மமதா மாதுவின் மஹா பயங்கர கோர தாண்டவம் – வங்காளம் பற்றி எரிகிறது.

 

மமதா மாதுவின் மஹா பயங்கர 

கோர தாண்டவம் – 

வங்காளம் பற்றி எரிகிறது.







மமதா மூன்றாவது முறையாக சென்ற 2016 தேர்தலில் பெற்ற இடமான 211 இடங்களை விட 2 இடங்கள் அதிகமாகப் பெற்று 213 இடங்களில் மே 2021 தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

அது அவருக்கு முழுமையான சந்தோஷத்தைக் கொடுக்க வில்லை என்று தெரிகிறது. அதற்கு இரண்டு காரணங்களைச் சொல்லாம்.

ஒன்று:

தனது கட்சி அமோக வெற்றி பெற்றாலும் தான் மிகவும் நம்பிக்கையாக இருந்த நந்திகிராமத்தில் பிஜேபியின் வேட்பாளர் சுவேந்து அதிகாரி – அதுவும் தன் கட்சியில் இருந்து கடைசி நேரத்தில் தாவியவர் – தன்னைத் தோற்கடித்தது – குறைந்த 1956 ஓட்டு வித்தியாசமாக இருந்தாலும் – அது பெரிய அதிரடித் தோல்வி என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. இந்தத் தோல்வியால் மமதா கவலைப் பட்டாலும், அது அவரது இயல்பான ‘கெரோ மனநிலை’- யால் பாதிக்கப்பட்டவர் – ஏன் அதையே தமது அயுதமாகவும் – அது மக்களின் உரிமைப் போராட்ட ஆயுதமாகும் என்றும் அதை உபயோகிக்க உபதேசம் செய்வது அரசியல் தலைவர்களின் கடமை என்றும் கொக்கரித்த ‘அடிபட்ட வங்கப் புலி’யாகத் தான் தன்னை அடையாளம் காட்டி வருகிறார். மமதா ஜனநாயக சர்வாதிகாரியாகவே முதல்வர் பதவியில் அமர்ந்து ஆட்சி செய்ய நினைக்கிறார். மமதாவின் அதீத உக்கிரம் அவரையே தாக்கும் காலம் வரும் என்பதை அறியாமலேயே வலம் வருகிறார்.

 


இரண்டு:

2016 ஆண்டில் காங்கிரஸ் 44, கம்யூனிஸ்ட் 26 என்பதை இந்தத் தேர்தலில் பூஜ்யத்தில் மூழ்கடித்த மமதாவால், 2016-ல் 3 என்ற இலக்கத்தில் இருந்த பிஜேபி 77 என்ற 2400% நம்மமுடியாதா ஆச்சரியமான அதிக சதவிகிதத்தில் வென்றதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. வங்காளத்திலும் தனக்கு எதிராக ‘ஹிந்து ஓட்டு வங்கி’ உருவாவதையும் அவரால் உணர்ந்தாலும் அதையும் தடுத்து நிறுத்த முடியாமல் தவிக்கிறார். அவரது தேர்தல் சின்னத்தில் உள்ள மூன்று பூக்கள் – முதல் பூ காவி, நடுப்பூ வெள்ளை, கடைசிப் பூ பச்சை ஆகிய நிறங்களில் இருந்ததை பிஜேபியின் காவி – பச்சை நிறங்கள் முதல் இரண்டு பூக்களை இந்த தேர்தலில் 77 இடங்களில் வென்று காவியாக்கி – மூன்றாவதை அடுத்த தேர்தலில் தனது பச்சையாக மாற்றி 77 என்பதை இரட்டிப்பாக பிஜேபி முனைந்துள்ளதை மமதாவால் ஜீரணைக்க முடியாமல், அதனால் மமதா ஆட்சி செய்வதை மறந்து அதிரடி ஆட்டம் போடத் துவங்கி விட்டார்.

