மோடியின் 12-வது இந்திய தேச சுதந்திர தின விழாவில் நிகழ்த்திய எழிச்சி உரை
இந்தியா பல வெளி நாட்டு - உள் நாட்டு சவல்களை எதிர்கொள்ள வேண்டிய ஒரு மிகவும் கடினமான கால கட்டத்தில் இருக்கிறது.
வலுவான பொருளாதாரம், அதி நவீன பாதுகாப்பு, திறமையான வெளியுறவுக் கொள்கை, பலமான நிதி நிலை என்று இந்தியாவை மோடி அரசு முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில் 'மோடி என் உற்ற நண்பர்' என்று உறவு கொண்டாடி அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஆதரவுகளை மோடியின் அன்பினால் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபரான பிறகு மனம் மாறி மோடிக்கு எதிராக செயல்பட ஆரம்பித்துள்ளார்.
'நான் தான் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த சண்டையை நிறுத்தினேன்' என்று சுய தம்பட்டம் அடித்தார். ஒரு தரம் இல்லை; பல தரம் பொது மேடைகளில் முழக்க மிட்டார்.
'மோடி தன் பெயரை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்க வேண்டும்' என்று பகிரங்கமாகவும் உலக அரங்கில் முழங்கினார் டிரம்ப்.
இதை எல்லாம் விட 'இந்தியா ரஷ்யாவிடமிருந்து சுத்திகரிக்கப்படாத கச்சா எண்ணையை வாங்கக் கூடாது. வாங்கினால் சுங்க வரியை அதிகரிப்பேன்' என்று சொல்லி இந்தியாவை - குறிப்பாக மோடியை குறிவைத்து பயமுறித்தினார். ஆனால் அதை எல்லாம் மோடி 'போர் நிறுத்தம் இரு நாடுகளுக்கு மிடையே நடந்த பேச்சு வார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவு. வேறு எந்த நாட்டிற்கும் இதில் இடம் இல்லை. வர்த்தகம் என்பது எங்கள் பொருளாதார கொள்கை முடிவு. அதையும் அன்னிய நாட்டினர் தலையிட அனுமதியோம். மேலும் அமெரிக்கா - பல ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணை இறக்குமதி செய்கின்றன' என்ற விளக்கம் அமெரிக்க அதிபர் டிரம்பை மேலும் கோபப் பட வைத்து, அதனால் டிரம்ப் இந்தியாவின் இறக்குமதி சரக்குகளுக்கு 50 % அளவில் சுங்கவரி விதித்து விட்டார்.
இதை மிகவும் சாணக்கிய சாதுரியமாகத் தான் எந்த விதமான கோப தாபங்களுக்கும் ஆளாகாமல் எதிர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அதில் முதல் கட்டமாக P-8I போஸிடான் போர் விமான யுஎஸ். ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது இந்திய அரசு. இதன் மூலம் இந்திய கடற்படைக்காக, அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடமிருந்து 6 P-8I போஸிடான் கடல் ரோந்து விமானங்களை வாங்குவதற்கான $3.6 பில்லியன் மதிப்பிலான ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள செயல், அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திற்கு மிகப்பெரிய வருவாய் இழப்பாகும்.
இந்திய ராணுவத்தை மேலும் வலுப்படுத்த உள்நாட்டு உற்பத்தி (மேக் இன் இந்தியா) திட்டம் கை கொடுக்கும். இதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு பதிலாக, உள்நாட்டு நிறுவனங்கள் மூலமாக தேவையான ராணுவ தளவாடங்களை உருவாக்கவும், மேம்படுத்தவும் இந்தியா கவனம் செலுத்துகிறது.
அமெரிக்காவின் இந்த அதிக சுங்க வரியைப் பார்த்துப் பயப்படாமல் இந்தியாவின் "ஆத்மநிர்பார் பாரத்" (தற்சார்பு இந்தியா) மற்றும் "மேக் இன் இந்தியா" திட்டங்கள் துரிதமாக செயல்பட பல நடவடிக்கைகளை மோடி அரசு மேற்கொண்டுள்ளது. நீண்டகால அடிப்படையில், இது இந்தியாவின் பாதுகாப்புத் துறையை உள்நாட்டிலேயே வலுப்படுத்த உதவும்.
அமெரிக்க சந்தையை மறந்து மற்ற நாடுகளுடனான வர்த்தகத்தை மேம்படுத்தி இந்த சுங்க வரியால் ஏற்படக்க்கூடிய வர்த்தகப் பாதிப்பை சரிக்கட்ட ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதில் ஒன்று தான் சமீபத்தில் யுகேயுடன் செய்து கொண்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreement - FTA).
இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதோடு, பொருளாதார வளர்ச்சியையும், வேலைவாய்ப்புகளையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால்,
இந்தியா
இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்யும் 99% பொருட்களுக்கு சுங்க வரி முற்றிலுமாக
நீக்கப்பட்டுள்ளது. இது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பை
உருவாக்குகிறது.
