விடியல் அரசு - வீழும் அரசு

2011, 2016, 2021 ஆண்டுகளில் நடந்த தமிழக தேர்தல்களின் முடிவுகள் இதோ : 2011 தேர்தல் அதிமுக ஜெயலலிதா தலைமையில் நடந்தது . அப்போது கருணாநிதியின் அரசைத் தோற்கடித்து அதிமுக கட்சி மட்டுமே மொத்தமுள்ள 234 சட்ட மன்றத் தொகுதிகளில் 150 இடங்கள் + அதன் கூட்டணிக் கட்சிகள் 78 இடங்கள் என்று சரித்திரம் படைத்தது . ஆனால் திமுக 23 இடங்கள் + காங்கிரஸ் 5 இடங்கள் என்று மிகப் பெரும் தோல்வியைத் தழுவியது . 2016 ஆண்டு நடந்த அடுத்த தேர்தலிலும் ஜெயலலிதா மீண்டும் அதிமுக 134 இடங்களில் வென்று ( திமுக வென்ற இடங்கள் 89 இடங்கள் மட்டுமே ) அதே ஆண்டு மே 23 - ல் முதல்வரானார் . ஆனால் அவர் உடல் நலக் குறைவால் அதே ஆண்டு டிசம்பர் 5- ல் உயிர் இழக்க வழக்கம் போல் ஓ . பன்னீர் செல்வம் - பிறகு எடப்பாடி கே . பழனிச்சாமி ஆகியவர்கள் முதல்வராகப் பதவி ஏற்று ஆட்சி செய்தாலும் , அந்தக் கட்சி மூன்றாக உடைந்தது . பன்னீர் செல்வம் , எடப்பாடி , தினகரன் என்ற அளவில் அதிமுக பிளவு பட்டது . அடுத்த 2021 ஆண்டு நடந்த தேர்தலில் ஜெயலலிதா - கருணாநிதி இல்லாத முதல் தேர்தல் களமாகும் . அந்தத் தேதலில் ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணி ...