அண்ணாமலையை ஆதரிப்போம் – அரசு கட்டிலில் அமரவைப்போம்
காங்கிரஸின் தூய காமராஜரின் ஆட்சி பதவி இழந்து திராவிடர் கழகம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து தமிழக அரசியல் மிகவும் தரம் தாழ்ந்து, ஊழல் மலிந்து, தர்மம் சீர்குலைந்து தமிழக மக்கள் இந்த இழிவான ஆட்சிக்கு முடிவு கட்ட ஒரு உத்தமன் வந்து சீர் செய்ய மாட்டானா? என்று கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக காந்திருந்த தமிழகத்திற்கு தீய தீராவிட மாடல் ஒழியும் காலம் வந்து விட்டது என்று அண்ணாமலை அரசியல் களத்தில் குதித்த பிறகு நம்பிக்கை பிறந்துள்ளது.
திராவிடக்கழக வளர்ச்சியை மிகவும் மூர்க்கமாக காங்கிரசைவிட அப்போதையை கம்யூனிஸ்ட்
தலைவர்கள் ராமமூர்த்தி, ஜீவானந்தம் போன்றோர்கள் கூட்டங்கள் போட்டு எதிர்த்தார்கள்.
ஆனால் அந்த அவர்களின் கொள்கை வழி எதிர்ப்புகளை தங்களது திராவிடக் கொள்கைகளை பொது மக்கள்
மைத்தியில் வைக்காமல், ‘கம்யூனிஸ்ட் ஒரு பாப்பான் கட்சி .. ராமமூர்த்தி ஒரு நொண்டி,
ஜீவானந்தம் செவிடு .. “ என்று தனிப்பட்ட முறையில் தர்க்கம் செய்து, அடுக்கு மொழி –
ஆபாச மொழி – சபை இங்கிதம் சிறிதும் இல்லாத தாசித்தனமான மேடைப் பேச்சுக்கள் என்று தமிழக
அரசியல் 60 ஆண்டுகளுக்கு மேல் விமோசனம் கிடைக்காமல் தத்தளித்தை இங்கு நினைவு கூறவேண்டும்.
தீப் பிழம்பாக – தீயவைகளைச் சுட்டெருக்கும் தெய்வச் சுடராக திருவண்ணாமலையில்
கொளுவீற்றிருக்கும் அந்த தெய்வம் அண்ணாமலையே கண் திறந்து தமிழக அரசியலை தூய்மைப் படுத்த
தமது பெயர் கொண்ட அண்ணாமலை குப்புசாமியை ஆட்கொண்டுள்ளார் என்று தான் சொல்லத் தோன்றுகிறது.
விவேகானந்தரின் வீர முழக்கம், வல்லபாய் பட்டேலின் செயல் திறன், மஹாராஷ்ட்ர
வீர சிவாஜியின் எதிரியை எதிர்கொண்டு வெற்றி காணும் துணிச்சல், பிரச்சனைகளை அலசி தீர்வுகாண
தீரமாகச் செயல்படத் துடிக்கும் சுபாஷ் சந்திரபோஷ்
– ஆகியவர்களின் மறு அவதாரமாக அண்ணாமலையை தமிழக மக்களின் பெரும்பான்மையினர் ஆதரிக்க
முன் வந்துள்ளனர்.
கோலாகலகமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 28-ம் தேதி ஜூலை 2023 அன்று
புண்ணிய பூமியான ராமேஸ்வரத்தில் கொடி அசைத்து அண்ணாமலையின் என் மண் – என் மக்கள் புனிதப்
பயணத்தைத் தொடங்கி வைத்து, வீர உரையும் ஆற்றி அண்ணாமலைக்கு முழு சுதந்திரமும் கொடுத்துள்ளதாகத்
தான் தெரிகிறது.
இந்த அண்ணாமலையின் யாத்திரை அடுத்த வருடம் ஜனவரி 11-ம் தேதியில் முடிவடைய
இருக்கிறது. அப்போது தமிழக சட்ட மன்ற மொத்த முள்ள 234 தொகுதிகளும் அண்ணாமலையின் பயணத்தில்
பங்குபெற்றிருக்கும் என்று நம்பலாம்.
