துரோணர் ஏகலைவனுக்கு இழைத்த பெரும் பிழை
1.
துரோணர் ஏகலைவனுக்கு இழைத்த பெரும் பிழை
துரோணரின் வாழ்க்கை ஒரு சோகக் கதையாகும். அவரது பிறப்பே விசித்திரமான
ஒன்று. அவரது இறப்பும் மிகவும் சோகமான ஒன்றாக அமைந்து விட்டது.
அவருக்கு தாயின் கற்பவாசம் இல்லாமலேயே துரோண் என்ற ஒரு பாத்திரத்தில்
பிறக்கும் நிலை உண்டாயிற்று.
துரோணரின் தந்தை பெயர் பரத்வாஜ மஹரிஷி. அவர் ஒரு நாள் வழக்கம் போல்
கங்கை நதியில் ஸ்நானம் செய்ய தமது சிஷ்யர்களுடன் சென்றார். அப்போது கிரிதாசி என்ற ஒரு
பேரழிகியான அப்சரஸ் கங்கை நதியில் குளித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, கட்டுப்படுத்த
முடியாத காம உணர்ச்சியின் காரணமாக ஜீவ விந்து வெளிப்பட அதை ஒரு பாத்திரத்தில் பாதுகாத்து
அதுவே ஒரு அற்புதக் குழந்தையாக ஜனித்தது. துரோண்
என்றால் பாத்திரம். ஆகையால் அதில் பிறந்ததால் துரோணர் என்று பெயர் பெற்றார்.
துரோணர் தமது இந்த அசாதாரணப் பிறப்பைப் பற்றி மிகவும் பெருமைப் பட்டு
அதை வெளிப்படுத்தி உள்ளார்.
அதே போல் துரோணரின் இறப்பும் சோகமான ஒன்றாகும்.
யுத்தகளத்தில் சிரஞ்சீத்துவ வரம் பெற்ற தன் அன்பு மகன் அஸ்வத்தாமன்
இறந்ததாக அறிவிக்கப்பட்ட தவறான செய்தியால் துக்கம் தாங்காமல் தமது ஆயுதங்களைத் துறந்து நிராயுத பாணியாய் சிங்கத்தின்
வால் பொரித்த கொடி பறக்கும் தேரிலிருந்து இறங்கி பூமியில் உட்கார்ந்து இருந்த போது,
திரெளபதியின் சகோதரர் திருஷ்டத்தும்மன் – பஞ்சால தேச அரச துருபதனின் மகன் – துரோணரின்
தலையைக் கொய்ய உயிர் துறக்கும் நிலை ஏற்பட்டது.
துரோணர் பிறந்த ஊர் இப்போதைய டெஹ்ராடூன் என்று சொல்லப்படுகிறது.
டெஹ்ரா – ட்ரோன் என்பது தான் திரிந்து டெஹ்ராடூன் என்று பெயர் மாறி உள்ளது. டெஹ்ரா
– ட்ரோன் என்றால் ஒரு களிமண் குடம் என்று பொருள். அதாவது ட்ரூண் – பாத்திரத்தில் ஜனத்தவர்
துரோணர் என்பதை இது குறிக்கிறது.
துரோணரின் பிறப்பு விவரங்கள் மஹாபாரத ஆதி பர்வாவில் உள்ள ஸ்மபவா
பர்வாவில் சொல்லப்பட்டுள்ளன. அந்த விவரங்களை வைசாம்பாயானா சொல்வதாக அமைந்துள்ளது.
துரோணரின் பால்யம் ஏழ்மையில் கழிந்தது. அவர் குருகுலத்தில் பாஞ்சால
யுவ ராஜாவான துருபதாவுடன் கல்வி கற்றார். அங்கு பலவிதமான யுத்தக் கலைகளைக் கற்றுத்
தேர்ந்தார்.
அப்போது துருபதன் பால்ய குருகுல மாணவனான துரோணரிடம் “நான் பாஞ்சாலத்தின்
அரசனாக ஆனவுடன் உனக்கு பாதி பாஞ்சலத்தைப் பிரித்துக் கொடுத்து அரசனாக்குவேன்” என்று
வாக்களித்தார்.
