துணிந்து தனிந்து போ – பெரியவாளின் அருள் வாக்கு


 

மனிதர்கள் பகத்து விட்டுக் காரர்களாக இருந்தாலும், அனாவசியமாகச் சண்டை போட்டு, போலீஸ் – கேஸ் என்று அலையும் நிலைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக மஹாப் பெரியவாளின் அருள் வாக்கு: 

“என் பக்கத்து வீட்டுக்காரனின் தொல்லை தாங்க முடியல. போலீசுக்குப் போறதைத் தவிர வேறு வழி தெரியல ..’” என்று ஒரு பக்தர் சொன்னவுடன், பெரியவா, ‘என்னிடம் ஆலோசனை கேட்க வந்தாயா.. இல்லை அனுமதி கேட்க வந்தாயா?’ என்று கேட்டவுடன், அந்த பக்தர் அதிர்ந்து ‘நீங்கள் சொல்கிறபடிச் செய்யறேன்’ என்றார். 

பெரியவாளின் அறிவுரை:

மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரிதான் இருப்பார்கள். பலாப்பழம் போல சிலர் முரடாக தோன்றலாம். ஆனால் மனதிற்குள் நல்லவர்களாக இருப்பார்கள். சண்டையில் ஒருவர் மீது மட்டும் தான் தவறு இருக்கிறதா, மற்றவர் மீது தவறே இல்லையா என்பதை யோசிக்க வேண்டும். இரண்டு பேர்களும் பக்கத்து வீட்டு சொந்த வீட்டில் இருப்பவர்கள் தானே? இருவராலும் வீட்டை மாற்ற முடியாது. ஒருவருக்கொருவர் அனுசரித்துப் போவது தான் நல்லது.

ஆளுக்கொரு மாதிரி தானே நம் முகமும் இருக்கிறது. அது போல நம் சுபாவமும் ஒவ்வொரு மாதிரித் தானே இருக்கும். நாம் நினைக்கிறபடியே மற்றவர் இருக்க வேண்டும் என எதிர்ப்பார்க்கக் கூடாது. நிம்மதியாக வாழ வேண்டுமானால் இதை உணர வேண்டும்.

போலீசில் புகார் கொடுத்தால் உன் மீதுள்ள கோபம் பக்கத்து வீட்டுக்காரனுக்கு அதிகமாகும். ஒவ்வொரு நாளும் நடக்கும் சண்டைக்கு போலீசின் உதவியை நீ நாட முடியுமா? தீராத தலைவலியை வரவழைக்காதே. பக்கத்து வீட்டும்காரன் கத்தினால் பதிலுக்கு கத்தாதே. அடங்கிப் போ. நிம்மதியாக வாழ விரும்பினால் அவனிடம் தோற்றால் கூடத் தப்பில்லை. நாளடைவில் அடங்கி விடுவான். உன்னைப் புரிந்து கொள்ள ஆரம்பிப்பான். ஏதாவது சிரமம் வந்தால் வலியச் சென்று அவனுக்கு உதவி செய். பக்கத்து வீட்டுக்காரன் மனம் மாறவேண்டும் என அம்பாளிடம் பிரார்த்தனை பண்ணு. 

 

 

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017