அந்த சீமாட்டி எனக்கு ஒரு பார்க்கர் பேனா பரிசளித்தார்.
சொன்னால் நம்பமாட்டீர்கள் இப்போது நான் இதை எழுதிக் கொண்டிருப்பது அந்தப் பேனாவால் தான்.
8. தமிழிசை மகாநாடு சிதம்பரத்தில் வெகு விமரிசையாக நடந்ததைப் படித்த எனக்கு அதே போல் என் சொந்த ஊரான தேவகோட்டையில் ஒரு பெரிய மாநாடு நடத்த ஆவல் உண்டாயிற்று. இதை வீடு வீடாகச் சென்று சொல்லும் போதுதான் தமிழிசையைப் பற்றி பலருக்கு புரியவில்லை என்பது தெரிய வந்தது.'எதுக்குத் தமிழில் பாடவேண்டும்?, 'இதற்கு ஏன் மகாநாடு?', 'தமிழில் பாடமுடியுமா?', 'தமிழில் பாட பாட்டுக்கு எங்கே போவது?', 'இசையில் ஏன் பாஷை விவகாரம்?' என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டுப் பலர் எங்களை அதைரியப் படுத்தினார்கள். ஆனால் இவைகளால் எங்களது ஆர்வத்தை அணைபோட முடியவில்லை. திட்டங்கள் பிரமாண்டமாகப் போடப்பட்டன. நிதி வசூல் எப்படிச் செய்வது என்பது பெரும்பாடாக இருந்தது. அதற்கு ரூபாய் 10,000/- தேவையாக இருந்தது. அதற்கு விடையாக ஒர் அன்பர் இராஜா. சர். அண்ணாமலை செட்டியாரிடம் கேட்க பரிந்துரைத்தார். நான் தீவிர காங்கிரஸ் காரன். பலமுறை அண்ணாமலைச் செட்டியாரை பல மேடைகளில் தாக்கிப் பேசியுள்ளேன். எப்படி அவர் வீட்டுப் படியேறிப் பணம் கேட்க முடியும் என்று தயங்கிய என்னை, இது அரசியல் அல்லவே? தமிழ் சம்பந்தப் பட்டது தானே? நீங்கள் தாராளமாக அவரைச் சந்தித்துப் பணம் கேட்கலாம் என்று ஊக்கிவித்தார். நானும் என் நண்பர் ஒருவருடன் அவரது வீட்டிற்குச் சென்று, மகா நாட்டைப் பற்றியும், அதற்கு ஆகும் செலவு குறித்தும் பேசினோம். அவர் மிகவும் அன்பாக உபசரித்தார். அவர் என் தோள் மீது கைபோட்டபடியே விவமரமெல்லாம் கேட்டார். நாங்கள் நிதி வேண்டுமென்று கேட்கவில்லை. ஏனோ கேட்பதற்கு எங்கள் மனம் துணியவில்லை. காபி சாப்பிட்டதும் நாங்கள் போய் வருகிறோம் என்று கிளம்பினோம். ராஜா சர் எங்களிடம் ஒரு கவரைக் கொடுத்து, 'இதில் என் அன்பளிப்பு இருக்கிறது. மாநாட்டைச் சிறப்பாக நடத்துங்கள்' என்று சொன்னார்கள். விடைபெற்றுக் கொண்டு வெளியே வந்தோம்.
கவரைப் பிரித்துப் பார்த்தோம். அப்படியே திகைத்துக் கல்லாய் சமைந்து நின்றோம். சொன்னால் நம்பமாட்டீர்கள் அதில் இருந்தது ரூபாய் பத்தாயிரம்.
9. அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் தேவகோட்டை ஒரு கல்யாணவீட்டில் தெலுங்கிலேயே பாடிக்கொண்டிருந்தார். நான் தமிழிசை இயக்கத்தின் காரியதரிசி. ஆகவே அரியக்குடியிடம் 'தயவு செய்து தமிழில் பாடவும்' என்று சீட்டு எழுதிக் கொடுத்தேன்.
அதைப் படித்துவிட்டு பாடுவதாக சைகை செய்தார். நான் வெற்றிப் பெருமிதத்துடன் அவர் பாடப்போகும் தமிழ்ப் பாட்டை எதிர்பார்ந்திருந்தேன்.
சொன்னால் நம்மமாட்டீர்கள், அவர் என்னைப் பார்த்து பாட ஆரம்பித்தார் இந்தப் பாட்டை:
யாரடா குரங்கு நீ இங்கே வந்த
யாரடா குரங்கு நீ
அருணாசலக் கவிராயர் கீர்த்தனை தான். நான் அரியக்குடியை முறைத்துப் பார்த்தேன். இது தமிழ் பாட்டுத் தானே? என்று சொல்லி விட்டு அதைப் பாடி முடித்தார்.
அந்தப் பாட்டு முடிந்ததும் என்னை அருகில் வரும்படி அரியக்குடி கூப்பிட்டார். சென்றேன்.
கோபப்படாதீர்கள் சும்மா தமாஷ் செய்தேன். இனி பூராவும் தமிழ்ப் பாட்டுக்கள் தான் என்று சொல்லி இரண்டு மணி நேரம் தமிழிசையை முழக்கி சபையை மெய்மறக்கச் செய்தார்.
கச்சேரி முடிந்ததும் நான் அவர் அருகில் சென்று நன்றி சொன்னேன். அரியக்குடி என்னைப் பார்த்து, 'இசைக்கு மொழி அவசியமா?' என்று கேட்டார்.
'அவசியம் தான்' என்றேன்.
'எதனால்?' என்றார்.
'நம் முன்னோர்கள் இசையில் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்களே' என்றேன்.
'எப்படி?' என்றார்.
'இசைதான் முக்கியம் என்றால் நம் முன்னோர்கள் வாய்ப்பாட்டுக்காரர்களை நடுவில் வைப்பார்களா? ஒரு சாதாரண வித்வான் பாடினாலும் கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை, பாலக்காடு மணி போன்ற பெரியவர்கள் பக்க வாத்தியமாகத்தானே உட்காருகிறார்கள்? இசைதான் முக்கியம் மொழி முக்கியமில்லை என்றால் ராஜமாணிக்கம் பிள்ளையைத் தானே
நடுவில் வைக்க வேண்டும். இதிலிருந்தே மொழி முக்கியமென்று தெரியவில்லையா?' என்றேன்.
10. 1942 ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி அன்று இரவு 12 மணிக்கு என்னை தேவகோட்டையில் கைது செய்து அங்கிருந்து 22 மைல் தொலைவில் உள்ள திருவாடானை சப் ஜெயிலில் அடைத்தார்கள். 9-ம் தேதி காலை செய்தி அறிந்த ஜனங்கள் கொதித்தெழுந்தார்கள். பட்டப் பகலில் பல ஆயிரக்கணக்கான மக்கள் சூரியன் அஸ்தகிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் சப்ஜெயிலின் பூட்டை ?டைத்து என்னை அடைத்து வைத்திருந்த ஜெயில் கதவைத் திறந்து வெளியே கொண்டு வந்தார்கள். மக்களுடைய மாபெரும் சுதந்திர எழுச்சியின் வேகத்தில் நடைபெற்ற சக்தி மிகுந்த இந்தத் திருவாடனை ஜெயில் உடைப்புச் சம்பவம், தமிழகத்தின் ஒரு கோடியில் ராமேஸ்வரம் அருகில் நடைபெற்றதால் இந்தியா முழுவதும் விளம்பரம் இல்லாமல் அமுங்கி விட்டது.
