04 – 11 2023 - இன்றைய இனிய சிந்தனை
சுதந்திரம் என்பது
மனிதனுக்கு மிகவும் அவசியமான ஒன்று. மனிதன் சுவாசம் போன்று மனிதனுக்கு கூடவே அந்த சுதந்திரம்
ஒரு கவச அங்கியாக இருக்க வேண்டும்.
உலக சரித்திரத்தை
அலசிப் பார்க்கும் போது மனிதன் இன்னொரு மனிதனின் சுதந்திரத்தைப் பறித்து அவனை அடிமையாக்கி
அதன் மூலம் ஒரு பெரும் அடிமைக் கூட்டத்தை உருவாக்கி தன்னை ஒரு பெரும் தலைவனாக அனைவரையும்
ஏற்க வைத்து ஒரு பெரிய அரச பரம்பரையை உருவாக்கி கோலோட்சும் நிலை உருவாகி விடுகிறது.
இதன் மூலம் மனிதர்களை
மிருகங்கள் போல் சந்தைகளில் அடிமைகளாக விற்பதும் – வாங்குவதும் பல நாடுகளில் நடை முறையில்
இருந்துள்ளன. அப்படி அடிமைகளாக வாங்குபவர்களை தங்கள் அரண்மனைகளில் சேவகர்களாக வேலை
வாங்கினார்கள்.
அது மட்டுமல்ல. அந்த
அடிமைகளை வேடிக்கைப் பொருளாகவும் ஆக்கி அவர்களை விளையாட்டு அரங்கில் நடைபெற வைத்து
மனம் மகிந்தனர் அந்த அரச வம்சத்தினர். உள்ளத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் கொடூர மிருக
குணங்களை எழிப்பி அசுரர்களாக உருவெடுத்து அந்தக் கேளிக்கைகளில் சுகம் கண்டவர்கள்.
இதற்காகவே பெரிய
விளையாட்டு மைதானங்களைக் கட்டினார்கள். பசியோடு பல நாட்கள் சிங்கங்களை கூண்டில் அடைத்து
வைத்து, பிறகு அடிமைகளை மைதானத்தில் நிராயுதபாணிகளாக நிறுத்தி அவர்களை அந்த சிங்கங்கள்
தாக்கி உயிர்போகும் நிலையில் அவர்களின் மாமிசங்களைத் தின்று பசியாறும் அந்தக் கோரக்
காட்சிகளை மக்கள் களித்து, கைகளைக் கொட்டி, ஆர்பரித்துக் கொண்டாடும் அவலங்களும் அந்த
அரச குடும்பங்களில் நடக்கும் சம்பவங்களாகும்.
அங்கு நீதி என்பது
ஆளும் வர்க்கம் வாக்குத் தான். அதை எதிர்த்து ஒருவரும் குரல் எழுப்ப முடியாது. எதிர்த்தால்
அவர்களையும் அடிமைகளைப் போல் தண்டனையைக் கொடுத்து விடுவார்கள்.
பொது வெளியில் வாளால்
தலைகளை வெட்டுதல், தூக்கிலே தொங்க வைத்தல், உயிர் போகும் அளவில் சாட்டை அடிகள் கொடுத்தல்
என்ற பல சித்திரவதைகள் அந்த அரசாங்கத்தில் சர்வ சாதாரணமாகும்
ஏன்? – இந்த 21-ம்
நூற்றாண்டிலும் பல முஸ்லீம் மன்னர்கள் ஆட்சி செய்யும் தேசங்களிலும் இந்த அராஜக முறை
நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதை தடுத்து நிறுத்தும் சக்தியை இன்று வரை உலக மக்களின்
உரிமைகளையும், வாழ்வினையையும், சுதந்திரத்தையும் காக்க உருவான ஐக்கிய நாடுகளின் சபை
பெறவில்லை என்பது ஒரு மிகவும் கசப்பான உண்மை. அதற்குக் காரணம் பலவாயினும் தங்கள் சுய
நலத்தாலும், தங்கள் நாட்டு மக்களின் – அவைகள் தர்மத்திற்குப் புறம்பானவைகளாக இருப்பினும்
– குறுகிய நோக்கத்தின் காரணமாகவும் இந்த கொடூரத்தை அடியோடு அகற்ற முடியவில்லை என்பதை
இங்கு வலியுறுத்தத் தான் வேண்டும்.
