திண்ணைக் கச்சேரி

திண்ணைக் கச்சேரி பங்குபெறுவோர்: வாசகர், விமரிசகர், நிருபர், பொதுஜனம் விமரிசகர்: மம்தா ஆடிய ஆட்டம் இந்திய அரசியலில் ஒரு இருண்ட பக்கமாக சரித்திரம் படைத்து விட்டது. சாரதா சிட் பண்டின் ஊழலை சி.பி.யை விசாரிக்க விடாமல் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் தர்ணா செய்தது மேற்கு வங்க ஓட்டர்களை கதி கலங்க வைத்து விட்டது. நிருபர்: தர்ணா மட்டுமா நடத்தினார் மம்தா? மிகவும் கீழ்த்தரமாக வார்த்தைகளை வெறி பிடித்த பேயாக கத்தித் தீர்த்தார். பிரதம மந்திரி என்றும் பார்க்காமல் மோடியை – ‘மோடி என்னைப் பொருத்த வரையில் பிரதமரே இல்லை – தேர்தலுக்குப் பிறகு தேர்வாகும் பிரதமருடன் தான் என் உறவு – Expiry PM – மோடியின் 56 இஞ்ச் மார்பால் இந்த லோக் சபா தேர்தலில் அது இரட்டிப்பாக 112 ஆக கிடைப்பதே அதிகம். – அடிக்கடி சுட வைத்த டீ உடம்புக்கு நல்லதல்ல – மோடியின் டீயும் அந்த வைகைதான். ஆகையால் தான் சாய்வாலா மோடி இப்போது சவுக்கிதார் மோடியாக வலம் வருகிறார். – காந்தியைக் கொன்ற கோட்சே கட்சியைத் சேர்ந்தவர் மோடி – இவைகள் எல்லாம் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய தேசத்தின் பிரதம மந்திரியைக் குறித்த மிகவும் கொடூரனமான தூஷணைகள். ‘எனக்கு ஜெ...