அசோசியேட் ஜர்னல் லிமிடெட் - நேஷனல் ஹாரால்ட் - யங்க் இந்தியன் - இந்திய நேஷனல் காங்கிரஸ் விவகாரம்
இந்த விவகாரங்களைப் பற்றித் தெரிய
பல இருப்பினும், கீழ்க்கண்ட மூன்று முக்கிய கட்டுரைகள்/பேட்டி உதவும்.
1. சட்ட
நுணுக்கங்கள்,
சட்ட விதிமுறை மீறல்களின் விவரங்கள், தண்டனை விளக்கங்கள்
ஆகியவைகள் இதில் அறியலாம். - இணைப்பு.
இந்த இணைப்புகளில் சொல்லப்பட்ட
விவரங்களின் முக்கியமானவைகளைப் பற்றி எந்தவிதமான உள் நோக்கமும் இன்றி, வாய்மை ஒன்றையே குறிக்கோளாகக் கொன்டு இந்த கட்டுரையை எழுதத் துணிந்துள்ளேன்.
இது ஏதோ புதிதாக எழுப்பிய குற்றப்
பத்திரிகை அல்ல.
கடந்த பல வருடங்களாக சுப்பிரமணிய ஸ்வாமியால் வெளிப்படையாகக் குற்றம்
சாட்டப்பட்ட ஒன்று தான். ‘நான் வெளிப்படையாகக் குற்றம் சாட்டுகிறேன்.
என் மேல் மான நஷ்ட வழக்கோ அல்லது வேறு வழக்கோ காங்கிரஸ் என் மேல் போட்டால்,
நான் அதன் மூலம் என் குற்றச்
சாட்டுகளை ஆதாரத்துடன் கோர்ட்டில் சமர்ப்பிக்க ஏதுவாக இருக்கும்’ என்று சொன்னாலும், காங்கிரஸ், “தைரியமிருந்தால், கோர்ட்டில் கேஸ் போடவும். அதை நாங்கள் எதிர்கொள்வோம்’ என்று கடந்த ஆண்டுகளாகச்
சொன்னதில் பேரில், சுப்பிரமணிய ஸ்வாமி இந்த நேஷனல் ஹரால்ட் வழக்கைப்
போட்டு, அதனால் டெல்லி கோர்ட் காங்கிரஸ் மற்றும் யங்க் இந்தியன்
கம்பனியின் சொந்தக் காரர்கள் - மற்றும் டைரக்டர்களை கோர்ட்டில்
ஆகஸ்ட் 7-ம் தேதி ஆஜராகும் படி உத்திரவு பிறப்பித்துள்ளது.
சோனியா காந்தி, ராகுல் காந்தி, மோதிலால் வோரா, ஆஸ்கார் பெர்ணாண்டஸ், சுமன் துபே, சாம் பிட்ரோடா ஆகியவர்கள் இந்த கோர்ட் சம்மனில்
குறிப்பிடப்பெற்றவர்கள்.
இதை ஒட்டி, ‘காங்கிரஸ் கட்சி ஆதாயம் தேடும் முறையில் தனது பணத்தை அசோசியேட் ஜர்னல் லிமிடெட்
என்ற அமைப்பிற்கு பொருளுதவி செய்து, லாபம் சம்பாதிக்கும் துறையில்
இறங்கி உள்ளது. ஆகையால், அது வழங்கிய ரூபாய்
90 கோடி வட்டி இல்லாக் கடனுக்கு வருமான வரி செலுத்த வேண்டும்’
என்று நோட்டீஸை வருமான வரி அலுவலகம் அனுப்பி உள்ளது. ‘இது ஒரு பழிவாங்கும் படலம்’ என்று சோனியா காந்தி குற்றம்
சாட்டி உள்ளார்.
இப்பொழுது இந்த குற்றச் சாட்டின்
பின்னணியைச் சற்று அறிந்து கொள்வோம்.
இது ஒரு கிரிமினல் குற்றச் சாட்டு. இது தனிநபர் சாட்டிய குற்றப் பத்திரிகை. இது எந்தவிதமான
போலீஸ் ஆய்வு இன்றி டெல்லி கிரிமினல் கோர்ட்டில் போடப்பட்ட வழக்கு. இதில் மேலோட்டமாக குற்றத்தை ஆராய்ந்து, பிறகு அதில் உண்மை
இருக்குமென்று தோன்றிய பின், மேற்கொண்டு விசாரிக்க கோர்ட் சம்மன் அளிக்கலாம். இந்த வழக்கில்
குற்றம் சாட்டப்பட்ட சோனியா மற்றும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள 5 பேர்களுடன் யங் இந்தியன் என்ற டிரஸ்ட் கம்பனி ஆகியவர்களுக்கு கோர்ட் சம்மன்
அளித்துள்ளதால், இது சுப்பிரமணிய ஸ்வாமிக்கு முதல் வெற்றியாகும்.