இது வரை அண்ணாமலைக்கு மக்களின் ஆதரவு அமோகமாக இருப்பதைக் கண்கூடாகப் பார்க்க
முடிகிறது.
எதிர்க்கட்சிகளை – குறிப்பாக ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தில்லுமுல்லுகளை
– டாஸ்மாக் ஆட்சியை – திமுக அமைச்சர்களின் ஊழல்களை புள்ளி விவரங்களோடு அந்தந்த தொகுதிகளிலிருந்து அம்பலப்படுத்தும்
விதம் அண்ணாமலையை ஒரு தனித் திறன் படைத்த அரசியல் வாதியாகக் காட்டுகிறது.
முன்பு சனாதன தர்மம் – ஆண்டாள் நாச்சியாரின் அவதூறுகள், கந்த சஷ்டிக் கவச
நிந்தனைகள் – ஆகியவைகளை பிஜேபி வெற்றிகரமாக எதிர்த்து தமிழக மக்களின் ஆன்மீக சிந்தனைகளைத்
தூண்டி அரசியல் ரீதியாக தங்களுக்கு ஆதரவு திரட்டினார்கள். ஆனால் இப்போதோ அரசியல் களத்தில்
இறங்கி நேரடியாக திமுக-வை எதிர்கொள்ள அண்ணாமலை தலைமையில் முடிவெடுத்துள்ளார்கள் என்று
தான் நினைக்க வேண்டும்.
ஒரு பிஜேபி கொடிக்கம்பம் திமுக அரசின் போலீஸ் படைகள் அகற்ற, அதை எதிர்க்கும்
முகமாக அண்ணாமலை ‘ஒரு கொடிக்கம்பத்திற்குப் பதில் அத்தனை சட்டமன்றத் தொகுதியிலும் ஒன்று
பாக்கி இல்லாமல் பத்தாயிரம் கொடிக்கம்பங்கள் நடப்படும்’ என்று சொல்லி செயலிலும் இறங்கியுள்ளார்.
அது மட்டுமல்ல. பிஜேபி கொடிக்கம்பம் அகற்றப்படும் போது தாக்கப்பட்ட பிஜேபி தொண்டர்
தலைமையில் அகற்றப்பட்ட அதே இடத்தில் பிஜேபியின் 10,000 -வது கொடிக்கம்பம் நாட்டப்படும்
என்றும் அண்ணாமலை பகிரங்கமாக மக்கள் மன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.
இதற்குத் தனியான தீரம், துணிச்சல், தன்னிட்சையாக முடிவெடுத்து முடித்துக்
காட்டும் செயல் திறன், அதற்கான தொண்டர் படை – ஆகியவைகளை உருவாக்கும் தலைமை இருக்க வேண்டும்.
அவைகள் அண்ணாமலையிடம் காண்கிறோம்.
ஆன்மீகத்தையும், சனாதன தர்மத்தையும் தமிழ் நாட்டில் திராவிட முன்னேற்றக்
கழகம் மிகவும் கீழ்த்தரமாக – உண்மைக்கு மாறாக மேடைகளில் பேசி வருவது கடந்த 60 ஆண்டுகளாக
நடக்கும் நிகழ்வாகும். அதற்கு இதுவரை அரசியல் ரீதியான சக்தி வாய்ந்த எதிர்ப்பு தமிழகத்தில்
உருவாகவில்லை என்பது தான் உண்மை.
ஆனால் அண்ணாமலை அரசியல் களம் கண்ட பிறகு ‘ஆன்மிக அரசியல் – சனாதன தர்மம்
பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய கொள்கை. அதற்கு ஹானி விளைவிக்கும் எந்த தமிழக அரசியல்
வாதியும் எங்களுக்கு எதிரி’ என்ற அளவில் சுவாமி விவேகானந்தர் போல் வீர முழக்கம் செய்வதைக்
கேட்கும் போது தமிழன்னை ஆனந்தத்தில் அண்ணாமலையை ஆசீர்வதிப்பதைக் காணமுடிகிறது.
