Posts

Showing posts from September, 2019

யு.என். வளாகத்தில் காந்தி அமைதி பூங்கா திறப்பு விழா

Image
யு.என். வளாகத்தில் காந்தி அமைதி பூங்கா திறப்பு விழா Raveesh Kumar@MEAIndia Epitomising Bapu’s message of living in peace and harmony with the planet, PM @narendramodi and other leaders jointly inaugurated solar panels atop @UN Headquarters & the Gandhi Peace Park in New York. A stamp on Mahatma Gandhi was released by the UN on the occasion. மஹாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி, நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ள காந்தி சூரிய மின் சக்தி பூங்கா மற்றும் நியூயார்க் பல்கலையில், 150 மரங்கள் நடும் அமைதி பூங்காவை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பல நாட்டுத் தலைவர்கள் பங்கேற்றனர். ஐ . நா . தலைமையகக் கூரையின் மீது ஐ . நா . வில் உறுப்பினர்களாக உள்ள 193 நாடுகளின் சார்பில் 193 சூரிய மின் சக்தி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன . இதற்காக மத்திய அரசு 7 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது . இதன் மூலம் ஐ . நா . தலைமையகத்தில் , 50 கி . லோ . வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் . நியூயார்க் பல்கலை வளாகத்தில் அம...

மோடிக்கு பில் கேட்ஸ் அறக்கட்டளை ‘கோல் கீப்பர்’ விருது

Image
மோடிக்கு பில் கேட்ஸ் அறக்கட்டளை ‘கோல் கீப்பர்’ விருது ‘கடந்த 2014-ல் துவங்கப்பட்ட, ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை வெற்றிகரமாக  செயல்படுத்தியதற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘கோல் கீப்பர்’ விருது பில்  கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை வழங்கி  கவுரவித்துள்ளது.  ‘கோல் கீப்பர்’ என்றால் ‘இலக்கை நிறைவேற்றியவர்’ என்று பொருள். மோடி பேசியது: இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவில் இதுவரை ஐந்து ஆண்டுகளில் 11 கோடி  கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.  போதிய கழிப்பறைகள் இல்லாமல், ஏழைகளும், பெண்களும் கடுமையாகப்  பாதிக்கப்பட்டனர்.  படிக்க ஆசை இருந்தும், படிக்க முடியாமல் பெண்கள் தவித்தனர். இந்த  ‘தூய்மை இந்தியா’ திட்டத்தால், லட்சக்கணக்கானோர் நோய்களால்  உயிரிழப்பது தடுக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, 2022-க்குள், ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் ஒழிப்பில், மக்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

மோடி இந்தியாவின் தந்தை – அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப்

Image
மோடி இந்தியாவின் தந்தை – அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப்   இந்தியாவின் தந்தை மோடி : டிரம்ப் புகழாரம். இந்தியாவின் தந்தை மோடி என புகழாரம் சூட்டிய அமெரிக்க அதிபர் டிரம்ப், பாகிஸ்தானை மோடி பார்த்து கொள்வார் எனவும் கூறினார ். 74-வது ஐ.நா. பொதுசபை கூட்டத்தின் பருவ நிலை மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பல்வேறு நாட்டு தலைவர்கள் முன்னிலையில் உரையாற்றினார். இதன்பின்னர் ஜெர்மனி, நெதர்லாந்து, கதார், பூடான், இத்தாலி, மாலத்தீவு, உள்பட பல்வேறு நாட்டு தலைவர்களை மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இந்திய நேரப்படி செவ்வாய் இரவு 9.45 மணி அளவில் நியூயார்க் நகரில் ஐநா தலைமையகத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்தார். அப்போது பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேசினார்கள். இது குறித்து நமது பிரதமர் கூறுகையில் ஹூஸ்டன் நகரில் நடந்த விழாவில் கலந்து கொண்டதற்கு மிக்க நன்றி. அதிபர் டிரம்ப் எனது நண்பர் மட்டுமல்ல இந்தியாவின் சிறந்த நண்பர் எனவும் கூறினார். தொடர்...