தமிழ்நாட்டுத் தலைவர்களும், இச் சம்பவத்தின் பெருமையை உணரவில்லை. மதிப்பிற்குரிய ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்கள் 1942 சிறையிலிருந்து தப்பியதே பெரிய வீரச் செயல் என்று நாடு போற்றிக் கொண்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் திருவாடனையில் மக்கள் திரண்டு சிறைச் சாலையை உடைத்து ஆங்கில ஏகாதிபத்தியம் கைது செய்து வைத்திருந்த ஒரு சுதந்திர போராட்ட வீரனை விடுதலை செய்ததை நாடு முழுமையாக அறிந்து
கொள்ளவில்லை, பாராட்டவும் இல்லை.
11. நான் காசியில் தலைமறைவாக இருக்கும் போது தேவகோட்டையில் என் இல்லத்தில் என் பெரிய தந்தையார் புதல்வர் ஒருவருக்கு திருமணம் நடந்தது. அத்திருமணத்திற்கு நான் நிச்சயம் வருவேன் என்பதால், திருமணத்தன்று ஏராளமான போலீஸ்படையுடன் இன்ஸ்பெக்டர் வீரசாமி ஐயர் திருமணவீட்டிற்குள் நுழைந்து அட்டகாசம் செய்தார். பலரை
அடித்துத் துன்புறுத்தினார். இதைப் பார்த்த என் தாயார், 'ஐயா, நீங்கள் தேடி வந்த பையன் என் மகன் தான். அவனுக்காக மற்றவர்களை அடிகாதீர்கள். என்னை அடியுங்கள். நான் தான் அவன் தாய்' என்று உருக்கமாகச் சொல்ல உடனே இன்ஸ்பெக்டர் இன்னும் பத்து நாட்களில் அவனைக் கொண்டு வந்து போலீஸில் ஒப்படைக்காவிட்டால், உங்கள் அனைவரையும் லாக்கப்பில் தள்ளி இந்த வீட்டையும் தீ வைத்துக் கொளுத்தி விடுவேன் என்று சொல்லி
விட்டுப் போய் விட்டார். காசியிலிருந்து நான் வரழைக்கப்பட்டேன். என் அம்மா, மற்றும் உறவினர்கள் நான் போலீசால் துன்புறுத்தப் படுவேன் என்பதை நினைத்து வருந்தினார்கள்.
என் உறவினர்கள் பலர் புடைசூழ நான் தேவகோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரசாமி ஐயர் முன்னிலையில் நிறுத்தப் பட்டேன்.
'வந்துட்டானா? எங்கே அவன்?' என்ற மிரட்டல் சத்தம் கொடுத்துக் கொண்டு இருக்கும் போது நான் அவர் பார்க்கும் படியாக முன்னால் வந்து நின்றேன்.
'டேய் சுயராச்சியம் வாங்கி விட்டாயா?' என்று ஒரு உறுமல் உறுமினார்.
நான் சமாளித்துக் கொண்டு, 'இன்ஸ்பெக்டர் சார், நீங்களும் எங்களுடன் சேர்ந்து ஒத்துழைத்தால் தான் சுவராச்சியம் கிடைக்கும் போல் இருக்கிறது' என்று சொன்னேன்.
இன்ஸ்பெக்டர் கட கடவென்று சிரித்து 'அப்படிச் சொல்லு, சரியாகச் சொன்னாய். நீதாண்டா உண்மையான காங்கிரஸ்காரன். எங்க ஒத்துழைப்பு இல்லை என்றால் வெள்ளைக்காரனை நாட்டை விட்டு விரட்ட முடியுமா? இது பலபேருக்குத் தெரியவில்லை. உனக்குத் தெரிந்திருக்கிறது' என்று சொன்னார். 'இது தான் என்னுடைய அனுபவம்' என்று நான் சொன்னதைக் கேட்ட இன்ஸ்பெக்டருக்கு சந்தேஷம் தாங்க முடியவில்லை. வந்திருந்த ஊர் பிரமுகர்கள் அனைவரையும் பார்த்து நீங்கள் போகலாம் என்று உத்தரவு கொடுத்தார்.
சொன்னால் நம்பமாட்டீர்கள் இன்ஸ்பெக்டர் ஒரு போலீஸ் காவலரைப் பார்த்து 'டே 403 உடனே போய் எங்கள் இருவருக்கும் காபி வாங்கிக் கொண்டு வா' என்று சொன்னார்.
காப்பி சாப்பிட்டதும், என்னை லாக்கப்பில் வைக்கும்படி உத்தரவிட்டார்.
12. சென்னையில் நாலு பேருக்கு என்னைத் தெரியும்படி முதலில் செய்தவர் நாடோடிதான்.
சொன்னால்
நம்பமாட்டீர்கள், அதே நாடோடி அவர்கள்
நான் தமிழ்பண்ணைப் புத்தகப் பதிப்பகம் வைத்து நடத்துவதைப் பார்த்துவிட்டு,
'எனக்கு ஏதாவது பிழைக்கும் வழி
சொல்லித் தரக் கூடாதா?' என்று
கேட்டார்.
'பிழைக்கும் வழி' என்று ஒரு நகைச்சுவைப் புத்தகம் எழுதுங்கள், அதுதான் நீங்கள் பிழைக்கும் வழி என்றேன்.
'பிழைக்கும் வழி' என்று ஒரு நகைச்சுவைப் புத்தகம் எழுதுங்கள், அதுதான் நீங்கள் பிழைக்கும் வழி என்றேன்.
சொன்னால் நம்பமாட்டீர்கள் பிரபல நகைச் சுவை எழுத்தாளர் நாடோடி முதலில் எழுதி வெளிவந்த புத்தகத்தின் பெயர் 'பிழைக்கும் வழி' என்பதாகும். அதை நாலுபேர் புத்தகமாகப் படிக்கும்படி வெளியிட்டவனும் அடியேன் தான்!
13. தமிழ்ப்பண்ணையை ராஜாஜி துவக்கி வைத்தார். நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை விளக்கேற்றி வைத்தார். சக்தி வை.கோவிந்தன் புதுக்கணக்கு எழுதினார். தமிழ்ப்பண்ணையின் முதல் புத்தகம் 'தமிழன் இதயம்'. அந்தப் புத்தகத்தை அழகாகப் போட்டுக் கொடுத்தவர் சக்தி வை. கோவிந்தன் அவர்கள். அதன் மேல் அட்டையை கண்கவரும் வண்ணம் அச்சடித்துக் கொடுத்தவர் திரு.சத்ருக்கனன்.
தமிழ்ப்பண்ணையின் மூலம் நாமக்கல் கவிஞருக்கு பண்முடிப்பு அளித்ததைப் பார்த்த திரு. சி.என். அண்ணாதுரை என்னை நேரில் வந்து பாராட்டி விட்டு, நானும் பாரதிதாசனுக்கு அப்படி ஒரு நிதி அளிக்க வேண்டும். அதற்கும் கூடவே இருந்து உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பின்னர் பலமுறை திரு.அண்ணாதுரை அவர்கள் சார்பில் திரு.என்.வி.நடராஜன் என்னைப் பலமுறை வந்து சந்தித்து பாரதிதாசன் நிதி அளிப்பு விழாவைச் சிறப்பாக நடத்தினார்கள்.