திராவிட முன்னேற்றக் கழக இளவல் உதயநிதி ஸ்டாலின் – தமிழக அரசின் மந்திரி
– இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் – எல்லா மதங்களையும் மதிப்பேன் என்ற விதியை
வலியுறுத்தும் அந்தச் சட்டத்தின் கீழ் – பதவிப் பிராமணம் எடுத்துக் கொண்டவர் ‘சனாதன
தர்மத்தை எதிர்ப்பதோடு இல்லாமல், ஒழிப்பேன்’ என்று திராவிடக் கழக ‘சனாதன ஒழிப்பு மாநாடு’
கூட்டத்தில் முழங்கி உள்ளார்.
அதற்குக் கடும் கண்டனம் இந்தியா பூராவும் எழுந்ததற்குக் முழுக் காரணம்
தமிழ் நாட்டு பிஜேபி தலைவர் அண்ணாமலையின் எதிர்ப்புக் குரலால் என்றால் மிகையாகாது.
அதைத் தொடர்ந்து சமீபத்தில் புகழ்பெற்ற
வைணவ கோவிலின் ராஜகோபுரத்திற்கும் ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலைக்கும் இடையே
அமைக்கப்பட்டிருந்த மேடையில் இருந்து அங்கு கூடி இருந்த மக்கள் மைத்தியில் என் மண் – என் மக்கள்
– யாத்திரையின் போது ஏற்பாடு செய்த கூட்டத்தில் சனாதனத் தூதுவராக – ஆன்மீக ஆசானாக ஆற்றிய
உரை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்து விட்டது. இந்தக் கூட்டம் என் மண் – என் மக்கள்
யாத்திரையின் 56வது நாள் 100வது
சட்டமன்றத் தொகுதியாகும்.
அண்ணாமலையின் உரை:
“தமிழகத்தில்
பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால், அனைத்துக்
கோயில்களின் அருகிலும் உள்ள கடவுள் விரோதக் கருத்துகளை விளக்கும் சிலைகள், கொடிகள், பலகைகள்
அகற்றப்படும். அது மட்டுமல்ல, பாஜக
ஆட்சிக்கு வரும் நாளே இந்து சமய அறநிலையத்துறைக்கு (HR & CE) கடைசி நாளாகும்.
மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி
வெற்றி பெற்ற நாளில் இதுபோன்ற கொடிக்கம்பங்கள் அனைத்தும் வேரோடு பிடுங்கி
எறியப்பட்டு, கடவுள் இல்லை என்று கூறிய அனைவரின்
சிலைகளும் அகற்றப்பட்டு, அதற்குப் பதிலாக சுதந்திரப் போராட்ட
வீரர்களும், தமிழ்க் கவிஞருமான திருவள்ளுவரின் சிலைகள்
வைக்கப்படும்.
சனாதன தர்மம் அழிந்ததற்கு
மாநிலத்தின் அனைத்துக் கட்சிகளும் காரணம். தங்களை
இந்துக்களின் நண்பர்கள் என்று சொல்லிக் கொண்டால் கடவுள் இல்லை என்று பறைசாற்றும்
கொடிக் கம்பங்களுக்குக் கீழே உள்ள அனைத்துப் பலகைகளையும் அகற்ற பிற கட்சிகளும் முன் வரவேண்டும்.
ஒரு
முக்கியமான கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்து வெளியே வந்தவுடன் “கடவுள் இல்லவே இல்லை; கடவுளை கற்பித்தவன் முட்டாள்; கடவுளை பரப்புவன் அயோக்கியன்” என்ற வாக்கியங்கள் அடங்கிய சிலைகளைப்
பக்தர்கள் பார்க்கும் நிலை இனியும் நீடிக்க தமிழக மக்கள் தயாராக இல்லை.
2026-ல்
நீங்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு வாய்ப்பு கொடுத்து ஆட்சி கட்டிலில் அமர வைக்கும்
போது அந்த வாசகங்கள் அங்கே இருக்காது என்கிறோம்.
அப்ப
பெரியார் சிலையை என்ன செய்வீர்கள் என திமுக தலைவர்கள் கேட்கிறார்கள். பெரியார்
அவர்களைப் பொறுத்தவரை பெரியார் சிலை எங்கே இருக்க வேண்டுமோ அங்கே இருக்க வேண்டும்.