காங்கிரஸ் மேதாவி சசி தரூரின் பொய்யான டிவிட்டர்

Image
காங்கிரஸ் மேதாவி சசி தரூரின் பொய்யான டிவிட்டர் சசி தரூர் ஒரு அவசர குடுக்கை. மோடியின் ‘ஹவ்டி மோடி’ உற்சாக வரவேற்பை மட்டம் தட்டம் வேண்டும் என்ற ஆர்வக் கோளாரினால், ‘மோடியின் யு.எஸ். ஹூஸ்டன் கூட்டம் என்ன பிரமாதம்? அது 1954-ல் நேரு, இந்தியா காந்தி (இந்திரா காந்தி என்பதற்குப் பதில் இந்தியா காந்தி என்று பதவிவிட்டுள்ளார் அந்த அதி மேதாவி! அநியாய அவசர புத்தியின் விளைவு!) யு.எஸ்.சில் 1954-லேயே பெரும் உற்சாக வரவேற்பைப் பெற்றுள்ளார். அதில் சிறப்பான இந்திய அமெரிக்க வாழ் கூட்டமோ, பிரம்மாண்ட விளம்பர உத்தியோ இல்லாமல் தாங்களாகவே கூடிய கூட்டம்!’ என்று மார் தட்டி உள்ளார். இந்திரா என்பதை இந்தியா என்று தவறாகக் குறிப்பிட்டது மட்டு மின்றி அந்தப் படம் 1954-ல் யு.எஸ்.சில் எடுத்த படம் என்றும் குறிப்பிட்டுள்ளார். உண்மையில் அந்தப் படம் 1956-ல் மாஸ்கோவில் எடுத்த படம் என்பது உறுதியாகி உள்ளது. தவறை உணர்ந்த சசி தரூர் பெருந்தன்மையாக தன் தவறை ஒத்துக்கொள்ளாமல், கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்ட வில்லை என்ற தன்மையில் அவர் டிவிட் செய்தது இதோ உங்கள் ...

ஹவ்டி மோடி! கோடி புகழ் மழையில் நனைந்த பாரதம்!

Image
ஹவ்டி மோடி! கோடி புகழ் மழையில் நனைந்த பாரதம்! அமெரிக்காவின் ஹீஸ்டனில் மோடியுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க வாழ் இந்தியர்கள் என்.ஆர்.ஜி. கால்பந்து மைதானத்தில் ஏற்பாடு செய்திருந்த ‘ஹவ்டி மோடி’ நிகழ்ச்சியில் – சுமார் 50,000 பேர்களுக்கு மேல் கூடிய இருந்த அந்த பிரம்மாண்ட கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியது ஒரு சரித்திர நிகழ்ச்சியாக உருவெடுத்துள்ளது. மோடி – டிரம்ப் உரைக்கு முன், இரண்டு மணி நேரம் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. 400 கலைஞர்கள் 27 குழுக்களாக கலை நிகழ்ச்சியினை நடத்தி உள்ளனர். மேலும் ‘நமோ சிற்றுண்டி’ – முழு சைவ உணவுப் பொட்டலம் – அந்த அரங்கில் வழங்கப்பட்டது. அமெரிக்காவின், டெக்சாஸ் மாகாணம் மற்றும் தென் மேற்கு மாகாணங்களில் வசிக்கும் மக்கள் ஒருவரை ஒருவர் பார்க்கும் போது, ‘எப்படி இருக்கிறீர்கள்?’ என நலம் விசாரிப்பதற்கு, ‘ஹவ்டி’ என்பர். அதாவது ‘ஹலோ .. ஹவ் டூ யு டூ’ என்ற ஆங்கில வாக்கியத்தின் சுருக்கமே, ‘ஹவ்டி’ என்ற வார்த்தை. இதன் படி, ஹீஸ்டன் வரும் மோடியை, நலமா என விசாரிக்கும் விதமாகவே, நிகழ்ச்சிக்கு ‘ஹவ்டி மோடி’ எனபெயர் வைத்திருந்தார்கள். ‘கனவுகளை பகிரு...

நவராத்திரி உற்சவம் – 29-ம் தேதி செப்டம்பர் முதல் 7-ம் தேதி அக்டோபர் வரை

Image
நவராத்திரி உற்சவம் – 29-ம் தேதி செப்டம்பர் முதல் 7-ம் தேதி அக்டோபர் வரை சிவனை வழிபட ஒரு ராத்திரி சிவராத்திரி இது மாசி மாதம் மகா சிவராத்திரியாக கொண்டாடுகின்றோம். சக்தியை வழிபட ஒன்பது ராத்திரி நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. நவம் என்பது ஒன்பது. அம்பாளுக்குரிய பண்டிகைகள் எவ்வளவோ இருந்தாலும், அவற்றுள் முக்கியமானது புரட்டாசி மாதம் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் இந்த நவராத்திரி விழாதான். இது அம்மனுக்கு 9 நாட்கள் கொண்டாடப்படும் பிரம்மோற்சவம். இந்த ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதி நவராத்திரி பண்டிகை தொடங்குகிறது அக்டோபர் 8-ஆம் விஜயதசமியுடன் பண்டிகை முடிகிறது. நவராத்திரி பண்டிகை நான்கு காலங்களில் கொண்டாடப்படுகிறது. ஆனி மாதம் அமாவசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் வாராஹி நவராத்திரி. புரட்டாசி மாதம் அமாவசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் சாரதா நவராத்திரி. தை மாதம் அமாவசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் சியாமளா நவராத்திரி. பங்குனி மாதம் அமாவசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் வசந்த நவராத்திரி. இந்த நான்கு நவரா...

செப்டம்பர் 10, 2019 – இந்திய சரித்திரத்தில் நிகழ்ந்த அதிசயம்

Image
செப்டம்பர் 10, 2019 – இந்திய சரித்திரத்தில் நிகழ்ந்த அதிசயம் ஜஸ்டின் வெல்பி என்பவர் காண்டர்பரியின் ஆர்ச் பிஷப். அவர் செப்டம்பர் 10-ம் தேதி அமிர்தசரத்தில் உள்ள ஜாலியன் வாலா பாக்கிற்கு வருகை தந்தார். அந்த வளாகத்திற்கு உள்ளே வந்த கிருஸ்துவர்களுக்கு தலைமைப் பொறுப்பில் உள்ள பிஷப், யாரும் எதிர்பார்க்காத நிலையில் சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து, அங்கு 100 வருடங்களுக்கு மேல் நிகழ்ந்த ஜெனரல் டையரின் குண்டுகளுக்கு பலியான நூற்றுக்கணக்கான அப்பாவி பஞ்சாப் மக்களுக்காக மன்னிப்புக் கோரிப் பிரார்த்தனை செய்துள்ளார். ஆர்ச் பிஷப் அப்போது உருக்கமாக உரை ஆற்றி உள்ளார்: “நான் இங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டிற்கு தனிப்பட்ட முறையில் மிகவும் வருந்துகிறேன். இங்கிலாந்து ராஜ்யம், அதன் அரசாங்கம் அல்லது அதன் சரித்திரம் ஆகியவைகளை முன்னிறுத்தி மன்னிப்புக் கேட்கும் தகுதியை நான் பெற்றிருக்கவில்லை. ஆனால், இந்த கொடுமையான பயங்கரமான செய்கைக்கு நான் என் தனிப்பட்ட முறையில் மிகவும் வருந்துகிறேன். நான் எனது தேசத்திற்காகப் பேசவில்லை. ஆனால், நான் சார்ந்த ஆங்கிலிக...

மனக் கவலை ஆக்கம்: ஜயந்திநாதன் – நவம்பர் 2008 எழுதியது

Image
உருவகக் கதை ஒரு பெரிய தனவந்தருக்கு மனத்தில் எப்போதும் மனக் கவலை. “எவ்வளவு பணம் என்னிடம் இருந்தும், மன நிம்மதியே இல்லையே!” என்று ஏங்கினார். அந்தச் சமயத்தில் ஒரு மஹான் அவரது ஊருக்கு வருகை தந்தார். அவரிடம் சென்று தம் மனக் கவலை தீர வழி கேட்க முனைந்தார். “ஸ்வாமி, என் மனம் கவலையால் மூழ்கி, என் வாழ்வே பாழாகி விட்டது. அதைப் போக்க ஒரு வழி சொல்லுங்கமள்” என்று தனவந்தர் மஹானை வேண்டினார். மஹான் தமது சிஷ்யர்கள் ஒருவரை அழைத்து, ஒரு பாத்திரம், ஒரு சிறிய மரக் கட்டை, சிறிது மணல், சிறிது தண்ணீர் கொண்டு வரும்படிப் பணித்தார். “பாத்திரம் தான் உமது மனது. மரக்கட்டை தான் உமது கவலை. மணல் தான் உமது அஞ்ஞானம் அதாவது அறியாமை. அறியாமை அதிகமாக, அதிகமாக மரக்கட்டை அமுக்கப் பட்டு, மனத்தின் ஆழத்தில் சென்று விடுகின்றது. மரக்கட்டை வெளியே வர இதில் வழியே இல்லை’ என்று மஹான் விளக்கினார். பாத்திரத்தில் உள்ள மண்ணை விலக்கி விட்டு, அந்த சிறிய கட்டையை மீண்டும் அப்பாத்திரத்தில் வைத்தார். இப்போது மணலுக்குப் பதில் தண்ணீரை விட்டார். கட்டை தண்ணீருக்கு மேலே வந்து மிதக்க ஆரம்பித்தது. “தண்ணீரான ஞானத...