ரக்ஷா பந்தன் 09 - 08 - 2025
ரக்ஷா பந்தன் என்பது சமஸ்கிருத வார்த்தைகளான 'ரக்ஷா' (பாதுகாப்பு) மற்றும் 'பந்தன்' (பிணைப்பு) ஆகியவற்றிலிருந்து உருவானதாகும். இதன் பொருள் "பாதுகாப்புப் பிணைப்பு" ஆகும். இந்த இந்துப் பண்டிகை, சகோதரிக்கும் சகோதரனுக்கும் இடையிலான அன்பையும், சகோதரிக்கும் தனது சகோதரனுக்கும் தன் பாதுகாப்பிற்கும் அளிக்கும் உறுதிமொழியையும் குறிக்கிறது. அந்த உறுதி மொழியை வெளிப்படுத்தும் விதமாக சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் மணிக்கட்டில் 'ராக்கி' எனப்படும் புனித நூலைக் கட்டி, அவர்களின் நீண்ட ஆயுளையும், மகிழ்ச்சியையும், வளத்தையும் வேண்டிப் பிரார்த்தனை செய்வார்கள். இதற்குப் பதிலாக, சகோதரர்கள் தங்கள் சகோதரிகளை எப்போதும் பாதுகாப்பதாக உறுதியளித்து, அவர்களுக்குப் பரிசுகளை வழங்குவார்கள்.
ரக்ஷா பந்தன் பண்டிகை வட இந்தியாவில் மிகவும் பிரபலமானது என்றாலும், தற்போது இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.
ரக் க்ஷாபந்தன் பண்டிகை உருவான கதை
கிருஷ்ணர் - திரெளபதி சகோதர உணர்வு:
போர்க்களத்தில் கிருஷ்ணருக்கு மணிக்கட்டில் ஏற்பட்ட காயத்தைப் பார்த்த திரெளபதி தன் புடவையின் ஒருபகுதியை கிழித்து, கிருஷ்ணரின் மணிக்கட்டில் கட்டினார். இந்த நிகழ்வு கிருஷ்ணரின் மனதைத் தொட்டது. அன்று முதல் திரெளபதியை தன் சகோதரியாக ஏற்றுக் கொண்டு, எந்த ஒரு சூழ்நிலையிலும் உன்னை கைவிட மாட்டேன், உன் பிரச்சினைகளிருந்து மீட்டு, உனக்கு கை கொடுப்பேன் என உறுதியளித்தார். அவரது உறுதிமொழியைக் காப்பாற்றும் விதமாக பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று, திரிதராஷ்டிரனின் நீதிமன்றத்தில் திரெளபதியின் துகிலுரிய முயன்றபோது, கிருஷ்ணர் நீண்ட புடவை அருளி அவரின் மானத்தைக் காத்தார்.
கிருஷ்ணரின் கையில் திரௌபதி புடவையைக் கிழித்துக் கட்டிய நிகழ்வை குறிக்கும்
விதமாக, ரக்ஷாபந்தன் விழாவில் ராகி என்னும் ரக்ஷையை சகோதரிகள் தங்கள் சகோதரனின்
மணிக்கட்டில் கட்டி கொண்டாடுவார்கள். கொண்டாடப்படுகிறது.
Comments