ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியிலிருந்து நர்ஸ்கள் மீட்பு
இது மிகவும் சிக்கலான ஒரு பிரச்சனையாக
உருவெடுத்து விட்ட ஒன்றாகும். இந்திய நர்ஸ்களை தீவிரவாதிகள் இராக்கின் சில நகரங்களை ஆக்கிரமித்து,
அவைகளைத் தம்முடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, ‘இஸ்லாமிய இராக் - சிரியா’ என்று
பிரஹடனம் செய்து தேர்ந்தெடுக்கப்பட்ட இராக் அரசாங்கத்துடன் யுத்தம் செய்ய தயார் நிலையில்
இருந்தனர். ஆகையால், யாருடன் பேச்சு வார்த்தைகள்
நடத்த வேண்டும் என்பதிலும் ஒரு தெளிவான நிலை இல்லை. இந்திய அரசாங்கம்
சிறிது தவறு இழைத்தாலும், அதன் விளைவுகள் மிகவும் பயங்கரமாக இருக்கும்
என்பதும் ஒரு பெரிய சவாலாகும். இதை எல்லாம் சரியாகக் கணித்து,
வெற்றி கண்ட மோடி அரசைப் பாராட்ட வேண்டியது அவசியமாகும்.
‘மோடி அரசு நர்ஸ்களை மீட்பதில்
காலம் கடத்துகிறது’, ‘மோடி அரசு செயல் சரி இல்லை’, ‘நர்ஸ்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தவில்லை’ - என்று
பலவிதமாக மீடியாக்களும், பத்திரிகைகளும் செய்திகளை ஒவ்வொரு நாளும்
வெளியிட்ட வண்ணம் தான் இருந்தன. ஆனால், மோடி அரசின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், வெளிநாட்டு
மந்திரியான சுஷ்மா சுவாராஜ் மற்றும் கேரள முதன் மந்திரியும், கேரள அரசு அதிகாரிகளும் ஒருங்கிணைந்து, அவ்வப்போது உள்ள
நிலைமையினை உடனுக்குடன் பகிர்ந்து கொண்டது மத்திய-மாநில அரசுகளின்
அரசியலுக்கு அப்பாற்பட்ட நல்ல அணுகுமுறையாகப் பலராலும் பார்க்கப்பட்டுப் போற்றப் பட்டதை
இங்கு குறிப்பிட வேண்டும்.
கடைசி நிமிடங்கள் வரை நர்ஸ்களை
எங்கு,
எப்போது விடுவிக்கப்படுவார்கள் என்பது தெரிவிக்கப்படவில்லை. அவர்களை இந்தியாவிற்கு அழைத்துவர அனுப்பப்பட்ட ஏர்-இந்திய
விமானம் ‘எர்பில்’ என்ற இடத்தில் இறங்க
அனுமதி பாக்தாத் அரசாங்கம் எந்தக் காரணமும் சொல்லாமல் தீடீரென்று மறுத்து விட்டது.
இதனால் இந்திய விமானம் மீண்டும் இந்தியாவிற்கே திரும்ப வேண்டிய நிலை
வந்ததை அறிந்த மோடி அரசு, மேல்மட்ட அளவில் தொடர்பு கொண்டு,
இரான் வானில் பறப்பதற்கு டெஹ்ரானின் அனுமதியையும் பெற்று, திட்ட மிட்டபடி எர்பில் விமான தளத்தில் தரையிறங்கியது. நர்ஸ்களுடன் 130 தொழிலாளர்களில் 40 பேர்கள் திடீரென்று கடைசி நேரத்தில் ‘தங்களுக்கு கிடைக்க
வேண்டிய சம்பளத்தைக் கொடுத்தால் தான், ப்ளேனில் ஏறுவோம்’
என்று தகராறு செய்தனர். அவர்களை ஒருவழியாகச் சமாதனம்
செய்து பயணம் செய்ய வைத்தனர். போர் நிகழும் இடங்களில் ஏற்படும்
ஒரு நிமிட கால தாமங்கள் கூட ஆபத்தாக முடியும் என்பதை யோசித்துப் பார்க்கும் போதுதான்
இந்த வெற்றிகரமான செயலின் தன்மை தெரியவரும்.