தமிழ்ப் பண்ணை புத்தகப் பதிப்பகத்திற்கு எல்லாத் தமிழ் எழுத்தாளர்களும் வருவார்கள். தவறாமல் வ.ரா. புதுமைப்பித்தன், தி.ஜ.ர. முதலியவர்கள் வருவார்கள். வ.ரா. சத்தம் போட்டுத் தான் பேசுவார். யாரும் அவருக்கு நிகரில்லை. புதுமைப் பித்தனோ ரொம்பக் கிண்டலாகப் பேசுவார். தி.ஜ.ரா.எதுவும் பேசமாட்டார். அப்படிப் பேசினாலும் ரொம்ப மெதுவாகப் பேசுவார்.
ஒரு நாள் நான் ஏதோ எழுதிக் கொண்டிருக்கும் போது வ.ரா. வந்தார். 'என்னடா எழுதுகிறாய்' என்று கேட்டார். 'ஒரு பிரயாணக் கட்டுரை எழுதுகிறேன்' என்றேன். 'கொடு பார்க்கலாம்' என்றார். கொடுத்தேன். 'டேய், நீ பெரிய ஆளுடா. என்னமா எழுதியிருக்கிறாய்!' என்று சத்தம் போட்டுக் கொண்டிருந்த போது தி.ஜ.ர. வந்து விட்டார். 'பார்த்தியா,இதைப் பார்த்தியா' என்று தி.ஜ.ர.விடம் நான் எழுதியதைக் காட்டி வ.ரா. புகழ ஆரம்பித்தார்.
தி.ஜ.ர. அதைப் படித்துப் பார்த்து, 'நன்றாகத் தான் இருக்கிறது' என்றார். 'சும்மா சொல்லி விட்டுப் போகாதே. சக்தி பத்திரிகையில் இவனிடம் கட்டுரை வாங்கிப் போடு' என்று வ.ரா. சொன்னார். எனக்கு மெய் சிலிர்த்தது. அவர் பெரிய எழுத்தாளர் மட்டுமல்ல. பெரிய மனது உடையவர். நான் எழுதிய அந்தக் கட்டுரையின் ஆரம்பம் இது தான்:
கட்டுரையாகட்டும் கதையாகட்டும் வேகமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்க வேண்டுமென்று அறிஞர்கள் கூறுகிறார்கள். அதனால் இக்கட்டுரையைத் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸில் ஆரம்பிக்கிறேன்.
அவர் சொற்படி பின்னர் சக்தி பத்திரிகையில் எனது கட்டுரையை தி.ஜ.ர. நிறைய வெளியிட்டார். அதன் பின்னர் கல்கி பத்திரிகையில் எனது கதைகளும் கட்டுரைகளும் வெளி வந்தன. எனது முதல் புத்தகத்தின் பெயர் சீனத்துச் சிங்காரி.
சொன்னால் நம்பமாட்டீர்கள், அந்த புத்தகத்திற்கு முன்னுரை எழுதியவர் பேராசிரியர் சீநிவாசராகவன் அவர்கள். அவர் என்னை ஒரு சிறுகதை மன்னன் என்று நிரூபிப்பதற்கு பெரிய ஆராய்ச்சி செய்து ஒரு அருமையான கட்டுரையை முன்னுரையாக அதில் எழுதியிருக்கிறார்.
14. திரு.ம.பொ.சி. அவர்கள் தமிழ்ப்பண்ணைக்கு விஜயம் செய்தார் ஒரு நாள். அவரை அதற்கு முன் பார்தது இல்லை. தமிழ்ப்பண்ணை வெளியிட்ட புத்தகங்களைப் பார்த்து அதன் அழகிய தோற்றத்தைக் கண்டு வியந்தார். பிறகு தான் கொண்டு வந்திருந்த ஒரு புத்தகத்தை என்னிடம் காண்பித்தார் ம.பொ.சி. அது ஒரு சிறிய புத்தகம். சாணி நிறத் தாளில் அச்சிடப்பட்டிருந்தது. விலை எட்டணா போட்டிருந்தது. புத்தகத்தின் தலைப்பு 'வ.உ.சிதம்பரம் வாழ்க்கை வரலாறு' என்பதாகும். மேற்படி புத்தகத்தை திரு.ம.பொ.சி. மிகவும் சிரமப்பட்டு
வெளியிட்டாராம். விற்பனை செய்து அது சம்பந்தமாகப் பணம் கொடுக்க
வேண்டியவர்களுக்குக் கொடுக்கலாம் என்று நினைத்தாராம். ஆனால் அவர் நினைத்தபடி புத்தகங்கள் விற்கவில்லை. என்ன செய்யலாம் என்று கேட்டார்.
கையிருப்பு இருக்கும் புத்தகம் பூராவும் கொண்டு வரச் சொன்னேன். விற்பனைக் கமிஷன் கழித்து மிச்ச ரூபாயை கணக்குச் செய்து திரு. ம.பொ.சி.அவர்களிடம் கொடுத்து விட்டேன்.
பின்னர் அந்தப் புத்தகத்தின் மேல் அட்டயை அகற்றி விட்டு, புதிதாக மேலட்டை ஒன்று தயார் செய்து அழகிய முறையில் கப்பலோட்டிய தமிழன் என்று பெயர் கொடுத்து அந்த மேலட்டையைப் புத்தகத்திற்குப் போட்டு அதே எட்டணா புத்தகத்தை ஒரு ரூபாய் விலை போட்டு, தகுந்த விளம்பரம் செய்து மேற்படிப் புத்தகங்கள் அனைத்தையும் விற்றேன். பின்னர் அந்த நூலையே திரு. ம.பொ.சி. அவர்களை விரிவாக எழுதச் சொல்லி, மேலும் அழகு சேர்த்து
வெளியிட்டு மூன்று ரூபாய் விலைக்கு விற்க ஏற்பாடு செய்தேன். அதே கப்பலோட்டிய தமிழன் என்ற நூல் பின்னர் பல பதிப்புகள் வெளி வந்து தமிழகம் முழுவதும் வ.உ.சி.யின் புகழைப் பரப்பியதோடு ம.பொ.சி.யின் புகழையும் பரப்பியது.
'வேங்கடத்தை விடமாட்டோம்' என்ற கோழத்தால் திருத்தணியை ஆந்திர
மாநிலத்திலிருந்தும், 'குமரியை கொள்ளை கொடோம்' என்ற கர்ஜனை மூலம் கன்யாகுமரியை கேரளத்திலிருந்தும், 'தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்' என்ற தமிழ் முழக்கத்தால் சென்னை இரண்டாகக் கூறு போடப்பட்டு ஆந்திராவிற்குப் பாதி, தமிழ்நாட்டிற்குப் பாதி என்ற நிலையைத் தடுத்தும், போராடியவர் ம.பொ.சி. தமிழை ஆட்சி மொழியாக்க பாடுபட்டதில் முதன்மை ஸ்தானம் வகிப்பவர் ம.பொ.சி. ஆனால் இவ்வளவு அரும்பெரும் காரியங்கள் செய்த திரு. ம.பொ.சி. அவர்களுக்குத் தமிழ் இனம் தகுந்த பெருமை செய்ய வில்லை என்பதை நினைத்தால் தான் மனம் வேதனைப் படுகிறது.