தர்ணா என்பது மமதாவின் ரத்ததுடன் கலந்த ஒன்று. கலவரம், கல்லெரிதல், கற்பழித்தல், கொலை செய்தல், தீயிட்டுக் கொளுத்துதல் – இவைகளை திருணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் செய்தால் அதை ஒரு முதல்வர் என்ற நிலையில் – சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய கடமையை மறந்தவராக ‘இது மோடி – அமிர் ஷா இருவரின் சதி. வங்காளத்தில் பிஜேபி ஆட்சி அமையாததால் என் அரசைக் குறிவைத்து கலவரம் செய்து ஆட்சியைக் கவிழ்க்கப் பார்க்கிறார்கள். 11 பேர்கள் தேர்தலுக்குப் பிறகு நடந்த கலவரத்தில் உயிர் இழந்தார்கள் என்பது பொய். பிஜேபியில் 6 பேர்கள் இறந்திருக்கலாம். ஆனால் எங்கள் கட்சியினர் 5 பேர்களுக் உயிர்ழந்துள்ளனர்’ என்று விளக்கம் அளிக்கிறார்.

யார் உயிர் இழப்பினும் வங்காளம் பற்றி எரிவதைத் தடுத்து நிறுத்த மமதா முயலவில்லை.

மமதாவை தேர்தல் பிரசாரம் செய்வதிலிருந்து 13 – 04 – 2021 ஒரு நாள் இந்திய தேர்தல் பிரசாரம் செய்வதைத் தடுத்ததை எதிர்த்து கொல்கத்தாவிலுள்ள காந்தி மூரத்தி பவனில் தர்ணா செய்தார். பிப்ரவரி 2019 அன்று சாரதா சிட் பண்ட் ஊழல் தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாருக்கு ஆதரவாக சிபியைக்கு எதிராக தர்ணா செய்தவர் முதல்வராகப் பதவியில் இருந்த மமதா. 



அதே பாணியில் இப்போது – தேர்தல் வெற்றிக்குப் பிறகு, நாரதா ஊழலில் சிபியையால் கைது செய்யப்பட்ட நான்கு – அதில் மூன்று மந்திரிகளும், ஒரு எம். எல். ஏ.யும் அடக்கம் - திருணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, மமதா கொல்கத்தாவிலுள்ள சிபியை ஆபீசின் 15-வது மாடியில் தர்ணா செய்தார்.

‘முதல் மந்திரியான என்னையோ, சட்டசபை சபாநாயகரையோ கலந்து ஆலோசிக்காமல் சிபியை எங்கள் மந்திரிகளை – எம்.எல்.ஏக்களைக் கைது செய்வது ஜனநாயக மரபை மீறியதாகும். என்னையும் கைது செய்யுங்கள். சிறையில் அடையுங்கள்.’ என்று வாதிட்டு போராடியுள்ளார். அவர் சிபியை அலுவலகம் இருக்கும் மாடியில் தர்ணாவில் ஈடுபட்டிருக்கும் போது, வெளியில் அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் கூடி சிபியைக்கு எதிராகக் கோஷங்கள் போட்டுள்ளார்கள். 


பாதுகாப்புப் படையினரைக் கற்கலால் தாக்கி உள்ளனர். பல கடைகள் சூரையாடப்பட்டுள்ளன.

இவைகளை அறிந்த கோர்ட், மமதாவின் செயல்களுக்குக் கண்டனம் தெரிவித்து, அந்த நால்வரையும் வீட்டுக் காவலில் வைத்து விசாரிக்க உத்திரவிட்டனர்

கொல்கத்தா கவர்னர் ஜக்தீப் டாங்கர் மமதா அரசிடம் கலவரத்தைப் பற்றிய அறிக்கையைக் கேட்டும் அதற்குச் சரியான பதில் இல்லாமல் போய் விட்டது. அவரைச் சந்தித்த போலீஸ் உயர் அதிகாரிகள் வெறும் கையுடன் அவரைச் சந்தித்து எந்தவிதமான விவரங்களையும் அளிக்க வில்லை. கவர்னர் அமைதியை உருவாக்க மமதாவிடம் வேண்டிய கோரிக்கையும் முதல்வரால் ஏற்கப்படாமல், பலரையும் குற்றம் சொல்லும் பாணியில் வியர்த்தமாகி, கலவரங்களும் கட்டுக்கடங்காமல் நிகழ்ந்த வண்ணம் இருந்தன.

பல குடும்பங்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள கிராமங்களிலிருந்து பக்கத்து மாநிலமான அஸ்ஸாமில் தஞ்சம் அடைந்தனர். இவர்களின் எண்ணிக்கை சுமார் 500-க்கும் அதிகமாகும்.

