விநாயகர் சதுர்த்தி - 27 - 8 - 2025 - புதன் கிழமை
விநாயகர் சதுர்த்தி என்பது விநாயகரின் பிறந்த நாளாகும். விநாயகரை முழு முதற் கடவுள் என்று துதிக்கப்படுகிறார். எந்த சுப காரியங்களையும் விநாயகரை முதன் முதலில் பூஜை செய்த பிறகு தான் ஆரம்பிப்பார்கள். ஏனென்றால் விநாயகரை விக்ன விநாயகர் - துன்பங்களைத் துடைப்பவர் என்று துதிக்கப்படுகிறார்.
பார்வதி தேவி களிமண் சிற்பமாக உருவாக்கிய சிறுவன், சிவபெருமானால் தலையில் யானை முகம் பொருத்தப்பட்டு விநாயகராக உருவெடுத்தார் என்பது பாரம்பரிய புராணக் கதை.
பொது இடங்களில் பிள்ளையார் உருவச் சிலைகளை வைத்து வழிபடும் வழக்கம் முதலில் மஹாராஸ்டிராவில் சுதந்திர வீர ர் பால கங்காதர திலக மஹாராஜ் அவர்களால் தொடங்கப்பட்டு, அது இந்தியாவில் பல இடங்களில் பரவி இன்று அந்த விழா பொது மக்கள் விழாவாக மாறி, கொண்டாடப்படுகிறது. ஹிந்து மதம் பலப்பட நட த்தப்படும் விழாவாகும் இது. இந்த விழாவின் போது பிள்ளையார் சிலைகளை பூஜை செய்து, அவற்றை இறுதியில் நீரில் கரைத்துவிடும் வழக்கம் உண்டு. இது தீமைகளை நீக்கி புதுமை மற்றும் தேசிய ஒற்றுமையை குறிக்கிறது.
பிள்ளையாருக்கு பிடித்த வகையான மோதகம், லட்டு போன்ற இனிப்புகளை தயாரித்து பக்தர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்.
விநாயகரை வணங்கி வாய்மை அன்பர்கள் அனைவரும் அருள் பெறுவார்களாக.
Comments