பல வேறுபட்ட அரசியல் சிந்தாந்தங்கள், மாறுபட்ட மதச் சிந்தனைகள், இஸ்லாம் – கிருஸ்துவம் ஆகிய இரண்டு மதங்கள் – அதிலும் குறிப்பாக இஸ்லாம் தான் உலகை ஆளும் மதமாக இருக்க வேண்டும் – அதற்கு எந்த தியாகத்தையும் செய்யத் தயார் – தீவிரவாதம் மூலமும் இஸ்லாத்தைத் திணிக்கத் தயங்கமாட்டோம் என்ற முஸ்லீம்களின் குரல்கள் – உலக சமாதானத்தையும், சகோதர பாசத்தையும், ஒற்றுமையாக வாழும் நியதியையும் தகர்த்து உலகையே உலுக்கும் நிலை உண்டாகி விட்டது.
உலக அரங்கில் ஐக்கிய
தேச சபையின் குறிப்பின் படி மொத்தம் சுமார் 196 தேசங்கள் இருக்கின்றன.
அதில் 193 தேசங்கள்
முழு அங்கத்தினர்களாக ஐநா சபையில் அங்கம் வகிக்கின்றன. 2 தேசங்களான ஹோலி சீ மற்றும்
பாலிஸ்தீன ஸ்டேட் ஆகியவைகள் ஐநாவின் பார்வையாளர் தேசமாகத் தான் அங்கீகரிக்கப்பட்டு
அதில் அங்கம் வகிக்கின்றன. தைவான் ஒரு சுதந்திர நாடாக இன்னும் இடம் பெறவில்லை.
126 தேசங்களில் மக்கள்
ஆட்சி இருந்தாலும், மீதமுள்ள 70 சிறுபான்மை தேசங்களில் உள்ள மக்களின் குரல்களும், சுதந்திரங்களும்
நசுக்கப்பட்டு ஒரு சில தலைவர்களின் தலைமையில் இரும்புக் கரங்களின் ஆட்சிகள் தான் இருக்கின்ற
அவலம் இன்றும் மாறவில்லை.
ஆகையால் இந்த 70
தேசங்களில் சிலவற்றால் – குறிப்பாக இஸ்லாம் மத தேசங்களால் - உலக மக்கள் பெரிதும் அவ்வப்போது
சண்டை, குண்டு வெடிப்புகள், தீவிரவாதச் செயல்கள், பலவிதமான கொடூரக் கொலைகள் – மக்கள்
கடத்தல்கள் – பெண்கள் கற்பழிப்புகள் என்று பல கொடுமைகள் நடந்த வண்ணம் உள்ளன.
இந்த அசம்பாவிதங்கள்
நடக்கும் போது வெளியேறும் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு குடி பெயர்ந்து செல்லும்
நிலை ஏற்படுகிறது. அந்த அகதிகளின் தொகை சில நாடுகளில் அதிகமாகி அந்த அகதிகள் அந்த நாட்டையே
கபளீகரம் செய்ய தீவிரவாத முயற்சிகளில் ஈடுபடுவதும் நடைபெற்று வருவதையும் பார்க்க முடிகிறது.
மக்கள் தொகையில்
37% மக்கள் இன்னமும் சுதந்திரமான தேசங்களில் வாழும் நிலை ஏற்படவில்லை.