மத்திய உள்துறை மந்திரி அலுவலகம் மமதா அரசிடம் நிலைமையை அறிய முயன்று தோற்றுப் போனபிறகு, மூன்று உயரதிகாரிகளை அங்கு நடக்கும் கலவரங்களின் உண்மை நிலை அறிய அனுப்பும் நிலையும் உருவாகி உள்ளது. இந்த நடவடிக்கைகளை எதிர்த்தும் மமதா அரசு அறிக்கை வெளியிட்டு அந்த அதிகாரிகளுக்கு தன் அரசு உதவிகரமாக இருக்காது



என்றும் அறிக்கை விட்டுள்ளார். 





கவர்னர் உண்மை அறிய கலவரப்பகுதிகளைப் பார்வையிடச் செல்வதையும் மமதா தடுக்க முயன்றும், அவர் ‘தன் ஜனநாயகக் கடமையை ஆற்ற, நான் செல்கிறேன்’ – என்று நேரில் சென்று பார்வை யிட்டார். அப்போது அங்குள்ள நிலைமைகளைக் கேட்டும், கண்டும், பார்த்தும் அவர் கண் கலங்கி கண்ணீர் விட்டார். அதையும் திருணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் – இது முதலைக் கண்ணீர் – என்று கேலி செய்தனர். முதலை மனம் கொண்ட மூர்க்கர்கள் கொண்ட கட்சி – வன் முறையையே கட்சியை வளர்க்கும் என்ற மன நிலையில் ஊறி இருக்கும் தொண்டர்களையும், தலைவர்களையும் கொண்ட கட்சி – இப்படி மக்களின் துக்கங்களில் பங்குகொண்டு அதற்கு நிவாரணம் அளிக்காமல் – நேரில் சென்று ஆறுதல் வார்த்தைகளாவது சொல்லாமல் – இருப்பதை மக்கள் மனத்தில் கொண்டு தகுந்த தருணத்தில் பாடம் புகட்டுவார்கள் என்பது திண்ணம்.

கவர்னர் அவர்களின் காணொலி இரண்டை தொடர்பு கொண்டு பார்க்கவும்.

1. அஸ்ஸாம் அகதிகள் கூடாரத்தில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மேற்கு வங்காளத்திலிருந்து கலவரத்தால் தங்கள் கிராமங்களைக் காலி செய்து தங்கி உள்ளவர்களை கவர்னர் பார்த்து ஆறுதல் சொல்லும் வீடியோ: https://fb.watch/5EOr9uVUuF/

2. கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நிலையைக் கண்டு கேட்ட கவர்னர் கண்ணீர் விடும் வீடியோ: https://fb.watch/5EOzH6zUq1/

அதில் ஒன்று அஸ்ஸாமில் தஞ்சம் அடைந்த மேற்கு வங்காள மக்களின் துயரக்கதை மனத்தை உருக்கும். அவசியம் பார்க்கவும்.

மமதாவின் மனம் கல்லாக இருப்பதால் வங்காளம் பற்றி எரிகிறது.

மமதாவின் நோக்கம் கலவரம் செய்வது – ஜனநாயக உரிமை – என்பதால் வங்காளம் பற்றி எரிகிறது.

மமதாவின் மமதை - ‘என் அரசின் அனுமதி அனைத்திற்கும் அவசியம்’ – சட்டம் ஒழுங்கை தங்கள் கட்சியின் கைகளுக்கு மாற்றி விட்டு அவரது ஆட்சியின் அராஜகத்தை அரங்கேற்றி, ஊர்த்துவ தாண்டவமாடுவதால், வங்காளம் பற்றி எரிகிறது.

சென்ற 10 ஆண்டுகளின் வங்காளத்தில் எந்தவிதமான வளர்ச்சித் திட்டங்களும் இல்லை. சிறுபான்மை முஸ்லீம் மதத்தவர்களுக்கு அரசு பணத்தை – இமாம்களுக்கு மாதாமாதம் சம்பளச் சலுகைகள், மாதாரஸ்கள் என்ற இஸ்லாம் போதனைக் கூடங்களுக்கு வாரிவழங்குதல் என்று மமதா ஒருதலைப் பட்சமாகவும், ஓட்டு வங்கி அரசியலால் வங்காளம் வளர்ச்சிப் பணிகளிலோ, சமூக திட்டங்களிலோ, பலவிதமான கட்டமைப்புகளிலோ ஈடுபடாமல் மிகவும் பின் தங்கி உள்ளது. தொழில் அதிபர்களை மம்தா வேண்டியும் அவர்கள் வங்காளத்தில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டவில்லை. ஏனென்றால் மமதாவின் மத்திய அரசுடனான சுகுமமில்லாப் போக்குத் தான் காரணமாகும். ஆகையால் காங்கிரஸ் அரசுக்குப் பிறகு ஆண்ட கம்யூனிஸ்ட் – மமதா ஆகியவர்களால் வங்காளம் வளர்ச்சி இழந்து, தன் இயல்பையும் இழந்து வங்காளம் பற்றி எரியும் இந்த நேரத்தில் உள்ளூர் மற்றும் உலகலாவிய அளவில் சுற்றுலா வருவாயையும் இழப்பதால், அதன் நிதி நிலையும் கவலைக்குரியதாகத் தான் இருக்கும்.