துரோணர் கிருபரரின் சகோதரி கிரிபையை மணம் புரிந்து ஹஸ்தினாபுரத்து
பாண்டவர்கள் – கெளரவர்கள் ஆகியவர்களுக்கு யுத்தப் பயிற்சி ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.
அவருக்கு கிருபை மூலம் அஸ்வத்தாமன் என்ற மகன் பிறந்தான்.
தன் ஏழ்மையைப் போக்க துரோணர் பல வழிகளில் முயற்சி செய்தார்.
பரசுராமர் தமது சொத்துக்களைப் பிராமணர்களுக்குத் தானம் செய்வதை அறிந்து
பரசுராமரைச் சந்திக்கச் சென்றார். ஆனால், அவர் சென்ற சமயத்தில் பரசுராமர் தமது தனம்
அவ்வளவையும் தானம் செய்து விட்டிருந்தார். ஆகையால் பரசுராமரிடம் பொருள் இல்லை. இருப்பினும்,
துரோணரிடம் பட்சாதப்பட்டு, தனக்குத் தெரிந்த யுத்த வித்தைகளை அவருக்குக் கற்றுக் கொடுத்தார்.
இருப்பினும், துரோணர் தமது ஏழ்மை நிலையைப் போக்கும் வழி தெரியாமல்
திண்டாடினார்.
அந்த சமயத்தில் தமது மகன் அஸ்வத்தாமன் தனது நண்பர்களுடன் விளையாடிக்
கொண்டிருந்தான். அவனது நண்பர்கள் பாலைக் குடித்துக் கொண்டிருந்தனர். அஸ்வத்தாமன் தனக்கும்
பால் கொடுக்கும் படி கேட்டான். ஆனால் அவனது நண்பர்களோ ‘நீ ஏழை பிராம்மணனின் பிள்ளை…உனக்கு
மாவைத் தண்ணீரில் கரைத்துத் தருகிறோம்,, அதைக் குடி’ என்று சொல்லி விட்டார்கள். இதை
துரோணர் அறிந்து, தம் மகனுக்குப் பால் கூட வாங்கிக் கொடுக்க முடியாத அளவு ஏழ்மையா?
– என்று மனம் வேதனைப் பட்டார்.
இந்த நேரத்தில் தான் துரோணருக்கு தனது குருகுல சக மாணவன் துருபதாவின்
ஞாபகம் வந்தது. “நான் ராஜா ஆனவுடன் உனக்கு பாஞ்சாலத்தின் பாதியை உனக்குப் பகிர்ந்து
அளித்து ராஜா ஆக்குவேன்” என்ற துருபதாவின் வாக்குறிதியை நம்பி, துரோணர் துருபதாவைப்
பார்க்க அவனின் அரசவைக்குச் சென்றார்.
துரோணர் துருபதா தனக்கு குருகுலத்தில் அளித்த வாக்குறிதியை அரச சபையில்
சொன்னார்.
துருபதா இதைக் கேட்டு துரோணரை தனது அரச பதவியின் அகங்காரத்தில் அவமதித்தான்.
‘நீ ஒரு பரம ஏழைப் பிராம்மணன். நான் பாஞ்சால நாட்டு அரசன். அப்படி
இருக்கும் போது நீ எப்படி அரசனான என்னை உன் சிநேகிதன் என்று சொல்லலாம். சம அந்தஸ்து
உள்ளவர்கள் தான் ஒருவருக்கொருவர் நண்பனாக இருக்க முடியும். துரோணரே ! நீர் என்னை உமது
நண்பன் என்று சொல்லி பழைய வாக்குறிதியைச் சொல்லாமல், ஒரு ஏழைப் பிராம்மணன் என்ற நிலையில்
என்னிடம் பிச்சை கேட்டால், நான் உமக்கு உதவி செய்ய முடியும்” என்று அறிவுரை வழங்கினான்.
இதைக் கேட்ட துரோணர் அதிர்ச்சியும், அவமானமும் அடைந்து சபையை விட்டு
வெளியேறினார். அப்போதே இதற்குப் பழிக்குப் பழி வாங்கத் தீர்மானித்தார்.
துரோணர் பாஞ்சால நாட்டிலிருந்து ஹஸ்தினாபுரம் சென்றார். அங்கு க்ஷத்திரிய
அரசகுமாரர்களுக்கு யுத்தப் பயிற்சி அளிக்கும் ஒரு குருகுலப் பள்ளியை நிறுவ ஆசைப்பட்டார்.