அதே போல் இங்கிலாந்தில்
தயாரிக்கப்பட்ட கார்கள், ஸ்காட்ச் விஸ்கி, குளிர்பானங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களுக்கான சுங்க
வரி இந்தியாவில் குறைக்கப்படும்.
இந்த ஒப்பந்தம் மூலம் ஆண்டுக்கு ₹120 பில்லியன் மதிப்புள்ள இருதரப்பு வர்த்தகத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இரு நாடுகளிலும் புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும்.
யுகே தேசத்துடன், பிரேசில், மெக்சிகோ, கனடா, பிரான்ஸ் ஆகிய நாடுகளும் இந்தியாவுடன் இப்படிப்பட்ட 'வின் வின்' (இரு தரப்பினருக்கும் வெற்றி) தடையற்ற ஒப்பந்தங்கள் செய்ய விருப்பங்களைத் தெரிவித்துள்ளது மேலும் டிரம்பை கோபப்பட வைத்துள்ளது.
அமெரிக்காவிலும் டிரம்பின் இந்திய எதிர்ப்பை அமெரிக்கர்கள் எதிர்த்துக் குரல் கொடுக்கிறார்கள். அது ஒரு பெரும் போராட்டமாக எழும் நிலையும் உருவாகலாம்.
அமெரிக்காவில் பல இந்திய வம்சாவளியினர் வாழ்கின்றனர். ஆகையால் அவர்களின் வாழ்வும் பாழாகாமல் மிகவும் கவனமாக கையாள வேண்டிய பிரச்சனை என்பதையும் மோடி அரசு கவனத்தில் கொண்டு சாணக்கிய வழியில் செயல்படவே விழைகின்றது.
இந்தப் பின்னணியில் தான் மோடியின் 103 நிமிட நீண்ட 12-வது இந்திய சுதந்திர தின உரையைக் கணிக்க வேண்டும்.
மோடி உரையின் முக்கிய அம்சங்கள்:
v தீவிரவாதிகளுக்கும்
அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பவர்களுக்கும் இனிமேல் எந்த வித்தியாசமும்
பார்க்கப்படாது. அணுசக்தி அச்சுறுத்தல்களை இந்தியா ஒருபோதும்
பொறுத்துக்கொள்ளாது. எந்தவொரு தவறான அண்டை நாட்டின் நடவடிக்கைகளுக்கும் தகுந்த
பதிலடி கொடுக்கப்படும். இந்திய ராணுவத்திற்கு தீவிரவாத தாக்குதல்களுக்குப் பதிலடி
கொடுக்க முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.
v 2035-க்குள், முக்கிய தேசிய
இடங்களைப் பாதுகாக்கும் வகையில், உள்நாட்டிலேயே உருவாக்கப்படும் "சுதர்சன்
சக்ரா" (Sudarshan Chakra) என்ற புதிய பாதுகாப்பு அமைப்பை இந்தியா உருவாக்கும்.
v நாட்டின்
பொருளாதார வளர்ச்சியை மேலும் மேம்படுத்த, "அடுத்த தலைமுறை
சீர்திருத்தங்களுக்காக" (Next-Generation Reforms) ஒரு பணிக்குழு
அமைக்கப்படும்.
v ஜிஎஸ்டி (GST)
சட்டங்களில்
பல சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படும். இது தினசரி பயன்படுத்தப்படும் பொருட்களின்
மீதான வரிச்சுமையைக் குறைக்கும். இது தீபாவளிக்கான ஒரு பரிசாக இருக்கும்.
v "மேக் இன்
இந்தியா" (Make in India) திட்டத்தின் கீழ், உள்நாட்டிலேயே
செமிகண்டக்டர்கள் உற்பத்தி செய்வதற்கான முயற்சிகள் துரிதப்படுத்தப் பட்டுள்ளன. ஆகையால் இந்தியாவிலேயே
தயாரிக்கப்பட்ட முதல் சிப் இந்த ஆண்டின் இறுதியில் வெளிவரும்.
v இளைஞர்களுக்கு
வேலைவாய்ப்பை அதிகரிக்க ₹1 லட்சம் கோடி மதிப்புள்ள புதிய வேலைவாய்ப்புத் திட்டம்
தொடங்கப்படும்.
v பாகிஸ்தானுடன் முன்பு செய்து கொண்ட சிந்து நதி நீர் ஒப்பந்தம் (Indus Water Treaty) இந்தியாவிற்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். "இரத்தமும் தண்ணீரும் ஒன்றாகப் பாய" வழிவகுத்த அந்த சட்டம் ரத்தாகும். இந்தியாவிற்குச் சேர வேண்டிய நீர் இந்திய விவசாயிகளுக்கு மட்டுமே சொந்தமானது என்பதை அந்த சட்டம் உறுதி அளிக்கும் முறையில் இருக்க வேண்டும்.