சொன்னால் நம்பமாட்டீர்கள், திரு.ம.பொ.சி.யின் 71-வது பிறந்த நாளில் அவர் எழுதிய 'வந்தே மாதரம்' என்ற நூலை வெளியிட்டு, முதல் பிரதியை என்னிடம் கொடுக்கச் சொன்னார்.
அப்போது
திரு. ம.பொ.சி.
பேசினார்: எனது முதல் நூலை
வெளியிட்டவர் சின்ன அண்ணாமலை. சிறந்த தேச பக்தர்.
அதனால் இந்த வந்தே மாதரம்
என்ற நூலின் முதல் பிரதியை
அவருக்கு அளிக்சச் சொன்னேன்.'
15. நான் கல்கியைப் பார்க்க அவரது அடையாறு பங்களாவிற்கு பஸ்சில் போவதை அறிந்ததும், ஒரு காரை எனக்குப் பரிசாக அளித்து விட்டார். 'என் ஆப்த நண்பராகிய நீங்கள் பஸ்ஸிலும் நடையிலும் என்னைப் பார்க்க வருவதை நான் தெரிந்து கொண்டும் சும்மா இருந்தால் அந்த நட்பு உண்மை நட்பு ஆகாது. ஆகவே தான் இந்த ஏற்பாடும். நம் நட்பின் அடையாளமாக இந்தக் கார் உங்களையும் என்னையும் தினமும் சேர்த்து வைக்கும்' என்று கல்கி சொன்னார்.
என் தாய் இறந்த போது கூட எனக்கு அழுகை பொங்கி வரவில்லை. ஆனால், காந்திஜி இறந்த போதும், கல்கி இறந்த போதும் தான் நான் விக்கி விக்கி அழுதேன். ஏனென்றால் காந்திஜி தான் என்னைத் தேசபக்தனாக்கினார். கல்கி என்னை உயர்த்தி உலகுக் காட்டினார்.
16. அண்ணா அவர்களை காங்கிரஸ்காரர்களாகிய நாங்கள் மிகச் சாதாரணமாக நினைத்து, துச்சமாகப் பேசுவோம். ஆனால் அதைப் பற்றி எல்லாம் அண்ணா கவலைப்படுவதுமில்லை. கோபப்படுவதுமில்லை. அண்ணாவின் வேலைக்காரி சினிமா 100 நாள் விழா கோவை உட்லண்ட்ஸ் ஹோட்டலில் நடந்தது. அதற்கு நாமக்கல் கவி ஞர் தலைமையில் நான் பாராட்டிப் பேசும்படி அண்ணாவின் ஏற்பாடு. அந்த விழாவில் நான் பேசினேன்: நான் அண்ணாமலை. அவர் அண்ணாதுரை. நானோ மலை. அவரோ துரை. மலையிலிருந்து தான் நீர் வீழ்ச்சி வருகிறது. அது துறையில் தான் தங்குகிறது. இந்தத் துறையில் ர, தவறிக் கிடக்கிறது. இதைப் போல அண்ணாவின் கொள்கைகள் தவறிக் கிடக்கின்றன. திராவிட நாடு என்று அவர் சொல்வதெல்லாம் ஒரு நாளும் நடக்காத காரியம். அதற்காக அவர் செய்யும் முயற்சி செலவிடும் நேரம் எல்லாம் வீண். அவரது சமூதாய சீர்திருத்தக் கொள்கைகளில் பல எனக்கு உடன்பாடுடையவை. ஆனால் அவரது அரசியல் அபத்தம் என்பது எனது உறுதியான கருத்து. நல்ல வேளை. இந்த வேலைக்காரி படத்தில் அவரது சமூதாய சீர்திருத்த எண்ணங்களை மட்டுமே புகுத்தி இருக்கிறார்.

பின்னர் அண்ணா பதில் கூறும் போது சிறிதும் முகம் சுளிக்காமல், 'சின்ன அண்ணாமலை பல தியாகங்கள் செய்தவர். புரட்சி செய்து சிறைக் கதவுகளை மக்கள் உடைக்க விடுதலையானவர். தமிழ் வளர்க்கத் தமிழ்ப் பண்ணை நடத்துகிறார். அவரது கருத்துக்களை அலட்சியப்படுத்தி விட முடியாது. அவர் நகைச் சுவையாகவே பேசி விடுவதால் அவர் எங்களைத் தாக்கினாலும்
நாங்கள் சிரித்து மகிழ்வோம்' என்று என்னைப் பாராட்டவே செய்தார்.
அண்ணா அவர்கள் நாமக்கல் கவி ஞரின் மலைக்கள்ளன் தன் வேலைக்காரி கதையை விடச் சிறந்தது என்றும், ஆங்கிலத்தில் உள்ளது போல் தமிழில் அழகாக எழுதப்பட்ட நாவல் மலைக்கள்ளன் என்றும், அதைச் சினிமாவாக எடுத்தால் தமிழ் திரைப்படத் துறைக்கு ஒரு வெற்றிகரமான தமிழ்ப்படம் கிடைக்கும் என்றும் மனம் திறந்து சொன்னார்.
மேலும் அண்ணா சொன்னது: மலைக்கள்ளன் நாவல் கவி ஞரால் எழுதப்பட்டு பல ஆண்டுகளாக கேட்பாரற்றுக் கையெழுத்துப் பிரதியாகக் கிடந்தது. கவிஞரின் ஆற்றலை அறிந்த சின்ன அண்ணாமலை இந்த அரிய கருவூலத்தைத் தேடி எடுத்து கண்கவரும் அழகிய நூலாகத் தமிழ்ப்பண்ணை மூலம் வெளியிட்டிருக்கிறார்.
சொன்னால் நம்பமாட்டீர்கள் அன்று மாலையே நாராயணன் கம்பெனி திரு.நாராயண அய்யங்கார் அவர்கள் என்னைப் பட்ஜிராஜா ஸ்டூடியோவிற்குக் கூட்டிக்கொண்டு போய் ஸ்ரீராமலு நாயுடு அவர்களிடம் மலைக்கள்ளன் கதையைச் சொல்லச் சொன்னார்கள். சொன்னேன். கதை பிடித்து படமாக எடுத்தார்கள். திரு. எம்.ஜி.ஆர் பானுமதி நடித்தார்கள். படம் பிரமாதமாக வெற்றி யடைந்தது.
சொன்னால் நம்பமாட்டீர்கள் மலைக்கள்ளன் திரைப்படமாவதற்குக் காரணமாக இருந்த அண்ணா அவர்களை, நானும் நாமக்கல் கவி ஞரும் சந்தித்து அவருக்குப் பொன்னாடை போர்த்தி மாலை மரியாதை செய்து மகிழ்ந்து எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டோம்.
17. 1942 போராட்டத்தில் நான் சிறையிலிருந்து விடுதலை அடைந்ததும் சென்னை தியாகராய நகரில் தமிழ்ப்பண்ணை என்ற புத்தக வெளியீட்டகம் துவங்கினேன். அப்போது பல தலைவர்களும் தொண்டர்களும் விடுதலையாகாமல் சிறையிலிருந்தார்கள். அவர்களை எல்லாம் விடுதலை செய்து தேசத்தில் ஏற்பட்டிருக்கும் முட்டுக்கட்டையைத் தகர்க்க வேண்டும் என்ற கருத்துடன் 'பூட்டை உடையுங்கள்' என்று ஒரு நூல் வெளியிட்டேன். இந்தத் தலைப்பைப் பார்த்த ஆங்கிலேய அரசு சிறைப் பூட்டை உடைக்கும்படி தூண்டுகிறேன் என்று கூறி என்னைக் கைது செய்தது. கோர்ட்டில் ஆஜர் படுத்தப் பட்டேன். மாஜிஸ்ட்ரேட் ஒரு தெலுங்கர். தமிழ் சுத்தமாகத் தெரியாது.