ஒரு பொது இடத்தில், எல்லா தலைவர்களும் எங்கே
இருக்கிறார்களோ எல்லா தலைவர்களுக்கும் கொடுக்கக் கூடிய கவுரவம் எல்லா
தலைவர்களுக்கும் இருக்கும். பொது இடத்தில் அந்த சிலைகள் இருக்கும். எந்த
சிலையையும் யாரும் சேதப்படுத்துவது கிடையாது. அந்த சிலைக்கு என்ன மரியாதை
கொடுக்கனுமோ அந்த மரியாதை பாரதிய ஜனதா கட்சி கொடுக்கும்.
எல்லா
தலைவர்களையும் அனைவரும் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை.
பெரியார் அவர்கள் இந்துமதத்துக்கு எதிராக
சொன்ன கருத்தை கோவிலுக்கு வெளியே வைக்கலாம் என அரசியல் கட்சிகள் சப்போர்ட்
செய்தால், பெரியார் அவர்கள்
கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக சொன்ன கருத்தை கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆபீசுக்கு வெளியே
வைக்கலாமா?
இவர்களுக்கு
ஒரு நியாயம்.. இந்துக் கோவில்களுக்கு ஒரு நியாயம் கிடையாது.
பெரியார் அவர்கள் மிகத் தெளிவாக
கம்யூனிஸ்ட் கட்சியை பற்றி சில கருத்துகளை சொல்லி இருக்கிறார். அதனை நான் சொல்ல
விரும்பவில்லை.
அதேபோல
திமுக பற்றி 'பக்கம் 21'-ல் சொன்னதை திமுக அலுவலகத்துக்கு வெளியே வைப்போம்.
காங்கிரஸ்
ஒழிக்கப்பட வேண்டும் என பெரியார் சொன்னதை காங்கிரஸ் அலுவலகத்துக்கு வெளியே
வைப்போம். அதை இந்த கட்சிகள் ஒப்புக் கொள்வார்களா?
அதே நேரத்தில் கோவிலுக்கு வெளியே, கோவிலுக்கு மனிதர்கள் செல்லக் கூடிய வழியில் கோவில்
கோபுரத்தின் 50, 100 மீட்டருக்குள் அந்த வாசகங்கள்
அகற்றப்பட வேண்டும் என்பது மக்கள் கருத்து.
பாரதிய
ஜனதா கட்சியைப் பொறுத்தவரை இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும்
கிறிஸ்தவர்களுக்கும் சமமாக இருக்கக் கூடிய கட்சி.
இந்த
வார்த்தைகளை ஒரு மசூதிக்கு வெளியே வைக்க கட்சிகள் ஒப்புக் கொள்வார்களா? தேவாலாயத்துக்கு வெளியே வைக்க ஒப்புக் கொள்வார்களா?
பக்தர்களை அவமதிக்கும் வாசகங்கள்
கொண்ட பெரியார் சிலைகள் கோவிலுக்கு வெளியே வேண்டாம் என்ற மக்கள்
கருத்தை நாங்கள் பிரதிபலிக்கிறோம். அதை எங்கள் அரசியல் பிரகடனம் வைக்கமாக
வைக்கிறோம். இதில் அரசியல் கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்.”
அரசியலில் தனக்கென பதவியை அடைய வேண்டும் என்ற குறுகிய நோக்கம் அண்ணாமலையிடம்
கிஞ்சித்தும் இல்லை. அது தான் அவரது பலம். எல்லோரையும் அணைத்துக் கொண்டு கொள்கையில்
ஹானி – தொய்வு பற்றிக் கவலைப்படாமல் அரசியல் செய்யும் நபர் இல்லை அண்ணாமலை.
அண்ணாமலையின் நோக்கம் பிஜேபி கட்சியை வளர்த்து, தமிழக ஆட்சிக் கட்டிலில்
அமர வைப்பது என்ற இலக்கில் தான் அண்ணாமலையின் பயணம் இருக்கிறது.
இதில் அண்ணாமலை பதிவி பெற்றாலும் பதவி பெறாவிட்டாலும் அதைப் பற்றி அண்ணாமலைக்குக்
கவலை இல்லை. ஆனால் முயன்று பிஜேபி ஆட்சியைக் கைப்பற்றும் போது அண்ணாமலைக்கு தமிழக அரசின்
முதல்வர் பதவியை பிஜேபி வழங்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. அது தான் தமிழக
மக்களின் விருப்பம்.
ஜெய் ஹோ ! அண்ணாமலை ஜி !
Comments