எர்பில் விமான நிலைய அதிகாரிகள்
ஏர் இந்திய விமானத்திற்கு ஆயில் நிறப்ப மறுத்து விட்டனர். திரும்பவும் மேல் மட்ட தொடர்புகளால், 2 டன் குறைவாக ஆயில்
நிறப்ப ஒப்புக் கொள்ளப்பட்டதால், ‘ஒன்றும் இல்லாததற்கு,
இது ஒரு ஆறுதல்’ என்று அதை ஏற்றுக் கொண்டனர் ஏர்
இந்தியாவின் பைலட். ஆனால், தங்களுக்கு ரொக்கப்பணமாக
கொடுத்தால் தான் ஆயில் நிறப்ப முடியும் என்று அடம்பிடிக்கவும், மீண்டும் தொடர்புகள் - பேச்சுக்கள் - பிறகு ஒப்புதல் என்று முடிவாகி, ஒரு வழியாக விமானம் ஈராக்
எர்பிலை விட்டு வானில் பறந்தது.
ஏ.ஐ.160 - போயிங்க 777-200 எல்.ஆர்.ஆகாய விமானம் - 238 பேர்களைச்
சுமக்கும் வசதி பெற்றது - இந்த முக்கிய நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் நர்ஸ்களுடன் 187 பிரயாணிகள் பயணம் செய்துள்ளார்கள்.
இவர்கள் அனைவரும் இராக்கிலிருந்து இந்தியாவிற்குப் பாதுகாப்பாகக் கொண்டு
வரப்பட்டவர்களாகும். கேரளாவில் 56 நர்ஸ்கள்,
ஹைதராபாத்தில் 78 பேர்கள், டெல்லியில் 53 பேர்கள் - என்று
அவர்கள் பிளேனிலிருந்து இறக்கப்பட்டார்கள்.
உணவு, பிரயாணிகளுக்குக் கொடுக்க வேண்டிய அட்டைகள், சாமான்களை
எடைபோடுதல் - அடையாள அட்டை கட்டல் - போன்ற
பலவிதமான காரியங்களுக்கு சுமார் 23 ஏர் - இந்தியா தொழிலாளிகளையும் கூட்டிக் கொண்டு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
ஏனென்றால், எர்பில்லிலுடன் இந்த வசதிக்கு அனுமதி
இல்லை. இதில் குறிப்பிட வேண்டிய அம்சம் என்னெவென்றால்,
ஏர் இந்தியாவிற்கு இந்திய அரசாங்கம் குறைந்த நேரம் கொடுத்து,
இதை அவர்கள் ஒரு சவாலாக ஏற்று ஒத்துழைப்பு நல்கியதையும் நாம் பாராட்ட
வேண்டும்.
வெளிநாட்டு மந்திரி
அலுவலக அறிவிப்பு அதிகாரியான சயட் அக்பருதீன் அவ்வப்போது மீடியா மூலம் நிலைமையை விளக்கிய
விதம் மிகவும் அருமை. அவர் விடுத்த வேண்டுகோள்களை மீடியா மீறினாலும்,
பாதிக்கப்பட்டவர்கள் முழு ஒத்துழைப்புக் கொடுததை இந்தத் தருணத்தில் பாராட்ட
வேண்டும். சுஷ்மா சுவராஜும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை
நேரில் டெல்லியில் சந்தித்து, ஆவன செய்வதாக வாக்களித்தும்,
செய்தவைகளைத் தெரியப்படுத்தியும் செயல்பட்டது மக்களின் ஏகோபித்த பாராட்டுக்களைப்
பெற்றுத் தந்தது.
ஈராக் விவகாரம் தோல்வியில்
முடிய வேண்டும் என்று வெளிப்படையாகவே எதிர்பார்த்த அரசியல் கட்சிகளும் உண்டு.
ஆனால், பாதிக்கப்பட்ட மாநில முதல் மந்திரிகள் மந்திய
அரசுடன் ஒற்றுமையாகச் செயல்பட்டதால் தான், இந்தக் கடினமான பிரச்சனையில்
வெற்றி காண முடிந்தது என்பதையும் நினைவு கூற வேண்டும்.
Comments