'எதுக்கு மேன் ஜெயில் பூட்டை உடைக்கும் படி சொன்னே?' என்று மாஜிஸ்ட்ரேட் கேட்டார்.
'பூட்டை உடையுங்கள் என்று தமிழில் நான் கொள்ளும் அர்த்தம் Desolve the dead lock என்பதாகும்' என்றேன்.
அவர் அதை ஒப்புக் கொள்ள வில்லை. 'பூட்டை என்றால் lock உடை என்றால் break அல்லவா?' என்று விளக்கினார்.
உடனே நான் kicked the bucket என்றால் இறந்து போனான் என்று அர்த்தமே தவிர
பக்கெட்டை உதைத்தான் என்றா சொல்வது? என்று விளக்கினேன்.
அதைக் கேட்டு மாஜிஸ்ட்ரேட் சிரித்தார். வேறு ஏதாவது சொல்ல வேண்டுமா என்று அவர் கேட்டார்.
நான் சொன்னேன்: நீங்கள் தெலுங்கர். உங்களுக்குச் சரியாகத் தமிழ் தெரியாது. என்னைக் கைது செய்த இன்ஸ்பெக்டரோ கன்னடக்காரர். அவருக்கும் தமிழ் தெரியாது. கேஸ் நடத்த வந்த சர்க்கார் வக்கீலோ மலையாளி. நான் வெளியிட்டிருக்கும் புத்தகமோ தமிழ்ப் புத்தகம். ஆகவே தமிழ் தெரிந்தவர்கள் இந்த வழக்கை நடத்த வேண்டுமென்று விரும்புகிறேன்.
சொன்னால் நம்பமாட்டீர்கள், இதைக் கேட்டதும் மாஜிஸ்ட்ரேட்டுக்குக் கோபம் வந்து விட்டது. 'வாட் டமில் டமில்' என்று சொல்லிக் கொண்டே எனக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனை என்று தீர்ப்பு வழங்கி விட்டார். என்னைக் கைது செய்த இன்ஸ்பெக்டர், காரியத்தைக் கெடுத்து விட்டீர்களே மாஜிஸ்ட்ரேட் மூன்று மாதம் தான் தண்டனை கொடுப்பதாக இருந்தது. ஆனால் நீங்கள் தமிழ் கிமிழ் என்று பேசி ஆறுமாதம் வாங்கிக் கொண்டீர்கள் என்று அனுதாபப் பட்டார்.
18. மாகாத்மா காந்தியடிகள் அமரரான போது சென்னை தியாகராய நகரிலுள்ள தக்கர் பாபா வித்யாலயத்தில் 30 நாட்கள் பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது. 30வது நாள் கலைவாணரும் நானும் பேசுவதாக ஏற்பாடு. ஒரே காரில் இருவரும் அந்தக் கூட்டத்திற்குச் சென்றோம். அப்போது என்.எஸ்.கே சொன்னார்: இன்று நான் பேசிய பிறகு நீங்கள் பேச வேண்டும். முடியுமா? ஏனென்றால், நான் பேசி விட்டால் கூட்டம் இருக்காதே?
கூட்டத்தை இருக்கும் படிச் செய்யலாம் என்றேன். ரூ.1000 பந்தயம் என்றார் என்.எஸ்.கே. ரூபாய் ரெடியாக இருக்கட்டும் என்றேன்.
சுமார் 3000 பேர் கூடியிருந்த கூட்டத்தில் என்.எஸ்.கே. பேசினார். ரொம்பவும் நகைச் சுவையுடன் பேசினார். அவர் பேசி முடிந்ததும் கண்மூடிக் கண் திறப்பதற்குள் நான் எழுந்து கம்பீரமான குரலில் 'சங்கநாதம் கேட்குது, சாந்த காந்தி சத்தியத்தின் சங்க நாதம் கேட்குது' என்று பாட ஆரம்பித்தேன்.
எதிர்பாரத விதமாக இப்படி நான் திடீரென்று பாட ஆரம்பித்ததும் சபை அப்படியே நிசப்பதமாகி வெகு கூர்மையுடன் என் பாட்டை கேட்டுக் கொண்டிருந்தது. பாட்டுப் பாடி முடிய பத்து நிமிடங்கள் ஆயின. பாட்டு முடிந்ததும் பலத்த கரகோஷம். அடுத்த வினாடி மக்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டேன்.
உங்களில் யார் யார் காந்தி பக்தர்கள் தயவு செய்து கையைத் தூக்குங்கள் பார்க்கலாம் என்றேன். அனைவரும் கை தூக்கினார்கள். அப்படியானால் காந்தியடிகள் பிரார்த்தனை செய்தது போல் நாமும் கூட்டுப் பிரார்த்தனை செய்யலாமா? என்று கேட்டேன். அனைவரும் ஒரே குரலில் சரியென்றார்கள். ரகுபதிராகவ ராஜாராம் பிரார்த்தனை பத்து நிமிடம் நடத்தினேன்.
அதன் பின்னர் மக்களிடம் சொன்னேன்: கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள் உங்களை மிகவும் நேசிக்கிறார். அதைப் போலவே நீங்களும் அவரை நேசிக்கிறீர்கள். அதனால் நான் அவரிடம் சொன்னேன். நீங்கள் முதலில் பேசி விட்டால் மக்கள் கலைந்து விடுவார்கள். ஆகவே நான் முதலில் பேசி விடுகிறேன் என்று கேட்டுக் கொண்டேன். அதற்கு அவர் நீங்கள் நினைப்பது தவறு. இன்று கூட்டத்திற்கு வருபவர்கள் எனக்காகவும், உங்களுக்காகவும் வருபவர்கள் அல்ல; காந்தி மகாத்மாவின் பக்தர்கள். ஆகவே கூட்டம் முடியும் வரையில் இருப்பார்கள் என்று சொன்னார். அவர் சொன்னதை நம்பித்தான் நானும் அவர் பேசிய பிறகு பேசிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் கலைவாணர் சொல்லியபடி கடைசி வரையில் இருப்பீர்களா? என்று கூட்டத்தைப் பார்த்துக் கேட்டேன். கண்டிப்பாக இருக்கிறோம் என்று ஏகோபித்த குரலில் மக்கள் பதில் சொன்னார்கள்.
என்.எஸ்,கே. என்னிடம் ரூபாய் 1000 கொடுத்து விட்டார்.
சொன்னால் நம்பமாட்டீர்கள், அந்தப் பணத்தை தக்கர் பாபா வித்யாலயத்திற்கு
நன்கொடையாக வழங்கினேன்.