விசாரணை முடிவில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலையோ
அல்லது தண்டனையோ அளிக்கப்படலாம். ஆனால், விசாரணையின் போது, ஆஜராகி, கைது
செய்யப்படுவதைத் தவிர்க்கலாம்.
இந்த வழக்கைச் சமாளிக்க குற்றம்
சாட்டப்பட்டவர்களுக்கு மூன்று வழிகள் உள்ளன:
1. வழக்கை எதிர்கொள்ளல்.
2. வழக்கை தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றத்தை
நாடுதல்.
3. வழக்கை மாற்றி அமைக்க உயர் நீதி மன்றத்தை
நாடுதல்.
குற்றம் ஆதாரமில்லாமல், பழி நோக்கத்துடன் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் வழக்கு போடப்பட்டது என்று நிரூபிக்கப்பட்டால்
ஒழிய, வழக்கை தள்ளுபடி அல்லது மறுபரிசீலனை என்பது கடினம்.
முதல் மேலோட்ட ஆய்வில், கோர்ட் சம்மன் அளித்திருப்பதால், வழக்கை எதிர்கொண்டு,
தங்கள் நிலையை கோர்ட்டுக்கு விளக்குவதுதான் காங்கிரசுக்கு உள்ள ஒரே நேர்வழி
என்று படுகிறது.
குற்றங்களின் சாரம் இதோ:
1.
காங்கிரஸ் கட்சி லாப நோக்குக் கொண்ட
அசோசியேட் ஜர்னல் லிமிடட் என்ற கம்பனிக்கு - இது தான் நேஷனல்
ஹரால்ட் என்ற ஜவஹர்லால் நேருவால் ஆரம்பிக்கப் பட்ட பத்திரிகையை வெளியிட்ட கம்பனி
- ரூபாய் 90 கோடி வரை வட்டி இல்லாக் கடன் கொடுத்தது.
அரசியல் கட்சியின் கொள்கைக்கும், மக்கள் பிரதிநிதிச்
சட்ட விதிமுறைகளுக்கும் இந்தச் செயல் முரணாகும். மேலும்,
இதற்கு காங்கிரஸ் கட்சியின் ஒப்புதல் பெறப்படவில்லை. இதனால், காங்கிரஸ் கட்சி அரசியல் கட்சி என்ற அந்தஸ்தை
இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
2.
யங் இந்தியன் என்ற டிரஸ்ட் கம்பனி
ரூபாய் 5 லட்சம் மூலதனத்தில் நவம்பர் 2010 அன்று சோனியா, ராகுல் - 76%, மோதிலால்
& ஆஸ்கார் பெர்ணாண்டஸ் - 24% முதலீடு செய்து
தொடங்கப்பட்டது. அடுத்த
மாதமே - டிசம்பர் 2010 அன்றே, மேலே குறிப்பிட்ட அசோசியட் ஜர்னல் லிமிடட் வட்டி இல்லாக் கடனான ரூபாய்
90 கோடி யங் இந்தியாவிற்கு மாற்றப்பட்டது. இதற்கு யங் இந்தியா வெறும்
50 லட்சம் மட்டும் அசோசியட் ஜர்னலுக்கு கொடுத்தது. மீதிப் பணமான ரூபாய் 89.75
கோடியை காங்கிரஸ் கட்சி அசோசியட் ஜர்னலின் வாராக் கடனாக மதிப்பிட்டு
முழுத் தள்ளுபடி செய்து, அந்த நஷ்டத்தை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்
கொண்டது. இதில் என்ன தவறு? என்று தான் மேலோட்டமாகப்
பார்த்தால் தெரியும். அசோசியட் ஜர்னல் லிமிடட் ஏதோ ஒரு திவாலாகும்
- எந்தவிதமான சொத்தும் இல்லாத கம்பனியாக இருந்தால், இதில் - விதிமுறை மீறல் இருப்பினும், நிதிமீறல் இல்லை என்று கணிக்கலாம். ஆனால், அந்த ஏ.ஜி.எல். என்ற அசோசியட் ஜர்னல் லிமிடட் கம்பனியின் சொத்துக்களின் தோராய மதிப்பு ரூபாய்
2000 கோடியாகும். அதன் டெல்லியில் உள்ள ஹரால்ட்
ஹவுஸ் கட்டிடத்தின் சிலபகுதிகளின் மாத வாடகை மட்டுமே ரூபாய் 1 கோடியாகும். இந்த நிறுவனத்திற்கு டெல்லி, பம்பாய், லக்னோ என்று பல நகரங்களில் அசையாத சொத்துக்கள்
இருக்கின்றன. ஆகையால் யங் இந்தியாவின் மூலம் சோனியா-ராகுல் ஆகியவர்கள் ஏ.ஜே.எல்.