ஆனால் அதுவும் உடனே நிறைவேறவில்லை.
என்றாலும் பாண்டவ – கெளரவர்களுக்கு யுத்தப் பயிற்சி அளிக்கும் ஆசிரியப்
பணி அவருக்குக் கிடைக்கவே அதிலேயே தன்னை முழுவீச்சுடன் ஈடுபடுத்திக் கொண்டார்.
அந்த ஆசிரியப் பணி கிடைத்ததிலும் ஒரு பின்னணிக் கதை உண்டு.
ஹஸ்தானபுரத்தில் கெளரவ – பாணடவச் சிறுவர்கள் ஒரு கிணற்றைச் சுற்றி
கவலையோடு இருந்தனர். கிணற்றில் விழுந்த பந்தை எப்படி எடுப்பது என்பது தான் அவர்கள்
கவலையாக இருப்பதை துரோணர் அறிந்தார்.
உடனே துரோணர் கிணற்றுப் பக்கத்தில் விளைந்த சில புற்களைப் பிடுங்கி,
ஒரு புல்லை சில மந்திரங்களை ஓதி, அந்தப் பந்தின் மேல் எறிந்து, பிறகு தொடர்ந்து சில
புற்களை ஒன்றன்பின் ஒன்றாக எறிந்து அந்த புற்கள் அத்தனையும் ஒருங்கிணைந்து கிணற்றின்
விளிப்பில் வர பந்தை துரோணர் வெளியே எடுத்தார்.
அத்துடன் துரோணர் இன்னொரு அதிசயமான வித்தையையும் அவர்களுக்குச் செய்து
காட்டினார். தமது மோதிரத்தைக் கிணற்றில் போட்டு, அது கீழே விழுவதற்கு முன்பே, ஒரு புல்லை
சில மந்திரங்கள் ஓதி, அந்த மோதிரத்தை வெளியே தம் கைகளில் வரவழைத்தார்.
இந்த சாதனைகளைப் பார்த்த அரச குமாரர்கள் தங்களது தாத்தாவான பீஷ்மப்
பிதாமஹரிடம் துரோணரை அழைத்துச் செல்ல, பீஷ்மப்பிதாமகர் அவரை அரச குமார்களுக்கு யுத்தப்
பயிற்சி அளிக்கும் ஆசிரியராக நியமித்தார். இதனால் துரோணரின் ஏழ்மையை நீங்கியதுடன்,
பாண்டவ – கெளரவ அரசவையில் ஒரு பெரும் அந்தஸ்தையும் பெற்றுத் தந்தது.
துரோணரின் குருகுல வாசத்தில் ஹஸ்தினாபுர யுவராஜாக்கள் அனைவரும் பல
யுத்த வித்தைகளைக் கற்றுத் தேர்ந்தனர். அதிலும் அர்ஜுனன் துரோணருக்கு மிகவும் பிடித்த
வீரனாக மிளிர்ந்தான். ஆகையால் அர்ஜுனனை வில் வித்தையில் மிஞ்சும் வீரன் ஒருவனும் இல்லை
என்ற அளவில் துரோணரால் அவன் பயிற்சி பெற்றான்.
அதே போல் அர்ஜுனனுக்கும் தமது குருவான துரோணர் மேல் பிரியம் அதிகம்.
அதனால் தான் அர்ஜுனனால் தமது குரு துரோணரை மஹா பாரத யுத்தத்தில் கொல்ல முடியவில்லை.
ஒரு சமயம் குரு துரோணர் தமது குருகுல மாணவர்களின் திறமையைச் சோதிக்க,
ஒரு மாயமான முதலையை உருவாக்கி, அது தம்மை குளத்தில் குளிக்கும் போது தாக்கும் படிச்
செய்தார். இதைப் பார்த்த அவரது மாணவர்கள் செய்வது அறியாது திகைத்து நிற்க, அர்ஜுனன்
தனது வில்லில் அம்பு பூட்டி அந்த மாய முதலையை விரட்டி அடித்தான். இதைப் பார்த்த குரு
துரோணர் அதற்குப் பரிசாக மிகவும் சக்திவாய்ந்த பிரம்மஸ்ரீவாஸ் என்ற பிரம்மாவின் அஸ்திரத்தை
அர்ஜுனனுக்கு அளித்தார்.
