திண்ணைக் கச்சேரி பங்குபெறுவோர்: வாசகர், விமரிசகர், நிருபர், பொதுஜனம்
திண்ணைக் கச்சேரி
பங்குபெறுவோர்: வாசகர், விமரிசகர், நிருபர், பொதுஜனம்
நிருபர்:
ராஹுல் இப்போது கனவு உலகத்தில் சஞ்சரிக்க ஆரம்பித்து விட்டார் என்றே தோன்றுகிறது. அதுவும்
குஜராத்திற்குச் சென்றாலே அவரது கனவு விண்ணுலகத்தில் சஞ்சரிக்க அவரது பேச்சும் அதை
ஒட்டியே ஓடுகிறது. சமீபத்தில் குஜராத்தில் ஒரு கூட்டத்தில் பேசுகிறார். ஹிந்தியில்
பேசினார். அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இதன் வீடியோவைப் பார்த்து ஊர்ஜிதம்
செய்த பிறகு தான் இதை எழுதுகிறேன். ஆகையால் இதன் உண்மைத் தன்மையை ஒருவரும் சந்தேகிக்க
வேண்டாம். ‘குஜராத்தில் உள்ள உங்கள் நிலத்தினால் எந்தவிதமான பிரயோசனமும் இல்லை. நான்
சந்திரனில் இயந்திரங்களை உழ அனுப்பி வைப்பேன். அங்கு நீங்கள் சந்திரனில் உருளைக்கிழங்கு
பயிர் செய்யலாம். நீங்கள் அங்கு பயிர் செய்த உருளைக்கிழக்கை குஜராத்தில் விற்பனை செய்வதற்கு
நான் உதவி செய்வேன்.’ என்பது தான் ராஹுலின் பேச்சு.
வாசகர்:
இது பட்ரோடா குருவின் தாக்கமாக இருக்கலாம். அந்த மா மேதை சமீபத்தில் சொன்னார்: ‘தேர்தல்
ஓட்டு இயந்திரம் ஒன்றை என்னிடம் ஒரு வருடம் கொடுங்கள். அதை நான் ஆராய்ந்து அதில் உள்ள
குறைகளைக் கண்டுபிடித்து விடுவேன்.’
பொதுஜனம்: தேர்தலில் தோற்பது நிச்சயம் என்பது தெரிந்த காங்கிரஸ் மற்றும்
எதிர்க் கட்சிகள் தங்கள் தோல்விகளுக்கு ஓட்டு மின் அணு இயந்திரங்களின் மேல் பழி போடுவதையே
வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இதைச் செவியுறும் ஓட்டர்கள் அந்தத் தலைவர்களை நம்பத் தயாராக
இல்லை.
விமரிசகர்:
பெங்கால் டைகர் டீடி ஒரு படி மேலே சென்று, தன் கட்சிக்கு பங்களாதேசத்தின் பிரபலங்களை
தேர்தல் பிரசாரங்களுக்கு வரவழத்து, வங்காளத்தில் ஓட்டு வேட்டை ஆடுகிறார். மேலும், அங்கு
வெளிப்படையாகவே டிடியின் மந்திரிகளில் சிலர் கள்ள ஓட்டு போடும் படி தங்கள் அடியாட்களை
அமர்த்தி செயல்பட்ட வீடியோக்களும் வங்காள மக்களை அதிர வைத்துள்ளது. இப்படிப்பட்டவர்
இந்தியாவின் பிரதமரானால், நாடு தாங்குமா? என்று அவர்கள் கவலைப் படவைத்துள்ளது.
நிருபர்:
உருளைக்கிழங்கு உற்பத்தி போல் ராஹுலை ஆட்டிப் படைக்கும் ஒரு ஆயுதம் ‘நியா’ என்ற 25
கோடி ஏழை மக்களுக்கு மாதம் தோறும் ரூபாய் 6000 இலவச பணம் கொடுக்கும் திட்டமாகும். இது
ராஹுலின் கருத்துப்படி ‘இந்தியாவின் ஏழ்மைக்கு ஏவப்படும் பிரம்மாஸ்திரம் – அதாவது சர்ஜிகல்
ஸ்ரைக்’ என்று தன் முதுகைத் தானே தட்டிக் கொண்டு சுயபாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார்.