ஆட்டம் ஓய்ந்தது என்ற பிஜேபியின் தேர்தல் யுக்தி தோற்று, ஆட்டம் இனித்தான் என்ற மமதாவின் கோஷம் வங்காளத்தைக் காப்பாற்ற எல்லாம் வல்ல அந்த துர்க்கா தேவி – ராம தூதன் அனுமான் ஜி – ஆகியவர்கள் மமதாவை நல் வழிப்படுத்த வாய்மை மனதார வேண்டுகிறது.

வாழ்க வங்கம் ! வளர்க வங்கம் ! ஓங்குக வங்கம் !





நாரதா ஊழல் பற்றிய பெட்டிச் செய்தி:



                                                                              மேத்தியு சாமுவேல்

நாரதா ஊழல் என்பது டெஹெல்கா என்ற இந்திய பத்திரிகையால் ரகசிய காமரா மூலம் படம் பிடித்து 2014 கண்டு பிடிக்கப்பட்டது. அதன் மூல கர்த்தா தான் மேத்யு சாமூவேல். இது திருணாமுல காங்கிரஸின் 12 தலைவர்கள் பலரிடம் பணம் பெற்று அவர்களுக்கு அனுகூலமாக மமதா அரசு உதவும் என்ற சொல்லும் வீடியோவாக வெளியிடப்பட்டு, அது பெரும் அதிர்வலைகளை எழுப்பியது. 2017-ல் சிபியையும், மத்திய அமுலாக்கப்பிரிவு மற்றும் பார்லிமெண்ட் நெறிமுறைக் குழு ஆகியவைகள் இந்த நாரதா ஊழலை விசாரிக்கத் தொடங்கியது.

மேற்கு வங்க 2016 தேர்தலுக்கு முன்பு அந்த பத்திரிகையில் வீடியோ வெளியிடப்பட்டு, அதில் முக்கியமாக நான்கு திருணமுல காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டது கட்சிக்கு பெரும் பின்னடைவு என்ற கணிப்பு பொய்த்துப் போய் மமதா கட்சி மீண்டும் தேர்தலில் வென்று விட்டது.

 

இவர்கள் தங்களுக்காகப் பணம் பெற வில்லை. அவைகள் எல்லாம் கட்சிக்காகத் தான் என்று மமதா கட்சித் தலைவர்கள் ஜால்ஜால்புச் சொன்னாலும் இந்த நாரதா ஊழல் இந்தத் தேர்தலில் மமதா கட்சி வென்ற பிறகும் அவர்களுக்குத் தலைவலி தான்.

 

இப்போது இந்த ஊழலில் முக்கியமான நான்கு பேர்களை சிபியை கைது செய்து வீட்டுக் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

 

இது மத்திய அரசின் அத்துமீறிய செயல்; பிஜேபி தேர்தலில் தோற்றதால், அதற்குப் பழிவாங்கும் படலம் தான் இது. – என்பது மமதாவின் குற்றச் சாட்டு.

 

சிபியை இந்த விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்றி விசாரிக்க வேண்டும் என்று கோர்ட்டைக் கேட்டுள்ளது. வரும் காலம் தான் இதன் உண்மை நிலையை ஊர்ஜிதம் செய்யும்.

 

பணம் பெற்றோம். வீடியோ பொய் இல்லை. ஆனால் கட்சிக்கு பணம் பெறுவது ஊழல் இல்லை – என்ற அளவில் மமதா கட்சி ஒத்துக் கொண்டதால், அந்தக் கட்சியின் முகம் கருத்தாலும், அது தேர்தலில் பிரதிபலிக்க வில்லை.

 

வங்காள மக்களின் மன நிலையில் மமதா ஒரு வெற்றி மாதாகத் தான் இன்றும் காட்சி தருகிறார்.

 

 




Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017