குரு துரோணர் பிரஹஸ்பதியின் மறு அவதாரம் என்றும், பரசுராமரின் சிஷ்யர்
என்றும் போற்றப்படும் தகுதி பெற்றவர் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். துரோணரின் குரு
அக்னிவேஷ் என்ற ரிஷியாகும். அக்னிவேஷோ அகஸ்தியரிடம் அஸ்திரப் பயிற்சி பெற்றவர். ஆகையால்
துரோணாவும், துருபதாவும் அக்னிவேஷ் குருவின் மூலம் பல வித்தைகளைப் பயின்றார்கள். துரோணரை
அசுரகுல ஆசிரியரான சுக்கிராச்சார்யரின் மறு அவதாரம் என்றும் போற்றுவார்கள்.
துரோணர் ஆஸ்ரமத்தின் குருகுல வாசம் முடிந்த போது, தமது சிஷ்யர்களான
ஹஸ்தினாபுர யுவராஜாக்களைடம் தமக்கு குருதட்சிணையாக பாஞ்சால தேசத்தின் மேல் படையெடுத்து,
அந்த நாட்டு அரசன் துருபதனை கைதியாக தன் முன் நிறுத்த வேண்டும் என்று பணித்தார். அதன்
படி, அர்ஜுனன் பாஞ்சாலத்தை முற்றுகை இட்டு, துருபதனைக் கைதியாக பிடித்து தமது குரு
துரோணரின் முன் நிறுத்தினான்.
‘நீ கொடுக்காத பாஞ்சாலத்தின் பாதியை நான் எடுத்துக் கொண்டு, மீதிப்
பாதியை நீ ஆளுவாயாக..’ என்று துரோணர் தமது குருகுல நண்பனான துருபதனுக்கு நல்ல பாடம்
புகட்டினார். பாஞ்சாலத்தின் பாதிப் பகுதியின் அரசனாக தமது மகன் அஸ்வத்தாமனை நியமித்தார்
துரோணர்.
இந்த அவமானத்தை துருபதனால் ஜீரணிக்க முடியவில்லை. அதைத் துடைப்பதற்கு
ஒரு யாகம் செய்தான். அந்த யாகத்தின் மூலம் துரோணரைக் கொல்லும் சக்தி வாய்ந்த ஒரு மகனைப்
பெற்றெடுத்தான். அந்த அவனது மகன் தான் திருஷ்டத்தும்னன். இந்த யாகத்தில் பிறந்தவள்
தான் துரெளபதி.
துரோணர் தமது இளவரசர்களுக்கு குருவாக இருந்து சிறந்த பயிற்சி அளித்ததற்குப் பரிசாக இப்போதைய குர்கான் என்ற கிராமத்தைத் தானமாக அளித்தார் திருதராஷ்ரன். குரு கிராம் என்பது தான் திரிந்து குர்கானாக பெயர் மாறியதாகச் சொல்வார்கள்.
துரோணரும்,
ஏகலைவனும்:
கிருஷ்ணனின் தந்தையான வசுதேவரின் சகோதரர் தேவஷ்ரவா. மேலும், அவர்
குந்திதேவியின் சகோரதரும் ஆவார். ஏகலைவன் தேவஷ்வரவாவின் மகனாவார்.
தேவஷ்ராவா
க்ஷுருசென் நாட்டின் ராஜாவின் மகனாவார். அவருக்கும் மலைவாழ் ஆதிவாசி பில் நிஷாடா இனப்
பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை தான் ஏகலைவன். தன்
தந்தைக்கும், அரச குலத்திற்கு இது இழுக்கு
என்பதால் இந்த சம்பவத்தை தமது தந்தைக்குக் தெரிவிக்கும் தைரியம் இல்லாமல், அந்தக் குழந்தையை
காட்டிலேயே விட்டு விட்டார்.
காட்டில் விடப்பட்ட குழந்தை ஏகலைவனை ஆதிவாசிகளின் தலைவனும், நிஷாட
அரசனுமான வியாத்ரஜா ஹிரயண்யதானு கண்டெடுத்து
நிஷாட அரசின் யுவ ராஜாவாக வளர்த்து வந்தான். ஹிரண்யதானு அந்தக் காலத்தில் மிகவும் சக்தி
வாய்ந்த அரசனான ஜராசந்தன் படையில் ஒரு தலைவனாக நியமிக்கப்பட்டவன். இதன் காரணமாகவே ஏகலைவனும்
பிற்காலத்தில் ஜராசந்தன் படைத் தலைவனாக இருந்துள்ளான்.