ஆப்கானிஸ்தான், மையான்மார்,
வட கொரியா, காங்கோ, சிரியா, சீனா – ஆகிய நாடுகளை இந்த 37% மக்கள் ஜனத்தொகையில் உள்ள
மக்களாக கருதலாம்.
அதே சமயத்தில் மிகவும்
உயர்ந்த சுதந்திர நாடுகள் என்ற பட்டியலில் – அந்த அனைத்து நாட்டின் மொத்த ஜனத்தொகை
உலக ஜனத்தொகையில் 6.4% என்ற நிலை இருந்தாலும் – நார்வே, நியூசிலாந்து, ஃபின்னாந்து,
ஸ்வீடன், ஐஸ்லாந்து – ஆகிய ஐந்து நாடுகள் சுதந்திர தேசத்தின் உயர் நிலையில் இருந்து
மற்ற நாடுகளுக்கு உதாரண தேசங்களாக மிளிர்கின்றன.
உலகத்து நாடுகள்
அனைத்தும் இந்த ஐந்து நாடுகளைப் போல் தங்கள் தேசத்தை ஆளும் அமைப்பை மாற்றி அமைக்கும்
தருணங்கள் தான் ஐநா சபை தன் குறிக்கோளில் வெற்றி பெற்றதாகக் கொள்ள முடியும்.
63% உலக ஜனத்தொகை
மக்கள் சுதந்திரமான தேசங்களில் வசிக்கிறார்கள் என்ற செய்தியைக் குறித்து ஆனந்தப் பட
முடியாத அளவிற்கு 37% மக்களின் அவதிகள் இருக்கின்றன. அந்த ஏதாட்சதிகார தேசங்களின் சர்வாதிகாரிகளின்
நடவடிக்கைகளால் அடிக்கடி உலக அமைதிக்கு பங்கம் வந்து, அதனால் பல தீமைகள் உலகில் உண்டாகின்றன.
“Muslims Lives Matter”, “Christians Lives
Matter”, “Hindus Lives Matter” - என்ற குறிய கோழங்கள் ஒழிந்து, “All
Lives Matter” – என்ற
உன்னத பெருந்தன்மையான விதி உலக அரங்கில் ஏற்றுக் கொள்ளப்பட்டால் தான் உலகம் உய்வடையும்.
மக்கள் நிம்மதியாக வழமுடியும்.
பெருந்தன்மை என்பதை
ஒவ்வொரு நாடும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
“லோகாஸ் ஸமஸ்தா சுகினோ பவந்து; சர்வே ஜனா சுகினோ பவந்து”
– அதாவது “உலகத்தில் உள்ள அனைவரும் சந்தோஷமாக இருக்கட்டும், அனைத்து
ஜனங்களும் சந்தோஷமாக இருக்கட்டும்.” என்பது தான் இதன் பொருள்.
இந்த சனாதன இந்து
மத விதிதான் உலகத்தை ரக்ஷிக்கும். அது ஹிந்து
மதத்திற்கும், ஹிந்துக்களுக்கு மட்டும் தான் என்று இதைக் குறைத்து மதிப்பிடக்
கூடாது.
இஸ்லாம் – கிருஸ்துவம்
போன்ற மதங்கள் உலக அரங்கில் வருவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ரிஷிகளால் உலக
நன்மைக்கு ஓதப்பட்ட மிகவும் சக்தி மிக்க மந்திரமாகும். இந்த மந்திரங்களை ஹிந்துக்கள்
காலம் காலமாக யாகங்கள், சடங்குகள், யோகாப் பயிற்சி முகாம்கள் ஆகியவைகளில் ஓதி வருகிறார்கள்.
சனாதன மார்க்கம்
தான் அனைத்து மதங்களையும் மதித்து உலகத்திற்கு வழிகாட்டும் மார்க்கம் என்பதை அனைவரும்
உணர்ந்து மதங்களின் வேற்றுமைகளைக் களைந்து உலகம் உய்யப் பாடுபடுவோம், வாரீர்.





Comments