சொத்துக்களை காங்கிரஸ் கட்சியின் நிதி மூலம் கபளீகரம் செய்யும் முயற்சி
என்ற குற்றம் எழுகிறது. இதில் யங் இந்தியன் கம்பனியின் உண்மை
நிதி நிலை இதோ: யங் இந்தியாவின் நிதி அறிக்கை - நவம்பர் 2010 - லிருந்து மார்ச் 2012 வரை - மொத்த வரவு: வெறும் ரூபாய்
800 மட்டுமே. மொத்தச் செலவு: ரூபாய் 69.79 லட்சம். மொத்த நஷ்டம்:
ரூபாய் 69.78 லட்சம். இந்த
நிதி நிலை உள்ள திவாலாகும் யங் இந்தியாதான் ஏ.ஜி.எல். என்ற ரூபாய் 2000 கோடி அசையாத
சொத்துக்கள் உள்ள கம்பனியைக் காப்பாற்றியதாம்.
3.
மோதிலால் வோரா ‘ஏ.ஜி.எல். கம்பனி சொத்து மதிப்பில்லாதது, ஆகையால் அதனால் காங்கிரஸ்
கட்சியின் வட்டியில்லாக் கடனான ரூபாய் 90 கோடிக் கடனை அடைக்க
முடியவில்லை’ என்று தெரிவித்துள்ளார். மோதிலால்
வோரா - சுமன் துபே - சாம் பிட்ரோடா ஆகியவர்களுடன்
கூட்டாக ஏ.ஜி.எல். கம்பனியின் 99% ஆதிக்கத்தையும் சொத்துக்களையும் யங் இந்தியன்
கம்பனிக்கு மாற்ற உதவி உள்ளனர். ஏ.ஜி.எல். சொத்துக்களே காங்கிரஸ் கட்சியிடமிருந்து பெற்ற கடனான
90 கோடி ரூபாயை அடைக்க போதுமானதாக இருப்பினும், சொத்துக்களை அபரிக்கும் நோக்குடன் இவர்களின் செயல்பாடுகள் இருக்கின்றன.
4.
அசோசியேட் ஜர்னல் லிமிடெட் என்ற கம்பனி நேஷனல் ஹரால்ட் என்ற பத்திரிகைக்காக
ஜவர்ஹர்லால் நேருவால் உருவாக்கப்பட்டதாகும். அந்தப் பத்திரிகையைப்
பற்றிக் குறிப்பிடும் போது நேரு, ‘எந்த நிலையிலும் நேஷனல் ஹரால்ட்
பத்திரிகையை மூட அனுமதிக்க மாட்டேன். என் அபிமான சொந்த பங்களாவான ஆனந்த பவன் வீட்டைக்
கூட விற்று, இந்தப் பத்திரிகையை நடத்துவேன்’ என்று சொல்லி இருக்கிறார். ஆனால், தற்போதுள்ள காங்கிரஸ் அதன் சொத்துக்களை அடைவதிலேயே கவனமாகி, பத்திரிகையை நடத்துவதில் எந்த முயற்சியும் இதுவரை எடுக்க வில்லை. அந்தப் பத்திரிகை 2008 ஆண்டு முதலிருந்தே நின்று விட்டது.
ஆனால், ஏ.ஜே.எல். கம்பனியில் முதல் முதலாக ரூபாய் 89 லட்சம் முதலீடு செய்தவர்களின் எண்ணிக்கை 1000 ஷேர்ஹோல்டர்கள்.
உண்மையிலேயே அவர்களுக்குத் தான் இந்தக் கம்பனியின் சொத்துக்களில் பாத்தியதை
உண்டு. ஆனால், அதை யங் இந்தியா மூலம் கபளிகரம்
செய்து, முதல் முதலீட்டார்களை ஏமாற்றிய குற்றம் காங்கிரஸ் கட்சி
சுமக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதில் உள்ள முக்கிய அம்சம்
என்னவென்றால், இந்த ஷேர் சொந்தக் காரர்களின் அனுமதி இன்றி,
ஏ.ஜே.எல். டைரக்டர்களான மோதிலால் வோரா, ஆஸ்கார் பெர்ணாண்டஸ்.
சுமன் துபே, சாம் பிட்ரோடா ஆகியவர்களின் ஒப்புதலின்
அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது மிகவும் தவறான செயலாகும்.