யுதிஸ்திரர் என்ற தர்ம புத்திரர் ராஜ சூய யாகம் செய்வதைத் தடுக்க
முயன்ற ஜராசந்திரன் பீமனால் கிருஷ்ணன் உதவி செய்ய கொல்லப்பட்டான். தன் அரசனும், நண்பனுமான
ஜராசந்திரன் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்க ‘துவாரகையில் வசிக்கும் அத்தனை யாதவர்களையும்
கொன்று, கிருஷ்ணனையும் கொல்வேன்’ என்று ஏகலைவன் சபதம் செய்தான்.
ஆனால் ஏகலைவனின் சபதம் நிறைவேறவில்லை. ஏகலைவன் கிருஷ்ணால் கொல்லப்பட்டான்.
ஏகலைவன் பிறந்தது யாதவ குலம். ஆனால் வளர்ப்பால் வேடுவர் குலம். காடுகள்
சூழ்ந்த நிஷாட நாட்டை ஆள தான் வில் வித்தை வீரனாக ஆகவேண்டும் என்று விரும்பினான்.
அந்தக் காலத்தில் வில் விதை கற்றுக் கொடுக்கும் குரு துரோணர் என்பதை
ஏகைலைவன் அறிந்தான்.
தன் வளர்ப்புத் தாய் ஸ்ரதாவிடம் “தாயே ! நான் வில் வித்தையில் நிபுணனாக
வேண்டும். அதற்கு குரு துரோணாச்சார்யாரை அணுகி என்னை சிஷ்யனாக ஏற்றுக் கொண்டு வில்
வித்தை கற்றுத் தர வேண்டப்போகிறேன்” என்று ஏகலைவன் சொன்னான்.
அதைச்
செவியுற்ற அன்னை ‘நீ கீழ் ஜாதியில் பிறந்தவன். துரோணர் க்ஷத்திரயர்களுக்கு மட்டும்
தான் யுத்தம் செய்யும்
வித்தைகளைக் கற்றுக் கொடுப்பார் .. ஆகையால் நீ துரோணரைப் பார்ப்பது வியர்த்தம்’ என்று
தன் மகன் ஏகலைவனுக்கு அறிவுரை வழங்கினாள். இருப்பினும் ஏகலைவன் தன்னம்பிக்கையை இழக்காது,
துரோணரை நேரில் பார்க்கப் பயணமானான்.
துரோணர் பாண்டவர்கள் – கெளவரவர்கள் ஆகிய அரச குடும்பத்து மாணவர்களுக்குப்
பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அவரை ஏகலைவன் வணங்கி தனக்கு வில் வித்தை
கற்றுத் தர வேண்டும் என்று மிகவும் பணிவாக வேண்டினான்.
‘நான் அரச குடும்பத்து மாணவர்களுக்கு அதுவும் க்ஷத்திரிய குலத்தில்
பிறந்தவர்களுக்கு மட்டுமே யுத்த வித்தையைக் கற்றுக் கொடுப்பேன். நீயோ வேடுவர் குலம்
– கீழ்க் குலத்தில் பிறந்தவன். ஆகையால் நான் உன்னை என் சீடனாக ஏற்று யுத்த வித்தையைக்
கற்றுக் கொடுக்க இயலாது’ என்று மறுத்து விட்டார்.
அனால் ஏகலைவனோ அங்கு மறைவாக இருந்து துரோணர் வில் வித்தைகளைக் கற்றுக்
கொடுக்கும் முறையைக் கவனித்துக் கொண்டிருந்தான். பிறகு தமது மானசீக குருவான துரோணர்
கால் பட்டு நடந்த மண்ணை பயபக்தியுடன் எடுத்துக் கொண்டு தம் குடிசைக்குச் சென்று அங்குள்ள
ஒரு மரத்தின் அடியில் இன்னும் சிறிது களிமண்ணை எடுத்து குருவின் பாத மண்ணுடன் கலந்து
துரோணரின் உருவச் சிலையை பிரதிஷ்டை செய்தான். அந்தச் சிலையை தமது குருவாகப் பாவித்து,
தமது பயிற்சியை ஆரம்பித்தான்.
