விகாரி தமிழ் புத்தாண்டு – 14-04-2019 – ஞாயிற்றுக் கிழமை
விகாரி தமிழ் புத்தாண்டு
கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறக்கிறது.
இந்த தமிழ்ப் புத்தாண்டு
பிறக்கும் நேரத்தில் இந்தியாவில் லோக் சபா தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு நிலையான
அரசு அமைய எல்லாம் வல்ல இறைவனை வாய்மை வேண்டுகிறது.
இந்திய மக்கள்
அனைவரின் வீடுகளிலும் சுபீட்சம் நிலை பெற ஆண்டவனை மனம் உருகி வாய்மை பிரார்த்திக்கிறது.
உழைப்போம், உயர்வோம்
– என்ற தாரக மந்திரம் தான் ஒரு நாட்டை உயர்த்தும் என்பது மறுக்க முடியாத உண்மை. சோம்பலுக்கு
இடம் கொடுக்காமல், நேர்மையைக் கடைப்பிடித்து, தர்மமான வழியினைத் தேர்வு செய்து, நம்மையும்
நாட்டையும் உலக அளவில் உன்னத நிலையை அடைய இந்த தமிழ்ப் புத்தாண்டில் உறுதி பூணுவோம்.
Comments