இன்றைய காங்கிரஸ் சோனியா - ராகுல் - பிரயங்கா என்ற முக்கோண தலைவர்களின்
கட்டுப்பாட்டில் கட்டுண்டு ஒளியிழந்து செயலிழந்து புகழிழந்து கடந்த 10
ஆண்டுகளுக்கும் மேலே செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சி ஆலன் ஆக்டேவியன் ஹியூம் (Allan Octavian Hume) என்ற ஆங்கிலேயரால் "பாதுகாப்பு
வால்வு கோட்பாடு" (Safety Valve Theory) - என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்பது சரித்திரம். இந்தக் கோட்பாடு ஆங்கில ஆட்சியில் மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தி - 1857 சிப்பாய் கலகத்திற்குப்
பிறகு, பிரிட்டிஷ் ஆட்சியின் மீது இந்திய மக்களிடையே கடும் அதிருப்தி - ஆங்கில அரசுக்கு எதிராக மீண்டும் ஒரு பெரிய
கிளர்ச்சியாக வெடிக்கலாம் என ஹியூம் பயந்த காரணத்தால் ஆங்கில அரசுக்கு பாதுகாப்பு அரணாக காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கினார் என்பது தான் ஒரு உண்மையான வரலாறாகும். பிறகு பல மாற்றங்கள் ஏற்பட்டு அந்த கட்சி பிரிட்டிஷ் ஆட்சியை அசைத்து எதிர்த்து சுதந்திரத்தைப் பெற்றுத் தந்துள்ளது. ஆனால் இன்று மீண்டும் மோடியையே ஒரு அன்னியராக உருவகித்து சோனியா என்ற இத்தாலியப் பெண்மணி தனது மகன் - மகள் ஆகியவர்களுடன் சேர்ந்து அதே 'பாதுகாப்பு வால்வு கோட்பாடு'
என்ற ஹியூமின் திட்டத்தை உண்மையான தேச பக்தி - தேசிய சிந்தனை இன்றி இந்தியாவின் எதிரிகளான பாகிஸ்தானுக்கு ஆதரவாக எந்த விதமான கூச்சமோ, தலைகுனிவோ, மனச் சஞ்சலமோ இல்லாமல் மூவர் அணி காங்கிரசை தவறாக வழி நடத்துகிறது. இந்த மூவர் அணி ஹியூம் அணியாகி மோடியின் தேசிய சிந்தனை கொண்ட மக்கள் ஆதரவு பெற்று தேர்வான அரசை வீழ்த்த எதையும் செய்யத் துணிந்துள்ளனர்.
இப்போது தேர்தல் ஆணையத்தை சாடுகிறது. அதை மோடி ஆணையம் என்று குற்றம் சாட்டுகிறது.
உச்ச நீதி மன்றமே தேர்தல் ஆணையத்திற்கு வழிகாட்ட அதன்படி தேர்தல் ஆணையமும் செயல்படத் துவங்கினாலும், மூவர் அணியின் ஒப்பாரிகள் அடங்குவதாக இல்லை. இது பாரதத்தின் சாபக் கேடு.
ஆங்கிலேயரால் ஆங்கிலேய அரசுக்கு ஒரு அரணாக உருவான காங்கிரஸ் கட்சி - சுதந்திரம் கிடைத்த பிறகு அதைக் கலைத்து விடச் சொன்ன மஹான் காந்தியின் அறிவுரையை ஏற்காமல் தொடர்ந்து தேர்தலில் 'சுதந்திரம் வாங்கிக் கொடுத்த கட்சி; ஓட்டுப் போடுங்கள்' என்று மக்கள் மத்தியில் பிரசாரம் செய்து வெற்றி பெற்ற கட்சி - இப்போது ஓட்டு இயந்திரம் சரியில்லை; ஓட்டர்களின் பெயர் பட்டியல் தவறு - என்று மக்களைக் குழப்பி தேர்தலையே கேலிக் கூத்தாக ஆக்க முயல்கிறார்கள். அவர்களின் கட்சி மந்திரி ஒருவர் 'கர்னாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது தயாரித்த ஓட்டர் பட்டியல் தவறு என்றால் அதற்கு காங்கிரஸ் தான் பொறுப்பு ஏற்க வேண்டும்' என்று சொன்னதால் மூவர் அணிக்கு எதிராகக் குரல் கொடுத்த ஒரே காரணத்தால் அவர் மந்திரி பதவி பறிக்கப்பட்டுள்ளது.
ராஹூல் தலைமையில் செயல்படும் இந்த மூவர் அணி வெகு விரைவில் அவர்களின் 'வாட்டர் லூ' காட்சிகள் நிகழும் என்ற சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன.
பாரத மாதாவின் தவப் புதல்வரான மோடி பாரத தேசத்தை மேலும் மேலும் வலுவான தேசமாக உருவாக்க ஆண்டவன் அருள வேண்டும் என்று வாய்மை பிரார்த்திக்கிறது.
வந்தே மாதரம் !
பாரத மாதாவுக்கு ஜே !
Comments