ஏகலைவனின்
மானசீக குருபக்தியால் அவன் வில் வித்தையில் நிபுணனாகத் திகழ்ந்தான். ஒரு சமயம் ஏகலைவன்
தன் பயிற்சியின் போது ஒரு நாய் குலைத்துக் கொண்டே இடஞ்சலாக இருந்தது. அதைத் தடுத்த
நிறுத்த ஏகலைவன் ஏழு அம்புகளை அந்த நாயின் வாயில் தைக்கும் படி அம்புகளை எய்து அது
குறைக்க முடியாமல் செய்து விட்டான். அவன் எய்த அம்புகளால் நாய்க்கு எந்த ஊறும் ஏற்படவில்லை.
அந்த நாய் பாண்டவ – கெளரவ யுவராஜர்களின் வேட்டைக்கு வந்ததாகும். தங்கள் நாயின் வாயை
ஏழு அம்புகளால் தைத்து குலைக்க முடியாமல் செய்த அந்த வில் வித்தை வீரன் யார் என்பதை
அறிய முயன்ற போது அவர்கள் ஏகலைவன் குடிசைக்கு வந்தார்கள். அந்த வில் வித்தை வீரன் ஏகலைவன்
என்பதை அறிந்து ‘உன் குரு யார்?’ என்று வினவவும் அதற்கு ஏகலைவன் தன் குடிசைக்கு அருகில்
உள்ள மரத்தின் கீழே உள்ள சிலையைக் காட்டி ‘இதோ இவர் தான் என் குரு .. துரோணோச்சார்யார்
..’ என்று சொல்லவும் அவர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தார்கள். துரோணர் ரகசியமாக ஏகலைவனுக்கு
வில் வித்தை அளித்து, ராஜ துரோகம் செய்துள்ளார் என்ற முடிவுக்கு வந்து விட்டனர். அதிலும்
குறிப்பாக அர்ஜுனன் ‘குலக் குரு துரோணர் என்னை விட ஒருவரும் வில் வித்தையில் மிஞ்ச
முடியாது என்று சொல்லி ஏமாற்றி விட்டார். இதோ இந்த வேடுவ குல ஏகலைவன் என்னை விட சிறந்த
வில் வித்தை வீரனாக துரோணர் உருவாக்கி இருக்கிறார்’ என்று பலவாராக குழம்பி தமது குரு
துரோணரிடம் தனது மனக்கிலேசத்தை வெளியிட்டான்.
துரோணர் ஒன்றும் புரியாமல் குழம்பிய நிலையில், எல்லோரையும் கூட்டிக்
கொண்டு, ஏகலைவன் குடிசைக்கு வந்தனர். துரோணரே தம் குடிசைக்கு வந்ததைக் கண்டு மனம் மகிழ்ந்தான்
ஏகலைவன்.
ஒரு மரத்தடியில் தமது மண் உருவச் சிலையை வைத்து குருவாகப் பாவித்து
வில் வித்தை பயின்ற ஏகலைவனின் குரு பக்தி – விடா முயற்சி – முழு நம்பிக்கை ஆகிய குணங்களைக்
கண்டு துரோணர் மகிழ்ந்தார். இருப்பினும் அர்ஜுனனுக்குப்
போட்டியாக ஏகலைவன் உருவெடுக்கும் நிலையைத் தவிர்ப்பதற்காக துரோணர் மிகவும் பெரிய பழியைச்
சுமக்கும் செயலைச் செய்தார்.
‘ஏகலைவா ! நீ என்னைக் குருவாகப் பாவித்து வித்தையில் தேர்ச்சி பெற்று
விட்டாய். .. எனக்கு நீ குரு தட்சிணையாக உனது வலது கை கட்டை விரலைத் தா’ என்று துரோணர்
ஒரு சிறிதும் கருணை இல்லாமல் ராஜத் துரோக தண்டனையிலிருந்து தம்மைக் காக்க ஏகலைவனின்
வில் வித்தைக்கு பெரும் பங்கம் வரும் அளவில் தரம் தாழ்ந்து கேட்டார்.