இது இந்தியாவை வெனின்சுலா நாட்டைப் போல் சோம்பேறி நாடாகவும், பொருளாதாரத்தைச் சிதைக்கும்
கொள்கையாகவும் போய்விடும் என்று பல பொருளாதார நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் எப்படியும் இந்தத் தேர்தலில் தோற்பது நிச்சயம் என்பதால், அரசியல் காரணங்களுக்காக
திசை திருப்பும் நோக்கத்துடன் நியாவை – எந்தவிதமான நியாயமும் இல்லாத அநியாயக் கொள்கையை
மக்கள் முன் வைக்கிறார் ராஹுல். இந்த ஒரு காரணத்திற்காகவே ராஹுல் காங்கிரசை இரண்டு
இலக்க சீட்டுகளுக்கு மேல் கிடைக்காமல் மக்கள் தோற்கடிக்க வேண்டும்.
செய்யும் போது அந்த மேடையில் தனது மகன் – மகள் (மிராயா & ரைஹான்)
இருவரையும் அங்கு கூடியிருந்த மக்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டு, நேரு
குடும்பத்தின்
ஐந்தாம் தலைமுறையையும் அரசியலுக்கு வருவதற்கு
முன்னோட்டம் தொடங்கியாகி விட்டது. கடவுளின்
தேசத்தில் முஸ்லீம்கள்
அதிகம் உள்ள வயநாட்டில் அவர்களது அரசியல் பயணத்திற்கு அடிக்கல்
நாட்டப்பட்டுள்ளது.
செக்குலர் கட்சியின் முதன் மந்திரி குமாரசாமி ‘குடும்ப வாரிசு அரசியல்
தான்
நாட்டிற்கு நல்லது’ என்று வெளிப்படையாகவே சொல்லி விட்டார். ஆகையால்,
இனி எந்தப்
பதவியும் – குறிப்பாக பிரதம மந்திரி, முதன் மந்திரிகள் –
வாரிசுகளுக்குத் தான் கொடுக்கப்பட
வேண்டும் – என்பதை வெளிப்படையாகவே
சொல்லி விட்டார்.
பொதுஜனம்:
ராஹுலின் மிக நீண்ட பேட்டி இந்து தினசரியில் சமீபத்தில் பிரசுரமாகியது. அதில் மீண்டும்
‘மோடி அனில் அம்பானிக்கும் 30,000 கோடி ரபேல் ஆப்செட் காண்ட்ராக்ட் மூலம் கொடுத்துள்ளார்’
என்று மீண்டும் குற்றச் சாட்டை முன் வைக்கிறார். ஒரு பிரபலமான தினசரி, உண்மைக்கு முன்னுரிமை
அளிக்கும் தினசரி என்ற பாரம்பரிய மிக்க பத்திரிகை, பத்திரிகை படிப்பவர்களின் பிரதிநிதியாக
எடிட்டரை நியமித்து தர்மத்தைக் காக்கிறோம் என்று மார்தட்டும் பத்திரிகை, ஒரு பிரதம
மந்திரியைக் குற்றம் சாட்டும் போது, பேட்டி கொடுப்பவர் வெளிப்படையாகவே தெரியும் உண்மைக்குப்
புறம்பாக ’30,000 கோடி’ என்று குறிப்பிடும் போது, ராஹுலிடம் ‘மொத்த ஆப்செட் தொகையான
30,000 கோடியும் அனில் அம்பானிக்கு ரபேல் கொடுத்ததா?’ என்று விளக்கம் கேட்டிருக்க வேண்டுமல்லவா?
ஏனென்றால், நாட்டின் பிரதம மந்திரியைக் குறித்துச் சொல்வதால் இதைச் சொல்லத் தோன்றுகிறது.
