ஹிந்துப் பத்திரிகை செங்கோல் விவகாரத்தில் தான் வெளியிட்ட செய்தியையே மறுக்கிறது.
ஹிந்து ராம் ஒன்று சொல்ல அதை ஹிந்து பத்திரிகையிலிருந்து சமீபத்தில் விலகிய மாலினி பார்த்தசாரதியோ ராம் சொல்வது தவறு என்று சொல்கிறார்.
இது தான் இப்போதைய ஹிந்துவின் நிலை.
நேர்மைக்குப் பேர்போன ஹிந்துப் பத்திரிகை இப்போது மோடியின் மீதுள்ள வெறுப்பால் உண்மைக்குப் புறம்பான போக்கைக் கடைப்பிடிக்கிறது.
ஹிந்து பத்திரிகை தன் லோகோவின் தத்துவத்தை இப்படிப் பறைசாற்றுகிறது:
ஆனால் சமீபகாலமாக அதுவும் குறிப்பாக மோடி பிரதம மந்திரியாகப் பதவி ஏற்ற உடன் ஹிந்துவின் மேற்சொன்ன கொள்கைகளைக் கடைப்பிடிக்காமல் நேர்மை தவறி – ஏன் பல உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டு வருகின்றது. சமீபத்தில் கூட காங்கிரசின் மூத்த தலைவர் ஜயராம் ரமேஷ் செங்கோலைப் பற்றி தருமபுரம் ஆதீனம் சொன்ன தகவல்களைத் திருத்தி உண்மைக்கு எதிராகச் சொன்னவைகளை ஹிந்து வேண்டுமென்றே வெளியிட்டுள்ளது என்பது வாய்மையின் குற்றச் சாட்டு. இதை உறுதியாக நிரூபிக்க முடியும் என்ற திட நம்பிக்கையில் இந்தச் செய்தியை வாய்மை வெளியிடுகிறது.
Comments