ஆனால் ஏகலைவனோ எந்த ஒரு மனக்கிலேசமோ, தயக்கமோ, தர்க்கமோ இல்லாமல்
ஒரு அம்பை எடுத்து தன் வலது கை கட்டை விரலைக் கொய்து ஒரு இலையில் வைத்து குரு காணிக்கை
செலுத்தினான்.
இதைப் பார்த்த அர்ஜுனன் மனம் மகிழ்ந்தான்.
இந்த தியாகச் செயலால் ஏகலைவனின் புகழ் அகில உலகம் பூராவும் பரவி
அது இன்றுவரை ஏகலைவனை ஒரு சிறந்த உதாரண சிஷ்யனாக புகழப்படும் நிலை உண்டாகி விட்டது.
அதே சமயத்தில் ஒரு தவறான குருவாக இகழப்படும் நிலைக்கு துரோணர் தள்ளப்பட்டுள்ளார்.
சில குட்டித்
தகவல்கள்:
v ஹரியான மாநிலத்தில் குருகிராம் நகரத்தில் உள்ள காண்ட்சா என்ற கிராமத்தில் ஏகலைவனுக்கு ஒரு கோயில் உள்ளது. அந்த கோயில் உள்ள இடத்தில் தான் துரோணாச்சார்யாருக்கு தன் வலது கைக் கட்டை விரலை அம்பால் வெட்டி குரு தட்சிணையாகக் கொடுத்தான் என்று நம்ப்படுகிறது.
v ஆயுதங்கள் இல்லாத துரோணரை திரௌபதியின் சகோதரர் திரிஷ்டத்யும்னனாக பிறப்பெடுத்த ஏகலைவன் கொன்றான். போருக்குப் பின்னர், துரோணர் மகன் அசுவத்தாமாவால், திரிஷ்டத்யும்னன் கொல்லப்பட்டான்.
v துரோணர் தமது சிறந்த சிஷ்யனான ஏகலைவனின் குரு பக்தியை மிகவும் மதித்தார் என்பதற்கு ஒரு கதை சொல்லப்படுகிறது. தமது உன்னத – தியாக சிந்தனையாளனான ஏகலைவனின் கட்டை விரலை ஒரு தங்க தாயத்தில் வைத்து தமது கழுத்தில் அணிந்து கொண்டவர் துரோணர். ஏகலைவனின் சிறந்த குருபக்தி தம்மை எப்போதும் காக்கும் என்ற காரணத்தால் அதை ஒரு ரக்ஷையாக அணிந்து கொண்டார். யுத்தத்தில் துரோணர் தேரிலிருந்து பூமியில் தமது வில் அம்புகளைத் துறந்து இருந்த போதிலும் அவரை அவர் கழுத்தில் அணிந்திருந்த எகலைவனின் கட்டை விரல் தாயத்து காப்பதை அறிந்த கிருஷ்ணன், ஒரு ஏழை பிராமண வேஷம் தரித்து, ‘என் மகள் கல்யாணத்திற்கு தங்கம் வேண்டும். நீங்கள் அணிந்துள்ள தாயாத்துத் தங்கம் அதற்குப் போதும். அதை நீங்கள் தானமாகத் தாருங்கள்’ என்று யாசகம் கேட்க துரோணரும் அந்த தாயத்தை கிருஷ்ணரிடம் அளித்தவுடன் துரோணர் வலிவிழந்த நிலையில் திருஷ்யத்தும்மன் துரோணரின் தலையை வெட்டி வீழ்த்தினான்.
v துரோணரிடம் பெற்ற ஏகலைவனின் கட்டை விரலை கண்ணன் தன் புல்லாங்குழலில் பதித்து, அது ஒலி எழுப்பும் போதெல்லாம் ஏகலைவனின் புகழ் பாடும் படிச் செய்து ஏகலைவனின் சிஷ்ய பக்தியை உலகமறியச் செய்தார் கிருஷ்ண பரமாத்மா. கடைசியில் ஏகலைவனின் கட்டை விரல் பதிந்த புல்லாங்குழல் சகிதமாக காட்டில் ஒய்வில் இருந்த கண்ணனின் கால் கட்டை விரலை மான் என குறி பார்த்து அம்பை எய்த ஏகலைவனின் வாரிசுகள் கண்ணனின் இறுதிக்குக் காரணமாகினர்.
Comments