19. 1947-ல் சுதந்திரம் வந்தும் தமிழ் நாட்டில் காங்கிரஸ்காரர்கள் திராவிடக் கழகத்தால் நையாண்டி செய்யப்பட்டார்கள். 'ஆறு அவுன்ஸ்', 'ஐந்து ஏக்கர்' என்றெல்லாம் கேலி செய்வார்கள். நான் காங்கிரஸ் கூட்டங்களில் திராவிடக் கழகத்தைத் தாக்கிப் பேசுவேன். பெரியார் ஈ.வெ.ரா. அவர்களைக் கடுமையாகத் தாக்கிப் பேசுவேன். அதனால் திராவிடக் கழகத்தார்கள் என் மீது ரொம்பவும் காட்டமாக இருந்தனர். ஒரு நாள் சென்னை மயிலாப்பூரில் குளக்கரையிலுள்ள பஸ் நிலையத்தில் என்னை பல திராவிடக் கழகத்தினர் மிகவும் கேவலமாகத் திட்டினார்கள். லோகநாதன் என்ற ஒரு இளஞர் என் சட்டையைப் பிடித்து இழுத்துக் கிழித்து 'ஏண்டா நீ தானே கூட்டங்களில் பெரியாரைத் தாறுமாறாகப் பேசுகிறாய். இனி அம்மாதிரி பேசினால் காலை கையை ஒடித்து விடுவோம். நீ ஒரு தமிழனாக இருப்பதால் உன்னை உயிரோடு விடுகிறோம். பிரம்மணனாக இருந்திருந்தால் கதையே வேற'
நான் பஸ் ஏறியும், அங்கும் தொல்லைகள் தொடர்ந்தன. போதற்கு, பஸ் கண்டக்டரும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு, 'பேமானி', 'கழுதை' என்று திட்டி, காங்கிரஸ் மீது வசை பாடினார். நேராக நான் காமராஜிடம் கிழிந்த சட்டையுடன் சென்று முறையிட்டேன். காமாராஜர் பதறிப் போனார். உடனே டெலிபோனை எடுத்து அப்போதைய முதலமைச்சராக இருந்த திரு.குமாரசாமி ராஜா அவர்களைக் கூப்பிட்டு, 'என்ன கவர்ன்மெண்ட் நடத்துறீங்கண்ணே,
கதர் சட்டை போட்டவன் வீதியிலே நடக்க முடியலே, மந்திரிங்க மட்டும் காருலே கொடி போட்டுக் கிட்டு போனா போதுமான்னேன்' என்று கூறி என் சம்பந்தமாக நடந்ததைச் சொல்லி, 'இதற்கு ஏதாவது செய்தாகணும்' என்று சொல்லி விட்டு 'டக்' என்று போனை வைத்து விட்டார்.
கலாட்டா செய்த பகுதி வழியாக மீண்டும் சென்று கலாட்டா செய்தவர்கள் தட்டுப் பட்டால் அவர்களைக் கூப்பிட்டு வம்பிழுங்கள் என்று போலீஸ் கமிஷனர் சொன்னார். அவர் சொன்னபடியே செய்தேன். கலாட்டா செய்த லோகநாதனைக் காணோம். ஆனால் மற்றவர்கள் இருந்தார்கள். மீண்டும் என்னை வந்து சுற்றிக் கொண்டார்கள். அப்போது சாதாரண உடையில் இருந்த போலீஸ்காரர்கள் அவர்களை ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து பிடித்துப் போய் விட்டார்கள்.
ஆனால் அன்று இரவு 10- மணிக்கு
காமராஜரிடமிருந்து போன். தன்னை உடனே
சந்திக்கும்படி செய்தி. அங்கு சுமார்
இருபது குடும்பத்தினர், வயதான ஆண்கள், பெண்கள்,
குழந்தைகள் கூடியிருந்தார்கள்.
என்னைப் பார்த்ததும் தலைவர் காமராஜ், 'இவங்கள்ளாம் இன்று கைது செய்யப்பட்டிருக்கும் திராவிடக் கழகக்காரர்களின் குடும்பத்தினர். கைது செய்யப்பட்டவர்களில் சிலர் கார்பொரேஷனிலும், அரசாங்கத்திலும் வேலை செய்பவர்களாம். தண்டிக்கப் பட்டால் வேலை போய் விடுமாம். அந்தப் பிள்ளைகளை நம்பித்தான் இவர்கள் குடும்பம் இருக்கிறது என்கிறார்கள். இனிமேல் இம்மாதிரி நடக்காமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்கிறார்கள். என்ன மன்னிச்சு விட்டு விடலாமா?' என்று என்னைக் கேட்டதும், நானும் 'இனிமேலாவது காங்கிரஸ் தொண்டர்களைக் கேவலப் படுத்தாமல் இருந்தால் போதும்' என்றேன். அன்று இரவே அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப் பட்டார்கள்.
சொன்னால் நம்பமாட்டீர்கள், அதே லோகநாதன் சில ஆண்டுகளில் காங்கிரசில் சேர்ந்து எனது நெருங்கிய நண்பராக இறக்கும் வரை இருந்தார். காமராஜரின் பெருந்தனமையை அறிந்த அவர் காமராஜரிடம் பக்தி கொண்டார்.
20. கிங்காங்-தாராசிங் என்ற மல்யுத்த வீரர்களை வைத்து 1952-53-ல் தமிழகத்தில் பரபரப்பாக மல்யுத்தப் போட்டி நடைபெற்றது. நல்ல வசூல் ஆனதற்குக் காரணம் எனது விளம்பர யுத்தி என்பது அனைவரின் கணிப்பு. பிறகு பம்பாயில் மலபார் ஹில்ஸ் நாஸ் ஓட்டல் வைத்திருக்கும் ஒரு பெரிய செல்வந்தர் மல்யுத்தப் போட்டி காண்டராக்ட் எடுத்து நடத்திக் கொண்டிருந்தார். ஆனால் வசூல் அதிக மில்லை. அவரிடம் கிங்காங் என்னை அறிமுகப் படுத்தி, 'இவர் பெரிய விளம்பர மாக்னெட்' என்று அறிமுகப் படுத்தியவுடன், அவரும் 'இதுவரை ஒரு நாள் கூட வசூல் 2 லட்சத்தை எட்டவில்லை. வரும் ஞாயிறு அன்று கிங்காங் தாராசிங் மல்யுத்தம் நடைபெறப் போகிறது. இது தான் போட்டியிலே பெரிய போட்டி. இதில் வசூல் ஆகும் பணத்தின் அளவைப் பொறுத்துத் தான் தொடர்ந்து மல்யுத்தப் போட்டி நடத்துவதா இல்லையா என்று முடிவு செய்ய வேண்டும். ஆகவே அன்று பெரிய வசூலுக்கு ஏதாவது ஏற்பாடு செய்ய முடியுமா?' என்று கேட்டார் நாஸ்.
'எவ்வளவு வசூல் ஆக வேண்டுமென்று எதிர் பார்க்கிறீர்கள்' என்று கேட்டேன். 'குறைந்தது மூன்று லட்சமாவது வசூல் ஆக வேண்டும்' என்றார். என் வழி தனி வழி. கொஞ்சம் செலவு ஆகும். அதை நீங்கள் ஏற்க வேண்டும் என்றேன்.
அவரும் அதற்கு ஒப்புக் கொண்டார்.
கிங்காங்-தாராசிங் இவர்களுடன் பேசி ஒரு யோசனை செய்து செயலில் இறங்கினேன்.