உண்மையை வெளிக்கொனற ஹிந்துப் பத்திரிகை தவறி விட்டதைத் தான் இது காட்டுகிறது. ஏனென்றால்,
இது ஏதோ சாதாரண விஷயம் அல்ல. இந்தியாவின் ராணுவம் பற்றியது. இதில் மோடி ஊழல் செய்துள்ளாரா?
என்றும் ஹிந்துப் பத்திரிகையின் நிருபர் ராஹுலைக் கேட்டுப் பதிலைப் பதிவு செய்திருக்க
வேண்டும். இதிலும் ஹிந்துப் பத்திரிகை தவறி விட்டது.
வாசகர்:
ராஹுலின் அமேதி தொகுதியின் வேட்பாளர் பத்திரத்தில் தவறுகள் இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு
எழுப்பட்டுள்ளது. அதற்கு விளக்கம் கேட்ட போது ராஹுலின் வக்கீல் கால அவகாசம் கேட்டு,
வருகிற 22-ம் தேதி வரை தேர்தல் அதிகாரியின் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால்
இப்போது ராஹுலின் வேட்பு மனு அனுமதிக்கப்பட்டுள்ளது.
பொதுஜனம்: Backops Limited கம்பனியில் டைரக்டராக பொறுப்பில் இருந்ததாகவும்,
அதில் ராஹுல் காந்தி ஒரு பிரிட்டிஷ் பிரஜை என்றும், அவரது விலாசம் ‘2 Frognal Way
London NW3 6XE’ குறிப்பிட்டுள்ளதால் அவர் எப்போது எதற்காக யு.கே. குடியுரிமை பெற்றார்
என்பதையும், பிறகு அதை ரத்து செய்தாரா என்பதையும் விளக்க வேண்டும். மேலும், இந்திய
குடியுரிமையுடன் யு.கே. குடியுரிமையையும் – இரட்டை குடியுரிமை – கொண்டிருந்தாரா? என்ற
சந்தேகத்தையும் நிவர்த்தி செய்யும் நிலையில் ராஹுல் இருக்கிறார்.
வாசகர்:
இதுவரை 2004, 2009, 2014 & 2019 ஆகிய வருடங்களில் பிரமாணப் பத்திரிகையை தேர்தலில்
நிற்பதற்காகத் தாக்கல் செய்துள்ளார் ராஹுல். அதில் ராஹுலின் படிப்புச் சான்றிதழ்களிலும்,
யு.கே. சொத்து விவரங்களிலும் அந்தப் பத்திரங்களில் முன்னுக்குப் பின் முறனான தகவல்களை
அளித்திருப்பதாக குற்றச் சாட்டு தேர்தல் அதிகரியின் வைக்கப்பட்டு தீர்ப்புக்குக் காத்திருக்கிறது.
இது ராஹுலின் நம்பகத் தன்மையையும், ஏமாற்றும் மனப்பான்மையும் காட்டுவதாக இருப்பது நிரூபணமானால்,
அவரது அரசியல் வாழ்க்கையே இருண்டு போய்விட வாய்ப்புள்ளது.
விமரிசகர்: கெடுவான் கேடு நினைப்பான் என்பார்கள். ராஹுலின் அரசியல் வாழ்க்கை
இப்படிக் கேள்விக் குறியானால், அதுவே மற்றவர்களுக்கு ஒரு நல்ல பாடமாக அமையும். அது
பாரத நாட்டிற்கு நன்மையே.
பொதுஜனம்:
தனிமனிதரின் நேர்மை அரசியலுக்கு மிக முக்கியமானாலும், அது இந்திய அரசியலில் காணப்படவில்லை.
அந்த நிலை இந்த ராஹுலின் பொய்த் தகவல்களால் சீரானால், அது பாரத தேசத்திற்கே விமேசனமான
நேரம் என்று அனைவரும் கொண்டாடலாம். காலம் தான் அதை நிரூபிக்கும்.
Comments