இனி மிகவும் மதிக்கப்படக் கூடிய
காந்தியவாதியும்,
காந்தியின் செகரட்ரியாகப் பணிபுரிந்த 82 வயதான
வி.கல்யாணம் பேட்டியிலிருந்து முக்கிய கருத்துக்களுடன் இந்தக்
கட்டுரையைப் பூர்த்தி செய்கிறேன்.
v
நேஷனல் ஹரால்டு (ஆங்கில நாளிதழ்), குலாம் ஆலாஸ் (உருது நாளிதழ்), நேஷனல் ஹரால்ட் வீக்லி ஆகிய பத்திரிகைகளை வெளியிடும் அசோசியேட்
ஜர்னல் லிமிடட் ( ஏ.ஜே.எல்) என்ற கம்பனியை ரூபாய் 50 லட்சத்திற்கு
சோனியா - ராகுல் காங்கிரஸ் பணத்தை வைத்து ஏமாற்றி வாங்கியது மிகவும்
சட்டத்திற்குப் புறம்பானது. இந்தச் செயலுக்காக தேர்தல் கமிஷன்
காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
v
நேஷனல் ஹரால்ட் விவகாரத்தால்,
காங்கிரஸ் பாரம்பரிய புனிதமான நிலையிலிருந்து நழுவிவிட்டது. மஹாத்மா காந்தி, ராஜாஜி, ராஜேந்திர
பிரசாத், சர்தார் வல்லபாய் படேல், ஆசார்ய
க்ரிபலானி, ஜெயபிரகாஷ் நாராயண் போன்றவர்களின் வரிசையில் சோனியா
காந்தி-ராகுல் காந்தி, திக் விஜய் சிங்,
அஹமத் படேல், ஆஸ்கார் பெர்ணாண்டஸ், ப.சிதம்பரம் போன்றவர்களை காங்கிரஸ் பெற்றதிலிருந்தே அந்தக்
கட்சி எவ்வளவு கீழ்த்தரமான நிலைக்கு வீழ்ந்துள்ளது என்பது விளங்கும்.
v
காங்கிரஸ் கட்சி சுயநலவாதிகள்,
சட்டத்தை மதிக்காத பேர்கள், அராஜக வாதிகள்,
தேச விரோதிகள், ஊழல் புரிபவர்கள் என்று சோனியாவின்
தலைமையில் ஒன்று சேர்ந்து கூட்டமாகச் செயல்படுகிறார்கள். இன்னும்
காங்கிரஸ் 25 வருடங்கள் தோல்வியைத் தழுவினாலும், சோனியா தலைமையில் தான் காங்கிரஸ் இருக்கும் நிலை காணப்படுகிறது.
v
காந்திஜி தமது படுகொலை நாளான 30-01-1948-க்கு ஒரு வாரத்திற்கு முன்பு எனக்கு ஒரு குறிப்பை எழுதும்படிப் பணித்தார்.
“காங்கிரசைக் கலைத்து விட வேண்டும். ஒரு புதிய
கட்சியை பிறகு ஆரம்பிக்க வேண்டும். அதை ‘லோக் சேவக் சங்கம்’ என்று பெயரிட வேண்டும். அதில் ‘செய்யக் கூடியவைகள், செய்யக்
கூடாதவைகள்’ என்ற பட்டியலையும் சொன்னார். ‘ஒவ்வொருவர் கண்களிலிருந்து வழியும் ஒவ்வொரு கண்ணீர்த்துளிகளையும் துடைப்பதும்
இந்தக் கட்சியின் பிரதான நோக்கம்’ என்று சொன்னார். மதுவிலக்கு, குதிரைப் பந்தயம் ஒழிப்பு, லாட்டரி ஒழிப்பு என்பவைகளை உடனே அமுல்படுத்த வேண்டும் என்பதை அந்தக் கட்சியின்
குறிக்கோளாக அமைய வேண்டும் என்று விரும்பினார்.
v
இந்திய நேஷனல் காங்கிரஸ் இப்போது இத்தாலி
நேஷனல் காங்கிரஸாகப் போய்விட்டது. எனது பிரார்த்தனை எல்லாம் இந்த
போலிக் காந்திகளிலிடமிருந்து நாடு கூடிய சீக்கிரம் விடுதலை அடைய வேண்டும்.
‘இந்திரா, ராஜிவ், சோனியா, பிரியங்கா,
ராகுல் - ஆகியவர்கள் நேருவின் வாரிசாக இருக்கும்
போது, ஏன் அவர்கள் தங்கள் பெயர்களுக்குப் பின்னால் நேரு என்பதைப்
போட்டுக் கொள்ளாமல் காந்திஜியின் பெயரைப் போட்டு ஏதோ தாங்கள் காந்திஜியின் வாரிசுகள்
என்று இந்தியர்களை ஏன் ஏமாற்றுகிறார்கள்?’ என்ற எதிர்ப்புக் குரல்கள்
இப்போது பொது மக்களிடம் எழ ஆரம்பித்து விட்டன.
‘அச்சே தின் ஆயேங்கே’
- என்ற முழக்கம் வெற்றி அடைந்தது இந்தியாவின் நல்ல எதிர்காலத்திற்கான
அறிகுறிகள்.
Comments