பம்பாயில் உள்ள கடைத் தெருவில் இருக்கும் பெரிய கடைக்கு நானும், கிங்காங்கும் சென்றோம். சில கண்ணாடி டம்ளர்களை வாங்கினார். அப்போது தாராசிங் அக் கடைக்குள் நுழைந்தார். தாராசிங்கைப் பார்த்ததும் சிங்காங் தாவிக் குதித்து, 'இந்திய நாயே, என்னைத் தொலைத்து விடுவதாகச் சொன்னாயாமே?' என்று தாராசிங்கைத் தூக்கி எறிந்தார். சாமான்கள் உருண்டன. பறந்தன.
தாராசிங் எழுந்து நின்று, 'ஹங்கேரிப் பன்றியே! எங்கள் நாட்டில் வந்து என்னைக் கேவலப்படுத்துகிறாயா? உன்னைப் பாரத மண்ணிலேயே சமாதி வைக்காமல் விடமாட்டேன்!' என்று கிங்காங் மேல் பாய, சிங்காங் தாராசிங் மேல்பாய, பெரிய மோதல் உண்டாகி விட்டது.
இதைப் பார்க்க பல மக்கள் கூடி விட்டார்கள். அதற்குள் மற்ற மல்யுத்த வீரர்களை நாஸ் அவர்கள் காரில் கூட்டிக் கொண்டு வந்தார்.
ஏற்கனவே தயார் செய்து வைக்கப்பட்டிருந்த ஜீப் ஒன்றில் தாராசிங் ஏறி நின்று கொண்டு கூடியிருந்த மக்களிடம் 'பாரத நாட்டு மக்களே! ஹங்கேரியிலிருந்து வந்திருக்கும் ஒரு மாமிசப் பிண்டம் என்னை மல்யுத்தப் போட்டியில் ஜெயித்து என் ரத்தத்தைக் குடிப்பேன் என்று சபதம் செய்திருக்கிறான். நான் அவனை டார் டாராகக் கிழித்து பாரத மண்ணிலே புதைப்பேன். இந்தியாவை கேவலப் படுத்தியவனைச் சும்மாவிடமாட்டேன். நாளை ஞாயிறு அன்று எனக்கும் அவனுக்கும் மல்யுத்தம் நடக்கப் போகிறது. அதில் அவனை ஒரே அடியில் வீழ்த்தி அவன் பிணத்தின் மீது நின்று வெற்றி வாகை சூடுவேன். ஜெய்ஹிந்த்' என்று ஆவேசமாகப் பேசிவிட்டு ஜீப்பில் சென்று விட்டார்.
வேறு ஒரு ஜீப்பில் வந்த கிங்காங்கைப் பார்த்து மக்கள் கை கொட்டிச் சிரித்தார்கள். உடனே சிங்காங் மக்களைப் பார்த்து காரித்துப்பி 'மானங்கெட்ட இந்தியர்களே! யாரைப் பார்த்துச் சிரிக்கிறீர்கள். உங்கள் தாராசிங் குடலை உருவி நாளைக்கு நான் மாலையாகப் போட்டுக் கொண்டு ஹங்கேரி நடனம் ஆடுவேன்' என்று சொல்லி மற்றும் மக்களுக்குக் கோபம் வருவது போல சில வார்த்தைகளைச் சொல்லித் திட்டி, அடிக்கடி மக்கள் மீது எச்சிலைத் துப்பி கலாட்டா செய்து மக்கள் அவரை அடிக்க ஓடி வர ஜீப்பில் வேகமாகச் சென்று விட்டார்.
பின்னர் நானும், திரு. நாஸ் அவர்களும் கடைக்காரரிடம் உடைந்த சாமான்களுக்கு பில் போடச் சொல்லி ரூபாய்.17,000/- பணம் கொடுத்தோம். சனிக்கிழமை அன்று பம்பாய் முழுவதும் இதே பேச்சு. ஞாயிறு அன்று டிக்கட் வாங்க படேல் ஸ்டேடியத்தில் காலை 6 மணியிலிருந்து கியூ நிற்க ஆரம்பித்தது. கூட்டம் அலைமோதிற்று. பலர் டிக்கட் கிடைக்காமல் வெளியே நின்று கொண்டிருந்தார்கள்.
அன்றைய வசூல் என்ன வென்று நினைக்கிறீர்கள்?
சொன்னால் நம்பமாட்டீர்கள், ரூ.7,63,000/- ஆகும்!
21. காமராஜ் தோற்று, காங்கிரசும் தோற்று, காங்கிரசின் பரமவைரியான தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. சிலப்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள் காங்கிரஸ் தலைவர்கள் தனக்கு இழைத்த அநீதியை மனதில் கொண்டு தேர்தலில் காங்கிரசை எதிர்த்து நின்று வெற்றி பெற்றார். இதில் எனக்கு வருத்த மெல்லாம், திரு.ம.பொ.சி. அவர்கள் காங்கிரசை எதிர்த்து நின்றதைப் பற்றி அல்ல. ஆனால் காலமெல்லாம் அக்ரோஷமாக எதிர்த்த தி.மு.கவுடன் சேர்ந்து, அதுவும் உதயசூரியன் சின்னத்தில் நின்று ஓட்டுக் கேட்டது தான்.

திரு.ம.பொ.சி.யின் அருமை பெருமையை
திரு.காமராஜ் உணர்ந்து அவருக்குக்
கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுக்கவில்லை. இத்தனைக்கும் திரு. காமராஜ் அவர்களின்
பெருமையை திரு.ம.பொ.சி. நாடு நகரமெல்லாம்
பேசிப்பரப்பினார்.
ஆனால் திரு. அண்ணாதுரை, திரு.மு.கருணாநிதி இவர்களை எவ்வளவோ தாக்கி திரு.ம.பொ.சி. பேசியிருக்கிறார். ம.பொ.சி.யின் உண்மையான நாட்டுப் பற்றையும், தமிழுணர்ச்சியையும் தமிழ் இனப்பற்றையும் மதித்து அண்ணா அவர்களும், கலைஞர் மு.க. அவர்களும் ம.பொ.சி.க்கு அவர்களால் முடிந்த பெருமையையும், கெளரவத்தையும் செய்திருக்கிறார்கள். அது குறித்து நான் மிக்க மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன்.
22. தேசீய சக்திகள் மீண்டும் தமிழகத்தில் தலைதூக்க முடியாதபடி ராஜாஜி-காமராஜ் பகை செய்து விட்டது. ராஜாஜி தன் கடைசி காலத்தில் தமிழக அரசை காமராஜரிடம் ஒப்படைக்க வேண்டுமென்று மிகவும் விரும்பினார். காமாராஜரைப் போன்ற நாணயமான வாழ்க்கை உடையவர்கள் அரசியலில் கிடைப்பது அரிது என்று ராஜாஜி கருதினார். இதைப் பகிரங்கமாக எழுதினார். பேசினார்.
ஆனால், ராஜாஜியின் எண்ணம் நிறைவேறவில்லை. அவர் அமரரானார்.
சொன்னால் நம்பமாட்டீர்கள் யாருக்கும் கண்ணீர் விடாத காமராசர், ராஜாஜியின் சடலத்தைப் பார்த்ததும் பொல பொல வென்று கண்ணீர் சிந்தினார்.
23. திரு. அண்ணாவுடன் ரயில் ஒன்றாக திருச்சியிலிருந்து சென்னை வரை செல்லும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. உண்மையில் நான் இடம் கிடைக்காமல் முதல் பெட்டையைத் தேடிக் கொண்டிருக்கும் தருவாயில் ஒரு போலீஸ் அதிகாரி 'உங்களை சி.எம். திரு. அண்ணா அவர்கள் கூப்பிடுகிறார்' என்றதும் சென்றேன். 'என்னுடன் பயணம் செய்வதில் ஆட்சேபமில்லையே' என்று சொல்லி அன்போடு அழைத்தார்.
'திருச்சிக்கு ஒரு காங்கிரஸ் பொதுக் கூட்டத்திற்கு வந்து பேசி விட்டு சென்னை செல்கிறேன்' என்றேன்.

'ரொம்பவும் தாக்கிப் பேசினீர்களோ? இருப்பினும் நீங்கள் தாக்கிப் பேசினாலும் நானும் என் தம்பிமார்களும் கோபப்படுவதில்லை. ஏனென்றால் அதிலுள்ள நகைச் சுவை எங்களைச் சிரிக்க வைத்து விடுகிறது' என்றார் அண்ணாதுரை.
'வஸிஷ்டர் வாயால் பிரும்ம ரிஷி பட்டம்' என்றேன்.
'தி.மு.க. ஆட்சி எவ்வளவு நாள் நீடிக்குமென்று நினைக்கிறீர்கள்?' என்று ஒரு எக்கச் சக்கமான கேள்வியைக் கேட்டார்.
'நூல் தீருகிறவரை சுழி சுற்றிக் கொண்டே யிருக்கும்' என்றேன்.
'விளக்கம் தேவை' என்றார்.
'இந்தி எதிர்ப்பு என்ற மாயை தீரும்வரை தி.மு.க.ஆட்சி இருக்கும்' என்றேன்.
'அது சரி. 67 தேர்தலில் காங்கிரஸ் தொற்றதற்கு என்ன காரணம் என்று சிந்தித்தீர்களா?' என்றார்.
'என் சொந்த அபிப்பிராயம் 62 தேர்தலில் தங்களைக் காஞ்சீபுரத்தில் தோற்கடித்ததுதான் 67-ல் காங்கிரஸ் தோற்றதற்குக் காரணம்' என்றேன்.
'எப்படி?' என்றார். தங்களை 62-ல் வெற்றி பெற விட்டிருந்தால் தாங்கள் இவ்வளவு முனைப்பாக வேலை செய்து, தங்களுக்குப் பரம எதிரியான ராஜாஜி முதலியர்களுடன் சேர்ந்து கூட்டணி அமைத்திருக்கமாட்டீர்கள். எதிர்க்கட்சித் தலைவராக இருந்து கொண்டிருந்திருப்பீர்கள். காலம் ஓடி யிருக்கும். இதை நான் அப்போதே காமராசரிடம் சொன்னேன். காஞ்சிபுரம் தேர்தல் கூட்டங்களில் பேசவும் மறுத்து விட்டேன்' என்றேன்.
காலையில் செங்கற்பட்டு ஸ்டேஷனில் அன்புடன் எனக்குக் காலை ஆகாரத்தை அவரே பரிமாறினார். அது முடிந்ததும் என்னிடமிருந்த ஒரு புத்தகத்தை வாங்கிப்பார்த்தார்.
அது நான் எழுதிய ஒரு நாவல். தலைப்பு 'மானமே பெரிது' என்பதாகும். 'இந்த நாவல் நம் சந்திப்பின் நினைவாக என்னிடமே இருக்கட்டும். அதில் அன்பளிப்பு என்று எழுதிக் கையெழுத்துப் போட்டுத் தாருங்கள்' என்று புத்தகத்தை நீட்டினார். கையெழுத்துப் போட்டுக் கொடுத்தேன்.
சொன்னால் நம்பமாட்டீர்கள், உண்மையில் என் மனத்தில் அது வரையில் அண்ணாவைப் பற்றி இருந்த துவேஷ எண்ணம், ஸ்டேஷனை விட்டு ரயில் போனதைப் போல் என் இதயத்தை விட்டுப் போய் விட்டது.
24. என்னைப் போலவே என் மனைவியும் ராஜாஜியிடம் அன்பு கொண்டவர். உண்மையைச் சொல்ல வேண்டு மென்றால், ராஜாஜி சுதந்திரா கட்சி ஆரம்பித்த காலத்தில் என்னை அந்தக் கட்சியில் சேர்ந்து பணிபுரியும்படி சொன்னார். 'நான் கடைசி வரையில் காங்கிரஸ்காரனகவே இருந்து சாக விரும்புகிறேன். உங்களை அரசியல் தலைவராக நான் கருதவில்லை. எங்கள் குடும்பத்தின் தெய்வமாகத் தான் நாங்கள் கருதுகிறோம்' என்று சொல்லி விட்டேன்.
சொன்னால் நம்பமாட்டீர்கள், என் மனைவிகூட நான் சுதந்திரா கட்சியில் ராஜாஜிகூட சேர்ந்து பணி செய்யவில்லை என்பதற்கு என் மீது கோபம் கொண்டு இரண்டு நாட்கள் பட்டினி இருந்திருக்கிறார்கள். ராஜாஜியே நேரில் வீட்டிற்கு வந்து என் மனைவியை சமாதானப் படுத்தி, தான் இருக்கும் போதே தனக்கு நேராகவே உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளும்படி செய்தார்.
கடைசியாக ராஜாஜிக்கு உடல் நலம் இல்லை என்று கேள்விப் பட்டதும் என் மனைவி ஒரு முறை சென்று பார்த்து வந்தாள். பின்னர் இவளுடைய உடல் நலம் பாதிக்கப் பட்டு எங்கும் போக முடியாமல் ஆஸ்பத்திரியிலும் வீட்டிலும் மாறிமாறி வைத்தியம் பார்த்துக் கொண்டு இருந்தோம்.
திடீரென்று ஒரு நாள் ராஜாஜி இறந்த செய்தி கேள்விப் பட்டு அவரது சடலத்தைத் தரிசிப்பதற்காக நான் ராஜாஜி மண்டபத்திற்குச் சென்றிருந்தேன். பகல் சாப்பிடும் நேரம் வந்ததும் என்னை என் மனைவி விசாரித்து இருக்கிறாள்.
பக்கத்தில் இருந்த ஒருவர் ராஜாஜி அவர்கள் இறந்து விட்டார்கள். அதற்காகப் போயிருக்கிறார் என்று சொல்லியிருக்கிறார். 'ராஜாஜி இறந்து விட்டாரா? அவர் சடலத்தையாவது நான் போய்ப்பார்க்க வேண்டும். ஐயோ, யாரும் சொல்ல வில்லையே. என்று அழுது கொண்டே படுக்கையை விட்டு எழுந்திருந்தாளாம். பக்கத்தில் இருந்த உறவினர் எழுந்திருக்கக் கூடாது என்று எவ்வளவோ சொல்லியும் ராஜாஜியின் சடலத்தை தரிசிக்காமல் நான் எதற்கு இருக்க
வேண்டும் என்று தட்டுத் தடுமாறி எழுந்து அருகில் இருந்த தன் தங்கையின் மீது விழுந்து விட்டாள்.
எல்லோருமாகத் தூக்கிப் படுக்கையில் வைத்த போது ராஜாஜி போய் விட்டாரே என்று சொன்னவாறு அந்த நிமிடமே உயிர் பிரிந்து விட்டது.
Comments